30/6/09

அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஈராக் முடிவு

ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.
ஈராக் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. இதனால் அந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அணு உலைகளைச் சோதனையிட சர்வதேச முகவர் அமைப்புக்கு ஈராக் அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகக் கூறி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை ஈராக் மீது படையெடுத்தது.பெரும் தாக்குதலுக்குப் பின், அங்கு சதாம் ஹூசைன் தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று பரவலாகக் கோரப்பட்டது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட படைகள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையொன்றுக்கு அமெரிக்காவும் ஈராக்கும் இணங்கின.இந்நிலையில் அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு அறவித்தது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு முக்கியத்துவம் அளித்தார்.இவ் உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஜூன் 30 முதல் படைகளைப் படிப்படியாக விலக்கிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படையின் முதல் பிரிவு ஈராக்கில் இருந்து வெளியேறுகிறது.
அமெரிக்கப் படைகள் வெளியேறும் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.படைகள் வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன. ஜூன் 30 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவது பெரும் வெற்றி என்று ஈராக் பிரதமர் அல்மாலிகி தெரிவித்தார்.ஈராக்கிய நகரங்கள் மற்றும் வீதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் செவ்வாய்க்கிழமை முதல் முகாம்களுக்குள் முடக்கப்படவுள்ளனர்.அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டிலேயே இங்கிருந்து முழுப்படைகளும் வெளியேறுமென்பது குறிப்பிடத்தக்கது.

பர்தா பற்றிய சர்கோசியின் பேச்சுக்கு பால்தாக்கரே கம்பளம் விரிப்பு

பிரெஞ்சு அதிபர் சர்கோசியைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே பர்தாவை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி புர்கா பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்றும் அதனைத் தடை செய்யும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்படும் என்று கூறியிருந்தார். சர்கோசியின் இந்தப் பேச்சைச் சுட்டி சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில், சர்கோசியைப் புகழ்ந்துவிட்டு பர்தாவை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.

நான் சர்கோசியை வாழ்த்துகிறேன். அவர் முன்மாதிரி ஆட்சியாளர். அவர்களின் (பிரான்சு) ஆட்சியாளர்கள் வாக்குகளுக்காக முஸ்லிம்களுக்கு சலுகைகளை அளிப்பதில்லை. நம்முடைய ஆட்சியாளர்கள் பர்தாவை தடை செய்ய வேண்டும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சாம்னாவின் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.சர்கோசி உறுதியான மனிதர். நம்முடைய ஆட்சியாளர்களைப் போன்று உறுதியற்றவர் இல்லை. நம்முடை நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களில் பாதிபேர் தங்களுடைய சமாதிகளைத் தேட வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு-17 ஆண்டுகளுக்குப் பின் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.
1992ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.
பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.
தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளது
இந் நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி லிபரான்.அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.
சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங் ஆகியோரும் அடக்கம்.
கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.

தாமதத்துக்கு சிலரே காரணம்..லிபரான்:
சிலரது ஒத்துழைப்பு இல்லாமை, சிலரது நடவடிக்கைகள் காரணமாகத் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானதாக கூறியுள்ள லிபரான், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Source:thatstamil

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியல்:முன்னணியில் ஈராக்,ஆஃப்கானிஸ்தான்,பாகிஸ்தான்

பாதுகாப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் உலகத்தில் மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிப்பால்

பாதிக்கப்பட்ட ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முக்கிய இடத்தை பெறுகின்றன.
ஃபாரின் பாலிஸி என்ற மாத இதழும், ஃபண்ட் ஃபார் பீஸ் என்ற சுதந்திர ஆய்வுக்குழுவும் இணைந்து ஆண்டுதோறும் தோல்வியடைந்த நாடுகளை தேர்ந்தெடுக்கின்றன.அமெரிக்காவின் தலையீட்டினால் பாதிப்படைந்த சோமாலியாதான் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. ஜிம்பாப்வே,சூடான்,சாட்,கோங்கோ ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களை பெறுகின்றன.ஈராக்கிற்கு 6-வது இடமும், ஆஃப்கானிஸ்தானிற்கு 7-வது இடமும், பாகிஸ்தானிற்கு 10-வது இடமும் பட்டியலில் கிடைத்திருக்கிறது.
மக்கள் தொகை, அகதிகள், வாழ்க்கைப்பிரச்சனைகள், பொருளாதார வீழ்ச்சி, சட்ட-ஒழுங்கில் வீழ்ச்சி, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் 5-வது முறையாக தோல்வியடைந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
177 நாடுகளை ஆய்வுக்குட்படுத்தியதில் இந்தியாவுக்கு 87-வது இடம்.அண்டை நாடுகளான இலங்கைக்கு 12-வது இடமும்,பங்களாதேஷுக்கு 19-வது இடமும்,நேபாளம் 25-வது இடத்தையும் பிடித்துள்ளன.பட்டியலில் கடைசி 10 இடங்களில் நார்வே,பின் லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, டென்மார்க், நியூஸி லாந்து,ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை உள்ளன. கடந்த முறை சுட்டிக்காட்டப்பட்ட வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளில் இந்தியாவுக்கு போதுமான முன்னேற்றம் ஒன்றும் அடைய முடியவில்லை என்று மேற்க்கண்ட ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.
News Source: Thejas Malayalam Daily.

29/6/09

பலஸ்தீன் சிறுவர்கள் மீது நடத்தப்படும் சித்திரவதைகளுக்கு மனித உரிமை ஆணையங்கள் கடும் கண்டனம்

மேற்குக்கரையில் 14 வயது நிரம்பிய இரு சிறுவர்களைத் தாக்கி, அவர்களின் கண்களை குருடாக்கியதாக இஸ் ரேலிய சிப்பாய்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேற்குக்கரை வீடொன்றை சுற்றிவளைத்த போது இச்சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். ்இங்கு 10 மணி நேரம் நின்று கொண்டு எதை யும் செய்யாமல் இருப்பது சோர்வைத் தரு கிறது. எனவே நீங்கள் பலஸ்தீனர்களை அடித்துத் தாக்குங்கள் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளதை சர்வதேச மனித உரிமை நிறுவனம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.

சென்ற மாதம் 14 வயது நிரம்பிய சிறுவர் கள் உட்பட 150 பலஸ்தீனர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படையினர் இவர்களை துஷ் பிரயோகம் செய்து தாக்கி, சித்திரவதை செய்தது நிரூபிக்கப் ப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களைச் சித்திரவதை செய்வதே மத்திய கிழக்கிலுள்ள ஒரே ஒரு ஜனநாயக நாடு எனக் கருதப்படும் இஸ்ரேலியப் படை வீரர்களின் செயல்பாடாக மாறியுள்ளமை கண்டிக்கத்தக்கது என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கழிவறைக்கு தங்களை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறிய கைதிகள் பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். சில கைதிகள் கண்கள் கட்டப்பட்டு கழி வறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இத னால் காயமடைந்து அவ்விடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர். பதின் வயதினரே இவ்வாறு அடித்துத் துன் புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படு கிறது. இவ்வாறு இஸ்ரேலியப் படைகள் சிலர் அடித்துத் துன்புறுத்தும்போது ஏனையவர்கள் பார்த்து கேளிக்கையாக சிரிக்கும் காட்சி தனது நெஞ்சை உறுத்திய தாக இஹாப் சம்ஷலாவி என்ற பல் கலைக்கழக மாணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Thanks:Meelparvai.net

மாவோயிஸ்டுகள் எங்கிருந்து வருகிறார்கள்?- அஜித் ஸாஹி(எடிட்டர் அட் லார்ஜ், டெஹல்கா)



தற்ப்பொழுது எல்லோருடைய கண்களும் உற்று நோக்குவது மேற்கு வங்காளம் லால்கரில் ராணுவ நடவடிக்கைகளை. காவல்துறையும்,துணை ராணுவப்படையினரும் லால்கரில் மாவோவாதிகளை துரத்துவதை காணும்பொழுது இந்திய நகரங்களில் வசிப்பவர்களும்,ஆங்கிலம் பேசும் மத்திய தர வர்க்கமும் மகிழ்ச்சியடைகிறார்கள்.அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நக்ஸல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஏன் தோல்வியடைகின்றன என்பதைப்பற்றி எவரும் கேள்விக்கேட்பதில்லை.ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் டெஹல்காவிற்காக புலனாய்வு செய்தி அறிக்கையை அளித்த எனக்கு இந்த மாநிலங்களில் அரசுகள் முழு அளவில் தோல்வியை தழுவியிருக்கின்றன.என்பதை உறுதியாக கூற இயலும்.
இந்த இரண்டுமாநிலங்களிலும் நடப்பது ஒருதலைபட்சமான போர்.ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி நீங்கள் எவரும் பத்திரிகைகளில் படித்திருக்கமாட்டீர்கள்.கடந்த ஜனவரி முதல் இந்த இரண்டு மாநிலங்களிலும் பல முறை நான் சென்றிருக்கிறேன்.இங்குள்ள நக்ஸல்களால் பாதிப்படைந்த பிரதேசங்களில் எத்தனையோ மணி நேரங்கள் பயணம் செய்திருக்கிறேன். சத்தீஷ்கரில் தெற்கு பஸ்தர் பழங்குடி மக்கள் வாழக்கூடிய மாவட்டங்களான தந்தேவாடா,பிஜாபூர் ஜார்கண்டில் லதேஹர் இப்பிரதேசங்களிலெல்லாம் எங்கு அரசு நிர்வாகம் இயங்குகிறது?,எங்கு காவல்துறை செயல்படுகிறது? அப்படியொன்றே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நான் லதேஹரில் இருந்தேன்.சி.ஆர்.பி.எஃபால் 5 நிரபராதிகளான கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதைக் கண்டித்து மாவோயிஷ்டுகள் பந்த் அறிவித்திருந்த தினம் அது.குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது நான் அந்த பகுதிகளில் சஞ்சரித்திருப்பேன்.எந்த போலீஸ்காரரையும் காணமுடியவில்லை.இதற்கிடையில் போலீஸ் வாகன அணிவகுப்பை எங்கு காண இயலும்?.சில மணி நேரங்களுக்கு பிறகு குறைந்தபட்சம் 200 மாவோவாதிகள் ஒரு கிராம ரெயில்வே ஸ்டேசனை சுற்றிவளைத்து ஒரு ரெயிலை 4 மணி நேரம் பிடித்துவைத்திருந்தார்கள்.அப்போது எங்கிருந்தது அரசு நிர்வாகம்?.எந்த ஒரு போலீஸ்காரனையும் அந்த சுற்று வட்டாரத்திற்குள்ளேயே காணமுடியவில்லை.
இந்த இரண்டு மாநிலங்களிலும் நான் பிரயாணம் செய்யும்பொழுது ஒவ்வொருமுறையும் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரிப்பார்கள்.ஏதாவது ஆபத்தில் சிக்கினால் போலீஸ் காப்பாற்றும் என்ற எதிர்ப்பார்ப்பு வேண்டும் என்று.ஆனால் நான் என்னுடைய சொந்த உத்தரவாதத்தோடுதான் பிரயாணம் செய்வது. இந்த வருடம் குடியரசு தினமன்று நான் சத்தீஷ்கரின் தெற்குப்பகுதிகளிலிருந்தேன்.அப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கறுப்பு தினம் கடைப்பிடித்தார்கள்.ஆனால் இதற்கு முன்பு ஒருபோதும் இப்பகுதி மாவோவாதிகளின் கைகளிலில்லை.ஆனால் தற்போது மாவோவாதிகளின் கைகளில்.ஒரேயொரு காவல்துறை அதிகாரியை மட்டும்தான் நான் அந்த பிரதேசத்தில் பார்த்தேன்.துணிச்சல்காரனான அவர் மாவோயிஸ்டுகள் ஏற்படுத்திய தடைகளை சாலைகளிலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். மீதமுள்ள அனைத்து காவலர்களும் காவல்நிலையத்தில் பாதுகாப்புடன் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அப்பகுதிகளுக்கு வருவதேயில்லை என்று நான் கூறவில்லை.மாறாக அவர்களுக்கு ஓரிடத்திலும் ஒரு கட்டுப்பாடில்லை.வாகன அணிவகுப்புடன்தான் அவர்கள் செல்வதெல்லாம்.போகிற போக்கில் அப்பாவிகளை சுட்டுக்கொல்வதிலும் தொந்தரவுச்செய்வதிலும் அவர்களுக்கு தயக்கம் இல்லை.பலமுறையும் அவர்கள் கிராமங்களை தீக்கிரையாக்குவார்கள்.அது முடிந்தவுடன் மீண்டும் காவல்நிலையங்களுக்கு திரும்பிச்செல்வார்கள்.இதுதான் உண்மை.சட்ட-ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையினருக்கு ஒரு பங்குமில்லை.அதனால் இன்று அப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஸல்வாஜுத் என்ற படை.அப்படியானால் காவல்துறை எப்பொழுது களத்திலிறங்குகிறதோ அப்பொழுது கிராமவாசிகள் தான் காவல்துறையின் அராஜகத்திற்கு பலியாவார்கள்.அவ்வமயம் மாவோவாதிகளும் இருக்கமாட்டார்கள்.
இனி ஏன் இப்பிரதேசங்கள் மாவோவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும்.ஏன் இவ்வளவு தூரம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மற்றுமுள்ள அதிகாரிகளும் லால்கடின் விஷயத்தில் இவ்வளவு கவலைக்கொள்கிறார்கள்? இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையோருக்குத்தெரியும் இந்தியாவின் பல பகுதிகளும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லையென்று.சமீபகாலம் வரை பீகாரின் பல பகுதிகளின் நிலை இவ்வாறுதான். தற்ப்பொழுதும் உத்திரபிரதேசின் பல பகுதிகளின் நிலைமையும் அதுதான்.மும்பையில் அண்டர்வேல்ட் தாதாக்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் உண்டு.அங்கு பிரவேசிப்பதற்கு எந்த காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் உள்ளது.
தற்ப்பொழுது லால்கரில் ராணுவ நடவடிக்கையை முன் நிறுத்தி கேள்வி கேட்கிறேன்:ஏன் பிரதமரும்,உள்துறை அமைச்சரும்,ஊடகங்களும்,மத்திய தர மக்களும் இந்த விசாலமான பிரதேசங்களை திரும்ப கைப்பற்ற முயலவில்லை? உ.பி.யிலும் பீகாரிலும் எத்தனையோ பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.அங்கெல்லாம் ஏன் ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை.பதில் எளிதானது.
சத்தீஷ்கரிலும்,ஜார்க்கண்டிலும்,மேற்குவங்காளத்திலும் பெருமளவில் கனிம வளங்கள் கொட்டிகிடக்கிறது.இந்த தாது வளங்கள் அபரிதமான சொத்துக்களாகும்.அதனை கைப்பற்றுவதற்காக எத்தனை லட்சம் மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தாலும் நமது மத்திய தர வர்க்கத்தினருக்கோ பத்திரிகைகளுக்கோ ஒரு கஷ்டமுமில்லை.பத்திரிகைகள் தற்ப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பங்களை நிறைவுச்செய்துக்கொண்டிருக்கின்றன.என்ன விலை கொடுத்தும் எந்த தகிடுதித்தங்கள் நடத்தியும் இந்த கனிம வளங்களை கைப்பற்றவேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம்.இந்த பிரதேசங்களுக்கு நாம் செல்லும்பொழுது நமக்கு தெரியும் யார் அநியாயக்காரன் யார் இரைகள் என்பது.
அரசு நிர்வாகம்தான் இங்கு அக்கிரமமான வழிமுறைகளை பின்தொடர்கிறது என்றுநமக்குபுரியும். அரசு நிர்வாகத்தின் அனைத்து பிரிவினரும், அரசியல் வாதிகளும், நீதியை நிலை நிறுத்துபவர்களும்,அதிகாரிகளும் இதில் பங்காளிகள். உண்மையில் இங்கு பழங்குடி மக்கள்தான் இப்பிரதேசங்களில் பலியாடுகளாகிறார்கள்.அவர்களைத்தான் நாம் மாவோவாதிகள் என்று அழைக்கிறோம்.இவர்கள்தான் அநீதமான நடவடிக்கைகளால் துடைத்தெறியப்படுகிறார்கள்.எத்தனை காலம் நாம் இதனை தொடர்வோம்?.சமூக நீதிக்கு தகுதியுடையவர்களாக அல்லவா நாம் இவர்களை காண்கிறோம்.அவர்களை குற்றவாளிகளாக ஆக்கி தேசத்துரோகிகளாக சித்தரித்து அழித்துவிட நாம் தயாராகிறோம்.
ஒரு விஷயத்தை நாம் சிந்திக்கவேண்டும் அமெரிக்காவில் அதிபர் பாரக் ஒபாமா முதல் முக்கிய ராணுவ அதிகாரிகள் வரை வெளிப்படையாக கூறும் ஒரு உண்மை உண்டு, எத்தனை ராணுவ நடவடிக்கைகள் எடுத்த பிறகும், எவ்வளவுதான் ஆயுதங்களை பிரயோகித்த பிறகும் ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எதிராளிகளை அடக்கியொடுக்கவோ, அந்நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, என்பதுதான்.அதுமட்டுமல்ல தற்போது அவர்கள் கூறுவது,"இந்த ராணுவ நடவடிக்கைகள் தீவிரவாத மிரட்டலை உலகத்தில் அதிகரிக்கச்செய்கிறது" என்று.இந்தியாவில் மத்திய தர வர்க்கமும் இந்த உண்மையை அடையாளம் காண்பது நல்லது.இல்லாவிட்டால் வரும் நாட்களில் அதிகமான பயங்கவரவாத செய்திகளை நாம் கேட்க நேரிடும்.
கட்டுரையாளர் டெஹல்காவின் எடிட்டர் அட் லார்ஜும் பிரபல பத்திரிகையாளருமான அஜித் ஸாஹி.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.

உலக சித்திரவதை தினத்தையொட்டி NCHRO வெளியிட்ட பத்திரிகை செய்தி

செய்தியைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

மலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யாசிங்கின் கூட்டாளியின் பங்கு பற்றி தீவிர விசாரணை

புதுடெல்லி: கடந்த வியாழனன்று டெல்ஹி நந்த் நகரில் கைதுச்செய்யப்பட்ட சைலேந்திர சவுகானுக்கு மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
மலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான பிரக்யாசிங்கின் கூட்டாளிதான் சவுகான். மலேகான் குண்டுவெடிப்பில் சவுகானின் தொடர்பை விசாரிப்பதற்கு குஜராத்,மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காவல்துறை தனி பிரிவுகள் செல்ல இருக்கிறது.மலேகான் குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டிய அபினவ் பாரத் அமைப்புடனும், விஸ்வ ஹிந்து மஹாசங்குடனும் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.அபினவ் பாரத்தின் உறுப்பினர் சவுகான் என்பது காவல் துறை விசாரணையில் உறுதியானது.
மலேகான் குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டிய அந்த இயக்கத்தின் தலைவர்களோடு சவுகான் தொடர்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யாசிங் கைதுச்செய்யப்படும்வரை அவரோடு சவுகான் தொடர்பிலிருந்தார்.ஏராளமான வழிப்பாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்தியதில் சவுகானுக்கு பங்குண்டு என்ற விபரம் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.அபினவ் பாரத் என்ற அமைப்பு மட்டுமல்லாமல் விஸ்வஹிந்த் மஹா சங்கென்ற அமைப்பையும் சவுகான் சொந்தமாக துவக்கியிருந்தார்.
மலேகான் குண்டுவெடிப்பில் வெடிக்குண்டு தயாரித்தவர்களோடு சவுகானுக்கு தொடர்பிருப்பதால் இவருக்கு வெடிக்குண்டு தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் என்று காவல்துறை கருதுகிறது.இவரைப்பற்றிய விபரங்களை குஜராத்,மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினருக்கு அளிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
news source:thejas malayalam daily

28/6/09

நதாவைக் கொன்றது பி.பி.சி?

டெஹ்ரான்:ஈரானில் அரசுக்கெதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் இரத்த சாட்சியாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும் நத ஆகா சுல்தானின் மரணம் பி.பி.சி திட்டமிட்டு நடத்திய கொலை என்று அதிர்ச்சி தகவலை ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இது சம்பந்தமாக செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட பி.பி.சி நிரூபர் ஜோன் லெய்ன் வாடகைக்கு ஏற்பாடுச்செய்த கொலையாளிதான் நதாவை கொன்றதாக ஃபார்ஸ் தெரிவிக்கிறது.
ஜோன் லெய்ன் தயாரித்துவரும் ஈரானுக்கெதிரான டாக்குமென்ட்ரிக்காக(குறும்படம்)இந்த கொலையை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.நதாவின் மரணத்தின் வீடியோ காட்சிகள் மிக வேகமாக இணையதளம் வழியாகவும், செய்தி சானல்கள் வழியாகவும் பரவியதற்கு ஏற்கனவெ அவர்கள் போட்டு வைத்திரூந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று சந்தேகிக்க இடமிருப்பதாகவும் ஃபார்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கை கூறுகிறது.

News source:Thejas Malayalam Daily

லெபனான் பிரதமராக ஸஃத் ஹரீரி தேர்வு

லெபனானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிப்பதில் நிலவிய குழப்பங்களின் இறுதியில் பிரதமராக ஸஃத் ஹரீரி தேர்வுச்செய்யப்பட்டார்.
புதிய அரசை உருவாக்குவதற்கு அதிபர் மைக்கேல் சுலைமான் ஹரீரிக்கு அழைப்பு விடுத்ததாக அதிபரின் அலுவலகத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.128 உறுப்பினர்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 86 உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்ற ஹரீரிக்கு அதிபர் சுலைமான் பாராளுமன்ற சபாநாயகரோடும், பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கலந்தாலோசித்தபின் இந்த அழைப்பை விடுப்பதற்கு முடிவெடுத்தார்.
2005-இல் முன்னாள் பிரதமரும் தந்தையுமான ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அரசியலில் களம் இறங்கினார் ஸஃத் ஹரீரி.கடந்த 7-ந்தேதி நடைப்பெற்ற தேர்தலில் 39 வயதுடைய ஹரீரி தலைமையிலான மார்ச் - 14 கூட்டணி 71 இடங்களைப்பெற்றது.முக்கிய எதிர்க்கட்சியான ஹிஸ்புல்லாவின் தலைமையிலான மார்ச் - 8 கூட்டணிக்கு 57 இடங்கள் கடைத்தது. நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ஸஃத் ஹரீரியை ஐக்கிய அரசை உருவாக்குவது சம்பந்தமாக சந்தித்துபேசினார்.தனியார்துறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட பொருளாதாரதிட்டங்களை நடப்பில் கொண்டுவருதல் என்பது ஹரீரியின் தேர்தல் வாக்குறுதி.சவூதி அரேபியாவில் வளர்ந்த ஹரீரி லெபனானின் பிரதமராவது மத்தியகிழக்குப்பகுதியில் லெபனானுக்கு முக்கியத்தைப்பெற்றுத்தரும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக மீண்டும் ஷியாத்தலைவரும், ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் ஆதரவாளருமான நபீஹ் பெரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து 5-வது முறையாக பெரி இந்தப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.சிரியா ஆதரவுப்பெற்ற அமல் கட்சியின் தலைவர்தான் பெரி.
தேச ஒற்றுமையும், சமாதானமும் பேணுவதற்கான முயற்சியின் ஒரு பகுதிதான் சபாநாயகர் தேர்தல் என்று ஹரீரி கருத்துத் தெரிவித்தார். லெபனானில் அதிகார பங்கிடுதல் முறைப்படி அதிபர் கிறிஸ்தவராகவும், பிரதமர் சுன்னி முஸ்லிமாகவும், சபாநாயகர் ஷியா முஸ்லிமாகவும் இருக்கவேண்டும் என்பதற்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பாராளுமன்ற சீட்டுகளும், கேபினட் பதவிகளும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையில் துல்லியமாக பங்கிடப்படும்.
News Source:Thejas Malayalam Daily

27/6/09

சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் கூட்டாளி கைது!

புது டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் மிக நெருங்கிய நண்பர் சைலேந்திர சவுகான்(26) என்ற உதய் ப்ரதாப் சிங் என்பவரை, நேற்று டெல்லியிலுள்ள நந்த்நகாரியில் வைத்து டெல்லி காவல்துறை கைது செய்தது.

இவர் விஷ்வஹிந்து மகாசங்க் என்ற இயக்கத்தோடு தொடர்புடையவராவர். இவர் மீது கிறித்தவ ஆலயங்களின் மீதும் பாதிரியார்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மைக்கேல் ஜாக்ஸன்:வண்ணகரமான வாழ்க்கை, எதிர்பாராத மரணம்

பாப் இசை உலகின் மன்னனும் விவாதங்களின் தோழனுமாகிய மைக்கேல் ஜாக்ஸன் சர்ச்சைக்குரிய தனது வாழ்க்கை நிகழ்வுகளைப்போலவே மரணத்திலும் புதிர்களை உருவாக்கிவிட்டு விடைப்பெற்றுவிட்டார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளையும்,துக்கங்களையும் இசையால் மாற்ற முற்பட்ட ஜாக்ஸன் மீண்டுமொரு வருகைக்கு திட்டமிட்டபொழுதான் எதிர்பாராத சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துவிட்டார்.இசையுலகமும் ஜாக்ஸனும் மிகவும் எதிர்பார்த்திருந்த புதிய ஆல்பத்தின் தொடர் வெளியிடுவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதமிருந்தது.
அராஜகங்கள் நிறைந்த வாழ்க்கைமுறைகளும்,உடல் அழகை அதிகரிக்க நடத்திய சிக்கலான அறுவைசிகிட்சைகளும் ஜாக்ஸனின் 50 வயதிலேயே மரணத்திற்கு காரணமானதாக கருதப்படுகிறது.எப்பொழுதும் இசை ரசிகர்களுக்கும் ஊடகங்களுடனும் இருந்த ஜாக்ஸன் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தார்.மயக்க மருந்து உபயோகம்,திருமணங்கள்,சொந்த குழந்தையை மாடியிலிருந்து கீழ தள்ளி கொல்ல முயற்சி என ஜாக்சனின் வாழ்க்கை நிகழ்வுகள் பத்திரிகைகளின் சூடான செய்திகளானது.

இறுதியில் அவருடைய மரணமும் உலக பத்திரிகைகளின் தலைப்புச்செய்தியாக மாறியது.மரணச்செய்தியை அறியவும்,அனுதாபங்களை தெரிவிக்கவும் நெட்வொர்க்கில் ஏற்ப்பட்ட நெரிசல் இணையதள செயல்பாட்டையே பாதித்தது.
1958 ஆகஸ்ட் 29-இல் அமெரிக்காவின் இன்டியானா காரியில் பிறந்த ஜாக்ஸன் அவருடைய குடும்பத்தின் 9 பேரில் 7-வது நபர்.தனது சகோதரர்களுடன் இணைந்து ஜாக்ஸன் - 5 என்ற குரூப்பிற்காகத்தான் ஜாக்ஸன் முதன்முதலாக மேடையேறினார்.1980களில் தான் ஜாக்ஸன் பிரபலமானார்.ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் 75 கோடி இதுவரை விற்றுதீர்ந்துள்ளது."திரில்லர்" என்ற ஆல்பத்தின் 65 லட்சம் காப்பிகளை அவருடைய ரசிகர்கள் வாங்கியுள்ளனர்.டேஞ்சரஸ்(29 லட்சம்),பாட்(28 லட்சம்),ஆஃப் தி வால்(19 லட்சம்),ஹிஸ்டரி(18 லட்சம்),இன்விஸிபிள்(8 லட்சம்)ஆகிய ஆல்பங்கள் இறங்கிய உடனே வேகமாக விற்றுதீர்ந்தது.13 கிராமி விருதுகள் பாடகரும், நடனக்கலைஞருமான ஜாக்சனின் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தது.ஜாக்ஸனின் "மூன் வாக்","டாண்ஸ்" என்பவை மிகப்பிரபலமானது.

1994-இல் எல்விஸ் பிரஸ்லியின் ஒரே மகளை திருமணமுடித்த ஜாக்ஸன் 1996-இல் விவாகரத்து செய்தார்.அதே ஆண்டில் டெப்பி ரோவியை திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளின் தந்தையானார்.1999-இல் இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.பின்னர் ரகசிய உறவின் மூலம் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.பிரின்சு மைக்கேல் - 1, பாரிஸ் மைக்கேல்,பிரின்சு மைக்கேல் - 11 என்ற குழந்தைகளுடனான இவருடைய நடவடிக்கையும் சர்ச்சையானது.
பின்னர் வாழ்க்கையில் நடந்த கறுப்பு அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று தனது பெயரை மீக்காயீல் என மாற்றினார்.லண்டனில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுச்செய்து 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்ற நிலையில் தான் உலகம் போற்றிய எக்காலத்திற்கும் மிகச்சிறந்த பாப் இசை நாயகனின் வாழ்க்கைக்கு திரைவிழுந்தது.
news source:thejas malayalam daily

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்துறை அமைச்சர் வீட்டை சோதனையிட நீதி மன்றம் உத்தரவு


திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பீமாப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக கேரள மாநில உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், டி.ஜி.பி ஜேக்கப் புணூஸ் ஆகியோரின் வீடுகளை சோதனைச்செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டது.

சப்-கலெக்டரின் உத்தரவின் பேரிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூற ஏற்பாடுச்செய்த போலி ரேகைகளும் அவற்றை உருவாக்க உபயோகித்த பொருள்களையும் மேற்கண்ட இருவருடைய வீடுகளிலிருந்து கண்டெடுத்து நீதி மன்றத்தில் ஆஜராக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் எம்.எம்.பஷீர் உத்தரவிட்டார்.

கடந்த மே 17 அன்று பீமாப்பள்ளியில் கேரள காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் மரணிக்கவும், ஏராளமானோருக்கு காயம் ஏற்படவும் செய்த இந்த கொடூர நிகழ்விற்கு முன் மாநில ஸ்பெஷல் பிராஞ்சும், உளவுத்துறையும் அளித்த தகவல்களை புறக்கணித்துக்கொண்டு நடத்திய கொடூரத்துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் சப்-கலெக்டரின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறி போலி ரேகைகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிபதி மேற்க்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

உளவுத்துறை டி.ஜி.பி சிபி மாத்யூவிடம் இந்த சோதனையை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இத்துடன் பூந்துறை காவல்நிலைய ரேகைகள்,முன்னாள் வட்டார ஆய்வாளர் பிரதீப் குமார், துணை ஆய்வாளர் ஆகியோரின் பாக்கெட் டயரி,நோட் புத்தகங்கள் மற்றும் ஆயுத பதிவேடு ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜராக்க தற்போதைய பூந்துறை வட்டார காவல்நிலைய ஆய்வாளருக்கும் உத்தரவிட்டார். நெய்யாற்றின்கரையைச்சார்ந்த வழக்கறிஞர் பி.நாகராஜ் என்பவர்தான் இந்த பொதுநல வழக்கைத்தொடர்ந்தவர்.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

26/6/09

யூத நாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.-ஹமாஸ் அறிவிப்பு


ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான ஃஹாலித் மிஸ் அல் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் யூதர்களுக்கான தனி நாடு என்ற கோரிக்கையை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் அதே சமயம் இரண்டு நாடு என்றக்கொள்கையை ஆதரிக்கவேண்டுமானால் 1967 ஆம் ஆண்டிருந்த எல்லைகளடங்கிய கிழக்கு ஜெருஸலத்தை தலைநகராகக்கொண்ட ஃபலஸ்தீன் நாடு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.


மேலும் அவர்கூறுகையில்,"நாங்கள் மீண்டும் மீண்டும் யூதர்களுக்கான தனி நாடு என்றக்கொள்கையை மறுக்கிறோம்.மேலும் எங்களின் இந்த கொள்கையை கைவிட அன்புக்கட்டளை போடப்பட்டாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எச்சரிக்கிறோம்.இஸ்ரேல் தலைவர்களின் யூத நாடு என்ற கோரிக்கை இனவெறிக்கான அழைப்பு.இவர்களின் கோரிக்கைக்கும் நாஜிக்களின் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடுமில்லை.இவர்களின் கோரிக்கையை சர்வதேச சமூகம் பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும்.தரை,கடல் மற்றும் வான் வழிகளை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று நெதன்யாகு கூறுவது அவர்களது சபலப்புத்தியைக்காட்டுகிறது.இது நிச்சயமாக நாடாக இருக்காது மாறாக பெருந்திரள்க்கொண்ட சமூகத்திற்கு சிறையாகவே இருக்கும்.எங்களை ஈரானும்,சிரியாவும் ஆதரிக்கிறது.சர்வதேச சட்டங்களை தொடர்ந்து நிந்தித்துவரும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திலிருந்து ஃபலஸ்தீன் தேசத்தை மீட்டெடுக்க ஆயுதவழி போராட்டத்தை வேறு வழியில்லை.இதைத்தவிர மாற்று வழி வேறு இல்லை.அமைதியானப்போராட்டம் என்பது சிவில் உரிமைகளை பெறுவதற்குதான் உதவுமேதவிர ஆயுதப்பாணிகளான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க உதவாது.


ஒபாமாவின் புதிய அணுகுமுறையை வரவேற்கிறோம்.இது எந்தவொரு நிபந்தனையில்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் படி.ஒபாமாவின் பேச்சு செயலுக்கு வரவேண்டும்.ஏனெனில் காஸ்ஸாமுனையில் ஃபலஸ்தீனிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகிவருகிறார்கள்.ஃபதஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையோடிருக்கிறோம்.ஃபதாஹுடனான பேச்சு வார்த்தை வருகிற ஞாயிறன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடரும்.


மேற்குகரையில் ஃபலஸ்தீன் படைகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்காணித்து வரும் அமெரிக்க பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெஃப்டினன்ட்.கீத் டெய்டனை உடனே வெளியேற்ற வேண்டுமென்று ஒபாமாவை கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.டெய்டனின் குழு ஃபலஸ்தீன் படைகளுக்கு மேற்கு கரையின் 4 முக்கிய நகரங்களில் பயிற்சி அளிக்க இஸ்ரேல் சுய உரிமையை வழங்கியுள்ளது.இதனை இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் ஒரு அறிக்கையில் ஃபலஸ்தீன் படைகள் தங்களது நடவடிக்கைக்கான நேரத்தை அதிகரிக்கலாம்.ஆனால் மேற்குகரையின் நகரங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து செயல்படும் என்று அழுத்தம் திருத்தமாகாக கூறியுள்ளது.இஸ்ரேல் ஏற்கனவே மேற்குகரையில் 3 நகரங்களில் ஃபலஸ்தீனிய படைகளின் பாதுகாப்புக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தியுள்ளது.இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இந்த நகரங்களிலிருந்து இஸ்ரேலிய படைகள் முழுவதும் வெளியேறுவதை தடுத்து நிறுத்துகிறது.


News source:Al jazeera

உலகின் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி...)


உலகின் பிரபல பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்ஸன் (50) இன்று அதிகாலை 4 மணியளவில் இதய துடிப்பு திடீரென தடைப்பட்டதைத்தொடர்ந்து(Cardiac arrest) மரணமடைந்தார்.வீட்டில் நினைவற்று கீழே விழுந்ததைத்தொடர்ந்து யு.சி.எல்.எ மருத்துவமனையில் இரவு 12.30 மணிக்கு சிகிட்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜாக்ஸன் தொடர்ந்து நினைவற்ற நிலையிலேயே இருந்தார்.


1958 ஆகஸ்ட் 29 இல் சிக்காகோவில் இந்தியானா காரியில் ஜாக்ஸன் பிறந்தார்.த்ரில்லர்,டேஞ்சரஸ்,பாட்,ஹிஸ்டரி என்பவை இவருடைய புகழ்ப்பெற்ற பாப் இசை ஆல்பங்களாகும்.இதற்கிடையில் ஜாக்ஸனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.இதயம் திடீரென செயலிழந்ததைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபிறகும் நினைவில்லமல் இருந்ததுதான் சந்தேகத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் ஜாக்ஸன் இஸ்லாத்தை தழுவினார்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் ஜாக்ஸன் தனது பெயரை மீக்காயீல் என்று மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(மைக்கேல் என்பதன் அரபுச்சொல்).அல்லாஹ் அவருடைய பிழைகளை பொறுத்து மறுமையில் நற்பாக்கி யத்தை வழங்குவானாக!


News Source:Thejas malayalam daily

25/6/09

சித்திரவதை எதிர்ப்பு தின சிறப்புச்செய்திகள் -ஏகாதிபத்தியத்தின் பலியாடுகள்

பக்ராம் to குவான்டனாமோ சித்திரவதைக்கூடத்தில் அவதிப்பட்ட முஹம்மது நாஸிம்.
ஒரு அமைதியான கோடைகால இரவு. 30 வயதான முஹம்மது நாஸிம் அந்த இரவின் குழுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது அந்த அமைதியைக் கெடுக்கும்விதமாக திடீரென வீட்டைச்சுற்றிலும் துப்பாக்கிச்சத்தமும் பூட்டுகளின் ஒலியும் மனிதக்குரல்களும் கேட்டது. திடீரென அந்த பழைய வீட்டின் கதவு திறக்கப்பட்டது. வெளியே அமெரிக்க ராணுவம் நாஸிமின் வீட்டை சுற்றி வளைத்திருந்தது. அமெரிக்க ராணுவ வீரன் ஒருவன் நாஸிமிடம் கேட்டான் ,"உஸாமா பின் லேடனை தெரியுமா?" என்று "ஆம்,ரேடியோவில் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பதில் கூறினார் நாஸிம்.
அமெரிக்க ராணுவம் நாஸிம் தலிபானைச்சார்ந்தவன் என குற்றம் சாட்டியது. இதனை நாஸிம் மறுத்தபோதும் அமெரிக்கர்கள் அதனை நம்பவில்லை. நாஸிம் கைதுச்செய்யப்பட்டு காபூலுக்கு வெளியே உள்ள பக்ராமுக்குக்கொண்டு போகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 5 மாதங்கள் அந்த சிறையிலேயே அவர் கழித்தார்.
"வாழ்க்கை கடினமானது” என்று நாஸிம் கூறுகிறார். அவர்கள் எங்களை உதைத்தார்கள், நாங்கள் இருந்த நாற்காலியையும் உதைத்தார்கள். திறந்த வெளியில் நாங்கள் குளிக்க வைக்கப்பட்டோம். எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. அமெரிக்க விசாரணை அதிகாரிகள் அவர்கள் விரும்பியது எங்களிடமிருந்து கிடைக்காததால் கைதிகளின் தாடியை மழித்தார்கள். பக்ராமில் நாஸிமின் சிறை வாழ்க்கை 5 மாதங்களில் முடிந்தபோதும், அவர் விடுதலை பெற 4 ஆண்டுகள் ஆகியது.
ஆம், பக்ராமிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட நாஸிம் கியூபாவிலுள்ள குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டார். 2001-இல் ஆஃப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப்பின்னால் நாஸிம் உட்பட ஆயிரக்கணக்கான ஆஃப்கானிகள் அமெரிக்க ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 4 வருட சிறைவாசம் தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாக நாஸிம் வேதனையோடு கூறுகிறார்.
அவர்கள் சிறைக்கைதிகள் விசாரணையின்போது சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை கண்டறிய மின்சார இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். நான் பீதி வயப்பட்டேன். எனக்கும் மின் அதிர்ச்சி சித்திரவதைச் செய்வார்களோ என்று. ஆனால் அவர்கள் எனக்கு அதனை அளிக்கவில்லை. ஆஃப்கானிகள் ஒரு போரிலிருந்து அடுத்த போர்வரை தங்களது உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையைஓட்டுகிறார்கள் என்று நாஸிம் கூறுகிறார்.
பக்ராம் சிறைக்குக்கொண்டுவரப்பட்டபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட எண்ணை படிக்க அவருக்குத்தெரியாததால் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அவருக்கு தண்டனை அளித்து அதனை படிக்கவைத்ததாக கூறுகிறார். உங்களுடைய சிறைவாழ்வுக்கு பிறகு அமெரிக்காப்பற்றிய மனோநிலை எப்படியிருக்கிறது என்றுக்கேட்டதற்கு நாஸிம் கூறுகிறார், "அமெரிக்க ராணுவத்தை நான் வெறுக்கிறேன், ஆனால் அந்த நாட்டுமக்களை நேசிக்கிறேன்". நாஸிம் இந்த பேட்டியை பி.பி.சிக்கு தொலைபேசி வழியாக அளித்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது பின்னணியில் குழந்தைகளின் குரல் கேட்டது. குழந்தைகளை குறித்து விசாரித்தபொழுது நாஸிம் கூறினார், "குழந்தைகளிடம் பக்ராம், குவான்டனாமோ பற்றிக்கூறும்பொழுது பீதியுடன் அந்த நிகழ்வைக்கேட்கிறார்கள். எனது மனைவி எனது குழந்தைகள் இரவில் தூங்காவிட்டால் பக்ராம், குவான்டனாமோ சிறைக்கு அமெரிக்கர்கள் கொண்டுச் சென்றுவிடுவார்கள் என பயமுறுத்தி தூங்கவைப்பாள்."
News Source: http://news.bbc.co.uk/2/hi/south_asia/8116616.stm
Tamil translation:Muslimeen

'என்டிடிவி அரேபியா' சானலுக்கு மூடு விழா


துபாய்: செலவுகள் எக்குத்தப்பாக அதிகரிக்கவே ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் என்டிடிவி அரேபியா டிவி சானல் மூடப்படுகிறது.இனி ரம்ஜானுக்குப் பின்னரே மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத என்டிடிவி அரேபியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே பலரை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

மிச்சமிருப்போரும் கூட விரைவில் நீக்கப்பட்டு விடுவார்கள் எனத் தெரிகிறது.பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. பெருமளவில் செலவுகள் அதிகரித்ததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றார்.தற்போது என்டிடிவி அரேபியாவின் நிகழ்ச்சிகள் டெல்லியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியே சேனலின் சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள். 8 முதல் 10 மில்லியன் டாலர் பணம் கிடைத்தால்தான் சேனலைக் காப்பாற்ற முடியுமாம்.

ஆசியாவின் மிகப் பெரிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் என்டிடிவி. பிரனாய் ராய் உருவாக்கிய இந்த சேனல் தற்போது என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24x7, என்டிடிவி புராபிட் உள்ளிட்ட சானல்களை இந்தியாவிலும், மலேசியாவில் அஸ்ட்ரோ அவனி என்ற சானலையும் வைத்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் என்டிடிவி அரேபியாவைத் தொடங்கியது.

நன்றி : thatstamil

அமெரிக்க சிறைச்சாலைகளில் வருடந்தோறும் 60 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகிறார்கள்


வாஷிங்டன்:தேசிய சிறைச்சாலை பாலியல் பலாத்கார ஒழிப்பு கமிஷன்(National Prision Rape Elimination Commission) வெளிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க சிறைகளிலுள்ள கைதிகளில் வருடந்தோறும் 60 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாக கூறியுள்ளது.மேலும் இவர்களில் பகுதிக்கும் மேற்பட்டோர் சிறை அதிகாரிகளின் காமப்பசிக்கு இரையாவதாகவும் பெரும்பாலும் உயரம் குறைந்தவர்களும், இளைஞர்களும், பெண்களும்தான் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இத்தகைய பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு புதியதாக சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கை அரசுக்கு சிபாரிசு செய்கிறது.


Source:Thejas Malayalam Daily

24/6/09

அமெரிக்காவின் அடாவடி: ஏவுகணைத்தாக்குதலில் வசீரிஸ்தான் பொதுமக்கள் 91 பேர் மரணம்




தெற்கு வசீரிஸ்தான் கோத்திர பகுதியில் அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் கைப்பாவை ராணுவம் நடத்தும் கூட்டுக்கொலை தொடர்கிறது.அமெரிக்க ஏவுகணைத்தாக்குதலிலும், பாகிஸ்தான் விமானத்தாக்குதலிலும் நேற்றுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆனது.
தலிபான் பயிற்சி மையம் என்று குற்றம்சாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றது.ஏற்கனவே கொல்லப்பட்ட 6 பேரின் ஜனாஸா அடக்கத்தில் கலந்துக்கொண்டவர்களின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட 3 ஏவுகணைகள் தாக்கி 50 பேர் இறந்துப்போனார்கள்.
ஏவுகணைத்தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க விமானம் பறந்துச்சென்றதாக நேரடியாக பார்த்த உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.அந்த பிரதேசத்தை சார்ந்தவர்கள்தான் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கிடந்த உடல்களை மீட்டது.பாகிஸ்தான் போர் விமானங்கள் தெற்கு வசீரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 35 பேர் கோல்லப்பட்டனர்.
பழங்குடியினர் வாழும் பகுதியில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் அதிகாரத்தை மீறிய செயல் என்றும் தீவிரவாதத்திற்கெதிரான போரின் வீரியத்தை குறைக்கும் என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.பொதுமக்கள் அரசுக்கெதிராக திரும்பிவிடுவார்கள் என்ற காரணத்தாலேயே பாக். அரசு இவ்வாறு கூறுவதாகவும் உண்மையில் பாகிஸ்தான் அரசும் அமெரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆளில்லா விமானம் மூலம் இத்தாக்குதல்கள் நடப்பதாகவும் இதற்கு பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ செயல்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

பைத்துல்லாஹ் மஹ்சூதின் எதிராளி சுடப்பட்டு மரணம்


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைத்துல்லாஹ் மஹ்சூதின் எதிராளி என்று கருதப்படும் போராளித்தலைவர் காரி ஜைனுத்தின் மர்மமனிதர்களால் சுடப்பட்டு இறந்துபோனார்.

தேரா இஸ்மாயீல் கான் நகரத்தில் மதீனா காலணியில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றது.அவருடன் இருந்த பாதுகாப்பாளருக்கும் காயம் ஏற்ப்பட்டது.

பைத்துல்லாஹ் மஹ்சூதிற்கு இந்தியாவோடும் அமெரிக்காவுடனும் தொடர்பிருப்பதாகவும் அவர் இஸ்லாத்திற்கும்,பாகிஸ்தானிற்கும் எதிராக செயல்படுவதாகவும் ஜைனுத்தீன் குற்றம்சாட்டியிருந்தார்.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஃப்ளை துபாய்:இந்திய நகரங்களுக்கான விமான சேவை அறிவிப்பு


துபாய் அரசுக்கு சொந்தமான செலவு குறைந்த விமானக் கம்பெனியான ஃப்ளை துபாய் விமான சர்வீஸ் நிறுவனம் இந்திய நகரங்களுக்கான வழிகளை(ரூட்)அறிவித்துள்ளது.

துவக்கத்தில் கோயம்புத்தூர்,லக்னோ,சண்டிகார் ஆகிய நகரங்களுக்கு மட்டும் விமான சர்வீஸ் ஆரம்பமாகிறது.ஜூலை 14-இல் கோயம்புத்தூருக்கு முதல் விமானம் சேவையை துவக்கும்.வாரத்திற்கு 3 முறை கோயம்புத்தூருக்கு விமான சேவைகள் நடைபெறும்.

குறைந்தபட்ச விமானக்கட்டணம் 425 திர்ஹம்.லக்னோவிற்கு வாரத்தில் 4 விமான சேவைகள் நடைபெறும்.குறைந்தபட்ச விமானக்கட்டணம் 425 திர்ஹம்.ஜூலை 23க்கு ஆரம்பிக்கும் சண்டிகருக்கு குறைந்தபட்ச விமானக்கட்டணம் 350 திர்ஹம்.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

குவாண்டனமோ ,அபுகிரைப் சிறைச்சாலையையடுத்து ஆப்கானிஸ்தானிலும் கைதிகள் சித்திரவதை:அதிர்ச்சித் தகவல்!


சற்று காலத்துக்கு முன் கியுபாவிலுள்ள குவாண்டனாமோ சிறையிலும், ஈராக்கிலுள்ள அபுகிரைப் சிறையிலும் ஐயத்திற்கிடமான கைதிகளை அடைத்து மனிதத் தன்மையில்லாமல் சித்திரவதை செய்ததாக அமெரிக்கா மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பல மனித உரிமை ஆர்வல இயக்கங்கள் அமெரிக்காவுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இக்கைதிகளுக்கான சட்ட உரிமை குறித்த சாதகமான தீர்ப்பு வர உதவியாய் இருந்தன.

தற்போது ஆப்கானிஸ்தானிலும் இதே போன்று சிறைகளில் கைதிகளை அடைத்து அமெரிக்கா சித்திரவதை செய்துவருவது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. BBC நிறுவனம் ஆப்கனின் பக்ராம் சிறையில் அமெரிக்காவால் ஐயத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட 27 பேருடன் தனித்தனியாக நடத்திய ஆய்வில் மனித நேயம் சற்றும் இல்லாமல் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு இக்கைதிகள் ஆட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தாம் எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பது தமக்குத் தெரிவிக்கப்படவேயில்லை என்று கூறினர். தம்மை எவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
அதிகப் பிரகாசம் உள்ள விளக்குகளைச் சிறையறையில் எரியவிட்டும், நீண்டநேரம் நிற்கவைக்கப்பட்டும், நாய்களை ஏவியும், குடிபானங்களில் தூக்கம் கெடுக்கும் மருந்துகளைக் கலந்து அளித்தும், நெற்றிப் பொட்டில் துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தியும், குளிர்காலங்களில் கடுங்குளிரான நீரையும், கோடையில் கடும் சூடான நீரையும் வெற்றுடலில் ஊற்றியும் இன்னும் பலவாறும் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக இந்த முன்னாள் 'கைதி'கள் தெரிவித்தனர். இக்கைதிகளுக்கு எவ்விதமான சட்ட உதவியும் கிடைக்காதவாறு இவர்கள் வைக்கப்பட்டனர் என்றும் இப்பேட்டியில் தெளிவானது.

ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பென்டகன் மறுத்துள்ளது. கைதிகள் மனிதத் தன்மையுடனேயே நடத்தப்பட்டதாக அது அறிவித்துள்ளது.

டாலர் மற்றும் யுரோக்கு மாற்றாக புதிய நாணயம் வெளியிட GCC நாடுகள் திட்டம்



வளைகுடாப் பகுதியில் இருக்கும் எண்ணெய்வளம் மிக்க அரபு நாடுகள் தங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல ஒரே நாணயம் பயன்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வரும் அதேவேளையில் இந்நாணயத்துக்கான பெயரிடுவதில் கிட்டத்தட்ட உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இச்செய்தி உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், புதிய வளைகுடா நாணயம் வளைகுடா தினார் என்று பெயரிடப்படலாம்.



எண்ணெய்வளம் மிக்க வளைகுடா நாடுகளான ஒமான், அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் தங்களுக்குள் GCCஎனப்படும் வளைகுடா ஒன்றியத்தை அமைத்துத் தங்களுக்குள் வணிக, குடியுரிமை, தொழில் உரிமப் பிரச்னைகளை ஒருமித்துக் கையாண்டு அதில் குறிப்பிடத் தக்க வெற்றியும் ஈட்டி வருகின்றன. இருப்பினும் இந்நாடுகள் தங்களுக்குள் தனித்தனியான நாணயங்களைப் பயன்படுத்தி வருவதால், அவற்றில் ஒன்றை இன்னொன்றுக்கு மாற்றும் போது ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களை இந்நாடுகளின் குடிமக்களும், இந்நாடுகளுக்கு பணிக்காக வந்த வெளிநாட்டோரும் சந்திக்கின்றர்.



ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்களுக்குள் யூரோ எனப்படும் ஒரே நாணயத்தை அமைத்து அதன் மூலம் வணிகத்தில் பெரும் நன்மைகள் ஈட்டி வருவதால் அதே போல ஓர் ஒருமித்த நாணயத்தை GCC நாடுகள் தமக்குள் அமைத்துக் கொள்ள எண்ணி ஓர் முன்வரைவையும் வெளியிட்டன. முதலில் ஒமான் நாடு இந்த நாணயத்தில் பங்கு பெறத் தன்னால் இயலாது என விலகிக் கொண்டது.


2010க்குள் இந்நாணயம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த நாணயத்துக்கான ஆணையத் தலைமையகத்தினை நிறுவும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமீரகமும் இந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இருப்பினும் மீதமுள்ள நாடுகளில் கத்தாரும், பஹ்ரைனும் தங்களின் ஆதரவை சவூதி அரேபியாவுக்குத் தெரிவித்தன. இதனால் நாணய ஆணையத் தலைமையகம் சவூதி தலைநகர் ரியாதில் அமைவதென முடிவு எட்டப்பட்டது. பிற GCC நாடுகளைப் போலல்லாது குவைத் தனது நாணயத்தை அமெரிக்க டாலருடன் நிலையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் குவைத் வளைகுடா தினாருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்நாணயம் கலீஜி எனப் பெயரிடப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

சென்னை தாசாமக்கானில் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் மனு

செய்தியைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்





சென்னை : கத்தர் தொழில் அதிபர் விடுதலை!

அல்ஜீரியாவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் கைது செய்யப்பட்ட கத்தார் நாட்டு தொழில் அதிபரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு மலேசியாவில் இருந்து கடந்த 18-ந் தேதி வந்த விமானத்தில் பயணித்தவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது கத்தார் நாட்டு குடியுரிமை பெற்ற தொழில் அதிபர் அப்பாசி சலீம் (42) என்பவரின் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அதில் அல்ஜீரியாவில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் இவரை இன்டர்போல் போலீசார் தேடுவதை அறிந்தனர். இதையடுத்து சர்வதேச தீவிரவாதியாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய உளவுப்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சென்னை விமான நிலைய காவலர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். விமான நிலைய காவல் ஆய்வாளர் முகிலன், துணை ஆய்வாளர் சிவா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
எனது தந்தை மதானி அல்ஜீரியா நாட்டில் அரசியல் கட்சி தலைவராக உள்ளார். அங்கு இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடினார். கடந்த 1992-ம் ஆண்டு குண்டு வெடித்தது. இந்த வழக்கில் எனது தந்தையை சிறையில் அடைத்தனர். எங்கள் குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று அங்கு தங்கினோம். பின்னர் கத்தாரில் அடைக்கலம் அடைந்தோம். நான் தற்போது சோலார் மின்சாரம் தயாரிப்பு தொடர்பாக தொழில் செய்து வருகிறேன். இது பற்றி உலகம் முழுவதும் ஆலோசனை வழங்கி இந்த தொழிலை விரிவுப்படுத்தி வருகிறேன். நான் தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது. என்னை குற்றவாளிகளுடன் இணைத்துவிடாதீர்கள் என்று அவர் வாக்கு மூலம் அளித்தார்.
பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அப்பாசி சலீமை காவலர்கள் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அப்பாசி சலீம் கைது செய்யப்பட்ட விவரம் இன்டர்போல் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. இன்டர்போல் போலீசார் அல்ஜீரிய நாட்டுக்கு தகவல் தந்தனர்.ஆனால் தற்போது விசாரணைக்கு அப்பாசி சலீம் தேவையில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் அப்பாசி சலீம் முன்னிலைப் படுத்தப் பட்டார். விமான நிலைய காவலர்கள் இவர் விசாரணைக்கு தேவையில்லை என்று அல்ஜீரியா நாட்டு காவல்துறை தெரிவித்து விட்டனர். எனவே இவர் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்பாசி சலீமை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டார்.

நன்றி : இந்தநேரம்

மூத்த ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் நீதி மன்றம் விடுதலைச்செய்தது


கடந்த 3 வருடங்களாக சிறையிலிருந்த ஃபலஸ்தீன் பாரளுமன்ற சபாநாயகரும் எம்.பியுமான அப்துல் அஸீஸ் துவைக்கியை இஸ்ரேல் நீதி மன்றம் விடுதலைச்செய்தது.
அப்துல் அஸீஸ் துவைக்கின் காவலை மேலும் நீட்டுவதற்கு அரசுதரப்பு வழக்கறிஞர் எடுத்த வைத்த வாதங்கள் நீதிபதியை திருப்திபடுத்தாததால் அவரை நீதிபதி விடுதலைச்செய்து உத்தரவிட்டார்.
60 வயதான துவைக் கடந்த 2006ஆம் ஆண்டு காஸா எல்லையில் ஹமாஸால் இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஸாலித் கைதுச்செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்குகரையில் வைத்து இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் மேலும் 40 ஹமாஸ் அரசியல் தலைவர்களும் கைதுச்செய்யப்பட்டனர்.அப்துல் அஸீஸ் துவைக் அவர்கள் எதிர்காலத்தில் ஃபலஸ்தீனத்தின் பாராளுமன்றத்திற்கு ஹமாஸ் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கணிக்கப்படுகிறார்.
செய்தி ஆதாரம்:அல்ஜசீரா இனையதளம்.

குவான்டனாமோ சிறைவாசியை விடுதலைச்செய்ய அமெரிக்க நீதி மன்றம் உத்தரவு.

அப்த் அல் ரஹீம் அப்துல் ரஸ்ஸாக் என்ற சிரியா நாட்டைச்சார்ந்தவரை 2002-இல் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் ஆஃப்கானிஸ்தானிலுள்ள சிறையில் வைத்து கைதுச்செய்து குவான்டனாமோ சிறையில் அடைத்தது.அதற்கு முன் இவர் 18 மாதங்களாக தலிபான்களால் மேற்கத்திய நாடுகளின் உளவாளியாக கருதப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்த அப்த் அல் ரஸ்ஸாக்கை கைதுச்செய்த ராணுவம் அவருக்கு அல்காய்தாவுடன் தொடர்பு நீடிப்பதாக கூறி கைதுச்செய்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான சித்தரவதையும் செய்தது.இந் நிலையில் அமெரிக்காவிலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்று இதுத்தொடர்பாக அளித்த 13 பக்க தீர்ப்பில்,"எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரைக் கைதுச்செய்துள்ளனர். அல்காய்தாவுடன் தொடர்புள்ளவர் என்று கூறுகின்றீர்கள் ஆனால் அவரோ தாலிபான்களால் சிறைபிடிக்கப்பட்டவர். இது கடும் கண்டனத்திற்குரியது. கடுமையாக சித்தரவதைச்செய்ததால் அவர் குற்றவாளியென்று பொய்யாக ஒப்புக்கொண்டுள்ளார்"என நீதிபதி ரிசார்ட் லியோன் கூறினார்.

அப்த் அல் ரஸ்ஸாக்கின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஸ்டீவன் வாக்ஸ் கூறுகையில் "இந்த தீர்ப்பு மேலும் ஒரு குற்றமற்றவரை குவான்டனாமாவில் அநியாயமாக சிறைவைக்கப்பட்டதை காட்டுகிறது".என்றார்.தற்ப்போது 229 கைதிகள் குவான்டனாமோ சிறையில் உள்ளனர்.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அடுத்த வருடம் துவக்கத்தில் குவான்டனாமோ சிறை மூடப்படும் என அறிவித்துள்ளார்.

செய்தி ஆதாரம்:அல் ஜசீரா இணைய தளம்.

23/6/09

பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாம் பர்தா - கொக்கரிக்கிறார் சார்கோஷி


பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி பிரான்சு நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா உடை, பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பர்தா உடை பெண்களை அடிமைப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.முகத்திரை அணிவது பிரான்சின் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பர்தா அணியத் தடை செய்யும் சட்டம் இயற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அவர் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரைகளுக்குப் பின்னே இருக்கும் கைதிகளாக, அடையாளம் இல்லாதவர்களாக, தமக்கென ஒரு கண்ணியம் இல்லாதவர்களாகப் பெண்கள் இருப்பதை பிரெஞ்சு சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பர்தா என்பதை மத அடையாளமாகத் தன்னால் சரிகாண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்கோசியின் இப்பேச்சு, பிரெஞ்சு சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: inneram

கஷ்மீர் சம்பவம் : 5 காவல்துறை அதிகாரிகள் இடை நீக்கம்!

கடந்த மாதம் கஷ்மீரில் இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்ட விவகாரம் தொடர்பாக 4 காவல் துறை அதிகாரிகளையும், ஒரு தடயவியல் அதிகாரியையும் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் கஷ்மீர் மாநிலம் ஷோபியன் என்னும் இடத்தைச் சார்ந்த நிலோபர் மற்றும் அவரது உறவினர் ஆசியா ஆகியோர் கடத்தப்பட்டனர். வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட அவ்விருவரின் உடல்கள் மே மாதம் 30ஆம் தேதி கண்டெடுக்கப் பட்டன. இது கஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. பல இடங்களில் வன்முறை வெடித்தது.

கடந்த வாரம் கஷ்மீர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்தார். மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி முசப்பர் ஜான் என்பவரைத் தலைவராகக் கொண்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நீதிபதி முசப்பர் ஜான் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரியை இடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.காவல் துறைக் கண்கானிப்பாளர் ஜாவித் இக்பால் மட்டூ, துணைக் கண்கானிப்பாளர் ரோஹித் பஸ்கோட்ரா, ஆய்வாளர் ஷபீக் அகமது, துணை ஆய்வாளர் காசி அப்துல் கரீம் ஆகிய காவல் துறை அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பாக சாட்சிகளை அழித்ததாகப் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள தடயவியல் சோதனைக் கூடத்தில் பணி புரியும் ஜாவித் இக்பால் ஹபீஸ் தடயவியல் சோதனை அறிக்கையை உடனடியாகத் தராமல் ஆறு நாட்களாக வைத்திருந்ததாக இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

நன்றி : twocircles

ஈரான் அதிபர் நஜாதை யூதன் என்று எழுதிய பஹ்ரைன் பத்திரிகை நிறுவனத்திற்கு பூட்டு


ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதை யூதன் என்று எழுதிய பஹ்ரைனின் பழம்பெரும் பத்திரிகையான அஹ்பார் அல் கலீஜ் நிறுவனம் அடைக்கப்பட்டது.

பத்திரிகை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக காரணம் கூறப்படுகிறது.ஆனால் உண்மையான நிலவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. பஹ்ரைன் கன்சர்வேடிவ் கவுன்சிலின் பெண் உறுப்பினரான ஸமீரா ரஜபின் பெயரில் வெளியிட்ட கட்டுரையில் நஜாதை கடுமையாக விமர்சித்ததோடு அவரை யூதன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவலை ஒரு பத்திரிகை ஏஜன்சி வெளியிட்டுள்ளது.


செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.

ஈரான் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும்:உலக நாடுகளுக்கு வெனிசுலா அதிபர் சாவேஸ் கோரிக்கை

ஈரான் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என உலக நாடுகளுக்கு வெனிசுலா அதிபர் சாவேஸ் கோரிக்கை வைத்துள்ளார் . ஈரானையும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜாதையும் ஏற்றுக்கொள்ளவேன்டும் என்று உலக நாடுகளோடு வெனிசுலா அதிபர் ஹிகோ சாவேஸ் வற்புறுத்தியுள்ளார்.

நிஜாதின் வெற்றி அதிகாரப்பூர்வமானது என்று கூறிய சாவேஸ் ஈரான் அரசையும், இஸ்லாமியபுரட்சியையும் ஒழிக்க நினைக்கும் மேற்கத்திய திட்டம் வெற்றிபெறாது என்று கூறினார்.ஈரானுக்கு வெளியே நடக்கும் பிரச்சாரத்தை நிறுத்தவேண்டும் என்று வெனிசுலா வெளிநாட்டு அமைச்சகம் ஏற்கனவே கோரிக்கைவிடுத்திருந்தது.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

மார்க்க உரிமைகளுக்காக போராடும் போலந்து முஸ்லிம்கள்


இஸ்லாமிய பெருநாட்களை கொண்டாடுவது, இஸ்லாமியச்சட்டப்படி திருமணம் செய்வது உள்ளிட்ட மார்க்க உரிமைகளை பெறுவதற்காக போலந்து நாட்டு முஸ்லிம்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் இத்தகைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் 1936-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ள போலந்தில் சட்டப்படி கழுத்தில் தாலிப்போன்ற ஒன்றை கட்டித்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.முஸ்லிம்களின் பெருநாள்தினங்களான ஈகைப்பெருநாள்,தியாகப்பெருநாள்களில் கட்டாயம் பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும் வந்தாகவேண்டும்.இது சுதந்திரத்தின் சுவர்க்கபூமி என்றழைக்கப்படும் ஐரோப்பாவுக்கு நாணக்கேடு என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
போலந்தில் 30 ஆயிரம் முஸ்லிம்கள் உள்ளனர்.இது போலந்தின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம்.முஸ்லிம்களில் பெரும்பாலோர் துருக்கி வம்சா வழியைச்சார்ந்தவர்கள்.பழைய யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.மீதமுள்ள மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்.14-ம் நூற்றாண்டில்தான் இஸ்லாம் போலந்தில் அறிமுகமானது.
அதே சமயம்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்.இதற்காக அரசு அதிகாரிகள் முஸ்லிம் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளை சாப்ப்பிடும் உரிமை,ஹலாலான பொருள்கள் எது என்று அறிவிப்புச்செய்யும் உரிமை ஆகியவை புதிய சட்டத்தின் வழி பெற வாய்ப்பு இருக்கிறது.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.

22/6/09

ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை மாற்றக் கோரிக்கை!


மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்புப் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரகுவன்ஷியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மாலேகானில் இந்து சாமியாரிணி தலைமையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கை அதிவேக நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலேகானிலுள்ள குல் ஜமாத்தி தன்ஸிம் ஆஃப் மாலேகான் என்ற இஸ்லாமிய அமைப்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாலேகானில் பேரணி நடத்தியது. இவ்வழக்கை விசாரிக்கும் ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை 15 நாட்களுக்குள் மாற்ற வேண்டும் என்று கெடுவும் விதித்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர்கள் நாளை மகாராஷ்டிரா முதல்வரையும் உள்துறை அமைச்சரையும் நேரில் கண்டு தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் உள்ளனர்.
மேலும் கடுமையான போராட்டங்கள் மூலம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்போம் என இந்த அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் கூறினார். ஜமாத்தே அஹ்லெ ஹதீஸ், ஜமாத்தே உலேமா, ஜமாத்தே இஸ்லாமி, ஷியா இஸ்னா, அஸ்ஹரி, அஷ்ரஃபி பவுண்டேசன், போக்ரா கம்யூனிட்டி, போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவை ஹிந்துத்துவ நாடாக மாற்ற முயற்சித்த அபினவ் பாரத் மற்றும் ஹிமானி சவார்க்கருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு ரகுவன்ஷி தயங்குவது ஏன்? என்று அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர். மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர், அபிநவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மாலேகான் குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளுக்கான தொடர்பை வெளிக்கொண்டு வந்த, முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் கார்கரே மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், ஏ.டி.எஸின் தலைவராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று பரவலாக அறியப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : twocircles

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள்

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள் அமெரிக்கா- சியோனிஸ்ட் நிர்பந்தம் மற்றும் தலையீடு காரணமாக உள் நாட்டுகுழப்பத்தை நோக்கிச்செல்லும் ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பத்துபேர் இவர்கள்:

1.ஆயத்துல்லா அலி காம்னி:விலாயத்தே ஃபகீஹ் என்ற உயர் பதவியில் இருக்கும் எல்லோராலும் ஆதரிக்கப்படும் மார்க்க அறிஞர்.இமாம் கொமைனியின் மரணத்திற்கு பிறகு விலாயத்தே ஃபகீஹாஹ பதவியேற்ற காம்னி மிதவாதி என்றாலும் ஈரானின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவர்.
2.மஹ்மூத் அஹ்மத் நிஜாத்:பொறியலில் டாக்டரேட் முடித்த நிஜாத் மேற்கத்தியவாதிகளின் எல்லா எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்துவிட்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானின் ஏழைமக்களோடு மிக நெருக்கமாக இருக்கும் நிஜாத் தனது சொந்தவாழ்க்கையை எளிமையாக கழிப்பவர்.நகரவாசிகளான மேற்கத்திய சிந்தனையுடையவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் நிஜாத் இன்று உலக அரங்கில் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.
3.ஆயத்துல்லாஹ் அலி அக்பர் ஹசிமி ரப்ஸஞ்சானி:பிஸ்தா மன்னன் என்று கூறப்படும் இவரின் குடும்ப ஊழல் கடந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையானது.விலாயத்தே ஃபகீஹை கூட மாற்றும் அதிகாரம் படைத்த சபையின் தலைவர்.அமெரிக்காவோடு ரகசிய தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
4.முஹம்மது காத்தமி:நவீனவாதி என்று வாதிக்கப்படும் ஈரானின் முன்னாள் அதிபரான இவருடைய ஆட்சிகாலத்தில் எந்தவொரு நவீனப்படுத்தலுக்கும் முயற்சி எடுக்கவில்லை.காரணமாக இவர்கூறியது அதிபர் பதவியின் அதிகாரம் ஒரு எல்லைவரைக்கும்தான் என்று.
5. அலி லிர்ஜானி:ஒரு பிரபல ஆயத்துல்லா என்றழைக்கப்படும் ஒரு மார்க்க அறிஞரின் மகனான இவர் மஜ்லிஸ் என்றழக்கப்படும் பாரளுமன்ற சபாநாயகராக இருக்கிறார்.நிஜாதுடன் பகைக்கொண்டவர் இவர் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.
6.ஜனரல்.முஹம்மது அலி ஜாஃபரி:ஈரான் புரட்சிப்படையின் கமான்டரான இவர் காம்னியின் விசுவாசத்திற்கு பாத்திரமானவர்.கொரில்லா போரில் திறமையுடைய இவர் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுப்பதில் வல்லவர் என்று கூறப்படுகிறார்.
7.மீர் ஹுசைன் மூசாவி:ஈராக் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபொழுது ஈரானின் பிரதமராக இருந்தவர்.நிஜாதைப்போலவே இஸ்லாமியபுரட்சியின் வாரிசான மூசாவி தற்ப்போது நிஜாதை எதிர்த்து தன்னை நவீனவாதியாக காட்டிக்கொள்கிறார்.நகரவாசிகளும் மதசார்பற்றவர்களும் சுதந்திரத்தின் பிம்பமாக மூசாவியை புகழ்கிறார்கள்.
8.முஹம்மது ஃபாகிர் ஃகலீஃபா:தெஹ்ரானில் மேயராக இருக்கும் ஃகலீஃபா புரட்சிப்படையின் கமான்டராக இருந்தவர்.2013-இல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது.
9.ஆயத்துல்லா அஹ்மத் ஜன்னத்தி:83 வயதான இவர் அதிபர் நிஜாதின் முக்கிய ஆலோசகர்.கார்டியன் கவின்சிலின் உறுப்பினரான இவர் ஈரான் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் மத்தியகிழக்கின் குழப்பங்களுக்கு காரணம் என வாதிப்பவர்.
10. முஹ்சின் ரஸாயி:புரட்சிப்படையின் முன்னாள் கமான்டரான இவர் ஆயத்துல்லா காம்னியின் ஆலோசகர்.

News Source:Thejas Malayalam Daily.

21/6/09

டாக்டர். ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச்செய்வதற்கு பாக்கிஸ்தான் முயற்சி

அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தால் பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட நரம்பியல் மருத்துவரான டாக்டர்.ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச்செய்வதற்கு முயற்சி எடுக்க இஸ்லாமாபாத் நீதி மன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து பாக்கிஸ்தான் அரசு தனது முயற்சியை
ஆரம்பித்தது. சமீபத்தில் டெக்ஸாஸில் ஒரு மனநலமருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆஃபியாவை பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹகானி சந்தித்தார்.

கடந்த மார்ச் 30, 2003 அன்று சிந்து மாகாணம் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிலிருந்து பஞ்சாப் மாகாணமான ராவல்பிண்டிக்குக் கிளம்பினார் டாக்டர் ஆஃபியா சித்திக்கீ.
டாக்ஸியில் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பிச் சென்றவர் ஏர்போர்ட் சென்று சேரவில்லை. செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டார் என்றும் American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். ஒரு வயதுப் பச்சிளம் பாலகன் உட்பட மூன்று குழந்தைகளுக்குத் தாயான டாக்டர் ஆஃபியா சித்திக்கீ குழந்தைகளுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 30.
சொல்லி வைத்தது போல் இரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC யில் செய்திகள் வெளியாகத் துவங்கின.
அதாவது டாக்டர் ஆஃபியா, ஒஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதாகக் காரணம் காட்டி தேடப்படுவதாகத் திரும்பத் திரும்பச் செய்திகள் வரலாயின.
டாக்டர் ஆஃபியாவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமளிகள் ஆரம்பித்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6, 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான யுவான் ரிட்லி. சமீபத்தில் செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து, உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார். (வாசிக்க: Press TV யின் (
Four years in Bagram as Prisoner 650 - Yvonne Ridley)
"அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்" என்று பதைபதைக்கிறார் யுவான் ரிட்லி.
அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார் யுவான் ரிட்லி.
பயணத்தின் போது முஆஜம் பெக் என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி ஒருவர் எழுதிய The Enemy Combatant என்ற நூலை வாசித்த போது அவருக்குப் பொறி தட்டியது. (YouTube வீடியோ - screams of a Muslim sister)
அந்த நூலில் முஆஜம், இஸ்லாமாபாத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 2002 இல் தான் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் அப்பெண் பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். முஆஜம் 2005 ஆம் ஆண்டு குவாண்டனமோவில் இருந்து விடுதலை ஆனபின் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்நூலை எழுதியிருந்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை, அமெரிக்காவோ பாகிஸ்தான் அரசோ டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து பக்ரம் சிறைச்சாலையில் அடைத்த விஷயத்தை வெளியே சொல்லாததன் மர்மம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
கஸ்னியிலுள்ள சிறையிலிருக்கும்பொழுது ஆஃபியா ஒரு காவல்காரனை தாக்கியதாக ஒரு வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
சட்டத்திற்கு புறம்பான அநீதமான முறையில் கைதுச்செய்யப்பட்ட ஆஃபியா சித்தீக்கியை விசாரணைச்செய்வதும் சட்டத்திற்கு புறம்பானது என பிரிட்டீஷ் பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான யுவானி ரிட்லி அவர்கள் கூறியுள்ளார்கள்.சகோதரி ஆஃபியாவின் விடுதலைக்கு நாமும் பிரார்த்திப்போம்.
செய்தி ஆதாரம் :தேஜஸ் மலையாள நாளிதழ்,
சத்தியமார்க்கம் இணையதளம்

தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்த முடியாது : மோடி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக குஜராத் மாநில அரசு குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் சட்ட முன்வரைவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் மூன்று இடங்களில் திருத்தம் செய்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தைப் பரிந்துரைப்பது என்று நேற்று கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்து குஜராத் அரசுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இச்சட்ட முன்வரைவில் எத்தகைய மாற்றமும் செய்ய இயலாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில் கூடியுள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி வந்த மோடி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இந்த சட்டமுன்வரைவில் மத்திய அரசு கூறியுள்ள மாற்றங்களைச் செய்தால் அந்தச் சட்டம் பல் மற்றும் நகம் இல்லாதது போன்று இருக்கும் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள் : குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு மசோதாவை

சத்ர் நகரம் - அமெரிக்கா பின்வாங்கியது


அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையின் முக்கிய விமர்சகரான முக்ததா அல் சத்ர் மஹ்தி படையினரின் முக்கிய நகரமான சத்ர் நகரத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.
ஈராக்கில் 138 நகரங்களில் ஜுன் 30 தேதியுடன் ஈராக் படையினரின் கண்காணிப்பில் விட்டுவிடும் என முன்னரே அமெரிக்கா ஒப்பந்தம் செய்திருந்தது. அமெரிக்க படையினரின் படிப்படியான வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தினத்தை ஈராக் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

சிடியில் உள்ளது வருண் காந்தியின் குரல்தான்- ஆய்வு முடிவு!

லக்னோ: பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக கூறி சமர்ப்பிக்கப்பட்ட வருண் காந்தியின் பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது, வருண் காந்தியின் குரல்தான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிலிபித்தில் பேசிய வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் துவேஷமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறை சென்ற அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நிலையில் பிலிபித்தில் தான் பேசிய பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது தனது குரலே அல்ல, அதை திரித்து தயாரித்துள்ளனர் என்று கூறியிருந்தார் வருண் காந்தி. இதையடுத்து சிடியில் உள்ள பேச்சு வருண் காந்தியின் குரல்தானா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த சோதனையில் சிடியில் உள்ள குரலும், வருண் காந்தியின் குரலும் ஒத்துப் போவதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக உ.பி. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இந்த குரல் பரிசோதனை நடந்தது. பிலிபித் மற்றும் தேஷ்நகர் ஆகிய இரு இடங்களில் வருண் காந்தி பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்களையும், வருண் காந்தியின் குரலையும் சோதனை செய்ததில் அவை ஒத்துப் போவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை அடிப்படையாக வைத்து விரைவில் வருண் காந்தி மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யப் போவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் போலீஸாரின் இந்தக் கூற்றை ஏற்க முடியாது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
நன்றி :thatstamil

20/6/09

ஈரான் பேரணி புகைப்படத்தில் மோசடி:சர்ச்சையில் பி.பி.சி

உண்மையான புகைப்படம்


மோசடிச்செய்த படம், இதில் நஜாதின் உருவம் மாற்றப்பட்டு குளோசப்பில்

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் செல்வாக்கிக்கிற்கு இழுக்கை ஏற்படுத்த பி.பி.சி செய்த புகைப்பட மோசடியை "வாட் ரியலி ஹேப்பன்ட்" என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜாத் தனது ஆதரவாளர்களின் வெற்றிக்கொண்டாடத்தை பார்த்து கையசைக்கும் புகைப்படத்தை ஹுசைன் மூசாவியின் ஆதரவாளர்களின் போராட்டமாக மாற்றி மோசடிச்செய்துள்ளது.

இருபடத்தில் உள்ள மரமும் கட்டிடமும் ஒன்று போலவே உள்ளது.விசாரணையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பிரசுரித்த புகைப்படத்தில் நஜாதை மாற்றிவிட்டு ஈரான்செய்திகளுடன் வெளியிட்டது.அந்த படத்தின் கீழ் "தடைகளை தாண்டி மூசாவியின் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில்" என்ற அடிக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
குட்டு வெளிப்பட்டவுடன் அந்த அடிக்குறிப்பை மாற்றியுள்ளது பி.பி.சி.இதே போல் ஒருமோசடியை 2003-இல் ஈராக்கில் சதாம்ஹுசைனின் உருவச்சிலையை அமெரிக்க ராணுவமும் சில ஈராக் நாட்டவரும் சேர்ந்து உடைத்ததை ஒரு பெருங்கூட்ட ஈராக் மக்கள் உடைத்ததாக வீடியோ காட்சியில் மோசடியைச்செய்தது.
இநிகழ்விற்குப்பின் தற்ப்போது புகைப்படம் சம்பந்தமாக தவறு நிகழ்ந்துவிட்டதாக கூறி மன்னிப்புக்கேட்டுள்ளது.
http://www.bbc.co.uk/blogs/theeditors/2009/06/what_really_happened.html

செய்தி ஆதாரம்: தேஜஸ் மலையாள நாளிதழ்., வாட் ரியலி ஹேப்பன்ட்

தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் - ஓடி வந்து காப்பாற்றிய முஸ்லீம் டாக்டர்கள்!


மும்பை : கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு, இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்து அவரை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளனர்.

சிவசேனாவின் முஸ்லீம் துவேஷப் போக்கு அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வியாழக்கிழமையன்று கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து தாக்கரேவுக்கு சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் லீலாவதி மருத்துவமனைக்குத் தகவல் போனது. இதையடுத்து அங்கிருந்து டாக்டர்கள் ஜலீல் பர்கர், சமத் அன்சாரி ஆகியோர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

இதுகுறித்து டாக்டர் பர்கர் கூறுகையில், பால் தாக்கரேவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அவரது வீட்டுக்கு தினசரி சென்று பார்த்து கண்காணித்து வருகிறேன்.

வியாழக்கிழமையன்றும் நான் போயிருந்தபோது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நானும் டாக்டர் சமத்தும் வீட்டுக்கு விரைந்தோம். அவருக்கு ரத்த அழுத்தம் ஏறியிருந்தது. இதயத் துடிப்பும் தாறுமாறாக இருந்தது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது.

உடனடியாக அவருக்கு சில ஊசிகளைப் போட்டோம். பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம் என்றார்.

தாக்கரே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தகவலை அறிந்து அவரது மகன் உத்தவ், மருமகள் ராஷ்மி ஆகியோர் விரைந்து வந்தனர். தாக்கரேவின் குடும்பத்தினரும் வந்தனர். ஆனால் மருமகனும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே மட்டும் வரவில்லை.

நன்றி : thatsthamil