தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17/8/09

சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு

0 கருத்துகள்

கும்பக்கோணம்

போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும்,அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுவரும் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெஞ்சுறுதியுடன் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பு தென்னிந்திய வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்களாக மாறியது.தமிழகத்தில் பாசிச சில்லறைக்கும்பல்களுக்கு அடிபணிந்து காவல்துறை நடத்திய கெடுபிடிகளைக்கடந்து கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் நாள் மதியம் சரியாக 3 மணிக்கு துவங்கியது. சுதந்திரத்தின் பாதுகாவலர்களாவோம் என்ற கோஷத்துடன் இந்திய தேசத்தின் வீரமிகு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான கொள்கையுறுதிக்கொண்ட வீரர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் கம்பீரமாக அடியெடுத்துச்சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களில் பரவசமூட்டியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் சுதந்திர தின உறுதிமொழியை கூற பொதுமக்கள் அதனை திரும்பக்கூறினர்.நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் சிறப்புரையாற்றினார்.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி,முன்னாள் எம்.எல்.எ நிஜாமுத்தீன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.எ ரவிக்குமார்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு துணைத்தலைவர் இஸ்மாயீல்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் மெளலவி ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,சோசியல் டெமோக்ரேடிக் கட்சி கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கெ.எம்.ஷெரீஃப் ஆகியோர் உரையாற்றினர்.பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக பொதுச்செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்தீக் நன்றி கூறினார்.தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராணுவ மிடுக்கில் அணிவகுத்து செல்ல டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மைதானத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவுற்றது.அணிவகுப்பு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சரியாக காலை 10.30 மணியளவில் தொடங்கியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது கேடர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இந்திய தேசியக்கொடியை ஏந்தியவாறு ஆஃபீஸர்ஸ் முன்னணியில் செல்ல பின்னால் ராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய மரியாதையுடன் கேடர்கள் அணிவகுத்துச்சென்றனர்.மொத்தம் 40 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 33 கேடர்கள் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் ஹிந்துத்துவா பாசிசத்திற்கெதிராகவும்,ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.சுதந்திர தின அணிவகுப்பின் இறுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தை சோஷியல் டெமோக்ரேடிக் கட்சியின் தேசியத்தலைவர் ஈ.அபூபக்கர் சாஹிப் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்,"கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.சங்க்பரிவாரை காட்டி முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கிகளாக பயன்படுத்தி வருகின்றார்கள்" என்று குறிப்பிட்டார்.பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீது சுதந்திரதின உறுதிமொழியைக்கூறினார்.அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.எ ஸலாம் உள்ளிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றின் மாநில பொறுப்பாளர்களும் இதில் கலந்துக்கொண்டனர்.
நமதுசெய்தியாளர்
மேலும் கும்பகோணத்தில் நட ந்த அணிவகுப்பின் புகைப்படங்கள் இங்கே...

5/8/09

எய்ட்ஸ் விளம்பரத்தில் குடும்பப் பெண்-குழந்தை: நஷ்டஈடு கேட்டு வழக்கு

0 கருத்துகள்
சென்னை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரப் படத்தில் தவறுதலாக குடும்பப் பெண் மற்றும் அவரது குழநதையின் படத்தை பிரசுரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திலகவதி என்ற அந்த 25 வயதுப் பெண், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது.
கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
எங்கள் படத்தை எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரசாரத்திற்காக தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். எங்கள் படத்தை பயன்படுத்த அரசு எந்த அனுமதியும் பெறவில்லை. இதுபோன்ற படத்தை வெளியிட மருத்துவமனை மூலம் எழுத்து மூலமாக அரசு அனுமதி பெறவேண்டும். ஆனால் இதை செய்யவில்லை. இதனால் எங்களுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுவிட்டது.
இந்த விளம்பரத்தால் எனது குழந்தையிடம் மற்ற குழந்தைகள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இனி இந்த படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் நான் அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் இதுவரை அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே எங்களது படங்கள் கொண்ட பேனர்களையும், விளம்பர போர்டுகளையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த குளறுபடி குறித்து திலகவதி கூறுகையில், இந்த விளம்பரப் படத்தால் எனது வாழ்க்கையே கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. அக்கம் பக்கத்தினர் எனது நடத்தை குறித்தும், எனது குழந்தையின் நலம் குறித்தும் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எனது கணவருக்கே கூட ஆரம்பத்தில் என் மீது சந்தேகம் வந்து விட்டது. இதனால் நான் பட்ட அவமானங்கள், சிரமங்களை சொல்லில் கூற முடியாது.
ஒரு கட்டத்தில் இப்படி அவமானத்துடன் வாழ்வதற்கு பேசாமல் செத்துப் போய் விடலாம் என்று கூட நினைத்தேன் என்றார்.
திலகவதியின் வக்கீல்கள் மோகனகிருஷ்ணன், ராஜசேகரன் கூறுகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரத்தால் அந்தப் பெண்ணின் அமைதியான வாழ்க்கை சீர்குலைந்து போய் விட்டது.
படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்த அனுமதியை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமோ, அல்லது அந்த கழகத்தின் அதிகாரிகளோ பெறவில்லை. அப்பெண்ணின் வாழ்க்கை மற்றும் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொள்ளாமல் பிரசுரித்து விட்டனர்.
இதை ஒரு சாதாரண தவறாக கருதி விடாமல், தவறு செய்தவர்கள் மீது, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் படத்தை பிரசுரிப்பதற்கு முன்பு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக தலைவரின் அனுமதியைப் பெற்றிருப்பார்கள். அவரது அனுமதி இல்லாமல் விளம்பர போஸ்டர்களை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தவறுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், இந்த விளம்பரம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகும். இப்படி ஒரு தவறு நடந்திருப்பதாக எங்களுக்கு முன்பு புகார் வந்தது.
வழக்கமாக, விளம்பர ஏஜென்சிகள்தான் இப்படிப்பட்ட விளம்பரங்களை எங்களுக்கு தயாரித்துத் தரும். அவர்கள்தான் படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்து விசாரித்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா என்று தெரியவில்லை.
இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக அதிகாரிகளை விசாரிக்கக் கூறியுள்ளேன். அறிக்கை தருமாறும் கூறியுள்ளேன் என்றார்.
தவறுதலான இந்த விளம்பரத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வெளியிட்ட விளம்பரங்களை அகற்றுவதற்குப் பதில் அதிக அளவில், தமிழகம் முழுவதும் இந்த விளம்பரங்களை வைத்து வருகிறார்களாம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தினர்.
thatstamil

28/7/09

கோவையில் சிறப்பாக நடைபெற்ற மனித உரிமை கருத்தரங்கம் மற்றும் 'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' நூல் வெளியீட்டு விழா

0 கருத்துகள்

கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து, மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி. இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி (சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கோவை ஜே.எம்.௭ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் மேற்படி ஏ.சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் இறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டனர்.
'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவேற்ப்புரை நிகழ்த்தினர். புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.Oதமிழ்நாடு) கருத்துரையாற்றினார். இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர்
அப்துல் நாசர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களிடம் ஒப்படைத்தார்.இதனை தொடா்ந்து ஏ.சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஏ.சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி தமிழக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா.அ மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.

19/7/09

ரத்தினச்சபாபதியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கையெழுத்து இயக்கம்

0 கருத்துகள்

கடந்த2006 ம் ஆண்டு ஜீலை மாதம் கோவையில் வெடிகுண்டு பீதியைக் கிளப்பி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து, கோவை மாநகரையே குலுங்கி வைத்த உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியின் மாபாதகச் செயலை யாரும் மறந்திருக்க முடியாது.
ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டதினாலும், சமூக நலனில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி்.சி.ஐ.டி.-சிறப்பு புலனாய்வுதுறைக்கு மாற்றியது.
ஒரு வருடகாலமாக இவ்வழ்க்கை விசாரித்த எஸ்.ஜ.டி, கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை மாண்புமிகு ஜே.எம்.-7 நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள், காவல்துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழ்க்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இவ்வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கிறோம் என அவ்வறிக்கையில் எஸ்.ஜ.டி. குறிப்பிட்டுள்ளது.
எஸ்.ஜ.டி.யால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் தமிழக அரசு ஏ.சி. ரத்தின சபாபதி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அவ்வெடிகுண்டு பீதியால் பாதிக்கப்பட்ட கோவை மாநகரை, பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் ஒரு உளவுத்துறை அதிகாரியான ஏ.சி. ரத்தினசபாதியே வெடிகுண்டு பொய் வழக்கால் கடும் பீதி வயப்படுத்தியுள்ளார்.
கோவை மாநகர் மட்டுமல்ல அன்று ஒட்டு மொத்த தமிழகமும் இந்த வெடிகுண்டு பீதியின் பாதிப்பை உணர்ந்தது பொது அமைதியையும், சட்ட ஒழங்கையும் சீர் குலைத்து வெடிகுண்டு கபட நாடகத்தால் மக்களை பீதி
வயப்படுத்தியுள்ளார் இந்த ஏ.சி. ரத்தினசபாபதி.
பொதுவாக அரசுப்பணியிலிருக்கும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும். ஆனால் ஏ.சி.ரத்தின சபாபதியோ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இந்த தேசத்தின் குடிமக்களாகிய சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது அபாண்ட பழி சுமத்தியது மட்டுமின்றி, இதன் மூலம் பொது அமைதியையும், சட்ட ஒழங்கையும் சீர் குலைக்கம் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருடைய இந்த இழிச் செயல், தேசப் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிக்கும் மாபாதகச் செயலாகும். ஏ.சி.ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகள் இனியும் பணியில் தொடர்ந்தால் பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே, சமூக நலனையும்,தேச நலனையும் கருத்தில் கொண்டு, தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாத் திகழ ஏ.சி. ரத்தின சபாதியை பணி நீக்கம் செய்து, அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க தழிழக அரசை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
நீதியை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இந்த கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கையொப்பத்தை பதிவு செய்து ஏ.சி. ரத்தினசபாபதி மீதனா தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர்.