9/8/09

நிஜங்கள்...புதிய தேசத்தின தேடலாய். ஆகஸ்ட்'09

0 கருத்துகள்
புதிய தேசத்தின் தேடலாய்...

ஆகஸ்ட்'09 இதழ்

பக்கம் 1,2 - சுதந்திர இந்தியா!!
பக்கம் 2 - சுதந்திர இந்தியா...தொடர்ச்சி.....
பக்கம் 3 - ரமழானை வரவேற்போம்
பக்கம் 4 - ரமழானை வரவேற்போம்....தொடர்ச்சி...
பக்கம் 5 - வளைகுடா செய்திகள்
பக்கம் 6 - உலக செய்திகள்- இலங்கை - சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக!!
பக்கம் 7 - உலக செய்திகள்- 'ஸின் ஜியாங்' அபகரிக்கப்பட்ட முஸ்லீம் நாடு, அடிமைப்படுத்தப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்
பக்கம் 8 - உலக செய்திகள்-ஹிஜாபிற்காக உயிர் துறந்த நவீன காலத்து ஸஹாபிய பெண்மனி

குவாண்டனாமோ சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன் -ஜவாத்

0 கருத்துகள்
வாஷிங்டன்:குவாண்டனாமோ சித்திரவதைக்கூடத்தில் தான் கொடூரமான முறையில் சித்திரவதைச் செய்யப்பட்டதாக 7 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான 19 வயது முஹம்மது ஜவாத் கூறுகிறார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதற்காக வேண்டி மனித தன்மையற்ற முறையில் தான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக ஜவாத் தெரிவிக்கிறார்.
ஜவாத் கடந்த ஆகஸ்ட் 1 ஆம்தேதி விடுவிக்கப்பட்டார். குவாண்டனாமோ சிறையில் மிகவும் வயது குறைந்த கைதி ஜவாத் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவாதிற்கெதிராக ஒரு சாட்சி கூட சாட்சியம் அளிக்கவில்லை என்று ஜவாதின் வழக்கறிஞர் மேஜர் எரிக் மோண்டோல்வா கூறுகிறார். ஜவாதை கைதுச்செய்யும்பொழுது சம்பவம் நிகழ்ந்த இடத்திலிலுள்ள நபர்களை தான் விசாரித்ததாகவும் அமெரிக்கா கூறும் குற்றத்தை ஜவாத் செய்ததை எவரும் காணவில்லை என்று கூறியதாகவும் எரிக் தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்திற்கெதிராக கிரானைட் தாக்குதல் நடத்தியதாக ஜவாத் 2002 ஆம் ஆண்டு கைதுச்செய்யப்பட்டார். அப்போது ஜ‌வாதிற்கு 12 வயது.
செய்தி:தேஜஸ்

8/8/09

போலி என்கவுன்டர்: உ.பி. காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு

0 கருத்துகள்
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்கவுன்டரில் தொடர்புடைய காவல்துறையினர் 6 பேருக்கு எதிராக கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தி வந்த, மாநில குற்றப்புலனாய்வுக் காவல்துறையினர், 2 துணை ஆய்வாளர்கள், 4 காவலர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சுல்தான் கோரி என்பவரை ஹரிப்பூர் கிராமத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து சுல்தான் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் அணுவுலைகளை அகற்ற ஈரான் வலியுறுத்தல்

0 கருத்துகள்

அமெரிக்கா இஸ்ரேலின் அணுவுலைகளை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உருவாக்கும் பட்சத்தில் வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் என்று சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட கருத்துக்குப் பதிலடியாக ஈரான் இக்கருத் தினை வெளியிட்டுள்ளது.
எங்களது அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தேவை எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை செய்தியாளர் ஹஸன் கஷ்காவி கூறியுள்ளார்.
இஸ்ரேலிடம் 200 அணுகுண்டுகள் உள்ளன. அவற்றை அகற்றுமாறு சியோனிஸ அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அதன் நட்பு நாடான அமெரிக்காவை வேண்டுகிறோம். அது இயல்பாக மத்திய கிழக்கில் அமைதியை உண்டாக்கும். சியோனிஸத்திடம் உள்ள ஆயுதங்களைக் களைவதைத் தவிர மத்திய கிழக்கில் சமாதானத்தை உருவாக்க வேறு வழியில்லை. எங்களது பாதுகாப்புக் கட்டமைப்பில் அணுவாயுதங்களுக்கு எந்த இடமும் இல்லை. அமைதியான வழிமுறையில் அணுசக்தியை பயன்படுத்துவதே எங்கள் நோக்கம். அதற்கான உரிமையும் எங்களுக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்.

குஜராத்: 50000 முஸ்லீம்களுக்கு ஸ்காலர்ஷிப் மறுப்பு

0 கருத்துகள்

டெல்லி: குஜராத்தில் இந்த ஆண்டும் முஸ்லீம் மாணவ, மாணவியர் 50,000 பேருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையால் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதுப் பிரச்சினை உருவாகியுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் உதவியை வழங்குகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக இந்த உதவி செய்யப்படுகிறது.

இந்த ஸ்காலர்ஷிப் தொகையில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும், 25 சதவீத பங்கை ஏற்க முடியாது என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இங்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை முஸ்லீம் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் ரூ. 22 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் குஜராத்துக்கு மட்டும் ரூ. 57 ஆயிரத்திற்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர் அல்லது மாணவி இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதி படைத்தவர் ஆவார். அவர்களுக்கு ரூ. 800 முதல் ரூ. 1500 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.

கடந்த ஆண்டு இந்த ஸ்காலர்ஷிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு மோடி அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில் இப்படி இனம் பார்த்து நிதியுதவி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்த ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் தராமல் விட்டு விட்டது குஜராத் அரசு.

இந்த ஆண்டும் இதுவரை ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் வழங்கவில்லை மோடி அரசு. இதனால் முஸ்லீம் ஏழை, மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் செயல் அரசியல் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது பிரதமரின் 15 அம்சத் திட்டங்களில் ஒன்று. சிறுபான்மையினர் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுள்ளபோது, குஜராத் மட்டும் எதிர்ப்பது நியாயமல்ல என்றார்.


thatstamil

பைதுல்லாஹ் மஹ்சூத் கொல்லப்பட்டாரா?? ஆஜ் நியூஸ்

0 கருத்துகள்
பாகிஸ்தானில் பழங்குடி கோத்திரவர்க்க மகாணமான தெற்கு வசீரிஸ்தான் மஹ்சூத் கோத்திரத்தின் அங்கமான பைத்துல்லாஹ் மஹ்சூதின் செயற்களம்.முல்லா உமருடனான தனக்குள்ள நெருங்கிய உறவையும்,எல்லை கடந்து அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கெதிரான தனது போராட்டத்தையும் பைத்துல்லாஹ் மஹ்சூத் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக பி.பி.சி தெரிவிக்கிறது.

ஒரு சமயம் பைத்துல்லாஹ் மஹ்சூதை சந்திக்கச்சென்ற பி.பி.சி நிருபருக்கு மஹ்சூத் ஆப்கானிஸ்தானில் யுத்தகளத்திலிருப்பதாக பைத்துல்லாஹ் மஹ்சூதின் படைவீரரான சுல்பிக்காரிடமிருந்து பதில் கிடைத்தது. 9/11 க்கு பிறகு தான் படோடாபத்தையோ, புகழையோ எதிர்பார்க்காத மஹ்சூத் சிறந்த கமாண்டராக வளர்ந்து வந்தார்.வசீரிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் செய்தது.20 ஆயிரம் போராளிகள் மஹ்சூதின் அணியில் உள்ளனர்.35 வயதான மஹ்சூதின் தலைக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் விலைப்பேசப்பட்டுள்ளது.மஹ்சூதை குறித்து தகவல் தருபவருக்கு பெருந்தொகை சன்மானமாக அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசும் அறிவித்திருந்தது.

பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கும்,முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலைக்கும் மஹ்சூத் தான் காரணம் என பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டுகிறது.அமெரிக்காவின் செல்ல மகளான பெனாசிர் பூட்டோவின் கொலைக்கு பின் மஹ்சூத் என்பது நம்பத்தக்கதாக இருந்தாலும் பெண்களை கொல்வது எங்களுடைய வழக்கமல்ல என்று மஹ்சூத் கூறியிருந்தார்.அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம்தான் மஹ்சூதின் செயற்களம் என அவரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறுகின்றனர். மஹ்சூத் கொலைச்செய்யப்பட்டதாக ஏற்கனவே பலமுறை செய்திகள் வந்துள்ளன. கடந்த செப்டம்பரில் மஹ்சூத் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானவுடன் மஹ்சூத் பத்திரிகையாளர்களை தொடர்புக்கொண்டிருந்தார். ஆனால் இம்முறை மஹ்சூத் கொல்லப்பட்ட செய்தி வெளியான பிறகு மஹ்சூதின் தரப்பிலிருந்து மறுப்பு வராததால் அவர் கொல்லப்பட்டது உறுதிச்செய்யப்படுவதாக ஆஜ் நியூஸ் சானல் தெரிவிக்கிறது.

மஹ்சூதும் அவருடைய மனைவியும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெஹ்ரீகே தலிபானின் முதிர்ந்த தலைவர்களில் ஒருவரான ஹக்கீமுல்லா மஹ்சூத் இரண்டு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் காயமடைந்த மஹ்சூத் பின்னர் இறந்தாக அவ்வமைப்பு கூறியுள்ளது. மஹ்சூதின் பாதி உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. மஹ்சூதின் உறவினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மஹ்சூதின் நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்கா கண்காணித்து வந்தது.பலமுறை தாக்குதலிருந்து அவர் மயிரிழையில் தப்பியதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.தெற்கு வசீரிஸ்தானில் மதரஸா கல்வியை முடித்து விட்டு மஹ்சூத் 1990 களில் ஆப்கானிஸ்தானிற்கு அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக போராட சென்றார்.அதும் முடிந்து பாகிஸ்தானிற்கு திரும்பிய பிறகுதான் தெஹ்ரீக் தலிபான் என்ற அமைப்பை உருவாக்கினார். பாகிஸ்தான் அரசு மஹ்சூதுடன் செய்த ஒப்பந்தங்கள் தான் அவரை தெற்கு வசீரிஸ்தான்,பஜவூர்,டான்க்,தேரா இஸ்மாயீல்கான் ஆகிய பகுதிகளில் பிரபலப்படுத்தியது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது.மஹ்சுத் கொல்லப்பட்டது உண்மையானால் அவருடைய பதவிக்கு ஹக்கீமுல்லாஹ் மஹ்சூத்,மவ்லானா அஸ்மத்துல்லாஹ்,வலியுற்றஹ்மான் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார் என கருதப்படுகிறது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,gulfnews

மூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு

0 கருத்துகள்

பெங்களூரு:சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் மூன்று மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நடக்கிறது.மைசூர்,கும்பக்கோணம்,இடுக்கி,கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அணிவகுப்பின் கடைசிகட்ட ஏற்பாடுகள் பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாக குழு மதிப்பீடு செய்தது.மைசூரில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 2.30 க்கு ஜெ.கே மைதானத்தில் ஆரம்பித்து ஷஹீத் திப்புசுல்தான் நகரில் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசுவாமி பொதுக்கூட்டத்தை துவக்கி வைப்பார்.விஸ்வநாத் எம்.பி,தன்வீர் சேட் எம்.எல்.ஏ,முன் எம்.எல்.சி சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசியப்பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் சிறப்புரை நிகழ்த்துவார்.

கும்பகோணத்தில் மதியம் 2.30 மணியளவில் எ.ஜெ.எஸ் கார்டனிலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர அணிவகுப்பு ஷஹீத் திப்புசுல்தான் நகரில் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் மாநிலத்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொள்வார்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்கள் பொதுக்கூட்டத்தை துவக்கி வைப்பார்.தமிழ்நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா,பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,மெளலவி டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.

இடுக்கியில் மதியம் 3 மணியளவில் நெடுங்கண்டம் பஸ்நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு அய்யங்காளி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.

கண்ணூரில் காலை 10.30 மணியளவில் நகராட்சி ஸ்டேடியத்திலிருந்து ஆரம்பிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு டாக்டர்.அம்பேத்கர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவும்,மக்களுக்கிடையே தேசிய உணர்வை ஜொலிக்கச்செய்யவும்,இந்நாட்டின் குடிமக்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக மாற்றுவதும்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பின் இலட்சியம் என நிர்வாகிகள் கூறினர்.தேசத்தின் அபிமானத்தை உணர்த்தும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு 2004 முதல் ஒவ்வொரு வருடமும் கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு பெரும் மக்கள் ஆதரவோடு மங்களூர்,மதுரை,கொச்சி,மானத்தவாடி ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடைபெற்றது.இந்திய தேசத்தின் அனைத்து குடிமக்களும் இந்த சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றிக்காக களமிறங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு கேட்டுக்கொண்டது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

7/8/09

கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம்

0 கருத்துகள்
கேரளா மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம் செய்யப்பட்டதாக கண்ணூர் மாவட்ட ஐ.ஜி.டோமின் ஜெ தச்சங்கரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
வருகிற 62 வது சுதந்திரம் அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஒரே நேரத்தில் அணிவகுப்பு நடத்தவிருந்ததால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரு அமைப்பினருக்கும் வெவ்வேறான நேரங்கள் ஒதுக்கப்பட்டதைத்தொடர்ந்து அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

********** ஈ **********

0 கருத்துகள்
ஈக்கென்று ஒரு குணம் உண்டு. அதன் குணமானது ஒரு மனிதன் அழகான உடை அணிந்து நறுமணம் பூசி வந்தால் ஈயானது அவனது உடையையோ,வாசனையையோ ரசிப்பது இல்லை, மாறாக அவனது உடலில் துர்நாற்றம் எந்த பகுதியிலிருந்துவருகிறது, எங்கு ஊலை வருகிறது, எங்கு மூக்கு ஒழுகிறது என்று பார்த்து மோப்பம் பிடித்து அந்த இடத்தில் அமர்வது தான் ஈயின் குணம்.
ஈயானது பாகுபாடு பார்ப்பது இல்லை முஸ்லிமா, இந்துவா, கிறிஸ்தவனா, மேல் ஜாதியா, கீழ்ஜாதியா என்று. அதன் வேலையை அது செய்யும். ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கு இந்த குணம் இருக்க வேண்டும். குறிப்பாக குறையை சுட்டி காட்டுவதில் ஈக்கள் பேதம் பார்ப்பது இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்கள் இஸ்லாமியர்கள் மீது மட்டுமே இந்த குணத்தை காட்டுகிறார்கள். உதரணமாக ஒரு செய்தி: கடந்த ஆண்டு உ.பி யில் இம்ரானா என்ற பெண் தன் மாமனாரால் கற்ப்பழிக்கப்பட்டாள் என்று நடக்காத ஒரு செய்தியை நடந்ததாக எழுதினார்கள். எந்த அளவுக்கு என்றால் பா.ஜ.க பட்டிமன்றம் நடத்துமளவுக்கு. ஆனால் அதே உ.பி யில் தானிதீக் என்ற கிராமத்தில் ஓர் உயர் ஜாதி இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமிய இளைஞன் காதலித்து அழைத்து சென்று விட்டதால் கோபமான பாஸிச கூட்டம் தானிதீக் கிராமத்தின் உள்ளே புகுந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 400க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெண்களை மானபங்கம் செய்தார்கள். ஈ குணத்தோடு பார்க்கவேண்டிய இந்த செய்தியை மூடி மறைத்தது பாஸிச பத்திரிக்கை கூட்டம்.
சமீபத்தில் ஒரு செய்தி: அமெரிக்க அதிபர்கள் எதை அடித்தாலும் அல்லது எதால் அடிபட்டாலும் அது பிரபலமாகிவிடும். கடந்த ஆண்டு மனித குல எதிரியாக இருந்த அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஒரு காலனி(ஷு ) பதம் பார்த்தது, அதை தொடர்ந்து அந்த காலணி(ஷு ) பிரபலமானது, அது மிக உயர்ந்த விலைக்கு ஏலம் போனது. ஆனால் அதை வீசியவர் நிலை என்ன ஆனது? என்பதை உலகம் மறந்து போனது. அதை தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு சேகரிப்பின் போது தொகுதி மக்களுக்கு முகத்தை காட்டவந்த பல அரசியல்வாதிகளுக்கு,தொகுதி மக்கள் பரிசாக தந்தது; காலனி வீச்சு.
அமெரிக்க அதிபர் ஒபாமா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது ஒரு ஈ அவருக்கு தொல்லை தந்தது.(ஈ க்கு தெரியுமல்லவா மனிதனிடம் நாற்றப்பகுதி எங்குள்ளது என்று) அதை அடித்து வீழ்த்திய பிறகு தான் பேட்டியை தொடர்ந்தார்.(அதிபரா அல்லது பாமரனா என்று ஈ பாகுபாடு பார்ப்பது இல்லை.) அமெரிக்காவை ஈ குணத்தோடு பார்த்தால் பல பத்திரிக்கையாளர்களையும், நாடுகளையும் அடித்து வீழ்த்தியுள்ள அமெரிக்காவை பத்திரிக்கைகள் ஈயைப் போன்று அதன் துர்நாற்றத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கவேண்டாமா?. சரி நம் விசயத்திற்க்கு வருவோம் அமெரிக்க அதிபரால் அடிப்பட்ட அந்த ஈ உலக புகழ் அடைந்துவிட்டது. ஆனால் இன்று இந்தியாவில் அமெரிக்கா பற்றி அறியப்படும்,அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் அமெரிக்க காண்டாமிருகத்தின் பிறந்தநாள், பூங்காவில் பாண்டா கரடி குட்டி போட்டது, கத்ரினா புயல் இப்படிப்பட்ட செய்திகளை தான். ஈ குணத்தோடு அமெரிக்க செய்திகள் வெளிவருவதில்லை. அமெரிக்கா கட்டவிழ்த்துவிடும் காட்டுமிராண்டித்தனம் அமெரிக்க மக்களின் மனநிலை இவற்றை பற்றி அமெரிக்கர்கள் வெளிக் கொண்டு வந்தால் ஒழிய ,அதனை வெளிக்கொண்டுவருவது கடினம். இதனை சமீபத்தில் ஒரு அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் மரியம் இஸ்மாயில் விடியல் வெள்ளி மாத இதழில் எழுதிய கட்டுரை மூலம் அறிய முடிந்தது. இஸ்தான்ஃபுல் நகரம் உண்டா என்ற அமெரிக்க மக்களின் கேள்வி அவர்களின் அறியாமையை சுட்டிக்காட்டியது. இது ஒரு ஈ யில் பிறந்த ஞானம்.
அகமுகன்

தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் வாபஸ்பெறுவதைக்கண்டித்து மலேகான் குடிமக்கள் போராட்டம்

0 கருத்துகள்

மும்பை:மலேகான் குண்டுவெடிப்புக்குற்றவாளிகளான ஹிந்துத்தீவிரவாதிகளுக்கெதிரான தீவிரவாத எதிர்ப்பு சட்டம் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) வாபஸ்பெற நடக்கும் முயற்சியை கண்டித்து மலேகான் வாழ் குடிமக்கள் மும்பை ஆஸாத் மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மலேகான் காங்கிரஸ் கமிட்டி,இளைஞர் காங்கிரஸ்,காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஆகியன இணைந்து இந்த தர்ணாவிற்கு ஏற்பாடுச்செய்திருந்தன.
2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த கொலைச்செய்யப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை தொடர போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.பெண்துறவி சாத்வி பிரக்யாசிங் தாக்கூர்,முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் உள்பட 11 பேருக்கு எதிராக சுமத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை31 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. குற்றவாளிகளுக்கெதிரான வலுவான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் தீவிரவாத எதிர்ப்பு படை காட்டிய ஆர்வமின்மையே நீதிமன்ற தீர்ப்பிற்கு காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட மலேகான் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
2006 இல் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தி அநியாயமாக கைதுச்செய்யப்பட்ட இளைஞர்கள் இன்னும் சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்தவண்ணம் உள்ளனர். அவர்கள் மீதான தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் வாபஸ்பெறப்படவில்லை என்று போராட்டத்திற்கு தலைமைவகித்த மலேகான் எம்.எல்.ஏ ஷேக் ராஷித் கூறினார். ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்திற்கெதிராக புலனாய்வு நடத்தப்படவேண்டும் என்றும் கொல்லப்பட்ட கர்காரே சேகரித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மலேகான் குடிமக்கள் வலியுறுத்தினர். (இதற்கிடையில் மஹாராஷ்ட்ரா முதல்வர் அசோக்சவான் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்)
செய்தி:தேஜஸ் மலையாளம் நாளிதழ்

6/8/09

ஈரான் அதிபராக அஹ்மத் நிஜாத் மீண்டும் பதவியேற்பு

0 கருத்துகள்
தெஹ்ரான்:ஈரான் அதிபராக அஹ்மத் நிஜாத் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார்.
அடுத்துவரும் 4 ஆண்டுகளுக்கு ஈரானை வழிநடத்திச்செல்லும் அதிகாரத்தை கடந்த ஜூன் 12 ஆம்தேதி அன்று மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள ஈரானின் மார்க்க தலைவர் ஆயத்துல்லா காமினி கடந்த திங்கள் கிழமை அனுமதி அளித்திருந்தார்.
நேற்று பாராளூமன்ற உறுப்பினர்கள்,ராணுவ உயர் அதிகாரிகள்,வெளிநாட்டு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் 52 வயதான‌ அஹ்மத் நிஜாத் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையை உருவாக்க நிஜாதிற்கு 2 வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்றபின் உரைநிகழ்த்திய அஹ்மத் நிஜாத்,"ஈரானின் ஸ்திரத்தன்மையை இல்லாமலாக்குவதற்கும்,கலவரத்தை தூண்டிவிடுவதற்கும் மேற்கத்திய சக்திகள் செய்து வரும் முயற்சியை தடுப்போம். சர்வதேச தளத்திலுள்ள பாரபட்சத்தை முடிவுக்கொண்டு வருவதற்கும், அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதமான நடவடிக்கைகளிலும் ஈரான் முன்னணியில் நிற்கும். ஜூன் 12 நடைபெற்ற தேர்தலில் பெற்ற பாரம்பரியமான வெற்றி ஈரானிலும்,உலகத்திலும் புதிய அத்தியாயங்களை உருவாக்கும்.இதுவரை ஈரான் கடைபிடித்துவந்த வெளிநாட்டுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.உலகத்தில் வலிமைமிக்க நாடாக ஈரானை மாற்றுவதற்கான முயற்சியை முன்னெடுத்துச்செல்வோம்."என்றார்.
அஹ்மத் நிஜாதின் இந்த உரை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகளை தொடருவதுடன்,இஸ்ரேலுக்கு எதிரான அணுகுமுறையை கடின மாக்குவதற்கும் ஈரான் முயற்சிச்செய்வதை குறிப்பாக உணர்த்துவதாக கருதப்படுகிறது.அஹ்மத் நிஜாத் அறிவாற்றலும்,துணிச்சலும் மிக்கவர் மேலும் அவர் கடினமாக உழைக்கக்கூடியவர் என்று சத்தியப்பிரமாணத்திற்கு அனுமதியளித்துவிட்டு கருத்து தெரிவித்திருந்தார் ஈரானின் மார்க்க தலைவர் காமினி.
News Source:Thejas Malyalam Daily

5/8/09

இஸ்லாத்தின் பூமியில் கல்வி கற்கும் அமெரிக்கர்கள்

0 கருத்துகள்
தங்களது நம்பிக்கைக்கு வலுவூட்டவும், இஸ்லாத்தைப்பற்றிய ஆழமான அறிவை பெற்றிடவேண்டும் என்ற தூய எண்ணத்தின் அடிப்படையில் இஸ்லாத்தின் மையமாக விளங்கும் சவூதி அரேபியாவிற்கு சமீபத்தில் இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க முஸ்லிம்களின் குழு ஒன்று வந்தது.

ஷாஹித் ராஷித் நியூயார்க்கை தலைமையிடமாகக்கொண்டுசெயல்படும் அல்குர் ஆன் வ சுன்னா என்ற அமைப்பின் தலைவர் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சவூதி கெஸட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் எங்கள் நம்பிக்கைக்கு வலுவூட்டவும், அறிவைத்தேடியும் இங்கே வந்துள்ளோம்"என்றார். இந்த அமைப்பின் ஏற்பாட்டில் 75க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கல்வி சுற்றுலாவாக சவூதிக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் கடந்த ஜுலை 16க்கும் ஆகஸ்ட் 3ற்குமிடையே இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவிலுள்ளவர்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடான பின்னணியைக்கொண்டவர்கள். இதில் பலர் தங்களது குடும்ப அங்கத்தினருடன் ஆர்வமுடன் சவூதிக்கு வந்துள்ளனர். இந்த பயணத்தின் சிறப்பு அம்சமாக அமெரிக்க முஸ்லிம்கள் இஸ்லாமிய விஞ்ஞானம், ஹதீஸ், ஃபிக்ஹ் மற்றும் ஆன்மீகம் ஆகியனப்பற்றிய கருத்தரங்குகளில் கலந்துக்கொண்டார்கள். மேலும் பெண்களுக்கான‌ சிறப்பு ஏற்பாடாக குர் ஆனை தஜ்வீது முறைப்படி ஓதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தக்குழுவிற்கு கிடைத்த தனித்தன்மை மிக்க வாய்ப்பு என்னவெனில் இஸ்லாத்தைப்பற்றிய ஆழ்ந்த ஞானமுடைய 50 முஸ்லிம் அறிஞர்களை சந்தித்ததுதான். எல்லா கருத்தரங்குகளும் வரிக்குவரி அமெரிக்க ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

ராஷித் கூறுகையில்"இங்குள்ள அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்தை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக செலவிடுகின்றனர்.அவர்கள் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் மனிதநேயத்தைப்பற்றியும் மிகுந்த அக்கறைக்கொண்டுள்ளனர்" என்று குறிப்பிடுகிறார்.

சவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞரான அப்துல் அஸீஸ் ஆல் ஷேஹ் தீவிரவாதம், தற்கொலைத்தாக்குதல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார். இஸ்லாம் சாந்தியும் கருணையும் மிகுந்த மார்க்கம் என்று அவர் அமெரிக்க முஸ்லிம் குழுவினரோடு உரையாற்றினார். இஸ்லாம் தீவிரவாதத்தின் எல்லாவகைகளையும் கண்டிக்கிறது என்றார் அவர்.

புனிதமிக்க மஸ்ஜிதுன்னபவியின் இமாம் ஷேஹ் அலி அப்துல்ரஹ்மான் அல் ஹுதைபி அமெரிக்க முஸ்லிம்களின் அருகில் அமர்ந்து தஜ்வீதை கற்றுக்கொடுத்தார்.அமெரிக்காவின் கொலம்பஸைச்சார்ந்த ஹம்ஸா ஜெயின்ஸ் மெக்கின்ட் கூறுகையில், "அறிஞர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு புத்துணர்ச்சியாகவும், அபூர்வமாகவும் அமைந்தது" என்கிறார்.

கிறிஸ்தவத்திலிருந்து விலகி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்ட 19 வயதான இமானி கூறுகையில்,"இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அமெரிக்காவில் மஸ்ஜிதில் வைத்து பெண்கள் மத்தியில் உரை நிகழ்த்த இது எனக்கு உதவும்".என்றார்.37 வயதான அமெரிக்க முஸ்லிம் ஒருவர் குறிப்பிடுகையில்,"இரண்டு புனித மிக்க நகரங்களில் அறிவைத்தேடி வந்தது என் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரையிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹ்ம‌த் நிஜாத் ஈரானின் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌லைவ‌ர்:அமெரிக்கா

0 கருத்துகள்

க‌ட‌ந்த‌ எட்டுவார‌ங்க‌ளுக்கு முன்பு ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ஈரான் ம‌க்க‌ளின் பெரும்பான‌மையான‌ ஆத‌ர‌வோடு வெற்றி வாகை சூடிய‌ அஹ்ம‌த் நிஜாத் இன்று முறைப்ப‌டி அதிப‌ராக‌ ப‌த‌வியேற்றார்.
ஈரான் தேர்த‌ல் ந‌ட‌ந்துக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்க‌ட்சி வேட்பாள‌ரான‌ ஹுஸைன் மூஸாவிக்கு ஆதர‌வாக‌ க‌ள‌மிற‌ங்கி க‌டுமையான‌ பிர‌ச்சார‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ மேற்க‌த்திய‌ உல‌கும், மீடியாவும். அத‌னையும் மீறி அஹ்ம‌த் நிஜாத் பெருவாரியான‌ வாக்குக‌ளை பெற்று வெற்றிபெற்ற‌தும், அவ‌ர‌து வெற்றியை பொறுத்துக்கொள்ள‌ இய‌லாத‌ மூஸாவியின் மேலை நாட்டுக‌லாச்சார‌த்தை விரும்பும் ந‌க‌ர்புற‌ ஆதர‌வாள‌ர்க‌ள் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இத‌னை மேற்க‌த்திய‌ மீடியாக்க‌ள் போட்டிபோட்டு உல‌கெங்கும் பிர‌ப‌ல‌ ப‌டுத்தின‌. மேற்க‌த்திய‌ நாடுக‌ள் அஹ்ம‌த் நிஜாதின் இந்த‌ அபார‌வெற்றியை ஜீர‌ண‌முடியாம‌ல் புல‌ம்பின‌.
இந்நிலையில் வாக்குப‌திவில் மோச‌டி ந‌ட‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் ஈரானின் ம‌த‌த்த‌லைவ‌ர் காமினியின் உத்த‌ர‌வுப்பிர‌கார‌ம் மீண்டும் வாக்குக‌ள் எண்ண‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் இவ்விட‌ங்க‌ளிலெல்லாம் முன்பு கிடைத்த‌ வாக்குக‌ளை விட‌ அதிக‌ வாக்குக‌ளை பெற்றிருந்தார் நிஜாத். இந்த‌ முடிவையும் மூஸாவியோ மேற்க‌த்திய‌ மீடியாக்க‌ளோ ஒப்புக்கொள்ள‌வில்லை. இந்நிலையில் ஈரானின் ம‌த‌த்த‌லைவ‌ர் காமினியின் ஆணைப்ப‌டி இன்று முறைப்ப‌டி அதிப‌ராக‌ ப‌த‌வியேற்றுக்கொண்டார் அஹ்மத் நிஜாத்.ஆனால் பிரிட்ட‌ன், ஜெர்ம‌னி, பிரான்சு உள்ளிட்ட‌ எந்த‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளும் ம‌ரியாதைக்காக‌ கூட‌ ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நிஜாதிற்கு வாழ்த்து தெரிவிக்க‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
ஆனால் ஈரான் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌திலிருந்து அதனைப்பற்றி ‌ எத‌னையும் தெளிவாக‌ கூறாம‌ல் இருந்து வ‌ருகிறார் அமெரிக்க‌ அதிபர் பார‌க் ஒபாமா. இந்நிலையில் வெள்ளைமாளிகையின் அதிகார‌ப்பூர்வ‌ செய்தித்தொட‌ர்பாள‌ர் ராப‌ர்ட் கிப்ஸிட‌ம் ச‌ர்ச்சைக்குரிய‌ தேர்த‌ல் மூல‌ம் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நிஜாதை ஒபாமா அங்கீக‌ரிக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய‌பொழுது, கிப்ஸ்,"இந்த‌ தேர்த‌ல் முடிவைப்ப‌ற்றிய‌ விவாத‌ம் ஈரானில் ஈரானிய‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுகொண்டிருக்கிற‌து. ஈரானிய‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து அதிபரை தேர்ந்தெடுத்துள்ள‌ன‌ர்.அஹ்ம‌த் நிஜாத் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌லைவ‌ர்". என்று குறிப்பிட்டார். ஆனாலும் அமெரிக்கா நிஜாதிற்கு எந்த‌ வித‌ வாழ்த்துச்செய்தியையும் எழுத்துமூல‌மாக‌ அனுப்ப‌வில்லை. இதுப‌ற்றி கேட்ட‌த‌ற்கு ராப‌ர்ட் கிப்ஸ் கூறுகையில், "வாழ்த்துக‌டித‌ம் அனுப்பாத‌துத் தொட‌ர்பாக‌ எந்த‌வித‌கார‌ண‌மும் இருப்பதாக‌ நான் ந‌ம்ப‌வில்லை".என்றார்.
News :Extracted from Presstv

இது மாயாவதி.. சிலைக்கு ரூ.550 கோடி-வறட்சிக்கு ரூ.250 கோடி

0 கருத்துகள்
லக்னோ: கடும் வறட்சியி்ல் சி்க்கித் தவித்து வரும் உத்தரப் பிரதேசத்தில் தனது சிலைகள் உள்பட தலைவர்களின் சிலைகளை அமைக்க ரூ. 550 கோடியை ஒதுக்கியுள்ள அம் மாநில முதல்வர் மாயாவதி, வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசு ரூ. 250 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபையில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களின் முழு உருவ சிலைகள், அவர்களது பெயரில பூங்காங்கள், நினைவகங்கள் அமைக்க ரூ.556 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாநிலத்தின் கடும் வறட்சியை சமாளிக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணத்தைவிட சிலைகள் அமைக்க இரண்டு மடங்குங்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையில் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மாயாவதி கண்டுகொள்ளவில்லை.
மேலும் தனக்கு புதிய ஹெலிகாப்டர் வாங்க ரூ. 10 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளார் மாயாவதி.
thatstamil

எய்ட்ஸ் விளம்பரத்தில் குடும்பப் பெண்-குழந்தை: நஷ்டஈடு கேட்டு வழக்கு

0 கருத்துகள்
சென்னை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரப் படத்தில் தவறுதலாக குடும்பப் பெண் மற்றும் அவரது குழநதையின் படத்தை பிரசுரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திலகவதி என்ற அந்த 25 வயதுப் பெண், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது.
கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
எங்கள் படத்தை எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரசாரத்திற்காக தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். எங்கள் படத்தை பயன்படுத்த அரசு எந்த அனுமதியும் பெறவில்லை. இதுபோன்ற படத்தை வெளியிட மருத்துவமனை மூலம் எழுத்து மூலமாக அரசு அனுமதி பெறவேண்டும். ஆனால் இதை செய்யவில்லை. இதனால் எங்களுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுவிட்டது.
இந்த விளம்பரத்தால் எனது குழந்தையிடம் மற்ற குழந்தைகள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இனி இந்த படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் நான் அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் இதுவரை அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே எங்களது படங்கள் கொண்ட பேனர்களையும், விளம்பர போர்டுகளையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த குளறுபடி குறித்து திலகவதி கூறுகையில், இந்த விளம்பரப் படத்தால் எனது வாழ்க்கையே கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. அக்கம் பக்கத்தினர் எனது நடத்தை குறித்தும், எனது குழந்தையின் நலம் குறித்தும் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எனது கணவருக்கே கூட ஆரம்பத்தில் என் மீது சந்தேகம் வந்து விட்டது. இதனால் நான் பட்ட அவமானங்கள், சிரமங்களை சொல்லில் கூற முடியாது.
ஒரு கட்டத்தில் இப்படி அவமானத்துடன் வாழ்வதற்கு பேசாமல் செத்துப் போய் விடலாம் என்று கூட நினைத்தேன் என்றார்.
திலகவதியின் வக்கீல்கள் மோகனகிருஷ்ணன், ராஜசேகரன் கூறுகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரத்தால் அந்தப் பெண்ணின் அமைதியான வாழ்க்கை சீர்குலைந்து போய் விட்டது.
படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்த அனுமதியை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமோ, அல்லது அந்த கழகத்தின் அதிகாரிகளோ பெறவில்லை. அப்பெண்ணின் வாழ்க்கை மற்றும் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொள்ளாமல் பிரசுரித்து விட்டனர்.
இதை ஒரு சாதாரண தவறாக கருதி விடாமல், தவறு செய்தவர்கள் மீது, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் படத்தை பிரசுரிப்பதற்கு முன்பு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக தலைவரின் அனுமதியைப் பெற்றிருப்பார்கள். அவரது அனுமதி இல்லாமல் விளம்பர போஸ்டர்களை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தவறுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், இந்த விளம்பரம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகும். இப்படி ஒரு தவறு நடந்திருப்பதாக எங்களுக்கு முன்பு புகார் வந்தது.
வழக்கமாக, விளம்பர ஏஜென்சிகள்தான் இப்படிப்பட்ட விளம்பரங்களை எங்களுக்கு தயாரித்துத் தரும். அவர்கள்தான் படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்து விசாரித்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா என்று தெரியவில்லை.
இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக அதிகாரிகளை விசாரிக்கக் கூறியுள்ளேன். அறிக்கை தருமாறும் கூறியுள்ளேன் என்றார்.
தவறுதலான இந்த விளம்பரத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வெளியிட்ட விளம்பரங்களை அகற்றுவதற்குப் பதில் அதிக அளவில், தமிழகம் முழுவதும் இந்த விளம்பரங்களை வைத்து வருகிறார்களாம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தினர்.
thatstamil

குவாண்டனாமோ சிறைக்கைதிகளில் சிலரை அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சி

0 கருத்துகள்
வாஷிங்டன்: குவாண்டனாமோ சிறைக்கைதிகளில் சிலரை அமெரிக்காவுக்கு மாற்றுவதை குறித்து ஒபாமா அரசு ஆலோசித்துவருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆபத்தானவர்கள் என்று கருதப்படுகிறவர் களையும்,பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களையும் தனியாக உருவாக்கப்பட்ட சிறைகளில் அடைப்பதற்கு அமெரிக்கா ஆலோசித்துவருகிறது. வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைதான் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதி தீவிர பாதுகாப்புடன் கூடியதாகவும், விசாரணக்கான சிறப்பு நீதிமன்ற அறைகளை உள்ளடக்கியதாகவும் இச்சிறைச்சாலை இயங்கும். ஃபோர்ட் ஸ்டீவன்வர்த்தில் ராணுவசிறையும், ஸ்டான்டீஷிலுள்ள அதிதீவிர பாதுகாப்பு சிறையும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
பாதுகாப்புதுறை, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புதுறை ஆகியன இணைந்து இச்சிறைச்சாலையை நடத்தப்போவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

4/8/09

பாகிஸ்தானின் ஸ்வாத் வேலி பகுதியில் பள்ளி சிறுவர்களின் தற்போதைய நிலை

0 கருத்துகள்

பாகிஸ்தானின் அழகிய பிரதேசம் மற்றும் குட்டி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்பட்ட அழகிய பகுதி ஸ்வாத் வேலி.இப்பகுதியில் 1700 க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.மில்லியனுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வி அறிவை அடைந்து வருகின்றனர்.
கடந்த
4 மாதமாக அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டு படைகள் தாலிபான் வீரர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை காரணமாக தற்போது இந்த சிறுவர்களின் கல்வி நிலையோ மிகவும் மோசமானது.

பாகிஸ்தானின் ஸ்வாத் வேலி பகுதியில் பள்ளி சிறுவர்களின் தற்போதைய நிலை:

மிங்கோரா ; ஷஹாரா கல்லூரியின் முதல்வர் ஹஸ்ரத் ஹுசைன் சாக்கி இஸ்லாமிக் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில்;

200 க்கு மேற்பட்ட பள்ளி கூடங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டதாகவும்,318 க்கு மேற்பட்ட பள்ளி கூடங்கள் பெரும் பகுதி சேதம் அடைந்தது.இதில் தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கென்று உருவாக்கப்பட்ட பள்ளிகள் அதிகம்.

பல பள்ளி கூடங்கள் செயல்பட்டாலும் அவர்களுக்கு அன்றாட தேவையான பாட புத்தகங்கள்,எழூதுகோல்,எழுதும் பலகை போன்றவை இல்லாத நிலை.பள்ளி கூடங்களின் வகுப்பறைகளில் 35 முதல் 45% மணவர்களே உள்ளனர்.

மாணவர்களை தொடர்பு கொள்ள தொலைதொடர்பு வசதி இல்லை. பல நகரங்களில் மாணவர்கள் நடந்து வரும் வழி இன்னும் சரிபடுத்தப்படவில்லை.2 முதல் 3 கி.மி தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு வாக வசதி இல்லை.

பாகிஸ்தான் அரசால் பள்ளி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று பாகிஸ்தான் அரசால் இதுவரை கல்வி நிறுவனங்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்து தரப்படவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களில் போதிய பண வசதி இல்லை.மிலிட்டரி தாக்குதலினால் அங்கு வாழும் தொழில் அதிபர்களிடம் கூட பணம் இல்லாத நிலை.ஒட்டு மொத்த மக்களின் நிலையும் இவ்வாறே உள்ளது.எங்களிடம் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் அவர்களுக்கு கொடுக்க முடியாத நிலை.இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 110 கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் இவ்வாறு அவர் தன் பேட்டியில் தெரிவித்தார்.

News Source : Islamic online

மைசூர் கலவரம்: 110 பேருக்கு ஜாமீன்

0 கருத்துகள்

பெங்களூரு:மூன்றுபேரின் மரணத்திற்கு காரணமான மைசூர் கலவரத்தில் போலீசாரால் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டவர்களை விடுதலைச்செய்யக்கோரி சமுதாய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய "சிறை நிரப்பும்" போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டதோடு 162 பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைதுச்செய்தது கர்நாடகா காவல்துறை.

கைதுச்செய்யப்பட்டவர்களை மைசூர் தாசில்தார் முன்னால் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். எளிதில் ஜாமீன் கிடைக்கவேண்டிய வழக்கில் தாசில்தார் சட்டவிரோதமாக நடந்துக்கொண்டார். தாசில்தாரின் இந்நடவடிக்கையை கேள்விகேட்டும் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டவர்களை விடுதலைச்செய்யவும் ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணரும்) மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர் நூர் ஜஹானும் இன்னும் 5 நபர்களும். இவர்களுக்காக வழக்கை தாக்கல் செய்தவர் வழக்கறிஞர் சுப்பையா. இதனைத்தொடர்ந்து நீதிபதிகளான கோபால் கவுடா, பக்தவச்சலம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் ஜூலை 31 ஆம்தேதி தாசில்தாரும், நரசிம்மராஜ நகர் துணை ஆய்வாளரும் ஆஜராகவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து ஆஜரான தாசில்தார் கீதா கிருஷ்ணா ஒரே சமுதாயத்தைச்சார்ந்த 162 பேரை ரிமாண்ட் செய்தது போலீஸ் அறிக்கையின்படிதான் என்று கூறியதை ஏற்க மறுத்த நீதிபதிகள் 116 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மீதியுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்படும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த மைசூர் நகர தாசில்தார் கீதா கிருஷ்ணாவை உயர்நீதிமன்றம் எச்சரித்துவிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் விவரம் இல்லை : மத்திய அமைச்சர்

0 கருத்துகள்
புது தில்லி:மத்திய அரசுப் பணிகளில் எவ்வளவு முஸ்லிம்கள் உள்ளனர் என்ற விவரம் இல்லை என மத்திய சிறுபான்மை நலத் துறை இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது "மத்திய அரசுப் பணிகளில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தனியாக விவரம் சேகரிக்கப்படவில்லை. எனினும், 5 சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர் என்ற தகவல் உள்ளது.
2006-07-ல் 5 சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 12,182 பேரும், 2007-08-ல் 12,195 பேரும், 2008-09-ல் 4,479 பேரும் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

தம்மாமில் 'விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் IFF நடத்திய கருத்தரங்கம்

0 கருத்துகள்

தம்மாம் இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் சார்பாக தம்மாம் நகரில் 31-07-09 அன்று விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சகோதரர் உமர் ஸமான் அவர்களின் குர்ஆன் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சகோதரர் ரியாஸ் அஹமது அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தி இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் குறித்த விரிவான முன்னுரையை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் கேரளா பகுதியைச் சார்ந்த சகோரர் சுனீர் அவர்களும் இந்தியன் ஃபிரடானிடி ஃபோரம் உருது பகுதியைச் சார்ந்த சகோதரர் ஆஸிப் மற்றும் கர்நாடகா பகுதியைச் சார்ந்த சகோதரர் ஆஸிப் ஆகியோர் முறையே மலையாளம், உருது மற்றும் கன்னட மொழிகளில் சில நிமிடங்கள் உரை நிகழ்த்தினர்.

பின்னர் சிறப்பு பேச்சாளர் சகோதரர் திப்பு சுல்தான் அவர்கள் விசாரணை கமிஷன்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் விரிவான உரையை நிகழ்த்தினார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட கலவரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன்கள் குறித்தும், சச்சார், மிஸ்ரா மற்றும் லிபரஹான் கமிஷன்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். கமிஷன்களை அமைப்பதில் ஆர்வம் காட்டும் அரசுகள் அந்த கமிஷன்களின் முடிவுகளை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு பல வருடங்களுக்கு பின்னர் நிவாரணத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் அவலத்தையும் மக்களுக்கு கூறினார். குற்றம் செய்த ஃபாஸிஸவாதிகள் சுதந்திரமாக வெளியே திரியும் அதே சமயம் முஸ்லிம்கள் சிறைகளில் அல்லல்படுவதையும் நினைவூட்டினார்.

இத்தகைய விசாரணை கமிஷன்களால் முஸ்லிம்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதை தெளிவாக விளக்கினார். முஸ்லிம்கள் தங்களை தாங்களே சக்தி படுத்தாதவரையில் இந்த நிலைகள் மாறாது என்பதை முத்தாய்ப்பாக கூறி தனது உரையை நிறைவுபடுத்தினார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தாயகத்தில் செய்து வரும் பணிகள் குறித்த ஒரு விரிவான பார்வையை சகோதரர் ஃபைஸல் அவர்கள் வழங்கினார். அழைப்பு பணியில் ஆரம்பித்து இன்றைய அரசியல் பணி வரை அனைத்து பணிகளையும் விளக்கினார்.

ஏறத்தாழ நூற்று நாற்பதுகோதரர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சமுதாயத்தை முன்னேற்றும் இந்த பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக சகோதரர் யாஸர் அரஃபாத்தின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஃபலஸ்தீன் முஸ்லிம்களை வெளியேற்றிய சம்பவம்:இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு

0 கருத்துகள்
கிழக்கு ஜெருசலத்திலிருந்து ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றிய நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எல்லாவித சர்வதேச சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது இஸ்ரேல் என்று ஐக்கியநாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இஸ்ரேலின்
இந்நடவடிக்கை பதட்டத்தை அதிகரிக்கவும், சமாதான நடவடிக்கைகளை இல்லாமலாக்கவுமே உதவும் என மத்தியகிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஐ.நா வின் சிறப்புத்தூதர் ரோபர்ட் செரி கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த அக்கிரம நடவடிக்கையை அமெரிக்காவும் கண்டித்துள்ளது. ரோட் மேப் ஒப்பந்தத்தை மீறும் சட்டமீறல் நடவடிக்கை இது என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது. அமெரிக்காவின் கண்டனத்தை இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க செய்தித்தொடர்பாளர் மெக்கான் மேட்ஸன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும், இஸ்ரேல் கூறிக்கொண்டிருக்கும் சமாதானம் என்பதற்கு முற்றிலும் பொருந்தாத நடவடிக்கை இது என்றும் ஜெருசலமிலுள்ள பிரிட்டன் தூதரகம் கூறியுள்ளது.

யூத தீவிரவாதிகளின் விருப்பங்களை இஸ்ரேல் நிறைவேற்றக்கூடாது என்று பிரிட்டனும் கூறியுள்ளது. ஃபலஸ்தீனிகளை சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றி யூதர்களை குடியமர்த்தியதால் 19 பிஞ்சுக்குழந்தைகள் உட்பட்ட இரண்டுகுடும்பங்கள் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது என ஃபலஸ்தீன் பிரச்சனைக்கான மத்தியஸ்தர் ஸவூப் இரகாத் கூறுயுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடருமென்றால் அமைதி ஏற்படுவதற்கு நீண்டகாலமாகும்.
ஷேக் அல் ஜரா பிரதேசத்திலிலுள்ள இரண்டு வீடுகள் யூதர்களுக்கு சொந்தமென்று இஸ்ரேல் நீதிமன்றத்தின் அநீதமான தீர்ப்பைத்தொடர்ந்துதான் நாஸிர் காவி மற்றும் மெஹ்ஜாத் ஹானு ஆகியோரின் குடும்பங்களை இஸ்ரேல் போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.உடனடியாகவே யூதக்குடும்பங்களை குடியமர்த்தவும் செய்தனர்.
நாஸிர் காவியின் குடும்பத்தில் 38 உறுப்பினர்கள். 50 வருடங்களாக இக்குடும்பம் இங்குதான் வசித்துவருகிறது. கதவுகளை உடைத்து கொள்ளையர்களைப்போல் உள்ளே நுழைந்த இஸ்ரேல் போலீஸ் குடும்ப அங்கத்தினரை பலவந்தமாக பிடித்து இழுத்து வெளியேற்றியதோடு பொருள்களையெல்லாம் வெளியே தூக்கி வீசியதாக நாஸிர் காவி கூறுகிறார். தற்ப்பொழுது தங்களுக்கு பூமிதான் கட்டில் என்றும் வானம் போர்வை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மெஹ்ஜாத் ஹானுவின் குடும்பத்தில் 16 பேர் உள்ளனர். தங்களை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு பின்னர் எங்களையும் எங்கள் பொருள்களையும் ஒரு ட்ரக்கில் ஏற்றி வேறொரு இடத்தில் கொண்டுவிட்டனர். தற்ப்பொழுது நாங்கள் சாலைஅருகில் தங்கிருப்பதாக கூறுகிறார் மெஹ்ஜாத் ஹானு. ஜெருசலமிலிருந்த்து ஒட்டுமொத்த ஃபலஸ்தீனியர்களையும் வெளியேற்றுவதுதான் இஸ்ரேலின் திட்டம் என்றும் அவர்தெரிவித்தார். 1967 ஆம் ஆண்டுதான் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்களிடமிருந்து அபகரித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சீனா:உரூம்கியில் மேலும் 319 உய்கூர் முஸ்லிம்கள் கைது

0 கருத்துகள்
உரூம்கி:ஜூலை 5 ஆம்தேதி ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாக மேலும் 319 உய்கூர் முஸ்லிம்களை சீன அரசு கைதுச்செய்துள்ளது.
இதோடு கலவரம் சம்பந்தமாக கைதுச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1572 ஆகியுள்ளது. ஹான் இனத்தவர்களும் சீன போலீசும் ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் உய்கூர் முஸ்லிம்கள் மீது நடத்திய அக்கிரமத்தாக்குதலில் 197 உய்கூர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
கலவரம் நடந்த அன்றைய இரவு 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்களை காணவில்லை. சிவிலியன்களுக்கிடையிலுள்ள சீன உளவாளிகள்தான் முஸ்லிம்களைப்பற்றிய விபரங்களை சீன காவல்துறைக்கு அளிக்கின்றனர். சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரும் கைதுச்செய்யப்படுவர் என்றும், ரகசியச்செயல்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவர கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீன பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு:எஸ்.ஐ.டிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
புதுடெல்லி:2005 ஆம் ஆண்டு குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொஹ்ரபுதீன் ஷேக் வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் குஜராத் அரசு தயாராக்கிய குற்றப்பத்திரிகையில் மோசடி நடந்துள்ளது என்பதை கண்டறிந்ததைத் தொடர்ந்து விசாரணையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை எஸ்.ஐ.டிக்கு மாற்றுவது தொடர்பாக குஜராத் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நீதிபதிகளாகிய தருண் சாட்டர்ஜி, அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு மாற்றினர். சொஹ்ரபுதீன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் குஜராத் மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நஷ்டஈடு எவ்வளவு என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை. நஷ்டஈடு எவ்வளவு வழங்கவேண்டும் என்பதை மாநில அரசு முடிவெடுக்க அனுமதிக்கவேண்டும் என்று வழக்குரைஞர் கேட்டதைத்தொடர்ந்து சிறப்பு பெஞ்ச் அதனை அங்கீகரித்தது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொஹ்ரபுதீன் ஷேக்கையும் இன்னும் இரண்டும் நபர்களையும் குஜராத் காவல்துறை அநியாயமாக சுட்டுக்கொன்றனர். சாட்சிகளை அழிப்பதற்காக சொஹ்ரபுதீன் ஷேக்கின் மனைவி கவுசர் பீவியையும் வழக்கின் முக்கிய சாட்சி துளசிராம் பிரஜாபதியையும் காவல்துறையினர் கொலைச்செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

3/8/09

ஷிஹாப் தங்கள் மரணம்:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம்

0 கருத்துகள்

துபை:கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு செய்யத் ஷிஹாப் தங்களின் மரணத்திற்கு வெளிநாட்டுவாழ் இந்தியர் நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

மத,சமூக,கல்வி துறைகளில் ஷிஹாப் தங்களின் பங்களிப்பு மறக்க இயலாதது என அனுதாப கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் உமர் ஃபாரூக்,இ.எம்.ஃபிரோஸ்,மொய்து மவ்லவி,ஸஅதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினர்.

எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அஜ்மான் கிளை சார்பாக ஏற்பாடுச்செய்த அனுதாப கூட்டத்தில் "முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்ட ஷிஹாப் தங்களின் மரணம் முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டது. இக்கூட்டத்தில் பஷீர்,லத்தீஃப்,ஷாஃபி, நவாஸ்கான், துஃபைல் ஆகியோர் உரையாற்றினர்.

செய்தி:தேஜஸ்

இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன் ஒசாமாவுடன் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பு: எஃப்.பி.ஐ. முன்னாள் பணியாளர்

0 கருத்துகள்
இரட்டை கோபுரம் மீதான அல்கய்தாவின் தாக்குதலுக்கு முன்பு வரை அமெரிக்க அரசுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என எஃப்.பி.. முன்னாள் பணியாளர் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி..யில் துருக்கி மொழிபெயர்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிபெல் எட்மண்ட்ஸ். கடந்த சில நாட்களுக்கு முன் ரேடியோ ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில், செப்டம்பர் 11இல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு வரை ஒசாமாவுடன் அமெரிக்கா நட்பு பாராட்டி வந்தது. அந்தக் குழுவினரின் உதவியுடன் மத்திய ஆசியாவில் சில காரியங்களை அமெரிக்கா நடத்தியது.
சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் தாலிபான், அல்கய்தா அமைப்பினரைப் பயன்படுத்தி அமெரிக்கா செயல்பட்டது. அதாவது எதிரிகளை மறைமுகமாகத் தாக்குதவதற்கு சமமான யுக்தி இது என சிபெல் எட்மண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1979-89 வரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா படையெடுத்த போது, அப்பகுதி போராட்டகாரர்களை ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி, ஆப்கானிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா உதவியது நினைவில் கொள்ளத்தக்கது.

கிழக்கு ஃபலஸ்தீனில் 9 ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை இஸ்ரேல் பலவந்தமாக வெளியேற்றியது

0 கருத்துகள்

டெல்அவீவ்:கிழக்கு ஜெருசலமில் 9 ஃபலஸ்தீன் முஸ்லிம் குடும்பங்களை இஸ்ரேல் பலம் உபயோகித்து வெளியேற்றியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக இரண்டு வீடுகளிலுமாக தங்கியிருந்த ஃபலஸ்தீன் குடும்பத்தினரை இஸ்ரேல் போலீஸ் நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இவர்களை வெளியேற்றியபின்னர் யூத குடும்பங்கள் அவ்வீடுகளை ஆக்கிரமித்துள்ளனர். ஷைக் அல் ஜரா என்ற மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பிரதேசம் யூதர்களுக்கு சொந்தமானது என்று இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்நிகழ்வு நடந்தேறியுள்ளது. இப்பகுதியில் 20 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இச்செயலை ஐ.நாவும் பிரிட்டனும் கண்டித்துள்ளன.
1967 ஆம் ஆண்டில்தான் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் அபகரித்தது. தொடர்ந்து மண்ணின் பூர்வீக குடிமக்களான ஃபலஸ்தீனிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் பலவந்தமாக வெளியேற்றியுள்ளது இஸ்ரேல்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அமெரிக்கா தற்பொழுதும் முஸ்லிம் நாடுகள் விரும்பாத தேசம் ‍ ஆய்வில் தகவல்

0 கருத்துகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா புதிய அணுகுமுறைகளை ஏற்றுக்கொண்டபோதிலும் தற்பொழுதும் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவை எதிரியாகவே கணிப்பதாக ஃபியூவ் ஃபவுண்டேசன்(Pew foundation) நடத்திய‌ சர்வேயில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வு தெரிவிப்பதாவது, அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கையில் தற்பொழுதும் முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்புள்ளது. உலகத்தின் பெரும்பாலான நாடுகள் ஒபாமா மானியாவின்(mania) பிடியில் உள்ளது. ஆனால் இந்த மானியாவிலிருந்து முஸ்லிம் நாடுகள் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் 64 சதவீத மக்களும், ஃபலஸ்தீனில் 77 சதவீத மக்களும் அமெரிக்காவை எதிரி நாடாகவே கருதுகின்றனர்.
அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கைப்பற்றிய கவலை முஸ்லிம் நாடுகளில் அதிகமாகிக்கொண்டிருந்தாலும் முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ்ஷை ஒப்பு நோக்குகையில் ஒபாமாவை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக்கொள்ளதக்கவராகவே காண்கின்றன. ஒபாமாவின் மக்கள் தலைவர் என்ற இமேஜ் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்காபற்றிய அபிப்ராயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பாகிஸ்தான், எகிப்து,ஜோர்டான்,துருக்கி,ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை உட்படுத்தி நடத்திய சர்வேயில் 30 சதவீத மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர். புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான போர், இஸ்ரேலை பாதுகாப்பது, முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது, மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் முதலீட்டின் கட்டுப்பாட்டை உரிமையாக்குவதற்கான முயற்சி ஆகிய செயல்பாடுகளுக்கு பின்னால் ரகசிய திட்டங்கள் இருப்பதாக பெரும்பாலான முஸ்லிம்களும் எண்ணுகின்றனர். அதேவேளையில் பிரான்சு, ஜெர்மனி உள்பட ஐரோப்பிய நாடுகளிலும், ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலெல்லாம் ஒபாமாவிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

2/8/09

போபால் விஷ வாயு: வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய நீதி மன்றம் உத்தரவு

1 கருத்துகள்

போபால் விஷ வாயு விபத்து வழக்கில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் முன்னாள் சேர்மன் வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய போபால் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆண்டர்சனை உடனே கைதுச்செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்க சி.பி. க்கு நீதிபதி உத்தரவிட்டார். பல முறை வாரண்ட் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத ஆண்டர்சனை போபால் விஷ வாயு வழக்கில் 1992 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
2002 இல் நீதிமன்றம் உத்தரவிட்ட வாரண்டின் படி ஏன் ஆண்டர்சனை கைதுச்செய்யவில்லை என்று விளக்க அளிக்குமாறு சி.பி.ஐக்கும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார். இதன் நகல் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனில் ஏற்பட்ட 42 டன் அளவிலான மெதில் ஐசோசியனேட் என்றவிஷ வாயு கசிவினால் உருவான பாதிப்பில் இதுவரை 25 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். விஷ வாய் கசியத்தொடங்கி 72 மணிநேரத்திற்குள்ளாகவே 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையிலான மக்கள் இறந்தனர். இதனைத்தொடர்ந்து அதன் அப்போது அதன் சேர்மனாக இருந்த வாரன் ஆண்டர்சன் மீது வேண்டுமென்றே செய்யப்பட்ட கூட்டுக்கொலை என்ற வழக்கு பதிவுச்செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ஆண்டர்சனை கைதுச்செய்ய இந்திய அரசால் இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் வேறொன்றுமில்லை அவர் ஒரு அமெரிக்கர். வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து விஷ வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஒன்றுகூடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். சி.பி. வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிப்பதாகவும் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

முஷாரஃபிற்கு அரசியல் அடைக்கலம் தரத்தயார் சவூதி அரேபியா அறிவிப்பு

0 கருத்துகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஸாரஃப் வேண்டுகோள் விடுத்தால் அரசியல் அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் தூதர் அப்துல் அஸீஸ் பின் இபராஹீம் அல்கதீர் இதனைத்தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முஷாரஃப் பிரகடனப்படுத்திய அவசரகாலச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இதனால் முஷாரஃப் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார் எனக்கருதப்படுகிறது. முஷாரஃப் மீது தேசத்துரோக நடவடிக்கையின் பேரில் தண்டிக்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது.
முஷாரஃப் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இக்காலக்கட்டத்தில் ராணுவ மேலதிகாரிகள் அரசியல் சட்டதிட்டத்தை மீறியதாகவும், குடிமக்களின் உரிமைகளை மறுத்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசரச்சட்டம் அமுலில் இருந்த காலக்கட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 37 உத்தரவுகளும், தற்போதைய அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி நாடுதிரும்ப காரணமான உத்தரவும் சட்டவிரோதமென்று உச்சநீதி மன்றம் விமர்சித்துள்ளது. இதனால் சர்தாரியின் நிலையும் சந்தேகத்தின் நிழலிலுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கேரள மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷிஹாப் தங்கள் மரணமடைந்தார்

0 கருத்துகள்
கேரள முஸ்லீம் லீக் மாநிலத்தலைவரான பாணக்காடு செய்யத் ஷிஹாப் தங்கள் நேற்று இரவு 8.40 மணியளவில் தனியார் மருத்துவமனையொன்றில் வைத்து மரணமடைந்தார். .(இன்னாலில்லாஹி...).
அவருக்கு வயது 73. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலுள்ள குளியலறையில் கீழே விழுந்த அவரை கே.பி.எம்.ஆர்சிட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டது. இரவு 8.30 மணிவரை உரையாடிக்கொண்டிருந்த ஷிஹாப் தங்கள் தனக்கு உடல் களைப்பு இருப்பதாக கூறியதை அடுத்து அவசர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதயம் இயங்கா நிலையைத்தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் மரணமடந்தார். (இன்னாலில்லாஹி...).அவருக்கு 2 மனைவிகள். ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவருக்கு 3 மகன்களும்,2 மகள்களும் உள்ளனர்.
1936 ஆம் ஆண்டு அன்றைய கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு பூக்கோயா தங்களின் மகனாக பிறந்த ஷிஹாப் தங்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மஸ்ஜித் தர்ஸுகளில் அரபி இலக்கணம், இஸ்லாமிய விஞ்ஞானம் ஆகியன பயின்றார். பின்னர் எகிப்திலிலுள்ள உலக புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைகழகத்திலிருந்து பேராசிரியராக பணியாற்ற விடுத்த அழைப்பை தந்தையின் மறுப்பின் காரணமாக ஷிஹாப் தங்களுக்கு ஏற்க இயலவில்லை. தனது 39 ஆம் வயதில் கேரள மாநில் முஸ்லிம் லீக் தலைவராக பொறுப்பேற்ற ஷிஹாப் தங்கள் தொடர்ந்து 34 வருடங்களாக பணியாற்றி வந்தார். இத்துடன் பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையும், மத்திய மாநில அமைச்சர்களையும் தேர்வுச்செய்யும் அதிகாரம் பெற்றிருந்தவர் ஷிஹாப் தங்கள். கவர்னர்,அமைச்சர், எம்.பி போன்ற அரசியல் அதிகாரங்களில் பங்குபெறும் வாய்ப்பு இருந்தும் அதிலிருந்தெல்லாம் ஒதுங்கியே இருந்தவர் ஷிஹாப் தங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அவரது உடல் இன்று மாலை 3 மணியளவில் பாணக்காடு ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் அடக்கம் செய்யபடுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1/8/09

பாலைவனத் தூது ஆகஸ்ட் '09

0 கருத்துகள்
பக்கம் 1 - சர்வதேச பொருளாதார வீழ்ச்சி : இஸ்லாமிய பொருளாதரத்தை நோக்கி உலகம்
பக்கம் 2 - நூருத்தீன் ஜெங்கி (ரஹ்) - தொடர் -3

பக்கம் 3 - உலக அகதிகள் தினம்

பக்கம் 4 - நீதித்துறையின் இருமுகங்கள்

ஈராக்கிலிருந்து ஆஸி. துருப்புகள் முற்றிலும் வாபஸ்

0 கருத்துகள்
ஈராக்கிலிருந்து ஆஸ்ட்ரேலியா படைகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டில் புகுந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவியாக ஆஸ்ட்ரேலியப் படையைச் சேர்ந்த 2,000 வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில்,படை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ஈராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆஸ்ட்ரேலியப் படைகள் கடந்த ஆண்டிலிருந்து வாபஸ் ஆகத் தொடங்கின.
இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனைத்து ஆஸ்ட்ரேலிய வீரர்களும் ஈராக்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடைசியாக எஞ்சியிருந்த 12 ஆஸ்ட்ரேலிய வீரர்களும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பாக்தாத்திலிருந்து ஆஸ்ட்ரேலிய விமானப்படை விமானம் மூலமாக புறப்பட்டு ஆஸ்ட்ரேலியா வந்து சேர்ந்ததாக ஆஸ்ட்ரேலிய இராணுவ தளபதி ஜெனரல் மார்க் கெல்லி இன்று தெரிவித்தார்.

மாலேகன் குண்டுவெடிப்பு: பெண் தீவிரவாதி (துறவி) உள்ளிட்டோர் மீதான தீவிரவாத தடை சட்டப் பிரயோகம் ரத்து

0 கருத்துகள்
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவல்துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (தீவிரவாத தடைச் சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நாசிக் தனி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாசிக் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 11 பேர் மீதும் மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தீவிரவாதத் தடுப்புச் சட்டமாகும். கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டது இது.
இந்த நிலையில் பெரும் திருப்பமாக தனி நீதிமன்றம், திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்று கூறி அதை ரத்து செய்து விட்டது. மேலும், சாதாரண கோர்ட்டில் வழக்கமான வழக்காக இதை விசாரிக்குமாறும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் திருப்பத்தால் பிரக்யா உள்ளிட்டோர் சாதாரண குற்றவாளிகள் போலாகி விட்டனர். எனவே அவர்களால் தற்போது ஜாமீனில் வெளிவரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் பிரக்யாவின் தந்தை சந்தர்பால் சிங், தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினருக்கு இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டி குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவர் மீது அந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டுமானால், அந்த நபர் ஏற்கனவே இரு முக்கிய குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரக்யா உள்ளி்ட்டோர் மீது அதுபோன்ற குற்றச்சாட்டு இல்லாததைக் காரணம் காட்டியே தற்போது நாசிக் சிறப்பு நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
நாசிக் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மகாராஷ்டிர காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இந்து தீவிரவாதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த வழக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்காகும். இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையிலான குழுதான் மிக துல்லியமாக விசாரித்து பிரக்யா உள்ளிட்டோரைக் கைது செய்தது.
வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களையும் கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியிருந்தது.
வழக்கு முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் துரதிர்ஷ்டவசமாக மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
கர்கரே போன பின்னர் மாலேகான் வழக்கு தொய்வு நிலையை நோக்கிப் போகத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil

இஸ்ரேலுடனான உறவுக்கு சாத்தியமில்லை சவூதி அரேபியா திட்டவட்டம்

0 கருத்துகள்
ஃபலஸ்தின் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான பேச்சு வார்த்தைக்கு உதவுவதற்காக இஸ்ரேலுடன் உறவை பேண அமெரிக்கா விடுத்த அழைப்பை சவூதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுபற்றி சவூதி இளவரசர் சவூத் அல் ஃபைசல் கூறுகையில் "இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள அனைத்து ஃபலஸ்தீன் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை இஸ்ரேலுடனான எந்த உறவுப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. மேலும் தற்சமய பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை பலப்படுத்துவது ஆகியன நிரந்தர அமைதிக்கு வழி வகுக்காது" என்றார்.

செய்தி:அல்ஜஸீரா

ஆப்கானிஸ்தானில் சிவிலியன் மரணம் அதிகரிப்பு:ஐ.நா அறிக்கை

0 கருத்துகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடத்தைக்காட்டிலும் இந்த வருடம் சாதாரண மக்கள் கொல்லப்படுவது 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் முதல் 6 மாதங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு பாகமும் வெளிநாட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
தலிபானுக்கெதிரான தாக்குதலில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதையடுத்து எழுந்த எதிர்ப்பினைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. போராளிகள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அரசு அலுவலகங்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மே மாதம் மட்டும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 261 பேர் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம் என்பதால் வீட்டுமனை மனை வழங்க மறுத்ததாக பாலிவுட் நடிகர் புகார்:வீட்டு வசதி கழகத்திற்கு நோட்டீஸ்

0 கருத்துகள்
மும்பை:முஸ்லிம் என்பதால் வீட்டு மனை வழங்க மறுத்ததாக கூறும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷிமியின் புகாருக்கு விளக்கம் கேட்டு மாநில சிறுபான்மை கமிஷன் மும்பை வீட்டு வசதி கழகத்திற்கு நோட்டீஷ் அனுப்பியுள்ளது.
மும்பை பாலி ஹில் பகுதியில் வீட்டுமனை வாங்க தடையில்லா சான்றிதழ் கேட்டு பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷிமி வீட்டுவசதி கழகத்தில் மனு செய்திருந்தார். ஆனால் சான்றிதழ் வழங்க இயலாது என் வீட்டு வசதி கழகம் மறுத்துள்ளது. வீட்டுவசதி கழகத்தின் இந்த செயலுக்கு காரணம் தான் முஸ்லிம் என்பதால்தான் என்று ஹிந்தி படத்தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஹாஷிமி தெரிவித்தார்.
இடத்தின் உரிமையாளர் தனக்கு மனை வழங்க சம்மதித்ததை சுட்டிக்காட்டியபிறகும் வீட்டு வசதி கழகம் மறுப்பு தெரிவித்தது மத துவேசம் என்று ஷாஷிமி தெரிவித்தார். மகேஷ் பட் கூறுகையில், "மத அடிப்படையில் வேற்றுமை பாராட்டுவது இந்த நாட்டைபீடித்துள்ள கொள்ளை நோய். இது மிகவும் கவலைக்கிடமானது. சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளானபின்னும் மதரீதியான வைரஸ் பாலி ஹில் போன்ற பகுதிகளில் இன்னும் உள்ளது." என்றார்.
ஹாஷிமி சிறுபான்மை கமிஷனிடம் இது பற்றி புகார் அளித்ததைத்தொடர்ந்து கமிஷன் வீட்டு வசதி கழகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இது பற்றி வீட்டு வசதி கழகம், "நடிகர் என்பதால் முன்னுரிமை அளிக்க இயலாது. மேலும் கழகத்தின் தலைவர் ஊரில் இல்லை" , என்று கூறியுள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒரு சிலரைத்தவிர அனைவரும் ஹிந்துக்கள் என்றும் ஒரு முஸ்லிம் கூட இதில் உறுப்பினராக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நடிகருக்கே இந்த கதியென்றால் சாதாரண முஸ்லிமின் நிலை?.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

குவாண்டனாமோ சிறையிலிருக்கும் வயது குறைந்த கைதியை விடுதலைச்செய்யப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

0 கருத்துகள்

வாஷிங்டன்:கைதுச்செய்யும்பொழுது 12 வயதே நிரம்பிய ஆப்கானிஸ்தானைச்சார்ந்த‌ முஹம்மது ஜவ்வாதை குவாண்டனாமோ சிறைக்கூடத்திலிருந்து விடுதலைச்செய்யப்போவதாக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.
ஜவாதை சிறையில் அடைத்திருப்பது நீதியில்லை என்று ஏற்க‌ன‌வே அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.ஆனால் விசாரணை நடந்துக்கொண்டிருப்பதால் தற்போது விடுதலைச்செய்ய இயலாது என்று அரசு வழ‌க்கறிஞர் வாதிட்டிருந்தார். ஜவாதை விடுதலைச்செய்வது பிறக்கைதிகளின் விடுதலைக்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜவாதிற்கெதிரான விசாரணை முடிய இன்னும் 3 வாரங்களிலிருப்பதால் விடுதலை தாமதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2002 டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் வைத்துதான் ஜவாதை கைதுச்செய்தனர் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் பயணம் செய்த ஜீப்பிற்கு நேராக கிரானைடை எறிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு பதிவுச்செய்யப்படவில்லை. கடுமையான சித்திர‌வ‌தைக‌ளுக்குட்ப‌டுத்தி குற்றம் சம்மதிக்கவைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஜவாதின் குற்ற சம்மதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராணுவ நீதிமன்றநீதிபதி தீர்ப்புக்கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்