10/7/09

ஓரினச்சேர்க்கை:மத்திய அரசு அப்பீல் செய்ய மதத்தலைவர்கள் வலியுறுத்தல்

0 கருத்துகள்
புதுடெல்லி: ஓரினச்சேர்கையை சட்டப்பூர்வமாக்கி டெல்லி உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்யவேண்டும் என்று பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்கள்.

குடும்ப வாழ்வை தகர்க்கும் மேற்கத்திய கலாச்சார முறையினை இங்கு செயல் படுத்துவதற்கு செய்யும் முயற்சிகளுக்கெதிராக ஒருங்கிணைந்த பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீர் சய்யித் ஜலாலுதீன் உமரி,சங்கராச்சாரியா ஓம் காரன்ந்த்ஜி,டெல்லி ஆர்ச் டயோஸிஸ் இயக்குநர் ஃபாதர் ஃபெடரிக் இம்மானுவேல், டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி தலைவர் சர்தார் தரேசன் சிங்,ஆச்சாரியா லோகேஷ் முனிஜி ஆகியோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடுச்செய்திருந்தனர்."ஒரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கிய நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. இத்தீர்ப்பைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கைக்கு மாற்றமான இவ்வுறவு முறைக்கு ஊக்கமளிப்பதற்கு முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.கலாச்சார ரீதியாக பரிபூரணமான இந்நாட்டில் இத்தகைய அநாகரீகமான போக்குகளை அங்கீகரிக்க இயலாது.இதனை ஜனநாயக ரீதயான உரிமை என்று தவறாக விளங்கியுள்ளார்கள்.இயற்கைக்கு மாற்றமான எதுவும் மனிதனின் அடிப்படை உரிமைகளில் உட்பட்டது அல்ல. இதில் எந்தவொரு நியாயமும் கற்ப்பிக்க முடியாது.தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் சமூக கட்டுக்கோப்பை தகர்க்க முடியாது.இத்தகைய இயற்கைக்கு மாற்றமான உறவுமுறைகளை கவுன்சிலிங் மற்றும் சிகிட்சை மூலமாக மாற்றியெடுக்கவேண்டுமேத்தவிர அதனை அங்கீகரிப்பதல்ல". இவ்வாறு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திய மதத்தலைவர்கள் கூறினர்.

News Source: Thejas Malayalam Daily

9/7/09

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உதவியா?‍சவூதி அரேபியா மறுப்பு

0 கருத்துகள்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த தங்களுடைய விமானப்படைத்தளத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி முற்றிலும் தவறானது என்று சவூதி அரேபியா வெளியுறவுத்துறை அதிகாரி உஸாமா நுகாலி கூறினார்.இஸ்ரேலுடன் எங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை.இந்தச்செய்தி ஒரு விதத்திலும் சரியில்லாதது என்றார் அவர்.
விமானப்படைத்தளத்தை பயன்படுத்துவது சம்ப்ந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாதும் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இரு நாடுகளின் பொது விருப்பத்தின் அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது."இஸ்ரேலுடன் ராஜ தந்திர உறவு,பொருளாதார உறவு உள்ளிட்ட எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் எவ்வாறு இம்மாதிரி ரகசிய ஆலோசனை நடத்த முடியும்?"என்று நுகாலி வினவினார்.அரபு நாடுகளின் ஒற்றுமையை தகர்ப்பதற்கு வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பும் செய்தி இது என்று அவர் மேலும் கூறினார்.ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இச்செய்தியை மறுத்திருந்தார்.

source:thejas malayalam daily

டாக்டர் மர்வா படுகொலையை கன்டித்து கெய்ரோவில் ஆர்ப்பாட்டம், ஜெர்மனி வருத்தம்!

0 கருத்துகள்

கடந்த ஜூலை 5 ஆம் தேதி எகிப்திய டாக்டர் . மர்வா செர்பினி(32) ஹிஜாப் அணிந்ததற்காக ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்திலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து எகிப்திய மக்கள் கெய்ரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ஜெர்மனி இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்க்கெல் எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக்கைச் சந்தித்து இச்சம்பவம் குறித்த ஜெர்மனி தரப்பு விளக்கம் அளிப்பார் என ஜெர்மன் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
"இது போன்ற ஒரு மதத்துக்கு எதிரான கடுமையான வெறுப்பு உமிழ்தலை ஜெர்மனி ஏற்றுக் கொள்ளவில்லை; மர்வா என்ற முஸ்லிம் பெண்ணைக் கொன்ற அக்சன் என்ற ரஷ்ய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படுவார்" என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
அரபு லீக் பொதுச்செயலர் அமர் மூசா, "இது மனித இனத்துக்கு எதிரான வன்கொடுமை; இதை அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

டெல்லி இமாம் செய்யது அப்துல்லாஹ் புகாரி மரணமடைந்தார்

0 கருத்துகள்
டெல்லி இமாம் என்று அனைவராலும் அழைக்கப்படும் டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் முன்னாள் ஷாஹி இமாமான செய்யத் அப்துல்லாஹ் புகாரி அவர்கள் நேற்று டெல்லியிலுள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ மனையில் வைத்து மரணமடைந்தார்.(இன்னாலில்லாஹி...).87 வயதான புஹாரி அவர்கள் சோசியலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆச்சார்ய கிருபாளினி ஆகியோருடன் இணைந்து 1975 இல் இந்திராகாந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தை எதிர்த்துப்போராடியவர்.இதனால் 1977 இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியத்தழுவியது. 1974இல் 350 வருட பழக்கமுள்ள டெல்லி ஜும்மா மஸ்ஜிதை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து போராடியதால் சிறைபிடிக்கப்பட்டார்.முஸ்லிம்களின் அரசியல் சமூக சக்திப்படுத்தலுக்காக தொடர்ந்துக்குரல்க்கொடுத்தவர் புஹாரி அவர்கள்.1973 இல் இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி துர்க்மான் கேட் பகுதியை அக்கிரமமாக தகர்த்தபொழுதும், முஸ்லிம்களை வலுக்கட்டயாமாக குடும்பக்கட்டுப்பாடு செய்யவைத்ததையும் வலுமையாக எதிர்த்தார் புஹாரி.அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து சுவனத்தை வழங்குவானாக.

கஷ்மீரில் அதிகரித்து வரும் இந்தியப்பாதுகாப்புப்படையினரின் அட்டூழியம், மக்கள் ஆவேசம்

0 கருத்துகள்

கஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு அதனை தீவிரவாதிகளிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் ராணுவத்தையும்,துணை ராணுவப்படையினரையும் குவித்து வரும் இந்திய அரசு அங்குள்ள அப்பாவி குடிமக்களின் உயிரையும்,கற்பையும் சூறையாடி வரும் இந்தியப்பாதுகாப்பு படையினரின் அட்டூழியத்தை தடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பாக ஷோபியானில் உறவினரான இரண்டு அப்பாவி முஸ்லிம் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலைச்செய்தனர் சி.ஆர்.பி.எஃப் வெறியர்கள்.இந்த அக்கிரமத்தை கண்டித்து கடுமையான போராட்டத்தை நடத்தினார்கள் கஷ்மீர் மக்கள்.மக்களின் கோபத்தை கண்டு மிரண்ட மத்திய அரசு கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியது.இந்நிகழ்வில் கஷ்மீர் உயரிநீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் மேற்க்கொள்ள சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.
சில தினங்களுக்கு முன்பு பாரமுல்லாவில் பாதுகாப்புப்படையினர் பெண்களிடம் மோசமாக நடந்துக்கொண்டதை கண்டித்து தெருவில் இறங்கி போராடிய மக்களுக்கு நேராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்நிலையில் கஷ்மீர் மாநிலம் மைசூமாவில் 6 தினங்களுக்கு முன்பு காணாமல் போன இஸ்லாமியா கல்லூரி மாணவர் அஸ்ரார் முஸ்தாஃஹ் அஹ்மத் தாரின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நெய்வாரியில் கண்டெடுக்கப்பட்டது.இறந்துபோன மாணவனின் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டிருந்தது.தலையிலும் முகத்திலும் காயங்கள் இருந்தன.பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.பாரமுல்லாவில் சில தினங்களுக்கு முன்பு 4 பேர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலின்போதுதான் மாணவர் அஹ்மத் தார் காணாமல் போயிருந்தார். இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் நடத்திய துயர ஊர்வலத்தில் போலீஸ் கண்ணீர் புகையை உபயோகித்தது. இவ்வூர்வலத்தின்போது ஆவேசம் கொண்ட மக்கள் போலீஸ் வாகனங்களுக்கு நேராக கல்லெறியவும்,போலீஸ் போஸ்ட்டுகள் தகர்க்கவும் செய்தனர்.
ஸ்ரீநகரில் தொடங்கிய பொதுமக்களின் ஆவேசமான போராட்டம் கஷ்மீரின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.கடைகள் அடைத்துக்கிடக்கின்றன.முழு அடைப்புக்கான அனுபவம் நகரத்தில் தென்பட்டது.போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட 45 பேருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.
இத்தகவல் தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ் வெளியிட்ட‌ செய்தியிலிருந்து எடுத்தெழுத‌ப்ப‌ட்ட‌து.

கோத்ரா கலவரம் பற்றிய வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி மறுப்பு !

0 கருத்துகள்
குஜராத் மாநில கோத்ரா கலவரம் பற்றிய வழக்கினை விசாரிக்க பெண் நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரெயில் எரிப்பை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. இஹ்ஷான் ஜாப்ரி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கலுமாலிவாத் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து இஹ்ஷான் ஜப்ரியின் மனைவி ஷாகியா ஜப்ரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். இக்குழு குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என மேலும் 62 பேரிடம் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கலுமாலிவாத் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்- மந்திரி நரேந்திரமோடி மற்றும் 62 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எச்.என்.தேவானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. எனவே இது சம்பந்தமாக அங்கு விசாரிக்க முடியாது. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன் என்று கூறினார்.

8/7/09

பட்லா ஹௌஸ் என்கவுண்டர் விவகாரத்தில் முக்கிய திருப்பம்!

0 கருத்துகள்
டெல்லியிலுள்ள பட்லா ஹௌஸில் நடந்த விவாதத்திற்கிடையான என்கவுண்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை வெளியிட வேண்டும் என மத்திய தகவலறியும் உரிமை கமிசன் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ்( எயிம்ஸ்)க்கு உத்தரவிட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டம் மூலம் மனு சமர்ப்பித்த ஆலம் சாலிஹிடம் அறிக்கையினைக் கையளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 செப்டம்பர் 18 ஆம் தேதி பட்லா ஹவுஸில் வீட்டு எண் எல்.18 ல் இச்சம்பவம் நடந்தது. இதில் ஆதிப் மற்றும் அமீன் என்ற இரு மாணவர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவத்தில் டெல்லி காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டிருந்தார். இம்மூவரின் பிரேத பரிசோதனையை எயிம்ஸ் மருத்துவமனை நடத்தியிருந்தது.
ஆதிபும் அமீனும் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் என டெல்லி காவல்துறை கூறுகிறது. ஆனால், அலிகார் பல்கலைகழகத்தில் பயின்று வந்த அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டர் காவல்துறையால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும் அதில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மோகன்சந்த் சர்மாவைக் காவல்துறையினரே அவரின் பின்பக்கமிருந்து சுட்டுக் கொன்றனர் என்றும் பலத்த சர்ச்சை எழுந்திருந்தது.
இது தொடர்பாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேசன் படித்து வரும் மாணவரான ஸாஹில், தகவலறியும் உரிமை சட்டம் மூலம் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினைத் தனக்கு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், சம்பவம் நடந்த அன்று பட்லா ஹவுஸிலிருந்து பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வரப்பட்ட சடலங்கள் எத்தனை, கொலை செய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் உடல்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதா? அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா? போன்ற விவரங்களையும் தெரிவிக்க அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னரே, பிரேத பரிசோதனை அறிக்கையினை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை கமிசன் உத்தரவிட்டிருந்தது. இதனை, வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என்ற காரணம் கூறி டெல்லி உயர்நீதி மன்றம் தடை செய்திருந்தது. இந்நிலையிலேயே மீண்டும் கமிசன் எயிம்ஸிற்குப் பிரேத பரிசோதனை அறிக்கையினை ஸாஹிலிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி, ஸாஹில் முதன் முதலில் இச்சம்பவம் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கக் கோரி மனு சமர்ப்பித்திருந்தார். எனினும், அன்று காவல்துறையோ எயிம்ஸ் மருத்துவமனையோ அவருக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே அவர் மீண்டும் தகவலறியும் உரிமை கமிசனை நாடினார்.
தற்போதைய கமிசனின் உத்தரவைத் தொடர்ந்து, ஸாஹிலுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கையினை வழங்க இன்ஃபர்மேசன் செண்டருக்கு உத்தரவிட்டுள்ள விவரம் அடங்கிய கடிதத்தை எயிம்ஸ் ஸாஹிலுக்கு வழங்கியுள்ளது.
இப்பிரேத பரிசோதனைகளை நடத்தியது யார்? பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்தது யார் என்பது போன்ற விவரங்களைப் பாதுகாப்பு கருதி ஸாஹிலுக்கு வழங்கத் தகவல் அறியும் உரிமை கமிசன் மறுத்துள்ளது.
பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்த டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் முழுப்பொறுப்பு அமெரிக்கா:லாரி ஜானி

0 கருத்துகள்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் முழுப்பொறுப்பும் அமெரிக்காவைச்சாரும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரி ஜானி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தடுக்காது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு பதிலடியாக தோஹாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருக்கும் லாரி ஜானி இதனை தெரிவித்தார்.

அமெரிக்காவின் அனுமதியில்லாமல் இஸ்ரேலுக்கு எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த முடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.பைடனின் கூற்று அரசியல் தந்திரமானது.இதனை பல முறை நாம் கேட்டிருக்கிறோம். அணு சக்தி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபக்கத்தில் இம்மாதிரியான அறிக்கைகள் விடுவது கவலைக்குரியது என்று அலி லாரி ஜானி கூறினார். இவ்விஷயத்தை நாங்கள் கெளரவப்பூர்வமாக எடுத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான அயான் கெல்லி கூறுகையில்,"ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு நாங்கள் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடென்பதால் அது எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கும் என்று எங்களுக்கு தெரியாது.மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி இதுவரை நாங்கள் ஆலோசிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் விட்டுகொடுக்க முடியாது"என்றார்.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

வாலிபர் மரணம்:ஸ்ரீநகரில் மீண்டும் பதற்றம்

0 கருத்துகள்
ஸ்ரீநகர்:சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கஷ்மீரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.அன்சார் அஹ்மத் தார்(வயது20)என்ற இளைஞரின் உடல்தான் ரெய் நவாரியில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 5 நாள்களாக இவரை குறித்து எந்தவொரு விபரமும் இல்லாதிருந்தது.கொலைக்கு காரணம் பாதுகாப்புப்படையினர் என்று அவ்வூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாளம் நாளிதழ்

சீனா: உரும்கியில் கலவர நிலை மோசம் அடைகிறது!

0 கருத்துகள்


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் நடைபெற்று வரும் கலவரம் மேலும் மோசம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஹான் சீன இனத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் தற்போது கலவரத்தில் குதித்துள்ளனர். உய்குர் இனத்தை அழித்து ஒழித்து விட்டுத் தான் ஓயப் போவதாக கோஷங்கள் எழுப்பிய வண்ணம் உய்குர் இன மக்களின் சொத்துகளை சூறையாடி வருகின்றனர்.
முன்னதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உய்குர் இன இளைஞர்களை காவல் துறை கைது செய்ததை எதிர்த்து உய்குர் இனப் பெண்களும் முதியவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹான் சீன மக்களில் பெருவாரியானோரும் கலவரத்தில் குதித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.
ஹான் சீன இன மக்கள் இரும்புத் தடி, மூங்கில் கழி, கடப்பாரை எனக் கையில் கிடைத்த ஆயுதங்களுடன், "உய்குர்களைத் தாக்கி ஒழிக்க வேண்டும்" என கோஷமிட்டுக் கொண்டே அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளைத் தாக்கி வருகிறார்கள்.
கலவரத் தடுப்புக் காவல்துறையினர், ஹான் சீன இன மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

7/7/09

தலிபான் கருத்து-மன்னிப்பு கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி

0 கருத்துகள்
டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.
இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.
அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.
மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

உய்கூர் இனத்தவர் போராட்டத்தை முரட்டுத்தனமாக அடக்கிய சீன போலீஸ் - தொடர்ந்து பதட்டம்

சென்னை: சீனாவின் ஜின்சியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் உய்கூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை மிகவும் கொடூரமாக நசுக்கி, அடக்கியுள்ளது சீன போலீஸ். தங்களது மக்கள் மீது வாகனங்களை ஏற்றியும், தாறுமாறாக துப்பாகிகளால் சுட்டும், அடித்தும் கொன்றதாக உய்கூர் மக்கள் கூறியுள்ளனர்.
சீன போலீஸார் கூறுவது போல 140 பேர் இறக்கவில்லை. மாறாக 600க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக உய்கூர் இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வட மேற்கு சீனாவில் உள்ள உய்கூர் மக்கள் முஸ்லீம்கள் ஆவர். இவர்களுக்கும் சீனர்களின் ஹான் பிரிவினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இணையதளம் ஒன்றில் உய்கூர் மக்கள் 2 ஹான் சீனப் பெண்களைக் கற்பழித்து விட்டதாக செய்தி வெளியானது. இதனால் ஹான் மக்கள் கொந்தளித்தனர்.
இதையடுத்து குவாங்டாங் என்ற நகரில் உள்ள பொம்மைத் தொழிற்சாலைக்குள் புகுந்த ஹான் சீனத் தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த உய்கூர் தொழிலாளர்களைத் தாக்கினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் கற்பழிப்பு செய்தி பொய்யானது என்பதை போலீஸார் கண்டுபிடித்து அறிவித்தனர்.
இதையடுத்து சீனக் கொடியுடன் உய்கூர் மக்கள் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் மரணத்திற்கு நியாயம் கோரி அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் மத ரீதியில் நடத்தப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால் தாங்கள் முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்தவில்லை. முஸ்லீம் கொடிகளை நாங்கள் கையில் ஏந்தியிருக்கவில்லை. எங்களுக்கும் துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் உய்கூர் இனத்தவர்.
அமைதியாக நடந்த போராட்டத்தை ஆயுத பலத்தைக் கொண்டு அடக்க முயற்சித்தது சீன போலீஸ். இதையடுத்து கலவரம் வெடித்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஹான் சீனர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கினர் உய்கூர் மக்கள்.
ஹான் இனத்தவரின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
கலவரம் பெரிதாவதைப் பார்த்த சீன போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என இறங்கி விட்டனர்.
இந்த தாக்குதலில் 140 பேர் இறந்ததாக சீன போலீஸார் தெரிவிக்கின்றனர். கலவரத்தில் 261 வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இவற்றில் 190 பேருந்துகள், 10 டாச்சிகள், 2 போலீஸ் கார்கள் அடக்கம்.
203 கடைகள், 14 வீடுகளும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
பல நூறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 90 முக்கிய நபர்களை தேடி வருகின்றனராம்.
ஆனால் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக உய்கூர் இனத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உலக உய்கூர் காங்கிரஸ் அமைப்பு மூனிச் நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிகாரிகள்தான் வன்முறையைத் தூண்டி விட்டு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அமைதியான முறையில் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியமக்கள் மீது சாதாரண போலீஸார், கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் போலீஸார், ஆயுதப் போலீஸார் என பல வகை போலீஸார் சேர்ந்து மிருகத்தனமான தாக்குதலைத் தொடுத்தனர்.
கவச வாகனங்கள், தானியங்கித் துப்பாகிகள் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என சகலவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
போராட்டத்தி்ல ஈடுபட்ட பலர் துப்பாக்கி குண்டு பட்டு இறந்தனர். சிலர் போலீஸார் அடித்ததால் உயிரிழந்தனர். பலர் மீது வாகனங்களை ஏற்றிக் கொன்றுள்ளனர். ஜின்சியாங் பல்கலைக்கழகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சீன போலீஸார் 140 பேரை இறந்ததாக கூறுகின்றனர். ஆனால் 600 பேர் வரை இறந்துள்ளனர்.
தற்போது கலவரம் தடுக்கப்பட்டு விட்ட போதிலும் கூட உரும்கி நகரம் தொடர்ந்து பதட்டத்துடன்தான் காணப்படுகிறது.
thatstamil

ஸ்ரீநகர்: காணாமல் போன இளைஞர் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்!

ஒரு வாரத்திற்கு முன்னர் இராணுவம் கைது செய்த பின்னர் காணாமல் போன 17 வயது இளைஞரை மயக்க நிலையில் கிராமத்தினர் கண்டுபிடித்தனர். பஷரத் அஹ்மத் என்ற இளைஞரை ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக இராணுவம் கைது செய்தது.
அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அவரைக் கைது செய்த இராணுவம், விசாரணைக்குப் பின்னர் அன்று மாலையே அவரை விடுவித்து விட்டதாகவும் அவரைக் குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கைவிரித்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு வலுத்த நிலையில், திடீரென நேற்று மாலை காணாமல் போன அஹ்மதை மயக்க நிலையில் கிராமத்தினர் கிராமத்தின் எல்லையில் கண்டனர். இதனைத் தொடர்ந்து அஹ்மத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன கடந்த வாரத்தில் அஹ்மத் எங்கிருந்தார் என்பது பற்றிய விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சீனா: முஸ்லீம்கள் மீது அடக்குமுறை 300க்கும் மேற்பட்டோர் பலி!


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். சீன அரசு சீனாவின் பிறபகுதிகளில் இருந்து சீன இனத்தைச் சேர்ந்த மக்களைக் குடியமர்த்தி வருகிறது. சீன அரசின் இந்த நடவடிக்கை உய்குர் இன மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் பெரும்பான்மையையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாக உய்குர் இன மக்கள் கருதுகிறார்கள்.
நேற்று உரும்கி என்ற நகரில் உய்குர் இன மக்களுக்கும், சீன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் சண்டை முற்றிக் கலவரம் வெடித்தது.

இக்கலவரத்தை சீன அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் இறந்துள்ளனர் என்றும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு செய்தி நிறுவனம் கூறுகின்றது.
20 ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் போராட்டத்தை சீன அரசு இராணுவத்தைக் கொண்டு மிகக் கடுமையாக ஒடுக்கியது. அதற்குப் பின் மிகக் கடுமையான அடக்குமுறையாக இந்நிகழ்வு இருப்பதாக சீன நோக்கர்கள் கூறுகின்றனர். உய்குர் இன மக்கள் துருக்கிய மொழியை ஒட்டிய மொழியைப் பேசி வருகின்றனர். இவர்களது மதம் இஸ்லாம். இவர்கள் தங்களைச் சீன அரசு புறக்கணிப்பதாகப் பலகாலம் கருதி வருகின்றனர்.
உய்குர் மக்களின் எழுச்சியால் சீனாவிலிருந்து ஜின்ஜியாங் மாகாணம் பிரிந்து போக நேரலாம் என சீன அரசு அஞ்சுவதால் அவர்களிடையே சீன இன மக்களைக் குடியமர்த்தி வருகிறது.

மர்வாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கடந்த புதன்கிழமை ஜெர்மனியில் வைத்து வெறிப்பிடித்த இளைஞன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்திற்குள் கத்தியால் குத்தப்பட்டு மரணித்த‌ மர்வா அல் ஸெர்பினியின் உடல் அவரது சொந்த நாடான எகிப்திற்கு கொண்டுவரப்பட்டு அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்செய்யப்பட்டது.


அவரது ஜனாஸா ஊர்வலத்தில் திரளாக மக்கள் கலந்துக்கொண்டனர்.(இதுபற்றிய செய்தி பாலைவனத்தூதில் ஏற்கனவே வெளியாகியிருந்தது)ம‌ர்வாவின் ம‌ர‌ண‌ம் எகிப்தில் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. எகிப்தைச்சார்ந்த பொதும‌க்க‌ளும், பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் இப்பிர‌ச்ச‌னையை எகிப்திய‌ அர‌சு சாதார‌ண‌ விச‌ய‌மாக‌ க‌ருதிவிட‌க்கூடாது என்று அர‌சுக்கு கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

எகிப்து அலெக்சான்டிரியாவில் உள்ள‌ அவ‌ருடைய‌ சொந்த‌ ஊரில் ஒரு தெருவிற்கு ம‌ர்வாவின் பெய‌ர் சூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.ம‌ர்வாவை அவ்வூர் ம‌க்க‌ள் "ஷ‌ஹீத‌த் ஹிஜாப்" ஹிஜாபிற்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌வ‌ர் என‌க்குறிப்பிடுகின்றன‌ர்.
news source: al jazeera

முக்கியப்பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த ஒபாமாவுக்கு அஹ்மத் நஜாத் அழைப்பு

தெஹ்ரான்:முக்கிய பிரச்சனைகள் குறித்து உலக மக்கள் சமூகத்தின் முன் விவாதம் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒபாமா தயாரென்றால் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்தில் வைத்து உலக நாட்டுத்தலைவர்கள் முன்னிலையில் கொள்கை விவாதம் நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக நஜாத் கூறினார்.ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மருத்துவ பல்கலைகழக தலைவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியொன்றில் உரை நிகழ்த்தும்பொழுது இதனை தெரிவித்தார்.ஆனால் இது பற்றி ஒபாமாவின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.ஈரானுடனான உறவில் முன் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷின் அணுகுமுறைக்கு மாற்றமான கருத்தைக்கொண்டுள்ள ஒபாமா நஜாதின் அழைப்பிற்கு பதிலளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.2006 ல் இதேபோல் அன்றைய அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ்ஷையும் நஜாத் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.புஷ்ஷிற்கு அனுப்பிய 18 பக்க கடிதத்தில் அரசியல்,மதம்,சர்வதேச அளவில் மாறுப்பட்டக்கருத்துகளை பற்றி விவாதிக்க தயாரென்று தெளிவுப்படுத்தியிருந்தார்.ஆனால் புஷ் அதற்கு பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில் அணு ஆற்றல் சம்பந்தமான பேச்சுவார்த்தை வருகிற அக்டோபரில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறக்கூடும் என்று இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானில் அமெரிக்க தூதர் டென்னிஸ் ரோசை மேற்கோள் காட்டியுள்ள செய்தியில் ஈரானின் அணு சக்தி பிரச்சனையில் அமெரிக்காவின் மாற்றமான நிலை பேச்சு வார்த்தையின் போது வெளியாகும் என்று அச்செய்தி கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

6/7/09

குவாண்டனாமோ சிறைச்சாலைகளைப் போன்று இந்தியாவிலும் கொடூர சிறைகள் - தி வீக் பத்திரிகை வெளியிடும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளைப் போன்று சட்டத்திற்கு புறம்பான கொடூர சித்திரவதைக்கூடங்கள் இந்தியாவிலும் செயல்படுவதாக வெளியான தகவல் நாடு முழுவதும் விவாதத்தை கிளப்புகிறது.
மும்பை,டெல்லி,கல்கத்தா,கஷ்மீர்,குஜராத் ஆகிய இடங்களில் 15 கொடுஞ்சிறைகள் உள்ளதாக தி வீக் இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது. கொல்கத்தாவில் இரண்டும்,அஸ்ஸாமில் ஒன்றும், குஜராத், மும்பை, கஷ்மீர் ,டெல்லி ஆகிய இடங்களில் 3 வீதமும் இத்தகைய சிறைகள் செயல்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ வின் முக்கிய அதிகாரிகள் இச்சிறைகளுக்கு அடிக்கடி வந்து போகின்றனர். எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல், கைதுச்செய்யபடுபவர்களை தீவிரவாத முத்திரை குத்தி கண்களைக்கட்டி இத்தகைய சித்திரவதைக்கூடங்களுக்கு கொண்டுச்செல்கின்றனர்.கடுமையான அடி உதைகளும் இன்னும் மனித இரக்கமற்ற சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு நடைபிணங்களாக்கப்படும் இவர்கள் ஏதோ கண்காணா இட‌ங்களில் கொண்டு விடப்படுகிறார்கள்.

தி வீக் ந‌ட‌த்திய‌ புல‌னாய்வில் மும்பையில் நான்கு அறைக‌ளுள்ள‌ ஒரு சித்திர‌வ‌தை கூட‌ம் அமைந்திருப்ப‌து ஆரெய் கால‌னிக்கு அருகில் என்று கூறுகிற‌து.ம‌லேகான் குண்டுவெடிப்பில் பொய்க்குற்ற‌ஞ்சாட்டி முன்புக் கைதுச்செய்த‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை இங்கு வைத்துதான் விசாரித்துள்ளார்க‌ள். சித்திர‌வ‌தைச்செய்ய‌ப்ப‌டும்பொழுது அல‌ற‌ல் ச‌ப்த‌ம் வெளியில் கேட்காம‌ல் இருக்க‌ ச‌வுண்ட் ஃப்ரூஃப் செய்ய‌ப்ப‌ட்ட‌ அறைக‌ள் கொண்ட‌ சிறை மும்பை காலா ச‌வுக்கில் உள்ள‌து.இர‌ண்டு அறைக‌ள் ம‌ட்டும் கொண்ட‌ இன்னொரு சிறை மும்பையில் செம்பூரில் உள்ள‌து.டெல்லியில் சாண‌க்கிய‌புரி, துவார‌கா, லோடி காலனி ஆகிய இடங்களில் இந்த வெஞ்சிறைகள் உள்ளன. கஷ்மீர்,கொல்கத்தா,குஜராத் ஆகிய இடங்களிலுள்ள ரகசிய சித்திரவதை சிறைக்கூடங்கள் பற்றியும் தி வீக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்சார அதிர்ச்சிக்கொடுப்பது,நிர்வாணமாக்கி மன உறுதியை தகர்க்கும் விதமாக அவமானப்படுத்துவது, சிறை அறையில் அதிக வெப்பம் ஏற்படுத்தி திடீரென அதிக குளிரூட்டுவது, உறங்க விடாமல் தடுப்பது போன்றவை இங்குள்ள சித்திரவதை முறைகள். ஆனால் சட்டப்பூர்வமான எல்லா ஆதாரங்களையும் சிறப்பு காவல் பிரிவினர் அழிக்கவும் செய்கின்றனர்.இம்மாதிரியான இந்திய குவான்டனாமோ சித்திரவதைக்கூடங்களில் மனித தன்மையற்ற முறையில் சித்திரவதைச் செய்யப்படுவது இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்படும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண சித்திரவதைகள் மூலம் உண்மை கண்டறிய முடியாது ஆதலால் இத்தகைய கொடூர சித்திரவதைக்கூடங்கள் செயல்படுவதாக சில போலீஸ் உயர் அதிகாரிகள் நியாயப்படுத்துகின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில் சில இடங்களில் ரகசிய சித்திரவதைக்கூடங்கள் இருந்தன. மும்பைக்குண்டுவெடிப்பில் கைதுச்செய்யப்பட்டவர்களை சி.ஐ.ஏ மற்றும் மொசாதைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் வைத்து விசாரணைச்செய்தபொழுது சில மனித உரிமை அமைப்புகள் குவான்டனாமோ மாதிரியில் இந்தியாவிலும் சித்திரவதைக்கூடங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் இந்த தேசம் தற்ப்போது சந்திக்கும் சவால்களை சந்திக்க முடியாது என்றும் ஆதலால் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை ஒடுக்குவதற்கு இம்மாதிரியான சட்டத்தின் கண்ணில் மண்ணைதூவிச்செயல்படும் சித்திரவதைக்கூடங்கள் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு முக்கிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்ததாகவும் இம்மாதிரி சித்திரவதைக்கூடங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தப்போவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாகவும் தி வீக் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
News Source:Thejas Malayalam Daily.
மேலும் இச்செய்தியைப்பற்றி அதிகமான தகவல் பெற இங்கு க்ளிக் செய்யவும்

பர்தா அணிந்ததை இழிவுப்படுத்தியவரை எதிர்த்து வழக்குத்தொடர்ந்த முஸ்லிம் பெண் கோர்ட் வளாகத்தில் படுகொலை ஜெர்மனியில் பயங்கரம்

எகிப்தைச்சார்ந்தவர் டாக்டர்.மர்வா எல்‍ஸெர்பினி.ஃபார்மஸியில் டாக்டர் பட்டம்பெற்றவர். இவருடைய கணவர் எல்வி அலி ஓகாஷ் ஜெர்மனியில் எகிப்து நாட்டின் தூதரக அதிகாரியாக உள்ளார். இவர் ஜெனடிக் எஞ்சினியரிங் விரிவுரையாளரும் கூட.டாக்டர் மர்வா 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில்.ஜெர்மனியில் ஒரு பார்க்கில் வைத்து ஒரு இளைஞர் இவர் தலையில் இஸ்லாமிய முறைப்படி ஸ்கார்ப் அணிந்து தலையை மறைத்துள்ளதை கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இழிவுப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமிய நெறியினை பேணியதற்காக இழிவுப்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு வழக்காக பதிவுச்செய்தார் மர்வா. நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 780 யூரோக்கள் அபராதமாக விதித்தது.

இந்நிலையில்தான் கடந்த 1 ம் தேதி புதன்கிழமை பிரஸ்டன் நீதி மன்றத்திற்கு வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்க வந்த மர்வாவை கோர்ட் வளாகத்திற்குள் வைத்து இவரால் வழக்குத்தொடுக்கப்பட்ட இளைஞன் 18 முறை கத்தியால் குத்தியதால் கடுமையான காயம் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் சகோதரி மர்வா(இன்னாலில்லாஹி...)இது அவருடைய கணவன் மற்றும் 2 குழந்தைகளின் முன் நடைப்பெற்றுள்ளது. மர்வாவை காப்பாற்ற முயன்ற அவருடைய கணவ‌ர் 3 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்(இன்னொரு செய்தி மர்வாவின் கணவர் போலீஸால் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கூறுகிறது). மர்வாவின் கணவர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைப்பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிட்சைப்பெற்று வருகிறார். ஜெர்மன் பத்திரிகைகள் இந்த செய்தியை முழுமையாக வெளியிடவில்லை.சில தினங்களுக்கு முன்புதான் பிரான்சு அதிபர் சர்கோசி பர்தாவுக்கெதிராக விஷத்தை கக்கினார்.இந்நிகழ்வு மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இஸ்லாமோ ஃபோபியாவின் பயங்கரத்தை வெளிப்படுத்துகிறது. இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணியதற்காக இழிவுப்படுத்தப்பட்டதற்காக வாய்மூடி இருக்காமல் நீதிக்கான போராட்டத்தில் மரணமடைந்துள்ளார் சகோதரி மர்வா ஸெர்பினி.வல்ல இறைவன் அல்லாஹ் அவருடைய பாவங்களை பொறுத்து உயிர் தியாகிகளின் அந்தஸ்தை அளிப்பானாக!
தொடர்புடைய வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை - யூகியா அமானோ

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்று சர்வதேச அணு சக்தி கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானைச்சார்ந்த யூகியா அமானோ தெரிவித்தார்.சர்வதேச அணுசக்தி கழகத்தின் ரேகைகளை ஆய்வுச்செய்ததில் ஈரானுக்கெதிராக எந்தவொரு ஆதாரங்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை என டைரக்டர் ஜனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமானோ இதனை தெரிவித்தார்.
எல்லா நாடுகளையும் போல் ஈரானும் ஐ.நா வின் தீர்மானங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது.அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என் நம்புகிறேன்.அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதுபோல் யுரேனியத்தை செறிவூட்டுவது அணு ஆயுதம் தயாரிப்பதற்கல்ல.மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு என்ற ஈரானின் விளக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமானோ தெரிவித்தார்.ஈரான் மற்றும் சிரியாவின் அணு சக்தி விசயத்தில் யாதொரு தேவையற்ற கரடுமுரடான நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என்று கூறிய அவர் அமெரிக்கா மற்றும் சில நாடுகளின் மிரட்டல் ஈரானை அபாயகரமான ஆயுத‌ தயாரிப்பை நோக்கி செலுத்தும் என அவர் எச்சரித்தார்.
12 வருட சேவைக்கு பிறகு நவம்பரில் பதவி விலகும் முஹம்மது அல் பராதியின் காலியிடத்தை நிரப்ப யூகியோ அமானோ தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கறிஞரான அமானோ ஜப்பானின் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தில்தான் தனது அதிகாரப்பூர்வ பணியை துவக்கினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்.

5/7/09

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு

திரைப்படம் என்பது பட்டிக்காடு முதல் மேல்தட்டு மக்கள் வரை சென்றடையும் ஒரு வலுவான ஊடகம். மக்களின் முக்கியப்பொழுதுப்போக்காக மாறிப்போன இந்த ஊடகத்தை இஸ்லாத்தின் எதிரிகள் இன்று கையில் எடுத்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு வெறுப்புணர்வு பிரச்சாரத்தை(Hate policy) பரப்பி வருகிறார்கள்.இது இன்று நேற்றல்ல தொன்றுத்தொட்டே நடந்து வருகிறது. காரணம் முஸ்லிம்கள் இத்துறையில் அதிகம் கவனம் செலுத்தாததுதான். அதற்காக எல்லாப்படங்களையும் பார்க்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள் நமக்கு எதிராக நடக்கும் இந்த ஊடக யுத்தத்தில் கவனம் செலுத்தி உடனுக்க்குடன் விமர்சனங்களைச்செய்து மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்ப்பதோடு நாமும் இத்துறையில் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு பங்காற்ற முன் வரவேண்டும். அப்பொழுதுதான் நாம் இந்த சதி வலையை முறியடிக்க இயலும். ஆகவே இது சம்பந்தமாக விடியல் வெள்ளி மாத இதழில் 2008 ஜூலை மாதம் எழுத்தாளர் MSAH அவர்களால் எழுதப்பட்ட கருத்துக்கட்டுரையை பாலைவனத்தூதில் சமுதாய விழிப்புணர்வுக்காக பிரசுரம் செய்கிறோம்.

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு


டாக்டர் ஜாக் ஷஹீன் என்ற எழுத்தாளர் சமீபத்தில் ஒரு நூலை எழுதியுள்ளார்.அரபுக்கிறிஸ்தவராகிய இவர் 30 வருடங்கள் ஆய்வுச்செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.நூலின் பெயர்: The Reel Bad Arabs:How Hollywood Villifies a People. ஹாலிவுட் என்ற பெயரை அறியாதவர் இந்த உலகில் எவரும் இருக்கமாட்டார்.அமெரிக்கத்திரைப்படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஓரிடம்தான் ஹாலிவுட். இது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது.ஆதலால் அமெரிக்கத்திரையுலகை ஹாலிவுட் என்றழைப்பார்கள்.

இதனை வழியொட்டிதான் நம்மூரிலும் பல "கட்அ வுட்"களைக்கொண்டு வந்தார்கள்.தமிழ்த்திரைப்படங்கள் பெரும்பாலும் சென்னை கோடம்பாக்கத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்படுகின்றன.இதனால் தமிழ் திரையுலகை "கோலிவுட்"என்றழைக்கின்றார்கள்.பம்பாயை மையமாகவைத்து ஹிந்தித்திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் ஹிந்தித்திரையுலகை "பாலிவுட்"என்றழைக்கின்றார்கள்.
உலகம் முழுவதும் அதிகம் "மவுசு" உள்ள ஹாலிவுட் படங்களில் கடந்த 1896 முதல் 2000 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 1000 படங்களை ஜாக் ஷஹீன் தனது ஆய்வுக்கு எடுத்துள்ளார். இவைகளில் 900க்கும் மேற்ப்பட்ட படங்கள் அரபுகளையும் முஸ்லிம்களையும் கோரமாகச் சித்தரிக்கின்றன.அதாவது எதிர்மறையாக வெளிவந்துள்ளன.52 படங்கள் அரபுக்களைக்குறித்து நடுநிலையாகவும், 12 படங்கள் நேர்மறையாகவும்(பாசிட்டிவ்)வெளிவந்துள்ளன.
"அரப் என்றால் யார்?" என்று ஷஹீன் இந்நூலில் கேட்கிறார்.ஹாலிவுட்டின் பதில்:"கொடூரமான கொலைக்காரர்கள், காட்டுமிராண்டித்தனமான வாடகைக்கொலையாளிகள்,மதவெறியர்கள்,எண்ணை வளம் அதிகம் கொண்ட அகம்பாவிகள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள்." இப்படித்தான் ஹாலிவுட் படங்கள் நமக்கு அரபுக்களைப்பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கின்றன.
அவரது ஆய்வுப்படி 900க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்கள் அரபுகளை வில்லன்களாக சித்தரிக்கின்றன.இந்த வில்லன்களில் அதிகமானவர்கள் அரபு ஷேக்குகளாக இருப்பார்கள்.அல்லது எகிப்தியர்களாக இருப்பார்கள். அல்லது ஃபலஸ்தீனர்களாக இருப்பார்கள்.மீதியுள்ள மாநிறமுடைய அல்ஜீரியா,ஈராக்,ஜோர்தான்,லெபனான்,லிபியா,மொராக்கோ,சிரியா,துனீசியா,எமன் போன்ற அரபு தேசங்களைச்சேர்ந்த அரபுகளாக இருப்பார்கள்.
கார்ட்டூன் படங்கள் கூட அரபுக்களை விட்டு வைக்கவில்லை.1982ல் வெளிவந்த 1001 Rabbit Tales என்ற கார்ட்டூன் படம் அரபுகளை மோசமாகச் சித்தரிக்கின்றது.

ஒரு படம் கூட ஃபலஸ்தீனர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், இஸ்ரேலியர்களை கொடூரமான ஒடுக்குபவர்களாகவும் காண்பிப்பதில்லை.
இஸ்ரேலிய யூத ராணுவ வெறியர்களும்,யூதக் குடியேற்றவாதிகளும் ஆலிவ் மரங்களை வேரோடு பிடுங்கி எறிவதையும்,ஃபலஸ்தீன அப்பாவி குடிமக்களை சுட்டுப்பொசுக்குவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட காண்பிப்பதில்லை.

ஃபலஸ்தீனத்தின் பரிதாபத்திற்குரிய குடிமக்கள் கொடூரமான யூத ஆக்கிரமிப்பின் கீழ் தங்கள் வாழ்வை நகர்த்துவதற்குப் போராடுவதையும், அகதிகள் முகாமில் அல்லலுறுவதையும், சொந்த மண்ணிலேயே அன்னியர்களாக அலைவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட இதுவரை காண்பித்ததில்லை.

1994 true liஎச் என்ற படம் வெளிவந்தது.1987 இல் Wanted Dead or Aliவெ என்ற படம் வெளியானது.இந்த இரண்டு படங்கள் உட்பட 7 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை அணு ஆயுத பயங்கரவாதிகளாக சித்தரித்தன.
Half-Moon Street(1986),Terror in Beverly Hills(1988),Appointment with Death(1988) ஆகிய படங்கள் உட்பட 11 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை கெட்டச்செயல் செய்பவர்களாகவும்,மேலை நாட்டுப்பெண்களையும்,குழந்தைகளையும் மிரட்டுபவர்களாகவும், காயப்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.
இந்த அடிப்படையில் நூலாசிரியர் ஜாக் ஷஹீன் ஓர் உண்மையை கண்டுபிடித்துள்ளார்,அதாவது பல படங்கள் இஸ்ரேலிலேயே படம்பிடிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். இந்த படங்கள்தான் 2003இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதை இலகுவாக்கிக்கொடுத்திருக்கும் என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார்.அதாவது அரபுகளைத்தொடர்ந்து வில்லன்களாகக் காட்டி இவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் மனங்களில் பதிய வைப்பதற்கு இந்தப்பாழாய்ப்போன ஹாலிவுட் படங்கள் பெரும் உதவி புரிந்துள்ளன.

இந்த மாதிரிப்படங்களை உருவாக்குவது ஏதோ எதேச்சையாக நடப்பது அல்ல; அது ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலாக திட்டம் போடப்பட்டு அச்சுப்பிசகாமல் அரங்கேற்றப்படுகின்றன என்கிறார் ஜாக் ஷஹீன். குறிப்பாக இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்று ஜாக் ஷஹீன் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.அந்த இரண்டு தயாரிப்பாளர்கள் மெனாச்செம் கோலன்(Menachem Golan)யோரம் குளோபஸ்(Yoram Globus). 1982 இல் குளோபஸ் இஸ்ரேலின் திரைப்படத்துறைக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்று சொல்லும்பொழுதே இவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு விளங்கிவிடும்.
இஸ்ரேலில் தயாரிக்கப்படும் அத்தனை படங்களையும் இந்த திரைப்படத்துறைதான் கண்காணித்து வருகின்றது.

குளோப‌ஸ்ஸும்,கோல‌னும் இணைந்து அமெரிக்காவில் "கேனான்" என்ற‌ புக‌ழ்ப்பெற்ற‌ த‌யாரிப்பு நிறுவ‌ன‌த்தை உருவாக்கினார்க‌ள். இந்த‌ கேனான் நிறுவ‌ன‌ம் அர‌புக‌ளை வில்ல‌ன்க‌ளாக‌ சித்த‌ரித்து ச‌ளைக்காம‌ல் 26 ப‌ட‌ங்க‌ளை த‌யாரித்துள்ள‌து. இந்த‌ப்ப‌ட‌ங்களைக் காண்போர் அர‌புக‌ளைக்க‌ண்டால் காறி உமிழும் வ‌ண்ண‌ம் வெறுப்பை உண்டாக்கும் ப‌ட‌ங்க‌ள் இவை.
கேனானின் Hell Squad(1985) என்ற‌ ப‌ட‌த்தில் அமெரிக்க‌க்க‌ட‌ற்ப‌டையின‌ர் வில்ல‌ன்க‌ளாகச் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ளை கொன்றொழிப்பார்க‌ள். அதே போல் The Delta Force(1986), Killing Streets(1991) ஆகிய‌ கேனான் த‌யாரிப்புப் ப‌ட‌ங்க‌ளிலும் ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் கொன்றொழிக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஜாக் ஷஹீன் இன்னொரு அதிர்ச்சிகர உண்மையையும் தன் ஆய்வில் கண்டுபிடித்தார். அரபுகளை மோசமாக சித்தரிக்கும் படங்களின் தயாரிப்புகளில் அமெரிக்க இராணுவம் நேரடியாக ஈடுபடுகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சிகர உண்மை.
2000 ல் வெளியான‌ Rules of Engagement என்ற‌ ப‌ட‌ம் அமெரிக்க‌ இராணுவ‌த்திற்கும்,அமெரிக்க‌ க‌ப்ப‌ற்ப‌டை வீர‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி சொல்கிற‌து.
இதேபோல் 14 ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்புப் ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.தேவையான கருவிக‌ள்,ஆட்க‌ள், தொழில்நுட்ப‌ உத‌விக‌ள் செய்துத‌ந்த‌த‌ற்காக‌ இந்த‌ப்ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்பு ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.இவைய‌னைத்திலும் அமெரிக்க‌ர்க‌ள் வில்ல‌ன்க‌ளான‌ அர‌புக‌ளைக் கொன்றொழிப்பார்க‌ள்.

அர‌புக‌ளை மோச‌மாக‌ சித்த‌ரிக்கும் ப‌ட‌ங்க‌ளான‌ True Lies(1994), Executive Decision(1996),Freedom Strike(1998)ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அமெரிக்க‌ ராணுவ‌ த‌லைமைய‌க‌மான‌ பென்ட‌க‌னே உத‌வி செய்துள்ள‌து.அதே போல‌ அர‌புப் பெண்க‌ளையும் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் இர‌ண்டாந்த‌ர‌ப் பெண்க‌ளாக‌, த‌ர‌ங்கெட்ட‌வ‌ர்க‌ளாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌ன‌ என்று ஜாக் ஷ‌ஹீன் கூறுகிறார். இடுப்பைகுலுக்கி ஆடும் முகத்திரை அணிந்த பெண்களாகவும்,மெல்லிய அரைகுறை ஆடைகள் அணிந்த ஆபாசப்பெண்களாகவும் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.Sheltering Sky(1990),saadia(1953),Beast of Morocco(1966) போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

Leopard Women(1920),Night Hawks(1981) ஆகிய படங்களில் அரபுப்பெண்கள் மேலை நாட்டினரைக்கொல்வதற்காக குண்டுகளைத் தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு அலையும் கொடூரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஜாக் ஷஹீன் ஆராய்ந்தார்.அரப் இஸ்ரேல் மோதல்,பேராசை,The Mummy போன்ற படங்கள் கோடி கோடியாக சம்பாதித்துக்கொடுத்தன.திரைப்படங்கள் பற்றிய நடுநிலையான, கடுமையான விமர்சனங்கள் இல்லாமை,பொதுமக்கள் காட்டும் அமைதி,முஸ்லிம்கள் ஹாலிவுட் களத்தில் அதிகம் இல்லாமை ஆகியவைகள் அவர் ஆய்வில் கண்டுபிடித்த காரணங்களில் சில."உண்மையான ஆர்வமிக்க இளம் திறமையாளர்கள் முன் வரவேண்டும்.அவர்கள் அரபுகளைப்பற்றிய தவறான கருத்துக்களை களையும் வண்ணம் நல்ல தரமான படங்களை தயாரிக்கவேண்டும்".என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார். ஆம் முஸ்லிம்க‌ள் திரைப்ப‌ட‌ம் என்னும் வ‌லிமையான‌ ஊட‌க‌ ஆயுத‌த்தை கையில் எடுக்க‌வேண்டும்.
அத‌னைஇஸ்லாமிய‌ப்ப‌டுத்த‌வேண்டும்.ஆபாச‌ம்,வ‌ன்முறை,ஒருதலைப்ப‌ட்ச‌ம்,ஒரு த‌லைமுறையையே அழிக்கும் வ‌ண்ண‌ம் ம‌றைமுக‌ப் பிர‌ச்சார‌ம் என்று அனைத்து அக்கிர‌ம‌ங்க‌ளும் இல்லா ஒரு புதிய‌ திரையுல‌கை உருவாக்க‌வேண்டும்.இதுதான் இப்போதைய‌ தேவை.
க‌ட்டுரையாள‌ர்:MSAH
Source:The Gulf Today May 15,2008.
Thanks:Vidiyal Velli Monthly July,2008.

பதக்கம் வாங்குவதற்காக போலி என்கவுன்ட்டர் - எம்.பி.ஏ. பட்டதாரி அநியாயமாக பலி

டெல்லி: டேராடூன் போலீஸார் பதக்கம் வாங்குவதற்காக போலியான என்கவுண்ட்டரை நடத்தி எம்.பி.ஏ பட்டதாரியின் உயிரை அநியாயமாக பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபரின் பெயர் ரன்பீர் சிங். உ.பி. மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர்.
எம.பி.ஏ படித்தவரான ரன்பீர் சிங்குக்கு டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அதில் சேருவதற்காக அவர் டேராடூன் வந்திருந்தார்.
தனது நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரை போலீஸார், டலன்வாலா என்ற இடத்தில் வழிமறித்தனர்.
போலீஸாருடன் அவர்கள் மூன்று பேரும் சண்டை போட்டதாகவும், துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறி சுட்டுள்ளனர். இதில் ரன்பீர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இரு நண்பர்களும் அதிர்ஷ்டசமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.
அத்தோடு நிற்காத போலீஸார் ரன்பீர் சிங் பையில் கத்தியும், துப்பாக்கியும் இருந்ததாகவும் கூறியது.
ஆனால் இதை ரன்பீர் சிங்கின் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். தேவையில்லாமல் தங்களது மகனை அநியாயமாக போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரன்பீரின் தந்தை ரவீந்தர் சிங் கூறுகையில், எனது மகன் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் இல்லை. போலீஸார் பதக்கம் பெறுவதற்காக இந்த போலி என்கவுண்ட்டரை நடத்தியுள்ளனர்.
நான் புகார் கொடுக்கக் கூடாது என்று டேராடூன் போலீஸார் என்னை மிரட்டியுள்ளனர் என்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சுனில் வர்மா என்பவர் கூறுகையில், போலீஸார் ரன்பீர் சிங்கை அடித்து இழுத்துச் சென்றனர். துப்பாக்கியின் பின் பகுதியால் அவரை சரமாரியாக அடித்தனர். அதன் பின்னரே சுட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் டேராடூன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபியான்:கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

கஷ்மீர் மாநிலம்ஷோபியானில் சி.ஆர்.பி.எஃப் வெறியர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்களை அடக்கஸ்தலங்களிலிருந்து எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைச்செய்யவும், மரபணு மாதிரிகளை சேகரிக்கவும் ஜம்மு கஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரபணு அறிக்கை தொலைந்ததாலும்,ஏற்கனவே செய்யப்பட்ட பிரேத பரிசோதனை சரியான முறையில் செய்யப்படாததாலும் கொல்லப்பட்ட ஆஸியா ஜான் மற்றும் நிலோஃபர் ஜான் ஆகியோரின் உடல்களை மீண்டும் பரிசோதனைச்செய்ய நீதிபதிகள் பாரின் கோஷ்,முஹம்மது யஃகூப் ஆகியோர் உட்பட்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழுவை நியமிக்க ஸ்ரீநகர் மருத்துவக்கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது."இந்நிகழ்வு யாரையும் உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய நிகழ்வு.ஜாதி மத பேதமற்று இப்பகுதியில் வாழும் அனைவரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர்." கொலை நிகழ்வைத்தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் ஆவேச எழுச்சியை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறினர்.

போலீஸ் சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஜனரல் ஃபாரூக் அஹ்மத்,டி.ஐ.ஜி ரவூஃபுல் ஹஸன் ஆகியோரை சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மேற்பார்வையிடும் பொறுப்பை நீதிமன்றம் ஒப்படைத்தது. இந்நிகழ்வைத்தொடர்ந்து இடை நீக்கம் செய்யப்பட்ட முன் எஸ்.பி உள்ளிட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளை நார்கோ பரிசோதனைச்செய்யவும், விரிவான முறையில் விசாரணை நடத்தவும் நீதி மன்றம் எஸ்.பி ஷாதின் மாலிக் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவை நீதி மன்றம் கேட்டுக்கொண்டது.

ஒவ்வொரு வாரமும் விசாரனை அறிக்கையை நீதி மன்றத்தில் சம்ர்ப்பிக்கவும் நீதி மன்றம் நிர்ணயித்துள்ளது.ஷோபியான் வழக்கோடு தொடர்புடைய பொது நல வழக்கை கஷ்மீர் உயர்நீதிமன்ற அசோசியேசன் தொடர்ந்ததையொட்டிதான் நீதி மன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது.22 வயதுடைய நிலோஃபர் ஜான் மற்றும் அவருடைய சகோதரன் மனைவி 17 வயது ஆஸியா ஜான் ஆகியோரின் உடல்கள் கஷ்மீர் ஷோபியானில் அருவியின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் நீரில் மூழ்கி மரணித்ததாக கூறி மூடிமறைக்க அதிகாரிகள் முயன்றனர்.ஆனால் பொதுமக்களின் வலுவான ஆவேசமான போராட்டத்தைத்தொடர்ந்து இருவரும் வன்புணர்ச்சி செய்யப்பட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டது.இந்நிகழ்வை குறித்து விசாரணைச்செய்த ஜான் கமிஷன் பிரேத பரிசோதனைச்செய்த டாக்டர்களும்,ஃபாரன்சிக் ஆய்வுகூட அதிகாரிகளும், போலீஸாரும் வழக்கு விசாரணையில் தங்களது கடமையை செய்யத்தவறியதாக கண்டறிந்தது. பெண்களின் உடல்களை கண்டெடுத்த இடத்திலும் சுற்றுபகுதிகளிலும் இருந்த அனைத்து போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் அனைவரின் விபரங்களை சேகரிக்கவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.

செய்தி ஆதார‌ம்:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

4/7/09

பாலைவனத் தூது ஜுலை '09

தூதினை பெரிதாக்கிப் படிக்க பக்கத்தின் மீது க்ளிக் செய்யவும்.
இக்கட்டுரையை விரிவாகப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
இந்த தூது இதழ் பற்றிய கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் palaivanathoothu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் .

அச்சாஷ் தரும் பாடம்!

இதனை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

source : விடியல் ஜூன்'09

சென்னை: டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

செய்தியை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் .செய்யவும்


நன்றி : மாலைமலர்

மைசூர் கலவரம்:மேலும் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டு மரணம்

பாரதீய ஜனதா மாவட்டத்தலைவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதுடன், மேலும் 5 நபர்களுக்கு கத்திக்குத்தால் காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மாண்டிய‍ உதயகிரி பகுதிகளில் தொடங்கிய கலவரம் மைசூரின் நகரப்பகுதிகளுக்கும் பரவியது.
மைசூர் புலிகேசி நகரில் சொந்த வீட்டிற்கு முன்பு மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த மாவட்டத்தலைவர் கிரிதரை 2 மோட்டார்பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் கத்தியால் குத்தியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.சாத்தமாரநகள்ளி காலனியில் கவுடியா நகரில் வாஜித் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காயமடைந்த நூற்றுக்குமேற்ப்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடைப்பெற்ற கலவரத்தில் 16 வயது ஜுனைத் பாஷா, திருப்பதி என்ற அப்பு, முபாரக் ஆகியோர் கொல்லப்பட்டனர்.மேலும் 38 பேர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.மைசூர் சுபாஷ் சந்திரபோஷ் ரோட்டில் அரபிக்கல்லூரியும்,கைதமா நகள்ளி மதீனா மஸ்ஜிதும் அமைந்திருந்த காம்பவுண்டிற்குள் பன்றியைக்கொன்று அதன் மாமிசங்களை வீசியெறிந்ததுதான் கலவரம் ஏற்பட காரணம்.ராஜீவ் நகரில் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடைகளும்,பள்ளிக்கூடங்களும் அடைத்துக்கிடக்கின்றன.
வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.மாநில டி.ஜி.பி அஜய்குமார் சிங் மைசூரிற்கு வந்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கலவரம் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக அவர் கூறினார்.
news source:thejas malayalam daily

3/7/09

முஸ்லிம் உலகத்தோடு உறவை அமெரிக்கா மேம்படுத்தும் ஃபரா பண்டிட்

வாஷிங்டன்:முஸ்லிம் உலகத்தோடு அமெரிக்கா உறவை மேம்படுத்தும் என முஸ்லிம் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஃபரா பண்டிட் கூறுகிறார்.பேச்சு வார்த்தைகள் மூலமும், ராஜதந்திரங்கள் மூலமும் அமெரிக்கா இதற்கு முயல்வதாக அவர்கூறினார்.
பதவியேற்றவுடன் நடைபெற்ற முதல் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் கஷ்மீரைச்சார்ந்த ஃபரா இதனை தெளிவுப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில்,"பரஸ்பரம் தவறான புரிந்துணர்வுகளை மாற்றி உறவை மேம்படுத்தும் பொன்னான நேரம் இது.எல்லாப்பிரச்சனைகளைக்குறித்தும் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கம்"‍.என்று.
news source:thejas malayalam daily

காஸ்ஸாவில் இஸ்ரேல் மனப்பூர்வம் திட்டமிட்டு நிகழ்த்திய யுத்த குற்றங்கள் - ஆம்னெஸ்டி

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காஸ்ஸாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளையும்,பெண்களையும் கொன்று பள்ளிக்கூடங்களையும்,மருத்துவமனைகளயும் தகர்த்த இஸ்ரேலின் தாக்குதல் மனப்பூர்வம் திட்டமிட்டு நடத்தியது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
22 நாள்கள் நீண்ட தாக்குதல் எல்லா சர்வதேசச்சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டுச்செய்த போர்க்குற்றங்கள் என்று தீவிர விசாரணைக்குப்பின் ஆம்னெஸ்டி தயாராக்கிய 117 பக்க தெளிவான அறிக்கையில் குற்றஞ்சாட்டுகிறது. சர்வதேச சட்டங்கள் தடைச்செய்த அபாயகரமான ஆயுதங்களால் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 1400 பேரில் 900 பேர் அப்பாவிகள். இதில் 300 குழந்தைகளும் 115 பெண்களும் உட்படும்.ஹமாஸ் முன்னர் தயாரித்த புள்ளி விபரங்கள் உண்மை என்று நிரூபிக்கிறது ஆம்னெஸ்டியின் அறிக்கை.

இஸ்ரேலின் அநீத தாக்குதல்களில் நிகழ்ந்த கொலைகள் தவறுதலாக நடந்த விபத்து அல்ல.மொட்டைமாடிகளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீதும்,நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்த மருத்துவமனை பணியாளர்கள் மீதும் நடத்திய தாக்குதல்கள் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது. நிராயுதபாணிகளான நிரபராதிகளான பெண்களையும் குழந்தைகளையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றது கைக்கு எட்டும் தூரத்தில் வைத்து.வெள்ளை பாஸ்பரஸ் போன்ற தடைச்செய்யப்பட்ட ஆயுதங்களைத்தான் காஸ்ஸாவில் சிவிலியன்களுக்கெதிராக இஸ்ரேல் உபயோகித்தது என்று விசாரணைக்கு தலைமை வகித்த ஆம்னெஸ்டியின் டொனடெல்லா ரோவெரா தெளிவுப்படுத்துகிறார். ஹமாஸ் போராளிகள் குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஆம்னெஸ்டி மறுக்கிறது.காஸ்ஸாவில் வீடுகளில் அத்துமீறி நுழைந்து அவற்றை ராணுவமுகாம்களாக மாற்றி அங்குள்ளவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது இஸ்ரேல்தான் என்று ஆம்னெஸ்டி குற்றஞ்சாட்டுகிறது.இஸ்ரேலை நோக்கி ஃபலஸ்தீன் போராளிகள் நடத்திய தாக்குதலில் 13 சிவிலியன்கள் மட்டும்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆனால் இதுவும் போர்க்குற்றம்தான் என்றும் அந்த அறிக்கையில் ஆம்னெஸ்டி கூறுகிறது.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

மைசூர் : மதக் கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

மைசூர்: மைசூரில் மதக் கலவரம் வெடித்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் 15 வயது சிறுவன். இந்த சிறுவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கலவரம் வெடித்துள்ள உதயகிரி, மந்தி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் மகாதேவபுரா சாலையில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் அங்கு சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், உள்ள ஹூலியம்மா கோவில் அருகே மசூதி கட்டப்பட்டது. இதை எதிர்த்து ஹூலியம்மா கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மசூதி கட்டுவதற்கான வேலைகளை சிலர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த இடத்தில் பன்றியின் சிதைந்த உடல் பகுதிகளை சிலர் அங்கு போட்டுள்ளனர். இதையடுத்து இன்று கலவரம் வெடித்தது. காலை எட்டரை மணியளவில் கலவரம் வெடித்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். உடனடியாக கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
thatstamil

அமெரிக்கா: ஈராக்கில் படை வாபஸ்! ஆப்கானில் படை குவிப்பு! தலிபான்களை அழிக்க உக்கிர தாக்குதல்

தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா வெற்றி பெறவே இயலாது என தாலிபான்களின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படையினர் திரும்பப் பெறும் இவ்வேளையில், அவர்கள் ஆப்கனுக்கு அனுப்பப்பட்டு தாலிபானுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது. 4000 அமெரிக்கப் படையினரும், 650 ஆப்கன் படையினருமாக இணைந்து, நேட்டோவின் போர்விமானங்களின் உதவியுடன் இத்தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

ஆப்கனின் ஹெல்மந்த் ஆற்றின் தென்கரைப் பகுதியே தாலிபான்களின் ஆதரவுத் தளமாக இருந்து வருகிறது. இதனைக் கைப்பற்றிவிட்டால் தாலிபான்களுக்கு எதிரான பெரிய வெற்றியாக அது இருக்கும். ஆப்கனில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல்களை மனதில் கொண்டே இத்தாக்குதல்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சார்லி வில்சன்ஸ் வார்

Charlie Wilson's War என்ற அமெரிக்கப் படம் 2007-ல் வெளியானது. அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் ரஷ்யாவை வெல்ல எப்படி ஆப்கான் முஜாஹிதீன்களை அமெரிக்கா திறம்பட உபயோகித்துக் கொண்டது என்பதை விவரிக்கும் படம். உண்மை சம்பவங்களின் சுவாரஸ்யமான திரைக்கதை. சார்ல்ஸ் வில்சன் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதித்துவ சபைக்கு 12 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் திறமையான அரசியல்வாதி, முன்னாள் கடற்படை அதிகாரி. அசோசியடட் பிரஸ், அமெரிக்க காங்கிரஸிற்கு, சோவியத் ஆளுகையிலிருக்கும் ஆப்கனிலிருந்து தப்பித்துச் செல்லும் அகதிகளைப் பற்றி அனுப்பபும் டெலக்ஸ் செய்தியை சார்லி படிக்க நேர்கிறது. House Appropriations Committee என்பது காங்கிரஸ் பிரதிநிதித்துவ சபையின் கமிட்டி. பணப் பெட்டியின் மேல் அதிகாரம் கொண்ட, கறுப்பு நடவடிக்கைகளை கையாளும் சக்திவாய்ந்த கமிட்டி இதன் சப் கமிட்டியான House Subcommittee on Defense -ற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சார்லியின் கண்களின் தான் அந்த செய்தி படுகிறது. உடனே ஆப்கன் நடவடிக்கைகளுக்கு அளிக்கும் பண உதவியை இருமடங்காக அதிகரிக்க சார்லி நடவடிக்கை எடுக்கிறார்.

ஜோன் ஹெர்ரிங் என்ற மாது செல்வாக்கும், சமூக அந்தஸ்தும் கொண்ட ஓர் அரசியல் நடவடிக்கையாளர். பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியாஉல்ஹக்குடன் நம்பிக்கையான நட்புறவு கொண்டிருக்கிறார். ஜியா ஆப்கனில் ஊடுருவியுள்ள கம்யூனிச ஆபத்தை ஜோனின் கவனத்திற்கு கொண்டு வர, ஆப்கனுக்கு துணிச்சலான ரகசியப் பயணம் மேற்கொண்டு முஜாஹிதீன்களை சந்தித்து நிலவரத்தின் கடுமையை உணர்ந்திருந்தார் ஜோன். இவர் சார்லியின் மேல் செல்வாக்கு செலுத்தத்தக்க நட்பு கொண்டிருந்தார். எனவே பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சார்லியை பயணம் மேற்கொள்ள வைத்து ஜியாவை சந்திக்க வைக்கிறார். ஜியாவின் ஆலோசனையின் பேரில் ஆப்கன் அகதி முகாம்களை பார்வையிடும் சார்லியை அந்தக் காட்சிகள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பல இழப்பிற்கும் பிறகு விடாமல் சோவியத்துடன் போராடிக்கொண்டிருந்த போராளிகளின் மன உறுதி அவருக்கு பெரும் வியப்பேற்படுத்துகிறது. ஆனால் மாபெரும் ராணுவ வல்லமை கொண்டிருந்த சோவியத்திடம் போரிட அவர்களிடம் எந்த வசதியும் இல்லை.

பெரும் மன மாற்றத்துடன் அமெரிக்கா திரும்பும் சார்லி ஆப்கன் போராளிகளுக்கு உதவ வேண்டியது அமெரிக்காவிற்கு எப்படி காலத்தின் கட்டாயம் என்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு புரியவைக்கிறார். அவர்களது ஒரே நோக்கம், சோவியத்தின் தோல்வி. எப்படி அமெரிக்காவிற்கு ஒரு வியட்நாம் அமைந்ததோ, அதைப் போல் சோவியத்திற்கு இந்த ஆப்கனை மாற்ற அமெரிக்கா உறுதி கொள்கிறது. அதற்கான ஆயுத சப்ளை செய்ய அரசியலில் நேரெதிர் முகம் கொண்ட இஸ்ரேலையும், எகிப்தையும் ஒருங்கே உட்கார வைத்து காரியம் சாதிக்கும் அளவிற்கு சார்லியின் பயணம் அமைகிறது. மேலும் இஸ்ரேலின் பிரதிநிதியை ஜியா உல் ஹக் அமெரிக்காவில் பங்கு பெறும் ஒரு விருந்தில் அவரது வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படும் அளவு கலந்து கொள்ள வைத்து, இஸ்ரேலின் துணை கொண்டு எப்படி அமெரிக்கா ஆயுதம் அளிக்கும் என சார்லி ஜியாவிடம் வாக்குறுதி அளிக்கிறார்.

சார்லியின் நடவடிக்கைகளுக்கு சி.ஐ.ஏ.வின் கஸ்ட் அவ்ரகோடாஸ் பெருந்துணை. 1983-ல், கமிட்டியை இணங்க வைத்து சார்லி பெறும் 40 மில்லியன் டாலர்களில் 17 மில்லியன் டாலர்கள் மட்டும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆப்கன் போராளிகள் பெறும் அந்த ஆயுதங்களும், அதை இயக்க அவர்கள் பெற்ற பயிற்சிகளும் சோவியத்துடனான அவர்களது போரில் பெரும் திருப்பத்தை உண்டாக்குகின்றன. அதற்கு அடுத்த வருடமே கஸ்ட், சார்லியிடம் மேலும் 50 மில்லியன் டாலர்கள் பெற கோரிக்கை வைக்கிறார். அவ்வருட இறுதியில் பெண்டகன் தன்னிடம் மிச்சம் வைத்திருந்த 300 மில்லியன் டாலர்களை ஆப்கன் போராளிகளுக்கு சார்லி பெற்றுத் தருகிறார்.

இறுதியில் சோவியத் படுதோல்வியடைந்து ஆப்கனை விட்டு வெளியேறுகிறது. தனக்கு நிகரற்ற சவாலாய்த் திகழ்ந்து கொண்டிருந்த அந்த மற்றொரு வல்லரசின் தோல்விக்குத் தானே அமெரிக்கா காத்திருந்தது. அதற்காகத் தானே எத்தனை சதியாட்டங்கள். சத்தமிடாமல் எகத்தாளமிடுகிறது அமெரிக்கா.

உச்சக்கட்டமாய் அனைத்தும் முடிந்தபின் ஆப்கன் புணரமைப்பின் முயற்சியாக, கல்விக்காக ஒரு மில்லியன் டாலர் கேட்டு சார்லி வைக்கும் வேண்டுகோள் காங்கிரஸால் நிர்தாட்சண்யமாய் மறுக்கப்படுகிறது. அதில் சார்லி தோற்பதாய் படம் முடிகிறது.

சார்ல்ஸ் வில்சனின் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக சி.ஐ.ஏ.வின் Honored Colleague Award வழங்கப்படுகிறது. சார்ல்ஸ் வில்சன் தான் இந்த விருது பெற்ற முதல் படைத்துறை சாராத அரசு அலுவலர் - சிவிலியன். அமெரிக்க அரசியலில் வெற்றி நாயகனாய் விளங்ககினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் குடிப்பழக்கம், போதை வஸ்து, பெண்களுடனான காமக்களியாட்டங்கள், ஆகியன பிரசித்தமானவை. அது அமெரிக்க படங்களுக்கே உண்டான கவர்ச்சி காட்சிகளை இணைக்கத் தோதாய் அமைந்து விட்டது.

சார்ல்ஸ் வில்சனாக டாம் ஹான்க்ஸ் நடிப்பு மிக நன்றாய் அமைந்துள்ளது. ஜோன் ஹெர்ரிங் பாத்திரத்தில் ஜூலியா ராபர்ட்ஸும், ஜியாஉல்ஹக்காக இந்தி நடிகர் ஓம்புரியும் நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை ஒரு நாவலாய் படித்து விடலாம். அதனை சுவாரஸ்யமான சினிமாவாய் மாற்றுவது எளிதல்ல. இதில் சுவாரஸ்யம் அவர்களுக்கு முடிந்திருக்கிறது.

உலக அரசியல் வரைபடத்தில் ஆப்கன் இன்றும் மிக முக்கியப் புள்ளி. சுயநலத்திற்காக அமெரிக்கா அங்கு தனது கால்களை பதித்த வரலாற்றின் முக்கியமானதொரு பரிமாணம் உணர இப்படம் பார்க்கலாம்.

2/7/09

இஸ்லாமிய முறைப்படி மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம் செய்யப்படும்

மைக்கேல் ஜாக்சனின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதுமுள்ள பாப் இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இஸ்லாமிய முறைப்படியே ஜாக்சனின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாக்சன் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும், தமது புதிய மத நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்லாமிய முறைப்படியே தமது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தமது உயிலில் ஜாக்சன் தெரிவித்துள்ளதாகவும் பிரபலங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் X 17 என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

ஜாக்சனின் விருப்பப்படியே அவரது உடலை இஸ்லாமிய மத முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் , கலிஃபோர்னியாவின் நெவர்லாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜாக்சனின் பண்ணை வீட்டில் நாளை வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் ஜாக்சனின் குடும்பத்தினர் இது குறித்து எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.

அபூகரீப் சிறையில் கைதியை சிலுவையில் அறைந்துக்கொன்ற சி.ஐ.ஏ -திடுக்கிடும் செய்தி

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகு அங்கு அமெரிக்கா நிர்மாணித்த அபூகரீப் என்ற வெஞ்சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ஒருகைதியை சிலுவையில் அறைந்துக்கொன்றதாக தி நியூயார்க்கர் என்ற பத்திரிகை இ‍ந்த குலை நடுங்கச்செய்யும் செய்தியை வெளியிட்டுள்ளது.
சிலுவை மாதிரியில் கை,கால்கள் மற்றும் நெஞ்சில் ஆணி அறைந்து பலகையில் கட்டியபின் மூச்சிதிணறி இறந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என செய்தியாளர் ஜேன் மேயர் குறிப்பிடுகிறார். சிலுவை மாதிரியில் கொல்லப்பட்டதால் மரணித்தவரின் விலா எலும்புகள் முறிந்திருந்தன.இதனை பிரேதப்பரிசோதனை செய்த டாக்டர்கள் கொலை என்றுக்கூறியபொழுதும் இக்கொலைக்குக்காரணமான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஜேன் மேயர் குற்றஞ்சாட்டுகிறார்.
கொல்லப்பட்ட நபரின் விபரங்களோ அவர் கொல்லப்பட்ட தேதியோ இதுவரை வெளியிடப்படவில்லை.உடல் ரீதியான சித்திரவதைகள் மூலம் ஆஃப்கானிலும் ஈராக்கிலும் சிறைச்சாலைகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கைதிகள் கொல்லப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்ட் என்ற அமைப்பு தெளிவுப்படுத்துகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் ஜோன் ஹென்ட்ரன் என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ள செய்தி அறிக்கையில் அமெரிக்க ராணுவமும், சி.ஐ.ஏ வும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதைச்செய்துக்கொன்ற சிலரைப்பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். அப்துல் ஜலீல் என்றகைதி வாய் பொத்தப்பட்டு கைகால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.ஈராக்கின் முன்னாள் விமானப்படை கமான்டரான ஆபித் மவ்ஹூ ஸ் மிருகத்தனமான சித்திரவதைகளால் நெஞ்சில் அழுத்தப்பட்டு மூச்சுதிணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.இம்மாதிரி சி.ஐ.ஏ சித்திரவதைச்செய்து கொலைச்செய்த 44 கைதிகளின் விபரங்கள் பென்டகனிலிருந்து தகவல் கேட்டுப்பெறும் உரிமை என்ற சட்டப்படி தங்களுக்குக்கிடைத்ததாக அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் தெரிவிக்கிறது.ஆனால் சி.ஐ.ஏ வின் சித்திரவதைக்கூடங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் யார் யார் எங்கெங்கு சித்திரவதைச்செய்யப்பட்டார்கள் என்ற விபரம் கிடைக்க வாய்ப்பு இல்லை என ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்டின் டாக்டர் நதானியேல் ரைமன்ட் கூறுகிறார்.
2007 மேமாதத்திற்கு முன்பு இம்மாதிரியாக ஈராக்கிலும் ஆஃப்கானிலும் 37 பேர் கொல்லப்பட்டதை பென்டகன் ஒப்புக்கொண்டிருந்தது.ரெட்க்ராஸ் போன்ற மனித உரிமை மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகளிடமிருந்து மூடி மறைப்பதற்காகத்தான் இந்த சித்திரவதை கூடங்களை ரகசியமாக வைத்துள்ளது அமெரிக்கா. சி.ஐ.ஏ வின் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த சூழலில் கைதிகளை விசாரணையில்லாமல் காலவரையற்று சிறையில் அடைப்பதற்கு அதிகாரமளிப்பதற்கு முயலும் அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்புக்கிளம்பியுள்ளது.ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை அப்படியே பின் தொடர்கிறார் ஒபாமா என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் செயல் இயக்குநர் கென்னத் ரோத் குற்றஞ்சாட்டுகிறார். பைபிளின் புதிய ஏற்பாடு கூறுவதின் படி யேசு கிறிஸ்து விசாரணைக்குப்பின்னர்தான் சிலுவையில் ஏற்றப்பட்டார்.ஆனால் அபுகரீப் சிறையிலோ ஒரு விசாரணையுமில்லாமல் கைதியை தூக்கிலேற்றியிருக்கிறது சி.ஐ.ஏ என்று கூறிக்கொண்டு ஜென் மேயர் தனது செய்தி அறிக்கையை நிறைவுச்செய்கிறார்.

News Source:Thejas Malayalam daily.

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரியதன்று: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது 148 ஆண்டுகாலமாக நடப்பில் இருந்த நடப்பை மாற்றி வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் (அதாவது ஓர் ஆண் இன்னொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனோ) உடலுறவு வைத்துக் கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தீர்ப்பின் போது நீதிபதிகள், "ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின் படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்" என்று குறிப்பிட்டனர்.

இத்தீர்ப்பை ஓரினச் சேர்க்கை ஆர்வலர்கள் பலர் வரவேற்றுள்ள போதிலும் பொதுவாக இது எதிர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கத்தோலிக்கப் பேராயர்கள் பேரவையைச் சேர்ந்த பாதிரியார் டோமினிக் இம்மானுவேல், "தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறித்து வருத்தமோ மகிழ்ச்சியோ எங்களுக்கில்லை; அதேவேளை ஓரினச் சேர்க்கையை இந்தியாவின் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரிக்கவில்லை" என்று கூறினார்.
மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இத்தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு "மனித இனத்திருக்கு முரணான இச்செயலையும் இத்தீர்ப்பையும் நாங்கள் முழுமூச்சாக எதிர்ப்போம்" என்று கூறினர்.
இத்தீர்ப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என தில்லியைச் சேர்ந்த சௌத்திக் பிஸ்வாஸ் என்பவர் கூறினார். இவர் தன்னை ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உள்ளவர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் இத்தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

பாரமுல்லாவிலிருந்து சி.ஆர்.பி.எஃப்(மத்திய ரிசர்வ் படை ) வெளியேற்றம்!

ஜம்மு கஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலிருந்து மத்திய ரிசர்வ் படயினரை வெளியேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பாரமுல்லாவில் செவ்வாயன்று இளைஞர் ஒருவரை மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒருவர் சுட்டுக் கொன்றதை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வந்த மத்திய ரிசர்வ் படையினரை உடனடியாக மாவட்டத்தை வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலக் காவல்துறையே சட்டம் ஒழுங்கை கவனிக்கும் என்று மாநிர அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த சில நாள்களுக்கு முன் இரு பெண்களை கடத்தி வன்புணர்ந்து கொலை செய்ததை அடுத்து மத்திய ரிசர்வ் படையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது நாளாக பாராமுல்லாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்த மூன்று நாள்களில் படையினரால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
மாநில அமைச்சர்களான அலி முகமது சாகர் மற்றும் பீர்ஜாதா முகமது சயீத் ஆகியோர் செவ்வாயன்று இந்தப் பகுதிக்குச் சென்று அங்குள் மக்களைச் சந்தித்துப் பேசினர். தவறு செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை இருந்தது.நேற்று கான்பூராவில் இளைஞர் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து இந்தப் பகுதி முழுவதும் மீண்டும் பதட்டமான நிலையிலேயே உள்ளது.

1/7/09

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்குமா??? - கார்ட்டூன்


ஈரான் அதிபர் மஹ்மூத் நஜாத் தான்:ஈரான் கார்டியன் கவுன்சில் அறிவிப்பு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 10‍வது அதிபர் மஹ்மூத் நஜாத் தான் என்று ஈரானின் மிக உயர்‍ந்த அதிகாரம் கொண்ட‌ உயர் அமைப்பான கார்டியன் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குலுக்கலின் மூலம் நிச்சயிக்கப்பட்ட 10 சதவீத வாக்குகளை மீண்டும் எண்ணிய பிறகுதான் நஜாதின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.தேர்தலில் மோசடி நட‍ந்ததாக குற்றஞ்சாட்டி தோற்றுப்போன எதிர்கட்சி வேட்பாளர்களான ஹுசைன் மூஸாவியும்,மெஹ்தி ஹர்ரூபியும் சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் தான் 10 சதவீதம் ஓட்டுகளை மீண்டும் எண்ணப்பட்டது.
கார்டியன் கவுன்சில் செயலாளர் ஆயத்துல்லாஹ் ஜன்னத்தி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில்தான் இம்முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முற்றிலும் உண்மையாக நடைப்பெற்றதாக இந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி நடைப்பெற்ற தேர்தலில் நஜாத் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட்ருந்தது.ஆனால் தேர்தலில் முறைக்கேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி மூஸாவியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 17 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணியபொழுது சில இடங்களில் நஜாதிற்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டுகளை விட அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இ‍ஸ்ரேலை சர்வதேச அளவில் புறக்கணிக்கவேண்டும் - நவோமி க்ளைன்

பிலின் : ஃபல‍ஸ்தீன்:இஸ்ரேலை சர்வதேச அளவில் புறக்கணிக்கவேண்டும் என கனடாவைச்சார்ந்த‌ பிரபல எழுத்தாளரும்,சமூக சேவகருமான நவோமி க்ளைன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு கரையில் பிலின் கிராமத்தில் இ‍ஸ்ரேல் எழுப்பி வரும் மதிலை எதிர்த்து நட‍ந்த பிரமாண்ட பேரணியில் உரையாற்றிய அவர், தென்னாப்பிரிக்காவில் இனவெறியை முடிவுக்குக் கொண்டுவந்தது சர்வதேச அளவில் அ‍ந்த நாட்டைப் புறக்கணித்ததுதான்.ஒரு விளையாட்டுக்குழுவும் வராமலிருக்கும்பொழுது, ஜெருசலம் ஃபிலிம் சிட்டியில் சர்வதேச திரைப்படங்கள் ஒன்றுமே திரையிடப்படாமல் இருக்கும்பொழுது இ‍ஸ்ரேலுக்கு தானாகவே மாற்றம் ஏற்படும் என க்ளைன் தெரிவித்தார்.
நவோமி க்ளைன் யூதக்குடும்பத்தில் பிறந்த இடதுசாரி சிந்தனையுடைய பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

யெமன் விமானம் கடலில் வீழ்ந்து 151 பேர் மரணம்

மொரானி:கோமரோஸ் தீவுக்கருகில் இந்தியப்பெருங்கடலில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் கடலில் வீழ்ந்த யெமன் நாட்டு விமானத்திலிருந்த பயணிகள்,பணியாளர்கள் உட்பட 151 பேர் மரணமடைந்தனர்.
இதில் விமானப்பைலட் மற்றும் ஒரு 5 வயது சிறுவன் ஆகியோர் மட்டும் உயிர்பிழைத்தனர்.ஒருமாதத்திற்கிடையே கடலில் வீழும் இரண்டாவது விமானம் இது. நேற்று முன் தினம் யெமன் தலைநகரான ஸனாவிலிருந்து புறப்பட்ட விமானம் கொரோனியில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் விபத்துற்குள்ளாகி கடலில் வீழ்ந்தது. மோசமான வானிலைதான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மரணித்தவர்களில் 66 பேர் பிரஞ்சு நாட்டைச்சாரந்தவர்களும் மீதமுள்ள பேர் கோமரூஸைச்சார்ந்தவர்கள். விபத்து நட‍ந்த இடத்திற்கு ராணுவ பாதுகாப்புக்குழுக்களை அனுப்பியிருப்பதாக மொரோனி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரான்சு நாட்டு கப்பற்படை மீட்புப்பணிக்காக 2 கப்பல்களையும் பாதுகாப்பு படகுகளையும் அனுப்பியிருக்கிறது. கடந்த ஜூன் 1‍ம் தேதி ஏர் பிரான்சு விமானம் கடலில் வீழ்ந்தது.அதில் 228 பயணிகளிருந்தனர்.

செய்தி ஆதார‌ம்:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்.

பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் : உமாபாரதி!

பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் என்று பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவி உமா பாரதி கூறியுள்ளார். இதனால் தனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட லிபரன் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை பிரதமரிடம் இன்று அளித்தது குறித்து, பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் தன்னைத் தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை" என்று கூறினார்.

17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை அறிக்கை பிரதமரிடம் அளிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்களை சமாதானப் படுத்தவே என்றும் அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையை அடுத்து 20 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு ஒருவரைக் கூட குற்றம் சாட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் மன்னிப்புக் கோரக் கூடாது என்றும் அவர்கள்தான் அதிகமான மக்களை அயோத்திக்கு கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடை: தீரா துரிதத்தில் காஸ்ஸா - ரெட் க்ராஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் isreel எற்படுத்திய தடையின் காரணமாக காஸ்ஸா பகுதி மக்கள் துரிதத்தின் பிடியில் சிக்கித்தவிப்பதாக சர்வதேச ரெட்க்ராஸ் கமிட்டி கூறியுள்ளது.

இங்கு வசிக்கும் 15 லட்சம் மக்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் ஆகியன கிடைக்காமல் துன்புறுவதாகவும் கமிட்டி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.1100 பேர்கள் கொல்லப்பட்ட இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத்தாக்குதலுக்கு பின் 6 மாதம் கழித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை காஸ்ஸாவை பூகம்பம் பாதித்த நிலப்பரப்பிற்கு ஒப்பிடுகிறது.

தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடுகளும், கட்டிடங்களும், சாலைகளும் அப்படியே கிடக்கிறது. காரணம் கட்டிடம் கட்டும் பொருள்களை ஏற்றிவந்த வாகனங்களை அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால். இஸ்ரேலின் தாக்குதலில் 50 ஆயிரம் வீடுகள்,800 வியாபார நிறுவனங்கள், 200 பள்ளிக்கூடங்கள்,39 ம‍ஸ்ஜிதுகள், 2 சர்ச்சுகள் ஆகியன முழுவதுமாகவோ அல்லது ஒருபகுதியோ தகர்க்கப்பட்டிருந்தது. இஸ்ரேலின் அக்கிரமமான தாக்குதலைத்தொடர்ந்து மக்களின் புனர்வாழ்வுக்காகவும், கஸ்ஸாவின் புனர் நிர்மாணத்திற்காகவும் சர்வதேச நாடுகளும், ஏஜன்சிகளும் 450 கோடி டாலர் வாக்களித்திருந்தபோதிலும் காஸ்ஸாவின் அனைத்து பகுதிகளிலும் இ‍ஸ்ரேல் ஏற்படுத்திய தடையால் எ‍ந்த திட்டத்தையும் நடைமுறைபடுத்த முடியவில்லை என ரெட் க்ராஸின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

காஸ்ஸாவில் வசிக்கும் 15 லட்சம் பேரில் பகுதியும் குழந்தைகள்.இவர்களுக்கு போதிய உணவோ,சிகிட்சையோ கிடைப்பதில்லை.தகர்க்கப்பட்ட மருத்துவமனைகள் புனர் நிர்மாணிக்கப்படாததால் அவை மீண்டும் இயங்க இயலவில்லை என ரெட் கிராஸ் கூறுகிறது.கடும் வறுமையிலிருக்கும் காஸ்ஸா மக்கள் அவசியமான பொருள்களை வாங்குவதற்கு வீட்டுப்பொருள்களை விற்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக காஸ்ஸாவின் ரெட்கிராஸ் சங்கத்தலைவர் க்ரான்ட் கூறினார். இ‍ஸ்ரேலின் கடுமையான தடைகளால்தான் இச்சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக ரெட்க்ராஸ் தெளிவுப்படுத்தியது.
ஜனநாயகமுறையிலான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஃபலஸ்தீனில் ஹமாஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபிறகுதான் இ‍ஸ்ரேல் இத்தகைய அநீதமான தடைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் நகரங்களிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ்

அமெரிக்கப்படைகள் ஈராக் நகரங்களிலிருந்து வாபஸ் பெற்றதைத்தொடர்ந்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈராக் மக்கள் ஆறு வருட ஆக்கிரமிப்பின் இறுதியில் அமெரிக்க ராணுவம் ஈராக்கின் நகரங்களிலிருந்து வாபஸ் பெற்றது.கடந்த வருடம் ஈராக் அரசும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு உடன்படைக்கையின் ஒருபகுதியாகத்தான் அமெரிக்க ராணுவம் பாக்தாத் உட்பட பிற நகரங்களிலிருந்து நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு ஈராக்கிலேயே உள்ள ராணுவ முகாம்களுக்கு திரும்பியது.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்