22/8/09

மருத்துவ-பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் வக்பு வாரியம்

0 கருத்துகள்
சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர்,

சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை கட்டியது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, வக்பு வாரியத்துக்கு குடிசை மாற்று வாரியத்தால் 276 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதாவது, ராயபுரத்தில் 100 குடியிருப்புகள், கண்ணகி நகரில் 176 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகள் முஸ்லிம் சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் (மாதம் ரூ.250 வாடகை), ரூ. 1,000 முன் பணம் பெற்றுக் கொண்டு வழங்கப்படும்.

இந்த வீடுகள் மசூதிகளின் இமாம்கள், மோதினார்கள், வேலையற்ற உலமாக்கள், விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தலா 10 சதவீதமும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.

இதற்காக கடந்த 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன் பின்னர் இந்த விண்ணப்பங்கள் தனி குழுக்கள் மூலமாக சரி பார்க்கப்படும். கடைசியில் குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் வக்பு வாரியம் மூலமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மருத்துவம், பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக நலக்கூடங்கள் தொடங்கப்படும். பெண்களுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றார்.

thatstamil

துபாய்: 13‍வது சர்வதேச புனித குர் ஆன் விருது நிகழ்ச்சி ரமலான் ஒன்றில் துவக்கம்

0 கருத்துகள்
துபாயில் வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லானில் ந‌டைபெறும் புனித‌ குர் ஆன் விருது நிக‌ழ்ச்சி இவ்வாண்டு ர‌ம‌லான் முத‌ல் தேதியில் துவ‌ங்குவ‌தாக‌ புனித‌ குர் ஆன் விருது க‌மிட்டி த‌லைவ‌ர் இப்ராஹீம் முஹம்மது பூமில்ஹா அறிவித்துள்ளார்.

துபாயிலிலுள்ள‌ ப‌ல்வேறு மைய‌ங்க‌ளில் ச‌னிக்கிழ‌மை முத‌ல் மார்க்க‌ பிர‌ச்சார‌ நிக‌ழ்ச்சிக‌ள் துவ‌ங்கும். இந்தியா உள்ப‌ட‌ ப‌ல்வேறு உல‌க‌ நாடுக‌ளிலுள்ள‌ முஸ்லிம் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளை இந்நிக‌ழ்ச்சியில் கெள‌ர‌விக்க‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. குர் ஆன் ம‌ன‌ன‌ப்போட்டியில் போர்சுக‌ல்,ஸ்வீட‌ன் உள்ப‌ட‌ 83 நாடுக‌ளிலிருந்து போட்டியாள‌ர்க‌ள் க‌ல‌ந்துக்கொள்கிறார்க‌ள்.

வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் இந்நிக‌ழ்ச்சியின்போது உல‌கின் சிற‌ந்த‌ ஆளுமைத்த‌ன்மைக்கொண்ட‌ முஸ்லிம் அறிஞ‌ர் ஒருவ‌ருக்கு 10 ல‌ட்ச‌ம் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ திர்ஹ‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.
இந்நிக‌ழ்ச்சியில் சொற்பொழிவாற்ற‌ உல‌கில் மாற்றும‌த‌த்தைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு அறிவுப்பூர்வ‌மான‌ ரீதியில் ப‌தில‌ளிப்ப‌தில் சிறந்து விள‌ங்கும் இந்தியாவைச்சார்ந்த‌ டாக்ட‌ர் ஜாஹிர்நாய‌க் அவ‌ர்க‌ள் வ‌ருகிற‌ வியாழ‌ன்,வெள்ளி தின‌ங்க‌ளில் துபாய் world trande centre ஆடிட்டோரியத்தில் உரை நிக‌ழ்த்துகிறார்.

உல‌க‌ளாவிய‌ அள‌வில் ர‌ம‌லானின் துவ‌க்க‌ம்

0 கருத்துகள்

உலளாவியஅளவில் வாழும் முஸ்லிம் மூகம் இவ்வாண்டும் க்கம்போலவே லானை துவக்குவதில் ஒன்றிணையவில்லை. உலகளாவியஅளவில் வாழும் முஸ்லிம்கள் லானை துவங்கும் விபம் ருமாறு:
ஆக‌ஸ்ட் 21 வெள்ளிக்கிழ‌மை ர‌ம‌லானை துவ‌ங்கும் நாடுக‌ள்:துருக்கி (விஞ்ஞான‌ க‌ணக்கீட்டின் அடிப்ப‌டையில்)

துருக்கியை பின்பற்றும் நாடுகள்: கொஸாவா, மாஸிடோனியா, போஸ்னியா, ஹெர்சிகோவினா,செர்பியா,ல்கேரியா,மோன்டினீக்ரோ,அல்பேனியா,
ஸ்லோவேனியா,ஜெர்மனி , ஷ்யா, இத்தாலி,லிபியா,லெபனான் ற்றும் ஈராக்கில் வாழும் ஷியா முஸ்லிம்கள்

ஐரோப்பியஃபத்வா ற்றும் ஆய்வுக்கானவுன்சில் விஞ்ஞானக்கணக்கீட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை லான் துவங்குவதாகஅறிவித்துள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை தலைமையிடமாகக்கொண்ட ஹிஜ்ரா மிட்டி லான் வெள்ளிக்கிழமை துவங்குவதாகஅறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22 னிக்கிழமை லானை துவங்கும் நாடுகள்:

வூதி அரேபியா,த்தார்,குவைத்,எகிப்து,ஹ்ரைன்,ஐக்கியஅரபு அமீரம், சிரியா,லெபனான்,ஃபஸ்தீன்,ஜோர்டான்,சூடான்,யெமன், ஈராக், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,லேசியா,சீனா,சிங்கப்பூர், ஃபிரான்ஸ், பெல்ஜியம்,ஸ்பெயின்,ஸ்விட்சர்லாந்து,க்கு அமெரிக்கஇஸ்லாமிக் சோசைட்டி, இந்தியாவில் கேரளா.

பாகிஸ்தான்,இந்தியா,ங்களாதேஷ்,ஒமான்,மொராக்கோ,மாரிடோனியா ஆகியநாடுகள் இன்று இரவு தான் பிறையை பார்த்து முடிவுச்செய்வதாகஅறிவித்துள்ள‌.

முஸ்லிம் மூகத்தில் பிறை கணக்கிடுவதற்கு ற்போது மூன்று விதமானஅபிப்ராயங்கள் நிலவுகின்ற‌.1.பிறையை அந்தகுதிகளில் பார்த்து முடிவுச்செய்வது 2.வூதி அரேபியாவின் ருத்தை ஏற்றுக்கொளது 3.விஞ்ஞானக்கீட்டின் அடிப்படையில் முடிவுச்செய்வது.
இத்தகைய சூழலில் இந்தருத்து வேறுபாடுகளை ளையஉலளாவியஅளவிலானமுஸ்லிம் மார்க்கஅறிஞர்களும்,முஸ்லிம் வானியல் ஆய்வாளர்களும் ஒன்றிணைந்து 3 ப்பினரின் ருத்துக்களை ஆய்வுச்செய்து இறுதியானமுடிவுக்கு வேண்டும் என்பதே உலளாவியஅளவில் வாழும் முஸ்லிம்களின் விருப்பம்.
இதற்கானமுயற்சியில் முஸ்லிம் மூகத்தில் யார் ஈடுபப்போகிறார்கள்?

தகவல்:இஸ்லாம் ஆன்லைன் செய்தியிலிருந்து தொகுக்க‌ப்ப‌ட்ட‌து.

20/8/09

அண்ணலாரின் அற்புத வழிமுறை

0 கருத்துகள்
source: விடியல்

உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஃபலஸ்தீனர்களை கடத்தும் இஸ்ரேல் ராணுவம்

0 கருத்துகள்
காஸ்ஸா:குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டைக் கூறி இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்யப்படும் ஃபலஸ்தீன் இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை திருடி விட்டு உடலை வழியில் எறிந்துவிட்டுச் செல்லுகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஸ்வீடன் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான ஆஃப்டன்ப்ளேடட்(Aftonbladet) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உடல் உறுப்புகளை திருடவும் அவற்றை சர்வதேச சந்தையில் விற்பதற்கும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குகரையிலிருந்தும், காஸ்ஸா முனையிலிருந்தும் கைதுச்செய்யப்படும் ஏராளமான ஃபலஸ்தீனர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டது ஆய்வில் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் டொனால்ட் போஸ்ட்ரம் கூறுகிறார்.
நப்லஸிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினரால் பிடித்துச்செல்லப்பட்ட ஃஹாலித் என்ற இளைஞனின் இறந்துப்போன உடல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. ஜனாஸாவை குளிப்பாட்டும்போது உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்களை பரிசோதித்தபொழுதுதான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது. பல குடும்பங்களும் இத்தகைய சூழல் தங்களுக்கும் நேர்ந்ததை தன்னிடம் விவரித்ததாக ஆஃப்டன்ப்ளேட்டின் செய்தியாளர் கூறுகின்றார். பிலால் என்ற இளைஞரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச்சென்று நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தது. 5 நாள்கள் கழித்துதான் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் நடந்த உடல் பரிசோதனையில் அவருடைய வயிறு கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய உறுப்புகளெல்லாம் திருடப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் ராணுவத்திற்கெதிராக உடல் உறுப்புகளை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுபற்றிய தெளிவான விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்திற்கு தொடர்பிருப்பதாகவும் அப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.
இப்பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டு கொலைச்செய்யப்படும் ஃபலஸ்தீனர்களின் உடலை பரிசோதனைச்செய்யப்போவதாக ஃபலஸ்தீனர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
News: Thejas

ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு குஜராத்தில் தடை

0 கருத்துகள்
அஹ்மதாபாத்:ஜின்னாவை புகழ்ந்து முன்னாள் பா.ஜ.க அரசின் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்திற்கு குஜராத் மாநில அரசு தடைவிதித்துள்ளது.ஜின்னாவை புகழ்ந்தும் காந்தியும் நேருவும் இந்திய பிரிவினைக்கு காரணம் என்றும் எழுதிய காரணத்தால் புத்தகத்தை தடைச்செய்துள்ளதாக மோடியின் அலுவலக செய்திக்குறிப்பு கூறுகிறது.இதுபற்றி கருத்துக்கூறிய ஜஸ்வந்த் சிங்."புத்தகத்தை தடைச்செய்தது மிகவும் கவலைக்குரிய ஒன்று.புத்தகங்களை தடைச்செய்வது சிந்தனைகளுக்கு தடை விதிப்பதற்கு சமம்".என்று தெரிவித்தார்.
News:Thejas

அமெரிக்காவில் நோன்பை முன்னிட்டு பேரித்தம்பழ விற்ப்பனை சூடு பிடித்துள்ளது

0 கருத்துகள்
அமெரிக்கா கிழக்கு கலிபோர்னியாவில் முஸ்லிம்களின் நோன்பை முன்னிட்டு பேரித்தம் பழ விற்பனை கடந்த சில வாரங்களாக சூடு பிடித்துள்ளது.
டென்னிஸ் ஜென்சென் (கலிபோர்னியாவின் பிரசித்தி பெற்ற பேரித்தம் பழ தோட்ட உரிமையாளர் லாஸ் எஞ்செல்ஸ் நாளிதழுக்கு நேற்று செவ்வாய் கிழமை அளித்த பேட்டியில் கூறுகையில்கொஞ்சம் பேரித்தம் பழம் அனுப்புங்கள்” ”என்னை காப்பாற்றுங்கள்அவரிடம் ஒரு பேரித்தம் பழம் கூட இல்லாமல் விற்று விட்டதாம். இதே நிலைதான் அங்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களின் நிலையாம்.

ரமளானிற்கு முன் கோச்செல்லா பள்ளத்தாக்கில் உள்ள மொத்த விற்பனையில் 20,687 டண் 32 பில்லியன் டாலர் விற்பனையானது. ரமளான் மாதத்தில் மாத்திரம் 480,000 டண் சாகுபடி ஆகி உள்ளது.மற்ற நாட்களை விட 70% அதிகமாக விற்பனையாகி உள்ளதாகவும் பயிர் சாகுபடி அறிக்கை தெரிவிக்கிறது.

கலிபோர்னியா பாம் ஸ்பிரிங்ல் குடியிருப்பு உரிமையாளர் அப்துல் முஹம்மத் கூறுகையில் ரமளான் மாதத்தில் மெக்சிகொவில் வாழும் கிறிஸ்த்தவர்கள் எவ்வாறு கிறிஸ்துமஸ் சமயத்தில் தாமல்ஸ் என்ற ஒரு வித பழகாரம் உண்பார்களோ அதே போன்று ரமளான் மாதம் முழுவதும் அதாவது 30 நாட்கள் பகல் ஆரம்பிப்பதற்கு சற்று முன் முதல் துவங்கி இரவு ஆரம்பிப்பதற்கு சற்று முன் வரை உண்ணாமலும் பருகாமலும் இறைவனின் (படைத்தவனின்) நெருக்கத்தை அடைவார்கள். பேரித்தம் பழம் இந்த ரமளான் நோன்பை பிறியும் வேளையில் உண்பது முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்று வாழும் உலக முஸ்லிம்களின் பாரம்பரியம்.

அமெரிக்காவின் தற்போதைய செய்தியில் அமெரிக்காவில் 7 மில்லியனுக்கு மேல் முஸ்லீம்கள் வெவ்வெறு சமூகத்தில் இணைந்து வழ்வதாக தெரிவிக்கிறது.

புண்ணியமிக்க ரமலானை கண்ணியப்படுத்துவோம்

0 கருத்துகள்
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். (அல்குர் ஆன்2:185)
ஈமான் கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்)நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர் ஆன்2:183)

நன்மைகளின் பொற்காலமாய் பாவங்களின் இலையுதிர்காலமாய் புண்ணியமிக்க ரமலான் நம்மை அண்மித்துவிட்டது.மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் மாசுகளை அகற்றி அவனை மாண்பாளனாக மாற்றும் வித்தை ரமலானுக்கு உண்டென்றால் அது மிகையன்று!நன்மைகள் நம் வாசல் தேடி வரும்போது அதனை வழி மறிக்கும் ஷைத்தானுக்கு கூட விலங்கிடப்பட்ட பரிசுத்த மாதம் இது!.தேடல் என்பது பொருளாதாரத்தையும்,புகழையும் நோக்கி நிற்கும் காலக்கட்டத்தில் நன்மையின் தேடலாய் நம்மை அரவணைக்கும் இறையச்சத்தின் மாதமிது!.மனித சமூகத்திற்கு வாழ்வியல் வசந்தமாய் வானவர்கோன் ஜீப்ரயீல் மூலம் வள்ளல் நபிக்கு வல்லோன் இறைவனால் அருளப்பட்ட திருக்குர் ஆனின் மாதமிது.வரிக்கு வரி அல்ல எழுத்துக்கு எழுத்து நன்மைகள் வாரியிறைக்கப்படும் திருக்குர் ஆன் ஓதப்படும்பொழுது! லைலத்துல் கத்ர் என்ற ஆயிரமாதங்களைவிட சிறந்த ஒரு இரவை அல்லாஹ் ஒரு அருட்கொடையாக நமக்கு அளித்தது இம்மாதத்தில்தான்.

இன்று ரமலான் என்றால் பசியும் தாகமும் தான் முன்னிறுத்தப்படுகிறது! நிச்சயமாக இறையச்சமென்பது அதுவன்று நபிகளாரின் வாக்குகளில்! பொய்யான செயல்களையும் சொற்களையும் விட்டொழிக்காதவரை ரமலான் நமக்கு எட்டாக்கனியாகிவிடும் எச்சரிக்கை! சோம்பலுடனும் தூக்கத்துடனும் கழிப்பதற்கா இம்மாதத்தின் நோக்கம்! நிச்சயமாக இல்லை! இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முதன்மையான ஆய்வை மேற்க்கொண்டால் தெரியவரும் அது செயற்களத்தின் மாதமென்று! பத்ரும், வாதில்குராவும், பத்ஹே மக்காவும், ஹத்தீனும், அய்னுன் ஜாலூத்தும் நடைபெற்ற மாதமல்லவா இது!

நபி(ஸல்...)அவர்களும் சரி அவர்களுடைய தோழர்களும் சரி ரமலானைப்பார்த்த விதமே வேறு.அவர்கள் ரமலானை இறையச்சத்திற்குரிய மாதமாக அல்லாஹ்வின் காருண்யமும்,வெற்றியும் இறக்கப்படும் மாதமாகத்தான் சிந்தித்தார்கள், அதனடிப்படையில் செயல்படவும் செய்தார்கள்.இறையச்சம் என்பது வெறும் மஸ்ஜிதுகளில் அமர்ந்து தொழுவதுடனோ, திக்ருகளை செய்வதுடனோ, திருக்குர் ஆனை ஓதுவதுடனோ முடிவதல்ல! ரமலானுடைய காலக்கட்டங்களில் நபி(ஸல்...)அவர்களும் சஹாபாக்களும் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தால் பத்ரும், பத்ஹே மக்காவும், வாதில் குராவும் நடைபெற்றிருக்குமா அல்லது அதில் வெற்றியைத்தான் பெற்றிருக்க முடியுமா?. அரபு பிரதேசங்களிலிருந்து இணைவைப்பின் கடைசி சின்னங்கள் வரை துடைத்தெறியத்தான் முடிந்திருக்குமா?. இறையச்சத்தின் இலக்கணத்தை அவர்கள் விளங்கிக்கொண்டது இவ்வாறுதான் ரமலானில் நோன்புநோற்று, இரவுகளில் நின்று வணங்கி, திருக்குர் ஆனை ஓதுவதுடன் நன்மையை ஏவி தீமையத்தடுக்கும் இலட்சியப்பணியையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

நபி(ஸல்...)அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்,"எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.

நோன்பு என்பது வெறும் பசித்திருப்பதோடும் தாகித்திருப்பதோடும் முடிந்துவிடுவதல்ல!நோன்பு நோற்பதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு அஞ்சி நமது பானத்தையும்,உணவையும் சில மணிநேரங்கள் தியாகம் செய்கின்றோமோ அதைப்போல் அல்லாஹ் கூறும் இன்ன பிற கட்டளைகளையும் ஏன் தமது உயிரையும் பொருளையும் கூட அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்ய தயார் என்பதை பறைசாற்றுவதையே நோன்பின் மூலம் நாம் பெறும் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தான் இறையச்சமே அடங்கியிருக்கிறது.

ஆக‌வே இந்த‌ ச‌ங்கைமிக்க‌ ர‌மலானில் அல்லாஹ்வும் அவ‌ன‌து தூத‌ரும் எவ்வாறு ர‌ம‌லானை ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் எவ்வாறு அதிலிருந்து ப‌டிப்பினை பெற‌வேண்டும் என்று க‌ட்ட‌ளையிட்டார்க‌ளோ அத‌ன‌டிப்ப‌டையில் செய‌ல்ப‌டுவோம்! ஈருல‌கிலும் வெற்றிய‌டைவோம்! அல்லாஹ் அத‌ற்கு துணைபுரிவானாக‌!.

தூதன்

19/8/09

ஜின்னாவை பாராட்டியதால் ஜஸ்வந்த் சிங் பா.ஜ.க வை விட்டு நீக்கம்

0 கருத்துகள்
புதுடெல்லி:பா.ஜ.க எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தான் எழுதிய ''Jinnah-India, Partition, Independence'' என்ற புத்தகத்தில் முஹம்மது அலி ஜின்னாவை புகழ்ந்து எழுதியதால் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக பா.ஜ.க பாராளுமன்ற குழு முடிவெடுத்து அறிவித்தது.

முகம்மத் அலி ஜின்னா குறித்து முன்பு அத்வானி கூறியதையே தான் இப்போது ஜஸ்வந்த் சிங்கும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற அத்வானி, ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர். புதிய வரலாறை உருவாக்கியவர் நபர் என்றார். இதற்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந் நிலையில தான் எழுதிய ''Jinnah-India, Partition, Independence'' என்ற ஜின்னாவின் பயோகிராபியை புத்தகத்தை நேற்று வெளியிட்டார் ஜஸ்வந்த் சிங். அதில், நாடு பிளவுபட ஜி்ன்னா காரணமல்ல, அன்றைய அரசியல் சூழல்களும் சில தலைவர்களின் செயல்பாடுகளும் தான் அவரை தனி நாடு கோர வைத்தன. அவர் மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்ல, தன்னமல்லாத ஒரு நபர். இதனால் தான் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன்.

அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல் அதை பரவலாகக வேண்டும் என்றுதான் ஜின்னா சொன்னார். அதை அப்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்படிப்பட்ட ஆட்சியில் தனது சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதித் தான் தனி நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

மேலும் இது குறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ள ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,"இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல" என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் முன்னாள் ராணுவ அதிகாரியாவார்.

இந் நிலையில் இன்று பாஜக மூத்தத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சிம்லாவில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தின் துவக்க நாளான இன்று ஜஸ்வந்த் சிங் பங்கேற்கவில்லை.அவரை கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று அத்வானியின் சார்பாக ராஜ்நாத் சிங் கூறிவிட்டதால் அவர் வரவில்லை.
அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, எதியூரப்பா உள்ளிட்ட 25 பேர் மட்டும் பங்கேற்கும் இக் கூட்டத்திற்கு சில முக்கியத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை.இக் கூட்டத்தை யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் புறக்கணித்துவிட்டனர். இந் நிலையில் இக் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மர்வாவைக்கொன்ற கொலையாளியை விடுவிக்க முயற்சி:கெய்ரோவில் எதிர்ப்பு பேரணி

0 கருத்துகள்
கெய்ரோ:ஜெர்மனியில் கொல்லப்பட்ட எகிப்தைச்சார்ந்த பெண்மணியின் கொலைக்காரனை விடுவிக்க அரசு தரப்பில் நடைபெறும் முயற்சியை கண்டித்து கெய்ரோவில் ஜெர்மன் தூதரகத்தின் முன்பாக மனித உரிமை அமைப்பைச்சார்ந்த உறுப்பினர்கள் கண்டன பேரணியை நடத்தினர்.
ட்ரஸ்டன் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மூன்று மாதம் கர்ப்பிணியான மர்வா அல் ஸெர்பினியை 18 முறைக்குத்திக்கொன்ற ஜெர்மன் நாட்டைச்சார்ந்த ஆக்ஸல் டபிள்யூ கைதுச்செய்யப்பட்டு 40 தினங்கள் கடந்த நிலையிலும் இப்பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் ஜெர்மன் பத்திரிகைத்துறை மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கெதிராக பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் பத்திரிகைத்துறை வாயிலாக இப்பிரச்சனையை ஒதுக்கித்தள்ள ஜெர்மன் அரசு முயல்வதாக கண்டனப்பேரணிக்கு தலைமை வகித்த நாதியா அத்தா கூறினார்.
குற்றாவாளியான ஆக்ஸல் டபிள்யூவிற்கு மன நோய் என்று பொய் சொல்லி விடுவிக்க ஜெர்மன் வழக்கறிஞர்கள் அரசு தரப்பில் முயற்சி மேற்க்கொண்டுவருவதாக தெரிகிறது. ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக தீவிரவாதி என்ற பழி சுமத்தப்பட்ட மர்வாவை நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னால் வைத்து கத்தியால் 18 முறை குத்திக்கொன்றதும் அதனை தடுக்க முயன்ற அவருடைய கணவருக்கும் காயம் ஏற்பட்டதும் முஸ்லிம் உலகில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உருவாக்கியது.
செய்தி:தேஜஸ்

ஆப்கான்:ஹமீத் கர்ஸாய் மாளிகை மீது ராக்கெட் தாக்குதல்

0 கருத்துகள்
காபூல்:தேர்தலுக்கு ஒரு நாள் மீதமிருக்க ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது.
அதிபர் ஹமீத் கர்ஸாயின் மாளிகை மீதும் போலீஸ் தலைமையகம் மீதும் நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.மாகாண வேட்பாளர் கொல்லப்பட்டார்.
காபூலில் நடந்த கார்குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.காபூலில் அதிபர் மாளிகை மீது நடந்த தாக்குதலில் கட்டிடத்திற்கு கடினமான சேதம் ஏற்பட்டுள்ளது.இத்தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணித்துளிகளில் காபூலிலுள்ள போலீஸ் தலைமையகம் மீதும் ராக்கெட் தாக்குதல் நடந்தது.இத்தாக்குதலுக்கு பின்னணியில் தாலிபான் என்று ஸபிஹுல்லா முஜாஹித் அறிவித்தார்.
ஆப்கானில் வடக்கு மகாணத்திலிலுள்ள ஜவாஸ்ஜான் தொகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் கொல்லப்பட்டார். நாளை நடைபெறும் அதிபர் தேர்தலுடன் 420 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். சீனியர் ஐ.நா அதிகாரி மற்றும் நேட்டோ படையினர் உட்பட 30க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு படையினரின் முகாமுக்கு செல்லும் முக்கிய சாலையில்தான் குண்டுவெடிப்பு நடந்தது.வெடிப்பொருள்களுடன் வந்த நபர் வெடித்து சிதறியதாக போலீஸ் கூறுகிறது.
பொதுத்தேர்தலை புறக்கணிக்க தாலிபான் கோரிக்கை விடுத்த சூழலில் கடுமையான தாக்குதல் நடக்கும் என்று முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு படையினர் உட்பட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை தீவிரமாக்கியபோதும் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு முடியாத சூழல் உள்ளது.
1.7 கோடி வாக்காளர்களைக்கொண்ட ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் ஹமீத் கர்ஸாயி உட்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். 420 உறுப்பினர்களைக்கொண்ட மாகாண கவுன்சிலுக்கு 328 பெண்கள் உட்பட 3,196 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
செய்தி:தேஜ‌ஸ்

முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிய மங்களூர் கல்லூரி தடை

0 கருத்துகள்
மங்களூர்: 2003ம் ஆண்டு முஸ்லீ்ம் மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு பர்தா அணிந்து வருவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்தது. இப்போது அதே போன்ற ஒரு தடையை மங்களூரில் உள்ள கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மாணவிக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மங்களூரில் ஸ்ரீ வெங்கட்ராமன் சுவாமி கல்லூரி என்ற கல்லூரி உள்ளது. இதை பந்த்வாலில் உள்ள எஸ்.வி.எஸ். வித்யவர்த்தகா சங்கம் நடத்தி வருகிறது. இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். இங்கு முதலாமாண்டு பி.காம் படிப்பவர் ஆயிஷா ஆஸ்மின் (19). இவர் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இவரை அழைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் சீதாராம மய்யா, முகத்தை மூடியபடி வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
சமீப காலமாக இந்த கல்லூரியில், பர்தா மற்றும் முகத்தை மூடியபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி ஆஸ்மின் கூறுகையில், இந்தத் தடையால் கடந்த பத்து நாட்களாக நான் வகுப்புகளுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி கல்லூரியில் சேருவதற்காக நேரடித் தேர்வுக்கு வந்தபோது கூட நான் பர்தாவில்தான் வந்தேன். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது இப்படி தடை விதித்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.
பர்தா அணிய தடை விதிக்கப்பட்டதால், நான் சுடிதார் அணிந்து, தலையைச் சுற்றிலும் ஸ்கார்ப்பை சுற்றிக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்கும் தடை விதித்து விட்டனர். எனது பெற்றோரையும் அழைத்து இதுகுறித்து எச்சரித்தனர் என்றார். இந்தத் தடையால் தற்போது வகுப்புகளுக்குப் போக முடியாத நிலையில் உள்ள ஆஸ்மின், திங்கள்கிழமை நடந்த இன்டர்னல் தேர்வையும் எழுத முடியாமல் போயுள்ளார்.
கல்லூரி நிர்வாகத்தின் போக்கு இப்படியென்றால் சக மாணவிகள் செய்த கிண்டலும் ஆஸ்மினை வேதனைப்படுத்தியுள்ளது. நீ தலையில் ஸ்கார்ப் கட்டி வருவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் காவி ஸ்கார்ப்பை கட்டி வருவோம் என்று அவர்கள் மிரட்டினார்களாம் என்றார் ஆஸ்மின்.
இந்தப் புகார் குறித்து முதல்வர் மய்யா கூறுகையில், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ஏற்றுத்தான் இந்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளோம் என்கிறார்.
இதற்கிடையே, கல்லூரி மாணவ, மாணவியருக்கென உடைக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்று மங்களூர் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
thatstamil

18/8/09

இஸ்ரேல் ஏற்படுத்திய தடையினால் ஃபலஸ்தீனில் 344 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்

0 கருத்துகள்
ஜெருசலம்:காஸ்ஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்திய தடையின் காரணமாக அவசர சிகிட்சை கிடைக்காமல் 22 நாள்கள் நீண்ட காஸ்ஸா தாக்குதலின் போது 344 நோயாளிகள் மரணமடைந்ததாக ஃபலஸ்தீன் அரசு கூறியுள்ளது.
இஸ்ரேல் ஏற்படுத்திய தடையின் காரணமாக மரணித்த கடைசி இரத்தசாட்சி ரஃபா நகரில் 42 வயதான உமர் அதாவுல்லாஹ் அல் ஸஹர் என்று ஃபலஸ்தீன் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி கூறினார். 2007 முதல் துவங்கிய இஸ்ரேல் தடையின் காரணமாக அல்ஸஹரைப்போல் 344 நோயாளிகள் இறந்துள்ளனர்.மிகவும் மோசமான நிலையில் சிறு நீரகம் பாதிக்கப்பட்ட அல்ஸஹருக்கு வெளிநாட்டில் சென்று சிகிச்சை அளிப்பதற்கான எல்லா சான்றுகள் இருந்தபிறகும் இஸ்ரேல் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஹைக்கமிஷனர் 34 பக்கமுள்ள அறிக்கையின் மூலம் இஸ்ரேல் ஏற்படுத்திய தடையை நீக்கி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். ஃபலஸ்தீன் மக்களின் நடமாடும் சுதந்திரம் உள்பட அடிப்படை உரிமைகளை மறுக்கும் இஸ்ரேலின் அநியாய நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
செய்தி:தேஜஸ்

ஈராக்கில் இதுவரை 4332 அமெரிக்க ராணுவத்தினர் இறப்பு - அசோசியட் பிரஸ்

0 கருத்துகள்
கடந்த 2003 ஆண்டிலிருந்து அமெரிக்க ராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்ததிலிருந்து தற்பொழுது வரை 4332 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக அசோசியட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3465 வீரர்கள் போராளிகளின் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

காபூலில் நேட்டோ ராணுவமுகாம் மீது தாக்குதல்:எட்டுபேர் மரணம்

0 கருத்துகள்
காபூல்:ஆஃப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற இருக்கவே நேட்டோ ராணுவ மையத்தின் மீது தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் மரணமடைந்துள்ளனர்.
போலீஸ்காரர் உட்பட ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை.ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினரும் கர்ஸாயியின் தேர்தல் பிரச்சார மேலாளருமான அவா ஆலம் நூரிஸ்தானியும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
ஏராளமான பாதுகாப்புகளை கடந்து ட்ரக்கில் வந்த போராளி முக்கிய நுழைவாயிலுக்கு வெறும் 30 மீட்டர் தொலைவில் வைத்து குண்டுகளை வெடிக்கச்செய்தார். கடந்த ஆறு மாதத்திற்கிடையில் நடைபெறும் மிகப்பெரியதாக்குதல் இது.
காபூல் நகரம் ஆக்கிரமிப்பு படையினரின் அதி தீவிர பாதுகாப்பால் திணரும் சூழலிலும் முக்கிய ராணுவ மையத்தின் மீது நடந்த தாக்குதல் மூலம் தங்களால் எந்த பாதுகாப்பையும் முறியடித்து தாக்குதல் நடத்த முடியும் என்ற தாலிபானின் எதிர் தரப்பினருக்கு விடும் சவலாக கருதப்படுகிறது. சீனியர் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஸ்டான்லி மக் கிரஸ்ஸலின் வசிப்பிடத்திற்கும்,அமெரிக்க தூதரகத்திற்கும் சமீபமாகத்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு கூட்டுப்படை அதிகாரிகளை குலை நடுங்கச்செய்த இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.தங்களது இலட்சியம் நேட்டோ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகமும் என்று தாலிபான் அறிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை தங்களால் தடுக்க இயலாது என்று பதிலளிக்கிறார் நேட்டோ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் இ.ட்ரம்பிளி.

மேலும் இச்செய்தி பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

17/8/09

துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம்

0 கருத்துகள்
துபை:தேரா துபையில் அபு ஹைல் சாலையிலிலுள்ள ரமதா ஹோட்டலுக்கு சமீபமாக கட்டிடப்பணி பூர்த்தியாகும் நிலையிலிருந்த 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
கட்டிட இடிபாடுகளுக்கிடையே எவராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய போலீஸ் நாயுடன் அதிகாரிகள் தேடுதல் நடத்திவருகின்றனர்.வியாபாரம் மற்றும் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடம் இது.கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று துபாய் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டிட்த்தின் ஒரு பகுதி வீழாமல் அப்படியே உள்ளது.கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்த 23 தொழிலாளிகள் கட்டிடத்தின் உள்ளேயிருந்து வந்த சப்த்த்தை கேட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகே கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது.இச்சம்பவம் நேற்று மதியம் மூன்றரை மணிக்கு நிகழ்ந்துள்ளது.
source:thejas

சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு

0 கருத்துகள்

கும்பக்கோணம்

போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும்,அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுவரும் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெஞ்சுறுதியுடன் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பு தென்னிந்திய வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்களாக மாறியது.தமிழகத்தில் பாசிச சில்லறைக்கும்பல்களுக்கு அடிபணிந்து காவல்துறை நடத்திய கெடுபிடிகளைக்கடந்து கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் நாள் மதியம் சரியாக 3 மணிக்கு துவங்கியது. சுதந்திரத்தின் பாதுகாவலர்களாவோம் என்ற கோஷத்துடன் இந்திய தேசத்தின் வீரமிகு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான கொள்கையுறுதிக்கொண்ட வீரர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் கம்பீரமாக அடியெடுத்துச்சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களில் பரவசமூட்டியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் சுதந்திர தின உறுதிமொழியை கூற பொதுமக்கள் அதனை திரும்பக்கூறினர்.நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் சிறப்புரையாற்றினார்.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி,முன்னாள் எம்.எல்.எ நிஜாமுத்தீன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.எ ரவிக்குமார்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு துணைத்தலைவர் இஸ்மாயீல்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் மெளலவி ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,சோசியல் டெமோக்ரேடிக் கட்சி கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கெ.எம்.ஷெரீஃப் ஆகியோர் உரையாற்றினர்.பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக பொதுச்செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்தீக் நன்றி கூறினார்.தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராணுவ மிடுக்கில் அணிவகுத்து செல்ல டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மைதானத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவுற்றது.அணிவகுப்பு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சரியாக காலை 10.30 மணியளவில் தொடங்கியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது கேடர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இந்திய தேசியக்கொடியை ஏந்தியவாறு ஆஃபீஸர்ஸ் முன்னணியில் செல்ல பின்னால் ராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய மரியாதையுடன் கேடர்கள் அணிவகுத்துச்சென்றனர்.மொத்தம் 40 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 33 கேடர்கள் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் ஹிந்துத்துவா பாசிசத்திற்கெதிராகவும்,ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.சுதந்திர தின அணிவகுப்பின் இறுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தை சோஷியல் டெமோக்ரேடிக் கட்சியின் தேசியத்தலைவர் ஈ.அபூபக்கர் சாஹிப் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்,"கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.சங்க்பரிவாரை காட்டி முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கிகளாக பயன்படுத்தி வருகின்றார்கள்" என்று குறிப்பிட்டார்.பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீது சுதந்திரதின உறுதிமொழியைக்கூறினார்.அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.எ ஸலாம் உள்ளிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றின் மாநில பொறுப்பாளர்களும் இதில் கலந்துக்கொண்டனர்.
நமதுசெய்தியாளர்
மேலும் கும்பகோணத்தில் நட ந்த அணிவகுப்பின் புகைப்படங்கள் இங்கே...

அஹ்மதாபாத்தில் இனக்கலவரம்

0 கருத்துகள்
அஹ்மதாபாத்:கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் ஷாஹ்னாபூரில் நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சிறு தகராறு கலவரமாக வெடித்தது.கல் வீச்சில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தை நோக்கி காவல்துறை கண்ணீர் குண்டு வீசி விரட்டியது.கலவரக்காரர்கள் மூன்று வீடுகளை தீ வைத்து கொழுத்தினர்.நேற்று முன்தினமும் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனை மூண்டதாகவும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும் போலீஸ் துணைகமிஷனர் எஸ்.என்.ரோஹில் தெரிவித்தார்.உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் இந்தப்பிரச்சனை ஒருவாரத்திற்கு முன்பே ஆரம்பித்ததாகவும், ஹிந்துமதத்தைச்சார்ந்த சிலர் நகோரிவாட் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அஹ்மதி மஸ்ஜிதிற்கு அருகில் சிறிய கோயிலை கட்டமுயன்றதாகவும் இதற்கு சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்ப்புதெரிவித்ததாகவும் தெரிவித்தார்.மஸ்ஜிதிற்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சென்றபொழுதான் கலவரம் உருவாகியது.கலவரப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி: தேஜஸ்

சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

0 கருத்துகள்
மைசூர்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு தடைச்செய்ததை கண்டித்து கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை தடைச்செய்த ஆளும் பா.ஜ.க அரசுக்கெதிராக 13 மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 40 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ்

16/8/09

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் சார்பாக "விரைவில் குணமடைய" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

0 கருத்துகள்

இந்தியாவின் 62 வது சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடும் முகமாக மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் புண்பட்ட மனங்களுக்கு பூக்கள் மற்றும் பழங்களுடன் விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனையுடன் கூடிய‌ வாழ்த்து அட்டைகள் வழங்கும் "விரைவில் குணமடைய" நிகழ்ச்சியை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் ஏற்பாடுச்செய்திருந்தது.

இந்நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 15 ஆம் நாள்) அமீரகத்தின் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் சிறப்பாக நடைபெற்றது.

துபாய்:அல் பராஹா மருத்துவமனை,ராஷித் மருத்துவமனை,மெட்கேர் மருத்துவமனை ஷார்ஜா:சுலைஹா ம‌ருத்துவ‌ம‌னை,குவைத்தி ம‌ருத்துவ‌ம‌னை அபுதாபி:அல் அஹ‌லியா ம‌ருத்துவ‌ம‌னை,லைஃப் லைன் ம‌ருத்துவ‌ம‌னை. ராஸ் அல் கைமா:அல் ஸ‌க்ர் ம‌ருத்துவ‌ம‌னை அஜ்மான்:ஷைக் க‌லீஃபா பின் ஸைத் ம‌ருத்துவ‌ம‌னை அல் அய்ன்:மாட‌ர்ன் கிளீனிக்,நியூ இந்திய‌ன் மெடிக்க‌ல்,அல் வ‌க‌ர் கிளீனிக் புஜைரா:புஜைரா ம‌ருத்துவ‌ம‌னை. இந்நிக‌ழ்ச்சி ம‌ருத்துவ‌ம‌னை அதிகாரிக‌ளின் முறையான‌ அனும‌தியோடு ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் EIFF பெண்க‌ள் அணியின‌ரும் மிகுந்த ஈடுபாட்டோடு க‌ல‌ந்துக்கொண்டு துபை அல் ப‌ராஹா ம‌ருத்துவ‌ம‌னையிலும்,அஜ்மான் ஷேக் க‌லீஃபா பின் ஸைத் ம‌ருத்துவ‌ம‌னையிலும் பெண்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ள் வார்டுக‌ளுக்கு சென்று ஆறுத‌ல் கூறி ப‌ழ‌ங்க‌ள் ம‌ற்றும் பூக்க‌ளை வ‌ழ‌ங்கின‌ர். EIFF ன் இந்நிக‌ழ்ச்சிக்கு ம‌ருத்துவ‌ம‌னை அதிகாரிக‌ளும் ஊழிய‌ர்க‌ளும் மிகுந்த‌ ஒத்துழைப்பை த‌ந்த‌தோடு உறுப்பின‌ர்க‌ளின் க‌ண்ணிய‌த்துட‌ன் கூடிய‌ க‌ட்டுப்பாட்டையும் சேவை ம‌ன‌ப்பான்மையையும் ம‌னதார‌ப்பாராட்டின‌ர்.

‌ருத்துவ‌ம‌னையிலுள்ள‌ நோயாளிக‌ளும் இந்நிக‌ழ்ச்சிக்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை தெரிவித்த‌ன‌ர்.EIFFஉறுப்பினர்கள் தம‌க்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை வெற்றிக‌ர‌மாக‌ முடித்த‌தோடு சுத‌ந்திர‌தின‌ வாழ்த்துக‌ளையும் அனைவ‌ரோடும் ப‌கிர்ந்துக்கொண்டனர்.

‌ம‌து செய்தியாள‌ர்.