Labels
30/5/09
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல் தொடர்கிறது.


நேற்று சிட்னியில் ஹாரிஸ் பார்க் அருகிலுள்ள வீட்டிலிருந்த ராஜேஷ் குமார் என்ற மாணவரை ஒரு கும்பல் பெட்ரோல் பாம்ப் எறிந்து தாக்கியது.இதில் 30 சதவீதம் உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் கத்திகுத்து காயமடைந்த பல்ஜிந்தர் சிங் மருத்துவமனையிலிருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டார்.ஆனால் கத்திகுத்து காயம்பட்டு அவசர சிகிட்சை பிரிவில் இருக்கும் ஸ்ராவண்குமார் நிலையில் மாற்றமில்லை.இது சம்பந்தமாக 5 நபர்களை போலீஸ் கைதுச்செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்திய மாணவர்களுக்கெதிரான இந்த தாக்குதல்கள் இனவெறி என்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடன் கைதுச்செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள இந்தியன் ஹைகமிஷனர் சுஜாதா சிங் விக்டோரியா பிரதமர் ஜோண் பிரம்பியை சந்தித்துவிட்டு இதனை வலியுறுத்தினார்.இத்தைய தாக்குதல்களை தடுக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.