12/8/09

குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 29 பேர் விடுதலை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து 29 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரத்தை சங் பரி்வார் அமைப்புகள் தொடங்கின. இதில் சிக்கி 10000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள், கொலைகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அபாசனா என்ற கிராமத்தில் 6 முஸ்லீம் சமுதாயத்தினர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்தபோது 2 பேர் இறந்து விட்டனர். மற்ற 29 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது.இந்த நிலையில் இவர்கள் 29 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து விட்டது.
source: Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.