30/6/09

பர்தா பற்றிய சர்கோசியின் பேச்சுக்கு பால்தாக்கரே கம்பளம் விரிப்பு

பிரெஞ்சு அதிபர் சர்கோசியைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே பர்தாவை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி புர்கா பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்றும் அதனைத் தடை செய்யும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்படும் என்று கூறியிருந்தார். சர்கோசியின் இந்தப் பேச்சைச் சுட்டி சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில், சர்கோசியைப் புகழ்ந்துவிட்டு பர்தாவை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.

நான் சர்கோசியை வாழ்த்துகிறேன். அவர் முன்மாதிரி ஆட்சியாளர். அவர்களின் (பிரான்சு) ஆட்சியாளர்கள் வாக்குகளுக்காக முஸ்லிம்களுக்கு சலுகைகளை அளிப்பதில்லை. நம்முடைய ஆட்சியாளர்கள் பர்தாவை தடை செய்ய வேண்டும். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சாம்னாவின் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.சர்கோசி உறுதியான மனிதர். நம்முடைய ஆட்சியாளர்களைப் போன்று உறுதியற்றவர் இல்லை. நம்முடை நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களில் பாதிபேர் தங்களுடைய சமாதிகளைத் தேட வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.