உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/10/09

ஃபலஸ்தீன் பெண் கைதிகள் 19 பேர் விடுதலை

0 கருத்துகள்
ஹமாஸால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வீரன் ஒருவன் உயிரோடு உள்ளான் என்பதற்கு ஆதாரமான வீடியோ டேப்பிற்கு பதிலாக 19 ஃபலஸ்தீன் பெண் கைதிகளை விடுதலை செய்தது இஸ்ரேல்.மேலும் ஒரு பெண் இன்று (ஞாயிறு) விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 18 பெண்கள் மேற்குக்கரை பகுதியை ரெட் கிராஸின் வாகனத்தில் சென்று அடைந்தனர். மற்றுமொரு பெண் ரெட் கிராஸ் வாகனத்தில் காசா பகுதியை வந்து அடைந்தார். அந்த பெண்களின் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகத்தில் அவர்களை வரவேற்றனர்.
இஸ்ரேலியர்கள் இதற்கு பதிலாக ஜிலாட் சாலித் என்ற ஹமாஸால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய வீரனின் வீடியோ ஒன்றை பெற்றுக்கொண்டது. இவனை ஹமாஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு கைது செய்தது. ஒரு தகவலின் படி இஸ்ரேல் ஏறத்தாழ 10000 ஃபலஸ்தீனியர்களை கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
ஹமாஸ் ஷாலிதின் விடுதலைக்கு பதிலாக 100க்கும் மேற்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனிய கைதிகளின் விடுதலைக்காக பேச்சு வார்த்தை நடத்திவருகின்றது.
இதனை குறித்து ஃபலஸ்தீன அமைச்சகம் கூறுகையில், "விடுதலை செய்யப்பட்ட 19 பெண்கள் தவிர்த்து இன்னும் 40 பெண்கள் இஸ்ரேலின் சிறையில் வாடி வருகின்றனர்" என்று கூறியுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட ஃபலஸ்தீன் பெண்ஒருவரை உறவினர் கட்டி தழுவும்காட்சி.

மேலும், "19 ஃபலஸ்தீனிய பெண்கள் விடுதலை செய்யப்பட்ட சந்தோஷம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கண்ணியம் குறைக்கப்பட்டு சிறையில் அவர்களுடைய அத்துமீறல்களால் வாடிக்கொண்டிருக்கும் நம் மற்ற சகோதரிகளை மறக்கடித்து விட வேண்டாம்" என்று அமைச்சகத்தின் தகவல் இயக்குனர் ரியாத் அல் அஸ்கர் கூறினார்.

அஸ்கர் மேலும் கூறுகையில், "ஸமாஹ் சமதாஹ் என்ற சிறுமியை தவிர பெரும்பாலான சிறுமிகள் இந்த பரிமாற்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கடந்த 2008 ல் கடத்திச்செல்லப்பட்டவர். இவருக்கு இஸ்ரேல் ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்தது.

இன்னும் சில பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அதில் அஹ்லம் அல் தமிமி என்ற பெண்ணிற்கு 16 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சிறையிலிருக்கும் பெண் கைதிகளில் 12 பேர் நோயாளிகள் என்றும், அமல் சுமா என்ற பெண் சிறுநீரக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் மற்றும், வாஃபா என்ற பெண் இஸ்ரேலிய இராணுவத்தினால் கடத்திச்செல்லபடும்பொது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

2007 - 2008 ல் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பலஸ்தீனிய பெண்களில் 13% பேர் 18 வயதிற்கு கீழானவர்கள் என்றும் 56% பேர் 20 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் ஒரு செய்தி கூறுகின்றது. இவர்கள் கைது செய்யப்படும் போது, அடிக்கப்படுதல், அவமானப்படுத்தப்படுதல், பயமுறுத்துதல், பாலியல் வன்முறை, அவமதிப்பு உக்திகள் ஆகியவைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் உள்ளாக்கப்படுகிறார்கள்.

source: ABNA,Thapalpetti

2/10/09

15 வயது மாணவியின் ஸ்கார்ப் சக மாணவிகளால் எரிப்பு

2 கருத்துகள்
ஆஸ்திரியா:15 வயது மாணவி ஒருவர் தலையில் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்த இரண்டு மாணவிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

இந்த இருவர் டயானா என்ற 15 வயது இஸ்லாமிய மாணவியை அவர்கள் பள்ளி பயணத்தின் போது தாக்கி அவர் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்தனர். இவர்கள் Catholic charity Caritas என்ற வணிக தொழில் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று வருபவர்கள்.

பள்ளியின் செய்தி தொடர்பாளர் Harald Schmied இது பற்றி கூறுகையில், இந்த தாக்குதலுக்கான காரணம் தனிப்பட்ட விரோதம் தான் என்றும் மத சம்பந்தப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை என்று கூறினார்.
Schmied மேலும் கூறுகையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த இரண்டு மாணவிகளும் இனி இது போன்று அசம்பாவிதங்கள் ஏதும் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எழுத்து மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
பல வித கலாச்சாரங்களை சார்ந்த மாணவிகள் பயிலும் இந்த கல்வி நிறுவனத்தில் மாணவிகள் ஒருவரோடு ஒருவர் நேசம் பாராட்டி நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள் என்றும், எதிர் பாராமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப்படாமல் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படுகிறது என்று கூறினார்.

source:ABNA,thapalpetti

உலகை மிரட்சியடைய செய்த சீனாவின் 60வது தேசிய தினம்

0 கருத்துகள்
உலகும் இந்தியாவும் உற்றுப்பார்க்கையில் தனது 60 ஆவது தேசிய தினமன்று சீனா தனது இராணுவ பலத்தை பீஜிங்கில் வெளிக்காட்டியது. இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் அதி நவீன டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் அனுவகுப்பு செய்தன.இந்த இராணுவ அணிவகுப்பு இதுவரை அந்நாடு கண்டிராத பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

இந்த இராணுவ அணிவகுப்பின் போது உலகம் இதுவரை கண்டிராத சீனாவின் DF-31 என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா உலகிற்கு காட்டியது. இந்த ஏவுகணை 13,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது. இது இந்தியாவின் எந்த பகுதியை மட்டுமல்ல அமெரிக்காவரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. வல்லுனர்கள் இந்த ஏவுகணை குறித்து கூறுகையில், இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவக்கூடிய வசதி படைத்தது. கூடவே இது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் படைத்து, இந்த ஏவுகணைக்கு பதிலடியாக இந்தியாவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று கூறினர்.

கூடவே தரையிலிருந்து தரை தாக்கும் திறன் படைத்த நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய DF-21 ஏவுகணையும் பங்கெடுத்தது. இந்த ஏவுகணை 3200 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது தான் உலகிலேயே ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஆற்றல் படைத்த ஒரே ஏவுகணையாகும். இந்தியாவிடம் இதற்கு பதிலாக அக்னி 3 உள்ளது என்றாலும் அது சோதனை நிலையிலேயே உள்ளது.

சீனாவின் மற்றொரு ஆயுதமான CJ-10 தரையிலிருந்து தரையை தாக்கும் திறன் படைத்து. இது 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியா,ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனாவிடம் மட்டும் தான் உள்ளது. இந்த ஏவுகணை ஒலியைவிட விட வேகமாக சென்று தாக்கும் திறன் படைத்தது. மேலும் இது 500 கிலோ எடை உள்ள ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் படைத்து. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது இதற்கு போட்டியான சீனாவின் ஏவுகணையைவிட சற்று குறைவான எடை உள்ள ஆயுதத்தையே தாங்கிச்செல்லும் திறன் படைத்திருந்தாலும் இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறம் படைத்தது.

இந்த ஆயுதங்களுக்கு நடுவில் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கெடுத்த புதியரக ஆயுதம் கப்பல்களை அளிக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும். இந்த YJ-8 வரிசையில் உள்ள ஏவுகணைகள் சீன கப்பல் படையில் அங்கம் வகிக்கிறது. இது கடல்வழி ஆபத்துகளை களைவதற்காக பயன்படுத்தப் படுகிறது.

source: NDTV

வீடியோவைக் காண வீடியோ1, வீடியோ2 க்ளிக் செய்யவும்

30/9/09

ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள் முஸ்லிமாக மாறினர்

0 கருத்துகள்
சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில், முஸ்லிம்களாக மாறினர். சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.
இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.
இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

தஜிகிஸ்தானில் தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு

0 கருத்துகள்
தஜிகிஸ்தானில் பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் பணியாற்றுபவர்களுக்கு தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தாடி வளர்ப்பதில் தடையும் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தாடியின் அளவில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள தஜிகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றது அந்நாட்டு அரசு. மேலும் அரசு வரையறுத்த இஸ்லாமிற்கு அல்லாமல், முழுவதுமாக மார்க்கக் கொள்கைகளை பின்பற்றும் இயங்கங்களை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.
அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சுன்னத்தான தாடி வளர்பவர்கள். தற்பொழுது அமல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் 50 வயதிற்கு மேலான ஆசிரியர்கள் 3 செண்டி மீட்டர்களுக்கு மேல் தாடி வைக்கக் கூடாது என்றும் அந்த வயது வரம்பிற்கு குறைவானவர்கள் தாடியே வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கின்றது.கூடவே, Jeans, Mini skirts மற்றும் T-shirts மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றது.இது பள்ளி மற்றும் உயர்கல்வி சீரமைப்பு திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகின்றது. இது மக்களின் மனநிலை மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு தான் இருக்கின்றது என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் திங்கள் அன்று பத்திரிக்கையாளர்களிடம் அப்துல் ஹமீத் நோஜிமொவ் கூறினார். அந்நாட்டு பிரதமர் இமாமலி ரஹ்மான் முன்பு பள்ளிகளுக்கு மொபைல் போன்கள், மற்றும் மாணவர்கள் வகுப்புகளுக்கு தங்கள் கார்களில் வருவதை தடை செய்திருந்தார்.
நன்றி:ABNA,thapalpetti

ஈரான் அணு சக்தி குறித்து துருக்கி பிரதமர் கருத்து

0 கருத்துகள்
துருக்கி பிரதமர் எர்டோகன், "மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணு சக்தி விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டு இஸ்ரேல் சட்ட விரோதமாக வைத்திருக்கும் அணு ஆயுதங்களை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நியூயார்க்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "ஈரானுடைய அணு கொள்கை அணு ஆயுதம் தொடர்பாக இல்லை. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களையே தன் வசம் வைத்துள்ளது, மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை உபயோகித்தது.இந்த மனித உரிமைகள் எல்லாம் ஏன் கண்டுகொள்ளபப்டவில்லை? ஏன் எப்போதும் ஈரான் சர்ச்சைக்குள்ளாக்கப் படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.ஈரான் மட்டுமே உலக அஜண்டாவில் இருப்பதனால் நாம் கவனிக்கப் பட வேண்டிய காசா போன்ற பிரச்சனைகள் புறம் தள்ளப்படுகின்றது" என்று கூறினார்.
G20 நாடுகளின் மாநாடு முடிந்து துருக்கி திரும்பிய அவர் கூறுகையில் "இதுவரை ஈரானிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அஜண்டாவில் இல்லை" என்று தெரிவித்தார்.துருக்கி பிரதமர் வருகிற மாதம் டெஹ்ரான் செல்ல இருக்கிறார். அப்போது அவர் ஈரானிய அதிபர் அஹ்மத் நஜாதியுடன் ஈரானின் அணு கொள்கையை குறித்து பேச உள்ளார்.எர்டோகன் ஈரானின் வாயு தொழில் மீது போடப்படும் எந்த ஒரு தடையையும் மறுத்துள்ளார். அது ஈரானின் அண்டை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஈரான் பயணத்தை குறித்து எர்டோகன் கூறுகையில் வருகிற அக்டோபர் இறுதியில் தன்னுடைய ஈரான் பயணம் இருக்கும் என்று கூறினார்.அந்த பயணத்தின் போது அணு சக்தி பிரச்சனை உள்ளிட்ட வட்டார பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் போவதாக அவர் ஒரு துருக்கிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும் தான். அது அதன் அண்டை நாடுகள் மீது பல யுத்தங்களை தொடுத்திருக்கின்றது. மேலும் அதனுடைய ஈரான் குறித்த கூக்குரல் இஸ்லாமிய நாடுகள் எதுவும் அணுசக்தி அருகில் நெருங்கவிடாமல் இராணுவ பலத்தை கொண்டு மிரட்டுகின்றது. ஆனால் இஸ்ரேலைப்போல் அல்லாமல், ஈரான் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் அது உலகளாவிய அளவில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உலக நாடுகள் களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.மேலும் ஈரானின் இந்த அணு சக்தி IAEA வின் கொள்கைகள் மற்றும் சர்வதேச கொள்கைகளுக்குள்ளானது.ஐ.நா. வின் அணு சக்தி கண்காணிப்பு குழு கூறுகையில் "ஈரான் Uranium-235 ஐ தான் செறிவூட்டுகின்றது என்றும் அதுவும் 5% திற்கு குறைவாகத்தான் செய்கின்றது" என்றும் கூறியுள்ளது.அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் Uranium 90% திற்கு மேல் செறியூட்டப்பட்டால் மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
நன்றி: ABNA, thapalpetti

28/9/09

ஈரான் மீண்டும் ஏவுகணை சோதனை

0 கருத்துகள்
பல்வேறு உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு இடையேயும் குறுகிய தூர ஏவுகணைகளை நேற்று ஏவி பரிசோதித்துப் பார்த்த ஈரான், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூர ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது.
ஈரான் அணு திட்டங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில்,ஈரான் நேற்று ஃபதே 110 மற்றும் டோண்டார் 69 ஆகிய குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துப் பார்த்ததாக தகவல் வெளியாயின. உலக நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி, இந்த சோதனையை மேற்கொண்ட ஈரான், அடுத்த அதிர்ச்சியாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி பரிசோதித்தது.
சுமார் 1,300 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணையை இஸ்ரேல், மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகளை குறிவைத்தே ஈரான் உருவாக்கி உள்ளதாக அந்நாட்டின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஏவுகணை சோதனை

0 கருத்துகள்
ஈரான் குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த இரண்டு ஏவுகணைகளை கடந்த ஞாயிறு அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனை ஈரான் ரகசியமாக எழுப்பி வரும் அணு உலைகளுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய இரண்டு நாட்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புரட்சிகர காவல் விமானப்படையின் தலைவர், தளபதி ஹுசைன் சலாமி இந்த ஏவுகணைச் சோதனைப் பற்றி கூறுகையில், "சோதனை செய்யப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக தங்களது இலக்குகளை தாக்கின. ஈரான் இந்த ஏவுகணைகளை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஏவுகணைகள் தங்களுக்கு எதிராக தொடுக்கப் படும் எல்லா விதமான தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கும் திறன் படைத்தது. (அமெரிக்கா Missile Defence System என்ற வகையில் தனக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளை Patriot வகை ஏவுகணைகளை செலுத்தி தாக்கி அழிக்கும். தற்பொழுதுள்ள ஈரானின் ஏவுகணைகள் இந்த வித தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து இலக்கை வெற்றிகரமாக தாக்கும் திறன் படைத்தது.)

சலாமி மேலும் கூறுகையில், நாங்கள் எங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த விதமான இராணுவ நடவடிக்கைகளையும் நசுக்கும் விதமாக பதிலடி கொடுப்போம், அது எந்த நாடாக இருந்தாலும் சரியே, எந்த ஆட்சியாக இருந்தாலும் சரியே" என்று கூறினார்.ஈரான் தற்பொழுது நடத்திய இந்த ஏவுகணை சோதனைகள் ஈரானிற்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே இருக்கும் அணு சர்ச்சையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஈரான் தனது ஆயுதங்களையும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டது. ஆனால் அது இந்த கால கட்டத்தில் நடத்திய ஏவுகணை சோதனை தனது பலத்தை தன் எதிரிகளின் முகத்தில் காட்டும் விதமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஜெனீவாவில் வருகிற அக்டோபர் 1 ம் தேதி நடக்க இருக்கும் சமயத்தில், ஈரான் தனது நிலையை உறுதிப் படுத்த கூடுதலாக ஏதாவது தேவை என்று நினைத்தது. அதன் ஒரு பகுதி தான் இந்த ஏவுகணை சோதனை என்று மத்திய கிழக்கு பகுதி குறித்த மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா கூறியுள்ளார்.

ஞாயிறு சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் தொண்டர் மற்றும் பதெஹ்110 ரக ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வகையை சேர்ந்ததல்ல.இந்த ஏவுகணை சோதனைகள், ஈரான் சர்வதேச கண்டனத்தையும் மீறி இரண்டாவதாக ஒரு யுரேனியம் செறியூட்டும் ஆலையை எழுப்பி வருகிறது என்று IAEA கூறியதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தேகத்திற்குரிய அணு உலை அறித் மலைப்பகுதியில் உள்ள கடுமையான காவல் நிறைந்த பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட புரட்சிகர காவல் படையின் தளத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தீவிர கண்டனத்திற்கு பிறகு ஈரான் ஐ.நா. அதிகாரிகளை இந்த அணு உலையை பரிசோதிக்க சம்மதித்துள்ளது.என்றாலும் இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது.இந்த ஏவுகணை சோதனையின் மற்றொரு பகுதியாக மேலும் 3 ஏவுகணைகளை சோதிக்கப் போவதாக சலாமி தெரிவித்துள்ளார்.

source: aljazeera,thapalpetti

25/9/09

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட முடியாது: இந்தியா உறுதி

0 கருத்துகள்
அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் (Non Proliferation Treaty - NPT) அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை (UN Security Council) நிறைவேற்றியத் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
நியூ யார்க்கில் ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதர் சியாம் சரண், அணு ஆயுதமற்ற நாடு (Non Nuclear State) என்ற அடிப்படையில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இதற்கு மேல் அணு ஆயுத சோதனை நடத்துவது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்" என்று கூறிய சியாம் சரண், "அணு ஆயுதமற்ற ஒரு நாடாக என்.பி.டி.யில் அங்கம் வகிக்க இந்தியா விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
source: webdunia

24/9/09

ஐ.நா பொதுச்சபையில் ஆவேசத்துடன் பேசிய கடாபி

0 கருத்துகள்
நியூயார்க்: கஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் (அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கால் மணி நேரம்தான்).

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, கஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்கக் கூடாது.
பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கூடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.
பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் தனி நாடாக வேண்டும்...
காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

thatstamil

மேற்கு நாடுகளின் தீவிரவாதம்-அகமதி நஜாத்

0 கருத்துகள்
நியூயார்க்: மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் போரையும், ரத்த வெறியையும், ஆவேசத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பி வெறியாட்டம் போட்டு வருகின்றன என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அகமதி நஜாத் பேசினார். அவர் கூறுகையில், மரியாதையுடன் எங்களை நோக்கி நீட்டப்படும் கைகளைப் பிடித்துக் குலுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், திமிருடன் கை நீட்டினால் அதை வெட்டவும் தயங்க மாட்டோம்.
மேற்கத்திய நாடுகள் திமிருடனேயே நடந்து கொள்கின்றன. ஜனநாயகத்தைப் போதிக்கும் அந்த நாடுகள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையிலேயே நடந்து கொள்கின்றன. இதற்கு உலக நாடுகள் பதிலடி தர வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களுடைய அடக்குமுறை மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இஸ்ரேல், காஸா முனையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வருகிறது. மனிதாபிமானமற்ற கொள்கைகளைக் கொண்டுள்ள இஸ்ரேல் அவற்றை ஃபலஸ்தீனத்தில் அரங்கேற்றி வருகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அது தலையிடுகிறது, ஆதிக்கம் செலுத்த முனைகிறது.
எந்தவித எதிர்ப்பையும் செலுத்த இயலாத அப்பாவிப் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதையும், வீடுகள், வயல்கள், மருத்துவமனைகள், பள்ளிகளை அழிப்பதையும் எப்படி குற்றமற்ற செயல்கள் என கூற முடியும்?. இந்த செயல்களை சில அரசுகள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது வேதனையைத் தருகிறது.
உலகின் ஒரு சிறிய சிறுபான்மை குழு (யூதர்கள்) உலகப் பொருளாதாரத்தையும், அரசியலையும், கலாச்சாரங்களையும் ஆக்கிரமிக்க முயல்வதையும், அடக்குமுறையைக் கையாளுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
புதிய வகை அடிமைத்தனத்தை இந்த சக்திகள் உருவாக்கி வருகின்றன. பிற நாடுகளின் கெளரவத்தை இவர்கள் சீரழிக்கிறார்கள். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது வேதனையானது என்றார்.

மேலும் அகமதி நஜாத் பேசும்போது, பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சபையில் இருக்கவில்லை. மேலும், அவர் இஸ்ரேலை கடுமையாக தாக்கிப் பேசியபோது இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
தட்ஸ்தமிழ்

16/9/09

முன்ததர் விடுதலையானார்:ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஆவேச உணர்வோடு

0 கருத்துகள்

சிறையிலிருந்து விடுதலையான முன்ததர் அல் ஸைதியை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவரது சகோதரி
பாக்தாத்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு புதியதொரு எழுச்சியை ஊட்டிய ஈராக் பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸெய்தி விடுதலையானார்.

ஜெயிலில் வைத்து ஒரு மூத்த அரசு அதிகாரி தன்னை கொடூரமான முறையில் சித்திரவதைச்செய்ததாக குற்றஞ்சாட்டிய முன்ததர் இதற்காக ஈராக் அரசு மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒன்பது மாத சிறைவாசத்திற்கு பிறகே முன்ததர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். "நான் விடுதலையாகிவிட்டேன், ஆனால் என்னுடைய நாடு இன்னும் சிறைக்குள்தான் இருக்கிறது. நான் என்னை ஹீரோவாக நினைக்கவில்லை. ஆனால் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதையும், பாக்தாத் பற்றி எரிவதையும் எனது மக்கள் கொல்லப்படுவதையும் பார்த்து அவமானப்பட்டு நிற்கிறேன்". என்று ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது முன்ததர் கூறினார்.

புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்ததன் மூலம் ஹீரோவாக மாறிய முன்ததர் மீது வெளிநாட்டுதலைவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முன்ததருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது 12 மாதங்களாக குறைக்கப்பட்டது. முன்ததரின் நன்னடத்தையின் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பே விடுதலையாகியுள்ளார். அடி, சாட்டையடி, எலக்ட்ரிக் ஷாக் போன்ற சித்திரவதைகளுக்கு தான் ஆளாக்கப்பட்ட்தாக முன்ததர் கூறினார். மேலும் தண்ணீரில் தன்னை மூழ்கச்செய்தும் தான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட்தாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் நூரிமாலிக் தொலைக்காட்சி வாயிலாக எனது பாதுகாப்பு பற்றி திரும்ப திரும்ப உறுதிச்செய்துக்கொண்டிருக்கும் வேளையில் நான் சிறைக்குள் மின்சார அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். முன்ததர் கூறுகிறார். தன்னை சித்திரவதைக்கு ஆளாக்கிய அதிகாரியின் பெயரை நேரம் வரும்பொழுது வெளிப்படுத்துவதாக முன்ததர் கூறினார். தன்னை எதிரி போராளியாக கணிக்கும் அமெரிக்க ரகசிய புலனாய்வுக்குழு என்னுடைய உயிரை பறிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பாழாக்காது என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் முன்ததர். புஷ்ஷை நோக்கி தான் ஷூவை எறிந்த்தற்கு காரணம் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதுதான் என்ற முன்ததர், "நான் அமெரிக்க மக்களை நோக்கி கேட்கிறேன்.ஒருவேளை ஈராக் அமெரிக்காவை ஆக்கிரமித்து அங்குள்ள 10 லட்சம் மக்களை கொலைச்செய்து 5 லட்சம் மக்களை நாட்டைவிட்டும் இடம்பெயர்ந்து, அமெரிக்கா அழிவிற்கும் நாசத்திற்கும் ஆளாக்கப்பட்டால் உங்களுடைய எதிர் செயல் எவ்வாறிருக்கும்". என்று கேள்வி எழுப்பினார் முன்ததர்.

முன்ததர் விடுதலையானதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த முன்ததர் குடும்பத்தினர் அவரை நடனமாடியும், பாட்டுப்பாடியும் வரவேற்றனர். பணம், வேலை, திருமணம் செய்ய பெண் என ஏராளமான பரிசுக்குவியல்களை அரபு உலகம் முன்ததர் அல் ஸெய்திக்கு வாக்களித்துள்ளது.

செய்தி:தேஜஸ்
தொடர்புடைய வீடியோவிற்கு http://www.msnbc.msn.com/id/21134540/vp/32861221#32861221

15/9/09

9/11 பற்றி புதிய விசாரணை தேவை:80 ஆயிரம் நியூயார்க் மக்கள் கோரிக்கை

0 கருத்துகள்

வாஷிங்டன்: செப்டம்பர் 11 தாக்குதலை பற்றி சுதந்திரமான கமிஷன் புலனாய்வு விசாரணை அறிக்கைக்கோரி 80 ஆயிரம் நியூயார்க் மக்கள் கையெழுத்திட்ட மனு Newyork coalition accountability now என்ற அமைப்பின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
28 ஆயிரம் பேர் ஒப்பிட்ட மனு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 24 ஆம்தேதி ஏற்கனவே 52 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. கையெழுத்துகள் சரியா என்பதை பரிசோதிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் கடந்த வாரத்திலிருந்து பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார். இந்த மாதம் 18 ஆம் தேதிக்கும் பரிசோதனைகளை முடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மனுவில் கையெழுத்திட்டவர்களின் கையெழுத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் புதிய விசாரணை அறிக்கைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

14/9/09

பன்றிக்காய்ச்சல்(Swine flu) தடுப்பு நடவடிக்கைக்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவது கூடாது:டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

0 கருத்துகள்
பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கவேண்டும் என்பதற்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று பிரபல மார்க்க அறிஞரும், சர்வதேச உலமாக்கள் சபை தலைவருமான டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார்.

கத்தரிலிருந்து வெளிவரும் அல்வதன் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் அவர் கூறும்போது, "இந்த வருடம் ஹஜ் மற்றும் உம்ராவை பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பிற்காக தாமதப்படுத்தக்கூடாது" என்றார்.
ஆனால் மக்கள் நோய் பரவிவிடும் என்று பயந்தால்(contracting the virus) இந்த வருட ஹஜ் பயணத்தை தவிர்க்கலாம்.ஆனால் ஹஜ் கடமைகளை செய்வதை தள்ளிப்போடக்கூடாது. முஸ்லிம்கள் ஹஜ்ஜிற்காக செல்லும்போது கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.பன்றிக்காய்ச்சல் உலகமுழுவதும் பரவிய நோய்(Pandemic)அல்ல என்றும் கர்தாவி கூறினார்.

மேலும் பன்றிக்காய்ச்சலால் இறப்போரை உயிர்தியாகிகளாக கருத இயலாது என்றார்.ஆனால் உலக முழுவதையும் இந்நோய் ஆக்கிரமித்தால் அதன் மூலம் இறக்கும் முஸ்லிம்களை உயிர்தியாகிகளாக கருதலாம். ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவோர் முகமூடிகளை(mask)அணிந்துக்கொண்டு நிறைவேற்றவேண்டும். இஸ்லாம் சுயபாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நோய் அறிகுறிகள் இருப்பதாக யாராவது உணர்ந்தால் உடனடியாக அதற்கான சிகிட்சையை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி செயல்படுதல் வேண்டும். ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக நெரிசலை தவிர்க்கவும். சரியான நேரங்களை தேர்ந்தெடுத்து கிரியைகளை நிறைவேற்றுதல்வேண்டும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் மேலும் சுத்த்த்தை அதிகமாக கடைபிடித்தல் வேண்டும். சுத்தம் என்பது இஸ்லாம் கூறும் உபதேசங்களில் முக்கியமான ஒன்று இவ்வாறு கர்தாவி ஹாஜிகளுக்கு உபதேசங்களை வழங்கியுள்ளார்.

Islamonline.net

13/9/09

மனோநிலை பாதிக்கப்பட்ட ராணுவவீரர்களுக்கு சிகிட்சையளிக்க அமெரிக்கா செலவிடும் தொகை 12 கோடி டாலர்

0 கருத்துகள்
வாஷிங்டன்:ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியதால் மனோநிலை பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களுக்கு சிகிட்சையளிக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது அமெரிக்கா.
ஆரம்பத்தில் அமெரிக்க அரசு இதற்காக செலவிடும் தொகை 12 கோடி டாலர். அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து சிகிட்சையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீர்ர்களின் மனம் சம்பந்தமான நோயை கண்டறிவதற்கு 170 கேள்விகளைக்கொண்ட பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்துவர். இதனடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சிகிட்சையளிக்கப்படும். பரிசோதனை நடத்துவதற்கு 1500 நபர்களுக்கு மனநோயைப்பற்றிய வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
மனோநிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலைச்செய்யும் ராணுவவீரர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருவதே அமெரிக்க அரசு இத்திட்டம் துவக்குவதற்கு காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தற்கொலைச்செய்பவர்களின் எண்ணிக்கை 214 என்று அதிகாரப்பூர்வ கணக்கீடு கூறுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தை பீடித்திருக்கும் மற்றொரு பிரச்சனை மதுபானம். முழுநேரமும் போதையிலிருப்பதால் ராணுவ வீரர்கள் பலரும் ராணுவ பணிக்கு லாயக்கற்றவர்களாக மாறியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கின்ற ராணுவவீரர்களுக்கு அதிகமான மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளது. எந்த நிமிடமும் கொல்லப்படுவோம் என்ற பீதி, பிஞ்சுக்குழந்தைகள் உட்பட அப்பாவிமக்களை சுட்டுக்கொன்ற நினைவுகள், சக ராணுவவீரர்களின் குண்டடிபட்டு அப்பாவி மக்கள் இறந்துபோகும் காட்சிகளுக்கு சாட்சியாகும் நிலை. இங்கெல்லாம் ராணுவ பணியாற்றுவது தேவையற்ற செயல் என்ற எண்ணம் ஆகியவைகள்தான் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மனோநிலை பாதிப்படைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சரியான முறையில் மனநோய் சிகிட்சை திட்டங்கள் இல்லாததுதான் இப்பிரச்சனை இவ்வளவு தீவிரமடைய காரணம் என்று பிரிகேடியர் ஜெனரல் ரோண்ட கோர்னம் கூறுகிறார். ட்ரமா ரிஸ்க் மானேஜ்மண்ட் (Trauma Risk Management) என்ற பெயரில் பிரிட்டீஸ் அரசு பிரிட்டன் ராணுவவீரர்களுக்கு இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியது. பிரிட்டனில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராணுவ்வீர்ர்களுக்கிடையேயான தற்கொலை எண்ணிக்கை மற்றவர்களோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ராணுவ பணியை தொடரும் வீர்ர்களுக்கு இந்த சிகிட்சை எந்த அளவு பலன் தரும் என்பதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ்

12/9/09

ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கருத்துவேறுபாடு

0 கருத்துகள்
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப முயற்சிக்கும் ஒபாமா அரசிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அபிப்ராய வித்தியாசங்கள் எழுந்துள்ளன.
இவ்விஷயத்தில் கூடுதல் சர்ச்சை தேவையென்றும், கூடுதல் ராணுவத்தை அனுப்புவதற்கான ஆதரவு குறைவென்றும் அமெரிக்க சபாநாயகர் நான்ஸி ஃபெலோஸி கூறியுள்ளார்.
உள்நாட்டிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் மிகப்பெரிய ஆதரவை ஒபாமா இவ்விஷயத்திற்காக பெறவேண்டிவரும் என்கிறார் நான்ஸி. இந்த வருட இறுதியில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தானில் 68 ஆயிரமாக உயர்த்த ஒபாமா முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக 21 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிற்கு அனுப்பபடுவர் என்று அவர் அறிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்தும் போரிற்கு உள்நாட்டில் ஆதரவு குறைந்தே காணப்படுகிறது. 51 சதவீதம் பேரும் இதனை எதிர்க்கின்றனர். இதற்கிடையில், ஆப்கானில் 97 சதவீத பிரதேசங்களிலும் தாலிபான் ஆதிக்கம் உள்ளதாக லண்டனை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சர்வதேச வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான கவுன்சில் ICOS (International Council on Security and Development) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 80 சதவீத பிரதேசங்களில் தாலிபானுக்கு உறுதியான ஆதிக்கம் உள்ளது. இது கடந்த ஆண்டு 72 சதவீதமாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு 54 சதவீதம் மாத்திரமேயிருந்தது. அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் வலுவடைந்துள்ளது. தாலிபானின் இந்த எதிர்ப்பு போர் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

மும்பை:பகிரங்க விவாதம் நடத்த ப.சிதம்பரத்திற்கு பாக். உள்துறை அமைச்சர் அழைப்பு

0 கருத்துகள்

இஸ்லாமாபாத்: குற்றச்சாட்டுகளை நிறுத்திவிட்டு மும்பை தீவிரவாதத்தாக்குதல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ அல்லது சிதம்பரம் விரும்பும் எந்த இடத்திற்கும் விவாதத்திற்கு தான் வர த்தயாராக இருப்பதாகவும் மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் மும்பை தாக்குதல் விசாரணையை ஆத்மார்த்த ரீதியில்தான் கொண்டு செல்கிறது. நாங்கள் 76 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகையை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தபொழுது இந்தியா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 90 தினங்கள் ஆனது.
பாகிஸ்தான் பிப்ரவரி 9 ஆம் தேதி கேட்ட விபரங்களை இந்தியா அளித்தது ஜூன் 20 ஆம் தேதி. அதுவும் மராத்தி மொழியில். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பந்தமான விபரங்களை இதுவரை இந்தியா அளிக்கவில்லை என்றும் மாலிக் கூறினார். நீதிமன்றத்தில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் 2 நபர்களைப்பற்றிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளோம். இறுதிகட்ட குற்றபத்திரிகையை விரைவில் வழங்கவிருக்கிறோம். அதுபற்றிய விபரங்களை இரண்டு தினங்களுக்குள் பத்திரிகையாளர்களுக்கு வழங்குவோம் என்றும் மாலிக் கூறினார்
முதலில் இந்தியா கூறியது ஸகீயுற்றஹ்மான் லக்விதான் முக்கிய குற்றவாளி என்று. தற்போது கூறுவது ஹாஃபிஸ் சயீத் தான் முக்கிய நபர் என்று. நாம் பரஸ்பரம் குற்றம்சுமத்தும் விளையாட்டை நிறுத்திவிட்டு நல்லதொரு விளையாட்டை ஆடுவோம். புதிய ஆதாரங்களை 10 தினங்களுக்கு முன்புதான் இந்தியா அளித்தது. அதனை பரிசோதிக்கவும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய தகுதியானதுதானா என்பதை அறிய கொஞ்ச காலம் தேவைப்படும். நாங்கள் உங்களின் நீதிமன்றத்தை மதிப்பதுபோல் நீங்களும் எங்கள் நீதிமன்றங்களை மதிக்கவேண்டும். என்றும் மாலிக் வலியுத்தினார். விசாரணை நடவடிக்கைகள் நின்றுபோனதாக எழுந்த குற்றச்சாட்டைப்பற்றி மாலிக் மறுப்புதெரிவித்துவிட்டு பெருநாள் தினத்திற்கு பிறகு விசாரணை வேகமாக நடைபெறும் என்றார்.
பாகிஸ்தானிலிருந்து இன்னொரு தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பற்றி மாலிக் கூறும்பொழுது, "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே! நீங்கள் ஒரு நாட்டின் ஆட்சித்தலைவர். உங்கள் வசமிருக்கும் இதுபற்றிய தகவல்களை நிச்சயமாக உங்கள் புலனாய்வுத்துறைகள் தந்த தகவலாகத்தான் இருக்கும். ஏன் அதனை எங்களோடு பகிர்ந்துக்கொள்வதில்லை. ஏன் தாக்குதல் நடைபெறும் வரை மூடி வைக்கின்றீர்கள்?. நாமிருவரும் அண்டைநாடுகள். ஒன்றாக இணைந்து விசாரணை நடத்துவோம். ஒன்றாக இணைந்து சர்ச்சைச்செய்ய நாங்கள் தயார்". இவ்வாறு ரஹ்மான் மாலிக் கூறினார்.
செய்தி:தேஜஸ்

10/9/09

இந்த வருடம் 320 ஃபலஸ்தீன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்:இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு

1 கருத்துகள்
ஜெருசலம்: இந்த வருடத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 1387 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 320 பேர் 16 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் பிரபல இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பைதுதுஸ்ஸாலோம் கண்டறிந்துள்ளது.
எதிர்த்துகூட போராடாத 773 சாதாரணமக்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது. இந்த வருடம் 300க்கும் குறைவான சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது. 16 வயதிற்கு கீழுள்ள 252 குழந்தைகள் கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 89 குழந்தைகள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேல் கூறுகிறது.
யூத சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீன் முஸ்லிம் குழந்தைகளை குறிவைத்து தேடிப்பிடித்து கொல்கின்றார்கள் என்பதற்கான உதாரணம் இவை.111 பெண்களையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது, ஆனால் 48 பெண்கள்தான் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளிலும் பிரதேசங்களிலும் சென்று விசாரணை மேற்க்கொண்டே இந்த விபரங்களை இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு சேகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் சாதாரண மக்களை கொன்றொழிப்பதாகவும் ஏராளமான கட்ட்டங்களை தகர்த்திருப்பதாகவும் ஆதலால் இதைப்பற்றிய சுதந்திரமான நம்பிக்கையான விசாரணை மேற்க்கொள்ளப்படவேண்டும் என்றும் பைத்துஸ்ஸாலோம் கூறியுள்ளது. இஸ்ரேலிய அமைப்பின் இந்த அறிக்கைக்கு இதுவரை இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இதுவரை ஃபலஸ்தீனில் ஹமாஸ் போராளிகளைத்தான் நாங்கள் லட்சியமிட்டு தாக்குகிறோம் என்று கூறிவந்தது இஸ்ரேல் ஆனால் ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேல் கொல்வது சாதாரணமக்களைத்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலமில் யூதகுடியிருப்புகளின் கட்டுமானப்பணியை ஆரம்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ்

திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததருக்காக காத்திருக்கும் பரிசுக்குவியல்கள்

0 கருத்துகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் மீது ஷுவை வீசியெறிந்த பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸைதிக்காக பரிசுக்குவியல்களும் வெகுமதிக்கான வாக்குறுதிகளும் காத்திருக்கின்றன.
அதிபரின் மன்னிப்பைத்தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததிருக்கு கார்களும், வீடுகளும், கோடிக்கணக்கான டாலர்களும் பரிசாக தருவதான வாக்குறுதிகளுடன் ஏராளமானோர் களத்திலிறங்கியுள்ளனர்.
வேறு சிலரோ தங்களுடைய பெண்மக்களையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர். முன்ததிர் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த ஸ்தாபனமான அல்பக் தாதிய்யாவின் உரிமையாளர் முன்ததிருக்காக கார் வாங்கியதுடன் ஒரு அழகான வீட்டையும் கட்டிவைத்துள்ளார். முன்பு முன்ததிரின் மருத்துவ செலவுகளையும் இத்தொலைக்காட்சி சானலே கவனித்துவந்தது. மொராக்கோவில் வசிக்கும் ஈராக்கைச்சார்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளை முன்ததிருக்கு திருமணம் முடித்துக்கொடுக்க தயார் என்று அறிவித்துள்ளதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியைச்சார்ந்த குடிமகன் ஒருவர் முன்ததிருக்கு ஒரு கோடி டாலர்(48கோடி ரூபாய்) தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஃபலஸ்தீன் பெண்கள் பலரும் முன்ததிரை திருமணம் முடிக்க தயாரென்றும் அவர் விடுதலையானால் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக தி கார்டியன் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்ஜ் w புஷ் தனது கடைசி பயணமாக ஈராக்கிற்கு வந்தபொழுது அதிபர் நூரிமாலிக்குடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அவ்வேளையில் ”நாயே இது உனக்கு விடைபெறும் நாளிற்கான பரிசு. ஈராக்கில் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் விதவையாக்கப்பட்ட பெண்களுக்காகவும் இது”என்று கூறி ஷூவை கழற்றி புஷ்ஷை நோக்கி ஆவேசத்துடன் எறிந்தார். சிறையிலிருந்து விடுதலையானால் முன்ததிர் இனி பத்திரிகைத்தொழிலில் ஈடுபடமாட்டார் என்றும் அநாதை நிலையம் ஏற்படுத்தி அதில் அகதிகளாக்கப்பட்டோருக்கு நல்வாழ்வு அளிக்கும் பணியை மேற்க்கொள்வார் என்றும் அவருடைய சகோதரர்களான மைதம், வெர்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்

துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது

0 கருத்துகள்









துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமா நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.








ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.

நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.

மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.

கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.

2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் 17 சதவீதம் குறையுமென்றும் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் 1.7 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

செய்தி:தேஜஸ்