20/6/09

நக்கீரனின் விஷமம்!

சமீபத்தில் வெளியான நக்கீரன் வார இதழில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை மீண்டும் ஒரு முறை உமிழ்ந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கண்டனம் மற்றும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.
தனிப்பட்ட ஒரு நபரின் குற்றத்தை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அது விமர்சித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து உங்கள் கருத்துக்களை அஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்
Nakeeran
105, Jani jaan khan road,
Royapettah, Chennai –14
Ph-044 –2848 2424, 4242
FAX – 044-2848 5454
Email
: editor@nakkheeran.in,
nakkheeran2003@yahoo.com

மீடியாக்களில் இரண்டு வகை உள்ளது...
1. ஒன்று எப்போதுமே இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவது.... Ex.. Dinamalar,Nakeeran, Indian Express
2. இரண்டு நடுநிலையாக இருப்பது போல் காட்டி கொண்டு முஸ்லீம்களின் நன்மதிப்பை பெற்று, முக்கியமான தருணங்களில் விஷத்தை கக்குவது, இவர்கள் தான் RSS கொள்கைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் திணிப்பார்கள் .... Ex.. Dinamani, The Hindu

இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்த ஷாருக் கான் மீது வழக்கு!


பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஷாருக் கான் கூறியுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக மும்பை பந்தரா காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் புகார் ஷாருக் கான், கட்டுரை ஆசிரியர் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர் ஆகியோர் மீது அளிக்கப் பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
டைம் அன்ட் ஸ்டைல் பத்திரிகையின் ஜூலை மாத இதழில் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் நபியைப் பற்றி ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அவர் கூறியிருப்பதாகவும் புகார் அளித்த காலித் பாபு குரேஸி கூறியுள்ளார்.ஷாருக் மற்றும் இருவர் மீதான இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்தல்) மற்றும் 34 (ஒரே நோக்கத்தில் பலர் ஒன்றிணைந்து செயல்படுதல்) ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை ஆய்வாளர் ஜார்ஜ் கூறினார்.

தாலிபான்களைப் பேட்டி எடுத்ததற்காக அல் ஜஸீரா நிருபர்கள் கைது!


தாலிபான் கமாண்டர்களைப் பேட்டி எடுத்த இரண்டு அல் ஜஸீரா தொலைகாட்சி நிருபர்களை ஆப்கானிஸ்தான் ரகசிய காவல்துறை கைது செய்துள்ளது. அல் ஜஸீராவின் அரபி மற்றும் ஆங்கில தொலைகாட்சி அலைவரிசைகளுக்காக ஆப்கானிஸ்தான் பகுதி நிருபர்களாக வேலை செய்யும் கைஸ் அஸீமி மற்றும் ஹந்துல்லா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று காவல்துறை கைது செய்த இவர்களைக் குறித்து அதன் பின்னர் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் அல் ஜஸீரா அறிவித்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குந்துஸ் பகுதியில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் குறித்த விவரமான செய்தியைக் கடந்த வாரம் அல் ஜஸீரா ஒளிபரப்பியிருந்தது. அல் ஜஸீரா வெளியிட்ட இச்செய்தியே ஆப்கானிஸ்தான் அரசினல் ஜஸீரா பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அல் ஜஸீரா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயியைத் தொடர்பு கொண்டப்பின்னரும் எவ்வித அனுகூலமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என அல் ஜஸீரா பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதே சமயம் பத்திரிக்கையாளர்களைக் கைது செய்த விவரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இதுவரை தயாராகவில்லை. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், ஊடகங்களுக்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்கானிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது. தாலிபானின் வளர்ச்சி முக்கியமான தேர்தல் பிரச்சார விஷயமாக மாறியிருக்கும் இந்நிலையில், தாலிபான்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
சுதந்திரமாக செயல்பட வேண்டிய பத்திரிக்கையாளர்கள் மீது ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் அரசின் சுதந்திர செயல்பாடுகள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு மசோதாவை திருப்பி அனுப்ப மத்திய மந்திரி சபை தீர்மானம்

கடுமையான பிரிவுகளைகொண்ட குஜராத் அரசின் பயங்கரவாத சட்ட மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவராவிட்டால் அதை அங்கீகரிக்க முடியாது என்று மத்திய மந்திரி சபை தீர்மானித்திருக்கிறது.இது இரண்டாவது முறையாக மத்திய அரசு இந்த சட்டத்தை திருப்பி அனுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் பெயர் குஜராத் திட்டமிட்ட குற்றத்தடுப்பு மசோதா(GUJCOCA-GUJARAT CONTROL OF ORGANISED CRIME ACT).இதில் 3 திருத்தங்களை செய்தால் மட்டுமே இதனை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும் என கூறிவிட்டது மத்திய அரசு.

இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்," தற்போது குஜராத் அரசு சமர்ப்பித்துள்ள மசோதாவில் - ஒரு குற்றவாளி, போலீஸ் அதிகாரி முன்பு அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை கோர்ட் ஏற்க முடியும் என்ற அம்சம் உள்ளது. இதை ஏற்க முடியாது.
அதேபோல, அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் கோர்ட்டால் ஜாமீன் வழங்க முடியாது என்று இன்னொரு அம்சம் உள்ளது. கோர்ட்டுக்குத்தான் ஜாமீன் வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும். அரசு வக்கீலுக்கு அது இருக்க முடியாது. இதையும் திருத்த வேண்டும்.

அதேபோல இன்னொரு திருத்தத்தையும் நாங்கள் தெரிவித்துள்ளோம்”. 3-ஆவது பிரிவு எது என்று கூற சிதம்பரம் மறுத்துவிட்டார். “இந்த 3 திருத்தங்களையும் குஜராத் அரசு மேற்கொண்டால், இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசு் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும்” என்றார் சிதம்பரம்.

18/6/09

விடியல் - ஜூன்'09


கிப்லாவை முன்னோக்கி ....

அறந்தாங்கி : கட்டுமாவடியில் ஃபாஸிஸ்டுகளின் அராஜகம் ...

தேவை ஒரு மாற்று ஊடகம் ...

கலகலத்த காவிக் கூடாரம் ...

திருமண ஒப்பந்தம் - மௌனம் சம்மதமா ?

இஸ்ரேலுக்கு யூதர்களின் வேண்டுகோள் !

மணக்கும் மணவாழ்வு

நல்லோர்களின் பிரார்த்தனை

காணமல் போகும் பெண்களின் கதி ...?

அவசர வாழ்க்கையின் அன்புப்பரிசு

அச்சாஷ் தரும் பாடம்

மிஷன் இஸ்தான்புல் - காட்சி ஊடக விமர்சனம்

இன்னும் பல தலைப்புகளில் ......
வாங்கி விட்டீர்களா இப்போது பரபரப்பான விற்ப்பனையில் ...

ஈரான் தேர்தல் சர்ச்சைகளில் அமெரிக்கா தலையிடாது-அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

ஈரான் அதிபர் தேர்தல் தொடர்பாக நடைபெற்றுவரும் சர்ச்சைகள் தொடர்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வரும் ஹுசைன் மூசாவிக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிடவேண்டும் எனக்கோரி மேற்கத்தியவாதிகளின் தரப்பிலிருந்து உருவான நிர்பந்த்தத்தை தொடர்ந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஒபாமா இவ்வாறு கூறினார்.மேலும் அவர் கூறுகையில்,"அஹ்மத் நிஜாதிற்கும் ஹுசைன் மூசாவிக்கும் இடையில் ஏதொரு வேறுப்பாட்டையும் தான் காணவில்லை. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை உலக மக்கள் விரும்பவில்லை".என்றார்.ஆனால் சமாதானமான போராட்டங்களை அரசு அடக்குவதை அவர் கண்டித்தார்.

முஸ்லிம் உலகோடு அமெரிக்காவின் புதிய அணுகுமுறையின் வெளிப்பாடுதான் இது என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆனால் பி.பி.ஸியின் வாஷிங்டன் செய்தியாளர் ஜஸ்டின் வைப் இதுபற்றி கூறுகையில்,"நஜாதின் வெற்றியில் யாதொரு முறைகேடும் நடைபெறவில்லை என்று ரகசிய ஏஜன்சிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஒபாபாமா இவ்வாறு கூறுகிறார்.மேலும் குறைகேடு குற்றச்சாட்டுப்பற்றி விசாரிக்க ஈரானின் ஆன்மீக உயர்சபையான கார்டியன் கவுன்சில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் இடங்களில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தலாம் எனக்குறியிருப்பதும் ஒபாமாவின் இப்பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்"என்றார்.

ஒபாமாவை அதிபர் தேர்தலில் எதிர்த்து நின்ற குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜன் மெக்கயின் ஈரான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அன்று ஹிட்லர், இன்று இஸ்ரேல்

நாஜிக்களின் கொடூரத்திற்கு பலியானவர்களின் வாரிசுகள் தங்கள் மூதாதையர்களுக்கு செய்த கொடூரத்தை இன்று அதே முறையில் ஃபலஸ்தீனியர்களுக்கு செய்கின்றார்கள்.

புகைப்படங்கள் வழி ஒரு ஒப்பீடு.





































வளைகுடா நாடுகளிலும் பன்றிக்காய்ச்சல் பரவத்தொடங்கியது!


உலகம் முழுவதும் பரவி வந்து கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் வளைகுடாநாடுகளிலும் இப்போது பரவத் தொடங்கியுள்ளது. ஓமான் தவிர எல்லா வளைகுடா நாடுகளிலும் தற்போது இக்காய்ச்சல் வைரஸ் கிருமிகள் வந்துள்ளது சோதனைகளில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவிலிருந்து கத்தர் வந்த இரு பயணியரும், அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக துபை செல்லவிருந்த இன்னொரு பயணியும் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் தென்படவே, அவர்கள் பிற பயணியரிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டு அவர்கள் உடலில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது மூவருக்கும் பன்றிக்காய்ச்சல் கிருமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


தோஹாவிலிருக்கும் கராஃபா மருத்துவ மையத்தில் இம்மூவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தவழும் கைக்குழந்தை என்பது குறிப்பிடத் தக்கது.

ஓமனில் IFF நடத்தும் இலவச மருத்துவமுகாம்

ஓமனில் IFF எனப்படும் (இந்தியா பிராடேர்நிட்டி ஃபொரம் ) ஜூன் 19 அன்று இலவச மருத்துவ முகாம்ஒன்றை நடத்தவிருக்கின்றது. இம்மருத்துவ முகாமை ஒமனுக்கான இந்திய தூதர் அணில் வத்வா அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

மேலதிகமான விவரங்களுக்கு கீழுள்ள படத்தை க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.

17/6/09

நெதன்யாஹுவின் பேச்சுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு ! அமெரிக்கா வரவேற்ப்பு!


அமெரிக்க அழுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி குறித்துத் தன் நிலையை அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, நேற்று இது குறித்து உரை நிகழ்த்தினார். இவ்வுரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி முயற்சிகள் குறித்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹு, இஸ்ரேலின் நிலை குறித்து தெரிவிக்கையில், "பாலஸ்தீன நாடு என்று ஒன்று அமைவதை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின், இஸ்ரேல் என்ற ஒரு யூத நாட்டின் இருப்பைப் பாலஸ்தீனர்கள் அங்கீகரிக்க வேண்டும்; பாலஸ்தீனத்திற்கென்று ஒரு இராணுவம் இருக்கக் கூடாது, பாலஸ்தீனத்திற்கென்று கடல், வான் எல்லைகள் இருக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.


இப்பேச்சினூடே இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் குடியேற்றம் நடைபெறுவதை அவர் நியாயப் படுத்தினார். இப்பகுதியில் குடியேறுவோர் அனைவரும் அமைதிக்கு எதிரானவர் அல்லர் என்று அவர் குறிப்பிட்டார்.


பாலஸ்தீனத்திற்கென்று ஆயுதங்கள் எதுவும் இருக்கக்கூடாது என அழுத்தமாக அவர் தெரிவித்தார். அவரது இப்பேச்சை பாலஸ்தீனர்கள் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டனர். அமைதி முயற்சியை ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுவது போல் இப்பேச்சு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


அதேவேளை நெதன்யாஹுவின் இப்பேச்சு அமைதி முயற்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருப்பதாகவும், இதனைத் தாம் வரவேற்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

சிஐஏ சித்திரவதை தாங்கமுடியாமல் ஒப்புதல்: செப் 11 குற்றவாளி!


செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட காலித் ஷேக் முஹம்மத் தன்னை சிஐஏவினர் கடும் சித்திரவதை செய்ததாகவும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் அரசாங்க குறிப்புகளில் வந்துள்ளதாக தெரிகிறது.

இது போன்ற கடுமையான சித்திரவதைக்கு உட்பட்ட இன்னொரு கைதியான அபூ சுபைதாவும் சாவின் விளிம்புக்கு பல முறை சென்றதாக கூறியிருக்கின்றார்.

காஸாவில் இஸ்ரேலின் அக்கிரமங்களை பார்த்து என்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை.-முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்

காஸ்ஸாவில் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழயத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்த எனக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கூறினார்.காஸ்ஸாவுக்குக்கெதிரான தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு ஹமாஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காஸ்ஸாவுக்கு வருகை புரிந்திருந்தார் ஜிம்மி கார்ட்டர். மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்த இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலை கண்டித்த ஜிம்மி கார்ட்டர். தன்னுடைய நாட்டில் உருவாக்கிய எஃப்-16 ரக குண்டுகளை போட்டு அமெரிக்கன் பள்ளிக்கூடத்தை தகர்த்ததாக குறிப்பிட்டார்.ஃபலஸ்தீன் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலை விமர்சித்தார் கார்ட்டர்.நேற்றைய முன்தினம் இஸ்ரேலுக்குச்சென்ற கார்ட்டர் அங்கு 2006-இல் ஃபலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்ட கிலாத் ஷாலித்தின் தந்தை கொடுத்துவிட்ட கடிதத்துடன் நேற்று காஸ்ஸாவிற்கு வருகை புரிந்தார். ஆனால் இந்தக்கடிதத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளுமா? என்பது சந்தேகமே.இதற்கிடையில் ஹமாஸை சார்ந்த ஒருவர் கூறுகையில் இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால் இஸ்ரேல் கைதிகளாக வைத்திருக்கும் 11 ஆயிரத்திற்குமேற்ப்பட்ட ஃபலஸ்தீனிகளுக்கான கடிதங்களை இஸ்ரேலுக்கு கொண்டுச்செல்ல நேரிடும் என்று அவர் கூறினார்.

கஸ்ஸாவில் ஆட்சி புரியும் ஹமாஸை தவிர்த்துவிட்டு மத்தியகிழக்கு ஆசியாவில் சமாதானத்தைப்பற்றி கனவு காணவேண்டாம் என்று நேற்று முன்தினம் கார்ட்டர் கூறியிருந்தார்.நெதன் யாகுவின் ராணுவம் இல்லாத ஃபலஸ்தீன் என்பது சமாதானத்தின் பாதையில் புதிய தடைகளை ஏற்படுத்தும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே ஜிம்மிகார்ட்டரை கொல்ல நடந்த முயற்சியை ஹமாஸ் பாதுகாப்புபடையினர் முறியடித்ததாக செய்திகள் கூறுகின்றன.இஸ்ரேலின் எல்லைக்கருகில் எரைஸ் க்ராஸிங்குக்கு அருகில் சாலையில் கிடந்த சக்தி வாய்ந்த குண்டுகளை ஹமாஸ் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்தனர்.கார்ட்டர் கடந்துச்செல்லும் பாதையாகயிருந்தது இது.

இச்சதியைச்செய்தது இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் என்று கருதப்படுகிறது. ஜிம்மிகார்ட்டரை கொலைச்செய்துவிட்டு பழியை ஃபலஸ்தீனிகளின் மீது போடும் சியோனிஷ்டு சதி என்று கருதப்படுகிறது. இச்செய்தியைப்பற்றி ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்.

14/6/09

ரியாத் சிறையில் வாடிய தமிழக சகோதரர் விடுதலை - IFF உதவி

ரியாத் சிறையில் வாடிய தமிழர் லால்குடி முஹம்மது ரபீக் அவர்கள் இந்தியா ஃபிரடர்னிட்டி பாரம் உறுப்பினர்கள் துனையுடன் 4000 ரியால் அபராதம் செலுத்தி வெளியில் கொண்டு வரப்பட்டுவிட்டார். மேலும் செய்தியை விரிவாகப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும் .