Labels
11/9/09
துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு
நேரம்
2:36 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி
நேரம்
2:27 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஷொஹ்ரபுதீன் சேஹ் கொலை, விரிவான விசாரணை தேவை:சுப்ரீம் கோர்ட்
நேரம்
2:22 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
புதுடெல்லி:குஜராத்தில் வியாபாரம் செய்து வந்த சொஹ்ரபுதீன் சேஹ் என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச்செய்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.இது சம்பந்தமாக மாநில அரசு நடத்திய விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று விமர்சித்த நீதிமன்றம் இக்கொலைவழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிபதிகளான தருண் சாட்டர்ஜி,அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலையை தெளிவுப்படுத்தியது. சி.பி.ஐ விசாரணை கோரி ஷொரஹ்புதீனின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கும்பொழுதுதான் இவ்வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று சுப்ரீம் கோர்ட் தனது அபிப்ராயத்தை தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி டி.ஜி.பி வன்சார தலைமையிலான போலீஸ் குழு ஒன்று ஷொரஹ்புதீன் சேக்கை சுட்டுக்கொன்றது. போலீசுடன் நடைபெற்ற மோதலில் ஷொரஹ்புதீன் கொல்லப்பட்டதாக இட்டுக்கட்டிய குஜராத் போலீஸ் சாட்சியை அழிப்பதற்காக அவருடைய மனைவியை கொன்று தீவைத்துகொழுத்தியது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
10/9/09
இந்த வருடம் 320 ஃபலஸ்தீன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்:இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு
நேரம்
10:03 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
1 கருத்துகள்
ஜெருசலம்: இந்த வருடத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 1387 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 320 பேர் 16 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் பிரபல இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பைதுதுஸ்ஸாலோம் கண்டறிந்துள்ளது.திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததருக்காக காத்திருக்கும் பரிசுக்குவியல்கள்
நேரம்
9:55 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது
நேரம்
9:09 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமாக நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.
ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.
நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.
மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.
கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.
2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்
மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
செய்தி:தேஜஸ்
நேரம்
8:56 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
அஹ்மதாபாத்: கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் உட்பட நான்குபேரை சுட்டுக்கொன்றது போலி என்கவுண்டர்மூலம்தான் என்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிபதி தமாங் அளித்த விசாரணை அறிக்கைக்கு குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது.
நீதிபதியின் அறிக்கையை பரிசோதித்து சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிவிசாரணை அறிக்கையை தடைச்செய்யவேண்டும் என்று குஜராத் மாநில அரசு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது.நீதிபதி கல்பேஷ் ஜவ்ஹரிதான் இத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த மாதம் 30 ஆம்தேதி அடுத்த விசாரணை நடைபெறும்.
செய்தி:தேஜஸ்
இஷ்ரத் தீவிரவாதி என்று பொய்யான அபிடவிட்-சிக்கலில் மத்திய அரசு
நேரம்
8:48 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
அகமதாபாத்: இஷ்ரத் ஜெஹான் விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில் இஷ்ரத்தை தீவிரவாதி என மத்திய அரசு வர்ணித்துள்ளது, தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த இஷ்ரத், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீசன் ஜோஹர் ஆகியோரை கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அகமதாபாத் அருகே வைத்து குஜராத் போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.
நால்வரும் தீவிரவாதிகள், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்கள், மோடியை கொல்லும் திட்டத்துடன் வந்தனர் என்று கதையும் அளந்து விட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த நீதி விசாரணையில், அனைத்தும் நாடகம் என்று தெரியவந்தது.
இஷ்ரத் உள்ளிட்ட கொல்லப்பட்ட நான்கு பேருமே அப்பாவிகள் என்றும், இந்தக் கொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை, காவல்துறை அதிகாரி வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகள்தான் இதற்குப் பொறுப்பு என்று விசாரணை நடத்திய நீதிபதி தமங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மோடி அரசு வழக்கம் போல அப்படியே நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் இஷ்ரத் தொடர்பாக மத்திய அரசு செய்த குழப்பம் இப்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த மாதம் 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் மணி என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இந்த என்கவுண்டர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கோரி இஷ்ரத்தின் தாயார் தாக்கல் செய்திருந்த வழக்கில், மத்திய உள்துறை இந்த அபிடவிட்டைத் தாக்கல் செய்தது.
அதில் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேருமே தீவிரவாதிகள் தான், லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அபிடவிட்டில் கூறியிருப்பதாவது...
மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சிகளின் கூற்றுப்படி, பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவேத்துக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக முஸாமில் என்பவருடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். குஜராத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற முஸாமில் திட்டமிட்டு வந்தார்.
ஜாவேத்திடம் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவர் ஒரு ரவுடியும் ஆவார். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அபிடவிட்டில் தீவிரவாதி என்று நான்கு பேரையும் வர்ணித்துள்ள மத்திய உள்துறை அதுதொடர்பான ஆதாரங்களை அதில் தெரிவிக்கவில்லை. மாறாக ஜாவேத்துக்கும், இஷ்ரத்துக்கும் என்ன தொடர்பு, ஜாவேத்தின் தந்தை கோபிநாத பிள்ளை மற்றும் இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்காதது ஆகியவை குறித்து விரிவாக அறிக்கையில் உள்ளது.
அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீசன் ஆகியோரை பாகிஸ்தானியர்கள் என அபிடவிட்டில் மத்திய உள்துறை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் எப்படி இந்தியாவுக்குள் ஊடுறுவினார்கள். ஜாவேத்துடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். குஜராத்தில் என்ன மாதிரியான நாச வேலைகளுக்குத் திட்டமிட்டனர் என்றும் அபிடவிட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளது குஜராத் அரசு. இந்த மனுவின் நகலை அனைத்து மீடியா அலுவலகங்களுக்கும் குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த அபிடவிட் தவறானது, இதைத் தாக்கல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ராஜேந்திர குமார் என்ற ஐ.பி.எஸ். அதிகாரிதான் இந்த அபிடவிட்டை தயாரிக்க உதவினார் என்று தெரிய வந்துள்ளது. இவர் 2002 முதல் 2005ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் மாநில உளவுப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது டெல்லியில் உள்ள ஐபி தலைமையகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார்.
குஜராத் என்கவுண்டர்கள் தொடர்பான பல்வேறு உளவுத் தகவல்களை தகவல்களை ராஜேந்திர குமார் அலுவலகம்தான் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், மத்திய உள்துறை தாக்கல் செய்துள்ள இந்த அபிடவிட், 2004ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீ்ழ் பணியாற்றிய ஐபி அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாகும். எனவே இதைத் தயாரித்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
போலி என்கவுண்டர்:காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை தேவை:இஷ்ரத் குடும்பத்தினர் கோரிக்கை
நேரம்
8:24 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
மும்பை: 2004 ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சுமத்தி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை சுட்டுகொன்றது போலி என்கவுண்டர் என்று நீதி மன்ற விசாரணை கூறிய சூழலில் குற்றவாளிகளான காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இர்ஷத் ஜஹானின் குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.9/9/09
தேசிய மகளிர் முன்னணி (National Womens Front) ஏர்வாடி கிளை நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
நேரம்
4:03 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
1 கருத்துகள்
இந்த அமைப்பின் ஏர்வாடி கிளை சார்பாக பெண்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் வகையில் ஏர்வாடி 6 வது தெரு மைதானத்தில் 06-09-09 அன்று மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில தேசிய மகளிர் முன்னணியின் தலைவி S.பாத்திமா ஆலிமா தலைமை தங்கினார். 4வது தெருவை சார்ந்த சகோதரி மும்தாஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஏர்வாடி கிளை பொறுப்பாளர் சகோதரி ஸைபுன்னிசா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில செயலாளர் பாத்திமா கனி (மதுரை) சிறப்புரை ஆற்றினார். ஏர்வாடி அல் ஹூதா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் மும்தாஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து உரை ஆற்றினார்.தாருல் ஹிக்மா பெண்கள் அறிவகத்தின் ஆசிரியை ஆயிசா நிசாராவின் நன்றி உரைக்கு பின் கழந்து கொண்ட அனைவரும் நோன்பு திறந்தனர்.இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் சகோதரத்துவ வஞ்சையுடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.
செய்தி : நமது செய்தியாளர்
மதமாற்றம் : முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக வாக்குமூலம் அளிக்க மாணவிகள் மறுப்பு
நேரம்
9:04 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
பத்தணம்திட்டை: கேரள மாநிலம் பத்தணம்திட்டை என்ற இடத்திலுள்ள செண்ட் ஜான்ஸ் கல்லூரியில் கடைசிவருடம் எம்.பி.ஏ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் இஸ்லாத்தை தழுவியதைத் தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்க திட்டமிட்ட சில அதிகாரிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
குற்றம்சுமத்தப்பட்ட ஷஹன்ஷாவும்,சிராஜுதீனும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானபொழுது இருவரும் செய்த குற்றம் என்ன என்று மாணவிகளோடு நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு மாணவிகள் எந்த பதிலும் கூறாது மெளனம் சாதித்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜரான இளைஞர்களுக்கு தீவிரவாதத்தொடர்பு இருப்பதாகவும் அதைப்பற்றி அரசு விசாரித்துவருவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அன்ஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று மாணவிகள் மெளனம் சாதித்ததால் அரசுதரப்பு மற்றும் காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட மலையாள மனோராமாவின் செயலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மாணவிகளை பயமுறுத்தி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் சில முக்கிய போலீஸ் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவரும் செயல்படுவதாக ஏற்கனவே தேஜஸ் செய்தி வெளியிட்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றம் சுமத்தி கட்டாயமதமாற்றம் செய்ததாக பொய்வழக்கு போடுவதற்கு காவல்துறை முயற்சி எடுத்தது. இதற்கு உதவியாக சில பத்திரிகைகளும் பொய்க்கதைகளை கிளப்பிவிட்டன.
கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கர என்ற இடத்திலிலுள்ள கழியோத் பங்களாவில் பினோ ஜேக்கப், திருவனந்தபுரம் பேரூர்கடை என்ற இடத்திலிலுள்ள இந்திரா நிவாஸில் வசிக்கும் மிதுலா ஆகிய மாணவிகள்தான் இஸ்லாத்தை பற்றி சுயமாக படித்த பிறகு இஸ்லாத்தை மனப்பூர்வமாக தங்கள் வாழ்க்கைநெறியாக்க தயாரானார்கள்.
இதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவரான ஷாஹன்ஷாவுடனான நட்பு இஸ்லாத்தை குறித்து அதிகமறிய இவர்களுக்கு உதவியது. தொடர்ந்து தாங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்ய இவர்கள் முயன்றபொழுதுதான் இவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் பயமுறுத்தி பலாத்காரமான முறையில் அழைத்துச்சென்றனர்.
மிதுலாவின் உறவினரான பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவரின் தலையீடும், மாணவிகளின் உறவினரான ஐ.ஜி.ராங்கிலிலுள்ள போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரி ஆகியோரின் தலையீட்டினாலும் இச்சம்பவம் சர்ச்சையானது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
என்னை எவரும் மதமாற்றவில்லை, மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் – ஸில்ஜா ராஜ்
நேரம்
8:33 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
கடந்த சில வாரங்களாக கேரள பத்திரிகைகளில் விவாத்ததைகிளப்பிய செய்தி என்னவெனில் சிலர் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யும் பணியை மேற்க்கொள்வதாகவும் அவர்கள் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.
ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா பாசிச அமைப்பும் முஸ்லிம்கள் லவ்ஜிஹாதை துவக்கியுள்ளதாக பிரச்சாரம்செய்தது.
பத்திரிகைகளின் இந்த சூடான செய்திகளுக்கும் ஹிந்து ஐக்கியவேதியின் லவ் ஜிஹாதிற்கும் காரணமானவராக கருதப்படும் ஸில்ஜா ராஜ் என்பவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சத்தியம் என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்.
ஸில்ஜா ராஜ் கர்நாடகா மாநிலத்தில் சாமராஜ் நகர் சதி ரோடில் அமைந்துள்ள பங்கஜ் என்ற பேக்கரி உரிமையாளரான செல்வராஜின் மகள். இவர் கண்ணூரில் சிற்றாரிக்கடையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வந்தபொழுது டாக்ஸி ட்ரைவரான அஸ்கருடன் காதல் ஏற்படுகிறது. சிவில் என்ஞ்சினியரிங் மாணவியான ஸில்ஜா டிப்ளமோ முடித்தவுடன் கம்ப்யூட்டர் படிக்கும் காலக்கட்டத்தில் அஸ்கரை திருமணம் முடிக்க முடிவெடுக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி பெற்றோரை அறிவிக்காமல் அஸ்கரை சந்திக்க அவர் வேலைபார்க்கும் கோட்டயம் அருகிலிருக்கும் ஈராட்டுப்பேட்டை என்ற ஊருக்கு வந்துள்ளார். வரும் வழியில் தனது தாயாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸில்ஜாவின் உறவினர்கள் ஈராட்டுப்பேட்டைக்கு வந்து அஸ்கர் தன்னை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளனர். இவர் மறுக்கவே வழக்கறிஞருடன் வந்து அஸ்கரை திருமணம் முடிக்கும் முடிவை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கும் ஸில்ஜா அசைந்துக்கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து இச்செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிகை வியாபாரிகளும் ஹிந்து ஐக்கியவேதியும் விவாதத்தை கிளப்பி விட்டன. இதுபற்றி பேட்டியளித்த ஸில்ஜா கூறுகையில், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் எந்தவித வற்புறுத்தலும் நிர்பந்தமும் இல்லை. மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டேன். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சரியாக விசாரிக்காமல் தேவையற்ற சர்ச்சைகளுக்கு என்னையும் என்னுடைய கணவரையும் உள்ளாக்கிய ஹிந்து ஐக்கியவேதி மீது சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்துவருகிறேன். எனக்கு ஒன்றரை வருடமாக அஸ்கரை தெரியும். அவருக்கு எந்தவொரு தீவிரவாத செயலுக்கும் சம்பந்தமில்லை. நான் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அல்ல. ஈராட்டுப்பேட்டைக்கு வந்தபிறகே நான் இஸ்லாத்தை பற்றி படிக்கவேண்டும் என்று அஸ்கரிடம் கூறினேன்.பின்னர் அஸ்கர் என்னை வாரிசேரி என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் என்னை சேர்த்தார். மேஜரான எனக்கு எந்த மதத்தின் அடிப்படையில் வாழ்வதற்கும் விரும்பும் நபரை திருமணம் முடிப்பதற்கும் சுதந்திரமுண்டு. இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஹிந்து ஐக்கியவேதி எனக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
8/9/09
இஷ்ரத் ஜஹான் உட்பட நான்குபேர் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில் – அஹ்மதாபாத் நீதி மன்றம்
நேரம்
8:38 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
அஹ்மதாபாத்:குஜராத்தில் இஷ்ரத் ஜஹான், கேரளாவைச்சார்ந்த ஜாவித் குலாம் என்ற பிராணேஷ்குமார் உட்பட 4 பேர் கொல்லப்பட்டது போலிஎன்கவுண்டரில் என்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் கூறியுள்ளது.செய்தி:தேஜஸ்
குறிப்பு:அன்றே சொன்னது விடியல் வெள்ளி மாத இதழ்
ஜியாவை கொன்றது அமெரிக்கா-கூறுகிறார் மாஜி ஐஎஸ்ஐ தலைவர்
நேரம்
8:34 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவும், அதிகாரத்தைப் பிடிக்க விரும்பிய சில பாகிஸ்தானியரும் இணைந்துதான் 1988ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக்கை திட்டமிட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் உளவுப் பிரிவு (ஐஎஸ்ஐ) இயக்குநரும், ஐஎஸ்ஐ முன்னாள் தலைவருமான இம்தியாஸ் அகமது கூறியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு இம்தியாஸ் அளித்துள்ள பேட்டி...
ஜியா உல் ஹக்கைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. அந்த பாகிஸ்தான் சக்திகள், அரசியல் அதிகாரத்தை ஜியாவிடமிருந்து பறிக்க விருப்பம் கொண்டிருந்தவை ஆகும். இவர்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
இந்த நிலையில்தான் ஜியா உல் ஹக்கை அமெரிக்காதான் கொன்றது என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இம்தியாஸ் அகமது.
இதுகுறித்து ஜியாவின் மகன் இஜாஸ் உல் ஹக் கருத்து தெரிவிக்கையில், விமான விபத்து குறித்து முழுமையான கிரிமினல் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விமான விபத்து குறித்த விசாரணையை நடத்த விடாமல் அமெரிக்கா தடுத்து விட்டது. எனது தந்தையின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை தொலை தூரங்களுக்கு மாற்றி விட்டனர்.
விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரை சந்தித்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.
2008ல் உலகிலேயே அதிக அளவில் ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா
நேரம்
8:17 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
வாஷிங்டன்: உலகப் பொருளாதாரம் ஒடிந்து போன நிலையிலும் கூட அமெரிக்காவின ஆயுத விற்பனையில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.2008ம் ஆண்டு அமெரிக்கா மொத்தம் 30.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த மொத்த ஆயுத விற்பனையின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அளவில் நடந்த ஆயுத விற்பனையில் மூன்றில் 2 பங்கை அமெரிக்கா மட்டும் மேற்கொண்டுள்ளது.
தனது வழக்கமான கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிடம் பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா போன்ற சில நாடுகளுக்கும் கூட பெருமளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனையில் மண்ணையும் அள்ளிப் போட்டுள்ளதாம் அமெரிக்கா.
வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய ஆயுதங்களை வழங்குதல் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்தான் இந்த விவரங்கள் உள்ளன. இதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அதேபோல மொராக்கோ நாட்டுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்களை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
7/9/09
பாலைவனத் தூது செப்டம்பர் '09
நேரம்
4:14 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
நிஜங்கள்...புதிய தேசத்தின தேடலாய்.செப்டம்பர் '09
நேரம்
3:57 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
மோடி அரசுக்கு விருது வழங்கக்கூடாது:அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தல்
நேரம்
9:16 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் FDI(Foreing Direct Investement) என்ற பத்திரிகை இந்த ஆண்டிற்கான Asian Personality Award என்ற விருதை குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திர மோடிக்கு வழங்கப்போவதாக அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானவுடன் கொதித்துப்போன மனித உரிமை அமைப்புகள் FDI பத்திரிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு 2002 ஆம் ஆண்டு 20 ஆயிரம் முஸ்லிம்களை நரபலிக்கொடுத்த நரேந்திரமோடிக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பை போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.
மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத்தொடர்ந்து விருது அறிவிப்பில் திருத்தம் செய்த FDI பத்திரிகை இவ்விருதை குஜராத் மாநில அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் FDI யின் இந்த அறிவிப்பை வரவேற்ற அதே வேளையில் குஜராத் அரசிற்கு FDI விருது வழங்க தீர்மானித்துள்ளதை திரும்பபெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு மோடி தலைமையில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தெருக்களில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன அழித்தொழிப்பிற்கு இரையானார்கள்.சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முஸ்லிம்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்திய தேசம் சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை கண்டிராத இந்த கொடூரத்திற்கு முக்கிய சூத்திரதாரி நரேந்திரமோடி என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமான உண்மை.
கடந்த 7 வருடங்களாக இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியும் சட்டத்தையும் நீதித்துறையும் ஏமாற்றிவந்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் குஜராத் இனஅழித்தொழிப்பிற்கு காரணமான 64 நபர்கள் மற்றும் மோடியிடமும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு(S.I.T) உத்தரவிட்டது. "மோடியின் கண்காணிப்பின் கீழில்தான் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப்படுகொலைகள் நிகழ்ந்தது.இவ்வளவு அக்கிரமங்கள் நிகழ்ந்தபிறகும் மோடி தொடர்ந்து குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்துவருகிறார். இந்நிலையில் விருதினை மோடிக்கு பதிலாக குஜராத் அரசிற்கு வழங்குவது என்பது ஹிட்லருக்கு பதிலாக நாசி இயக்கத்திற்கு விருது வழங்குவது போன்றதாகும்" என்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் ரஷீத் அஹ்மத் கூறுகிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "2002 குஜராத் இன அழித்தொழிப்பில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் முகாமில் அல்லலுற்று வருகின்றனர். இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான வழக்கில் மோடி தலைமையிலான குஜராத் அரசு தொடர்ந்து பலத்தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்" .
2005 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு குஜராத்தில் மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாதிகள் நட்த்தைய முஸ்லிம் இன படுகொலைகளை காரணம் காட்டி நரேந்திரமோடிக்கு விசா தர மறுத்தது.சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்வாதிகள் மத ரீதியான பாரபட்சத்தை கைவிடாவிட்டால் மீண்டும் 2002 இனப்படுகொலை திரும்பவும் நடப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் இது இந்தியாவின் மத சகிப்புதன்மையற்ற நிலையை படம்பிடித்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளது.
ஐ.நா சபையால் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைப்பற்றிய அறிக்கையை தொகுத்தளிக்க நியமிக்கப்பட்டுள்ள அஸ்மா ஜஹாங்கீர் கூறுகையில் 2002 குஜராத் படுகொலைகளுக்குபின் தொடர்ந்து நடைபெற்றுவரும் கடும் விளைவுகளை முஸ்லிம் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் தன்னிடம் பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். மோடி தலைமையிலான குஜராத் அரசு வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டாலும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் டியொன்னே புன்ஷா மற்றும் தி மின்டின் ஸலீல் திருப்பதி ஆகிய பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமாக மேற்க்கொண்ட சுதந்திரமான ஆய்வறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால் குஜராத்தில் மோடி முதல்வராக பதவியேற்றபின்புதான் வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்திற்கு வருவதில் தொடர்ந்து சரிவை சந்தித்துவருவதாக குறிப்பிடுகின்றனர். இதனை அமெரிக்காவில் 10 கிளைகளைக்கொண்ட அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஃபலஸ்தீனர்களை கடத்திச்சென்று உறுப்புகளைதிருடும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா
நேரம்
9:11 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
வாஷிங்டன்:ஃபலஸ்தீனர்களை கடத்திச்சென்று அவர்களின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேலின் அராஜகத்தை வெளிக்கொண்டுவந்த ஸ்வீடன் நாட்டுப்பத்திரிகையையும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வீடன் அரசையும் அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது.இஸ்ரேலின் இந்த கொடுங்கோன்மைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா இந்த செய்தியின் பின்னணியில் யூத விரோதம்தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு கமிஷன் தலைவரும், அமெரிக்க செனட்டருமான பென் கார்டின் கூறுகையில், ஆஃப்டன்பிளேடட் என்ற ஸ்வீடன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இனவெறிதான் முன்னிறுத்தப்படுகிறது என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஸ்வீடன் பத்திரிகையில் வந்த செய்திக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்வீடன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆஃப்டன் பிளேடட் பத்திரிகையில் சுதந்திர செய்தியாளரான டொனால்ட் போஸ்ட்ரம் They Plunder the organs of our sons என்ற செய்திக்கட்டுரையை வெளியிட்டிருந்ததற்கு இஸ்ரேல் அதிகாரிகள் அந்நாட்டு பிரதமரிடம் இச்செய்திக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டினர். ஆனால் ஸ்வீடன் பிரதமர் ஃப்ரட்ரிக் ரீன்ஃபெல்ட் பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறி இச்செய்திக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
செய்தி:தேஜஸ்
6/9/09
இந்தியாவில் அமீரத்தின் சார்பாக ரமளான் உணவு வினியோகிக்கப்பட்டது
நேரம்
11:52 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும்,செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்குவதுமே.
உலகம் முழுவதும் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்கும் இவ்வேளையில் அமீரகமும் உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களை தார் அல் பிர் போன்ற அமைப்புகள் கண்டறிந்து தான தர்மங்கள் வழங்கி வருகிறது.
இவ்வருடம் இந்தியாவின் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள 720 கிராமங்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து ரமளான் உணவுகளை சேக் முஹம்மத் மனைவி வழங்கியதாக WAM என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
News Source : WAM News & Two circle
மோடி அரசால் அநியாயமாக 5 வருடம் சிறைவாசம் அனுபவித்த மவ்லான நஸீருத்தினுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு.
நேரம்
11:49 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவைத்ததாக குற்றஞ்சுமத்தி 5 வருடமாக கொடூரமான முறையில் மோடி அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹைதராபாத்தைச்சார்ந்த மவ்லான நஸீருதீனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மோடி அரசின் இத்தகைய அநீதத்தை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.கடந்த 7 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு நிலுவையிலிருந்தது.3 முறை நீதிமன்றம் மோடி அரசை பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டபிறகும் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
(செப்.5) உச்சநீதிமன்றத்தில் மவ்லானாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.உச்சநீ
மவ்லானாவிற்காக வாதாடிய வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் வாதாடுகையில்,”குஜராத் அரசு தொடர்ந்து இவ்வழக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவிற்கு மறுத்துவருகிறது,இது ஜாமீன் வழங்குவதற்கு பெருந்தடையாக இருக்கிறது.குஜராத் அரசின் இந்நடவடிக்கை ஒரு இந்தியபிரஜைக்கான உரிமையை மறுப்பதாகும். மேலும் குஜராத் அரசால் மவ்லானா சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிப்பிற்கு சதி திட்டம் தீட்டினார் என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. 2006 ஆம் ஆண்டே இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசிற்கு வழிகாட்டுதல் வழங்கியும் அதனை நிறைவேற்ற குஜராத் அரசால் நிறைவேற்ற இயலவில்லை.மேலும் அடிக்கடி அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்படுவதால் இவ்வழக்கு விரைவில் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.” என்று கூறிய ஜெய்ஸ்வால் மவ்லானாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறி டுமையாக எதிர்ப்புதெரிவித்தார் குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர்.ஆனால் இவ்விஷயத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொண்ட நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞரிடம்,”ஏற்கனவே 6 வருடங்கள் விசாரணை இல்லாமலே கழிந்துவிட்டது.அவருடைய வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் நீங்கள் அவருடைய வாழ்நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டுதான் வெளியே விடுவிப்பீர்கள் போலுள்ளது”.என்று கூறினார்.
தீவிரவாதத்தின் பெயரால் நிர்கதியாக்கப்பட்ட குடும்பம்
மவ்லானா நஸீருதீன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச்செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட் மவ்லானாவிற்கு ஜாமீன் வழங்கியதற்கு “இது பிற கைதிகளுக்கும் ஜாமீன் மனு சமர்ப்பிக்க முன்னுதாரணம் ஆகிவிடும்”என்று குஜராத் அரசு வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள்,”நீதிமன்றம் மூடப்பட்டால் என்ன ஆகும்” என்று கேள்வியை விடுத்தார்கள்.
இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற ஹைதரபாத்தை தலைமையிடமாக்க்கொண்ட சிவில் லிபர்டீஸ் கண்காணிப்புகுழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மதுகான் twocircles என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில்,”இத்தீர்ப்பு மவ்லானாவின் குடும்பத்திற்கு நிம்மதியைதரும். குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான நம்பிக்கையைத்தருவது உச்சநீதிமன்றம்தான்.மேலும் முஸ்லிம்களுக்கு குஜராத் நீதிமன்றங்களில் நீதிகிடைக்காது”என்று கூறினார்.
மவ்லானாவின் மகன்கள் 3 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தபடுத்தப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்பொருமு
செய்தி:Twocircles.net
துபாய் 13-வது புனித குர்ஆன் விருது நிகழ்ச்சியில் சிறந்த இஸ்லாமிய ஆளுமைத்தன்மைக்கான(Islamic Personality)விருது பெறும் முராத் ஹோப்மென்.
நேரம்
11:45 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
கிறிஸ்தவமதத்தலைவர்களுக்கு முஸ்லிம் அறிஞர்களால் அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு எழுதப்பட்ட “எங்களுக்கும் உங்களுக்குமிடையேயான பொதுவான வார்த்தை”(A Common Word Between Us and You”)என்ற கடித்த்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர் ஹோப்மென். தற்போது துருக்கியில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.மேலும் இவர் ஜெர்மனி மத்திய முஸ்லிம் கவுன்சிலின் கெளரவ ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
நமது செய்தியாளர்.
5/9/09
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை நடத்திய கூட்டுக்கொலை
நேரம்
8:10 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
1 கருத்துகள்
காபூல்:தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் சிவிலியன்கள் உள்பட 90 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.ஜஸ்வந்த் புத்தகத்துக்கு மோடி விதித்த தடை நீக்கம்
நேரம்
8:08 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
புத்தகத்தை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
ஜின்னா குறித்து சமீபத்தில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது புத்தகத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை தரக்குறைவாக எழுதியிருப்பதாகவும், அது தேச ஒற்றுமையை குலைத்து விடும் என்று கூறி அந்த புத்தக விற்பனைக்கு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி தடை விதித்தார்.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் வழக்கு தொடர்ந்தார். அதை நீதிபதி கேஎஸ் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூவர் பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் தடையை ரத்து செய்து இன்று அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
புத்தக விற்பனை மீது விதிக்கப்பட்டுள்ள தடை அடிப்படை உரிமைகளை தடுக்கும் வகையில் இருக்கிறது. இந்த புத்தகம் எந்த வகையில் தேச நலனையும், ஒற்றுமையையும் பாதிக்கும் என்பதை அரசு விதித்த தடை நோட்டீஸ் விளக்கவில்லை. தடை உத்தரவு வழங்கும் முன் அரசு சரியாக ஆலோசிக்கவில்லை என நீதிமன்றம் கருதுகிறது. புத்தக விற்பனை மீதான தடையை நீக்க உத்தரவிடுகிறது. அதே நேரத்தில் மாநில அரசு புதிய நோட்டீஸ் அனுப்ப விரும்பினால் அதை செய்யலாம் என்று கூறினர்.
தீர்ப்பு குறித்து ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் திரில்லாக இருக்கிறது. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. புத்தக விற்பனைக்காக இனி யாரும் நீதிமன்றம் போக வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது. நான் யாரை பற்றியும் தவறாக கூறவில்லை என்றார்.
3/9/09
ஒய்.எஸ்.ஆர் – மக்களின் நாடித்துடிப்பை அறிந்த டாக்டர்
நேரம்
10:39 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
ஹைதராபாத்:யதுகூரி சன்டிண்டி ராஜசேகர ரெட்டி படித்தது மருத்துவம் என்றாலும் மக்களின் நாடித்துடிப்பை புரிந்த முதல்வராக விளங்கினார்.ஆந்திரப்பிரதேச முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!சடலங்கள் மீட்க்கப்பட்டதாக தகவல்
நேரம்
11:38 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்

முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் பேரா கமாண்டர்கள் இறக்கி விடப்பட்டு அவர்கள் ஹெலிகாப்டரை நெருங்கினர். விபத்தில் மரணமடைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் தலைமை செயலர் சுப்பிரணமியன், தலைமை பாதுகாப்பு அலுவலவர் ஏ.எஸ்.சி., வெஸ்லி, பைலட் எஸ்.கே., பாட்டியா, துணை பைலட் எம்.எஸ்.ரெட்டி. ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேத பரிசோதனை செய்வதற்காக 5 பேரின் உடல்களும் இன்று மதியம் 2 மணிக்கு கர்னூல் கொண்டுவரப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்தததும் 5 பேரின் உடல்களும் மாலை 5 மணி அளவில் ஐதராபாத் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜசேகர ரெட்டியின் மரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹைதராபாத் விரைந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் இறந்த செய்தியால் ஆந்திர மாநில மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்டி மரணம் : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் பூகம்பம்:44 பேர் மரணம்
நேரம்
9:02 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
இந்தோனேசியாவிலிலுள்ள ஜாவா தீவின் மேற்கிலிலுள்ள தஸிக்மலயா நகரத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையி
2/9/09
நெல்லை அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு
நேரம்
4:04 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
ரியாத்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக சமூக இஃப்தார்
நேரம்
8:36 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
ரியாத்:ரியாத் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக சமூக இஃப்தார் கடந்த ஆகஸ்ட்28 அன்று வெள்ளிக்கிழமை அல் உபைதா இஸ்திராஹாவில் நடைபெற்றது.செய்தி:தேஜஸ்
ஓமான்:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக நடைபெற்ற சகோதர சங்கமும்,சமூக இஃப்தாரும்
நேரம்
8:30 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
தூதின் ரமலான் சிந்தனைகள்
நேரம்
8:23 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
"என் அறியாமைக்காலத்தில் நான் ஏராளமான நூல்களைப் படித்துள்ளேன். புராதன புதிய தத்துவங்கள், விஞ்ஞானம், அரசியல், மனித வாழ்வு என்பன பற்றிய ஒரு நூல் நிலையமே என் மூளைக்குள் அமைந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நூல்களைப்படித்துவைத்தேன். ஆனால் என்று நான் என் கண்களைத்திறந்து குர் ஆனைப்படிக்கத்தொடங்கினேனோ அன்றுதான் அதற்கு முன்னர் படித்தவைகள் அனைத்தும் குறையுள்ளவை என்பதை உணரலானேன்.ஜஸ்வந்த் புத்தகத்திற்கு தடை:மோடி அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது சுப்ரீம்கோர்ட்
நேரம்
8:18 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
புதுடெல்லி:ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு தடைவிதித்த குஜராத் மோடி அரசின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட்.தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு
நேரம்
8:16 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
இதுகுறித்து அவர் கூறுகையில், பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் கலவரம் நடத்தியது, நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவினர் செய்த கலவரங்கள் ஆகியவற்றால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.
மக்கள் விட்ட சாபமும், தலைவர்கள் செய்த பாவமும்தான் இன்று பாஜக இந்த நிலைக்கு சீரழிந்து போக காரணம். இந்த பாவத்தால் விரைவில் பாஜக அழிந்தே போகும். அக்கட்சியின் தலைவர்கள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்காமல் காத்தவர் அத்வானிதான். இதை நான் அன்றும் சொன்னேன். மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இப்போது அத்வானியின் நிலையைப் பாருங்கள். விதியின் சாபம் இப்போது அவர் மீதே வந்து விடிந்துள்ளது. பாஜக தலைவர்கள் நாட்டுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றார் லாலு.
1/9/09
உலகநாடுகளில் ரமலான் விசேஷங்கள்
நேரம்
8:28 AM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
ஆன்மாவை சுத்திகரித்து நம் ஆத்மீக வாழ்வை பலப்படுத்த ஆண்டிற்கொருமுறை நம்மிடம் வரும் கண்ணியமிக்க விருந்தாளி ரமலான்.










