31/8/09

ரியாத்: தமிழக வாலிபருக்கு உதவிய இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம்

0 கருத்துகள்
சவுதி ரியாத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் தமிழகத்தை சார்ந்த ரவி ராமையன் என்பவர் உடல் பாதிக்கப்பட்டார் முறையான சிகிச்சையின்றி பாதிக்கப்பட்ட அவரை ரியாத்தில் செயல்படும் சமூக நல அமைப்பான இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் அவருடைய சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்து அவரை பத்திரமாக தாயகம் அனுப்பிவைத்தது.
இது பற்றி இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில் "கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு நஜ்ரானில் வீட்டு வாகனஓட்டுனர் வேலைக்கு வந்த கன்னியாக்குமரி மாவட்டத்தைச்சார்ந்த ரவி ராமையன் என்பவர் சவுதி முதலாளியிடம் வேலைப்பார்க்காமல் ஓடி வந்து ரியாதில் வீட்டுகட்டுமானப்பணிகள் வேலை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏணியிலிருந்து பெயிண்ட் அடிக்கும்போது தவறி கீழே விழுந்து விட்டார் இதில் அவரது கை மற்றும் இடுப்பு எழும்புகள் முறிவு ஏற்ப்பட்டு நடக்க உட்கார முடியாமல் அவதிப்பட்டுவந்தார் ரியாத் பத்ஹாவிலுள்ள ஷஃபா மக்கா பாலிகிளினிக்கில் தற்காலிக சிகிச்சையளித்து அவரது நண்பர்கள் ரூமில் தங்கவைத்துஇருந்தனர், அவரிடம் அக்காமா இல்லாததால் அவரை மேல் சிகிச்சைக்கு அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் அவரது நண்பர்கள் நம்மை ரியாத் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபாரம் தொடர்புகொண்டு உதவும்படி கேட்டுக்கொண்டனர் நாமும் அவரது சவுதி முதலாளியை தொடர்பு கொண்டு பேசி அவர் ஊருக்கு செல்வதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்தோம் அதற்குண்டான தொகையினை (உரூஃப் திரும்பப்பெறுதல், மற்றும் இக்காமா அபராதத்தோடு புதுப்பித்தல் பாஸ்போர்ட்டில் எக்ஜிட் விஷா அடிக்க) அவரது நண்பர்கள் பழக்கப்பட்டவர்கள் மூலம் வசூலித்து சவுதி முதலாளியிடம் கொடுத்தோம் என்பதனையும் மேலும் அவர் தாயகம் செல்வதற்க்கு தேவையான விமான டிக்கட் தொகையினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளும்படியும் கடந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தோம் ஆனால் அத்தொகை நமக்கு கிடைக்காதநிலையில் அவரது உடல்நலம் கருதி, அவரை தாமதிக்காமல் ஊருக்கு அனுப்பவேண்டும் என்பதால் நாம் நம்முடைய சொந்தப்பணத்தில் அவருக்குத்தேவையான டிக்கட் ஏர்இந்தியா வில் எடுத்து கடந்த 26 ஆகஸ்ட் 2009 அன்று தாயகத்திற்க்கு அவரை அனுப்பிவைத்தோம்". என்றார்.
இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் என்ற இந்த சமூக நல அமைப்பு பல்வேறு சமுதாய நலப்பணிகளையும்,சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தூதின் ரமலான் சிந்தனைகள்

0 கருத்துகள்

கஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால் மக்களை அழைக்கின்றோமோ அது இறைவனின் கொள்கை. இந்தக் கொள்கை ஈடிணையற்றது. நாம் சட்டமெனக் கூறுவது இறைவனின் சட்டமாகும். இந்த இறைவனின் கொள்கைக்கு, இந்த சட்டத் திற்கு இணையான ஒரு கொள்கையோ சட்டமோ உலகத்திலுமில்லை, வானத் திலுமில்லை.இன்று இந்த உலகம் இந்த சட்டத்திற்காகவும் இந்தக் கொள்கைக் காகவும் இந்த நீதிக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. இன்று நமது பாதை தெளிவாகிவிட்டது. சூழ்நிலையும் நமக்கு சாதகமாகவே இருக்கின் றது. போற்றத்தக்க விதத்தில் இந்தப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் சுய நலமற்றவர்களாக, ஏன் இந்த உலகத்திலேயே எந்தக் கைமாறும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கின்றோம்.இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். நாம் இறைவனின் திருப்தியொன்றையே கைமாறாக எதிர்பார்க்கின்றோம். நாம் இறைவனின் நல்லடியார்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றையே நாடுகின்றோம். எமது உழைப்பும் வியர்வையும் இறைவனுக்காகவே. நாம் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றோம். அவனது உதவியை மட்டுமே நாடுகின் றோம். அவனுடைய உதவியைப் பெற்றுவிட்ட எம்மை இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் வெற்றி கொள்ள முடியாது.
இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…)
நன்றி:மீள்பார்வை

30/8/09

மத்தியபிரதேசம்:கல்வி நிறுவனங்களில் சூரியவழிபாட்டை கட்டாயப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

0 கருத்துகள்
மத்தியபிரதேச மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க தலைமையிலான அரசு மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை நேரங்களில் சூரியனை வழிபடவேண்டும் என்ற மூடத்தனமான உத்தரவை பிறப்பித்திருந்தது.
மேலும் இந்த உத்தரவை பள்ளிக்கூட நிர்வாகங்கள் பேணுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்படும் கத்தோலிக்க பிஷப்கள் சபையின் மக்கள்தொடர்பு அதிகாரியும்(PRO) செய்தித்தொடர்பாளருமான ஃபாதர் ஆனந்த் முட்டுங்கால் பொதுநல வழக்கு ஒன்றை மத்தியபிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அவ்வழக்கில் ”ஜாபுஅ மற்றும் ராஜ்கர் மாவட்ட கல்விஅதிகாரிகள் கத்தோலிக்க பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்களை சூரியவழிபாட்டைச்செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்” என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் தாக்கல் செய்திருந்த வழக்கில் இத்தகைய வழிபாட்டு முறையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதி மன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.இவ்வுத்தரவின் நகலை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து வாதாடிய கத்தோலிக்க சபையின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராஜேஷ் சந்த் மாநில அரசின் இந்த உத்தரவு நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும்,இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 25 முதல் 30 வரை சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக கூறினார்.மேலும் இந்த சூரிய வழிபாட்டை வற்புறுத்தும் அரசின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவாதங்களின் வெளிச்சத்தில் தலைமை நீதிபதி ஏ.கெ.பட்நாயக்,நீதிபதி அஜித் சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மாநில அரசு மாணவர்களை சூரிய வழிபாடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.மேலும் மத்திய பிரதேச மாநில முதன்மை செயலர்,முதன்மை கல்வி செயலர்,கல்வி கமிஷனர்,ஜாபுஅ மற்றும் ராஜ்கர் ஆகியவற்றுக்கான மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு இது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

News source:twocircles.net

பெங்களூரு:வகுப்புக்கலவரத்தில் இளைஞர் படுகொலை, 5000 போலீசார் குவிப்பு

0 கருத்துகள்

பெங்களூரு:கடந்த வியாழக்கிழமை இளைஞர் படுகொலைச்செய்யப்பட்டு கல்வீச்சு சம்பவம் நடந்ததையடுத்து கிழக்கு பெங்களூரிலிலுள்ள கெ.ஜி.ஹள்ளி மற்றும் ஃப்ரேசர் நகர் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து நகர காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஃப்ரேசர் நகர், டி.ஜெ.ஹள்ளி, கெ.ஜி.ஹள்ளி, ஹன்னூர்,நகவரா, பனஸ்வாடி, டன்னேரி சாலை மற்றும் சம்பிகெஹள்ளி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறைகள் நடைபெறுவதற்கு காரணம் என்னவெனில் கெ.ஜி.ஹள்ளி பகுதியிலிலுள்ள மஸ்ஜிது ஒன்றின் வழியாக மாலை 6.30 மணியளவில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் சென்றுள்ளது.இதில் கலந்துக்கொண்டவர்கள் மோசமான கோசங்களை எழுப்பியுள்ளனர்.அவ்வேளையில் முஸ்லிம்கள் மஸ்ஜிதில் நோன்பு திறந்துவிட்டு மஃரிப் தொழுகைக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மஸ்ஜிதிலிருந்த முஸ்லிம்கள் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் சத்தம் போடாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பிரச்சனை உருவாகியுள்ளது.நிலைமை மோசமடையவே கெ.ஜி.ஹள்ளி இன்ஸ்பெக்டர் டி.ரங்கப்பா தலைமையிலான படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை சமாளித்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் இப்பிரச்சனை வியாழக்கிழமை இரவிலிருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.இந்நிலையில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட கிறிஸ்டோபர் வினித்(வயது 22) என்ற இளைஞருக்கு(கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட இவர் ஆண்டுதோறும் விநாயக விஜர்சன ஊர்வலத்தில் தவறாமல் கலந்துக்கொள்பவர்) உடனடியாக லிங்கராஜபுரத்திற்கு வருமாறு அழைப்புவரவே கிறிஸ்டோபர் தனது நண்பர் விக்ரமுடன் லிங்கராஜபுரத்திற்கு புறப்பட்டு செல்ல எத்தனித்து சில அடிகளை தாண்டிய வேளையில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து வினித்தை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தியுள்ளது.வினித்தை காப்பாற்ற முயன்ற விக்ரமையும் ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் வினீத்தின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வினீத்தை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிட்சை பலனளிக்காமல் வினீத் இறந்துவிட்டார். இச்செய்தி வெளியே பரவியதும் சம்பிகெஹள்ளி மற்றும் நகவரா ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பெங்களூரு ஒன்றின் முக்கிய பகுதியில் கடைகளும் ஏ.டி.எம் செண்டர்களும் மூடப்பட்டன.
செய்தி:Frontworld.com

29/8/09

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் சுஷ்மா சுவராஜ்? RSS சமரசத் திட்டம்!

0 கருத்துகள்

பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலை முடிவிற்குக் கொண்டுவர அத்வானியை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகச் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜை நியமிப்பது என்று (RSS)ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
புது டெல்லியில் தங்கியுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலைவர் மோகன் பகவத், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். அதனடிப்படையில் பா.ஜ.க. கட்சி அமைப்பிலும், நாடாளுமன்றத்திலும் பொறுப்பிலுள்ளவர்களை மாற்றும் ஒரு சமரசத் திட்டத்தை தயாரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோகன் பகவத் தாயாரித்துள்ள அந்த சமரசத் திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகும் ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக தற்போது மாநிலங்களவையில் அக்கட்சியின் தலைவராக உள்ள அருண் ஜெய்ட்லி கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து தற்போது அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு, மாநிலங்களவைக் கட்சித் தலைவராவார் என்றும் கூறப்படுகிறது.மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அத்வானி அப்பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவராவார் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானிக்கு எதிராக கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளதையடுத்து அவரை அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விடுவிப்பது என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. கட்சியின் உள்கட்சிப் பூசலிற்கு முடிவு கட்ட மோகன் பகவத் உருவாக்கியுள்ள சமரசத் திட்டம் இறுதி செய்யப்ட்டுள்ள நிலையில், இன்று மாலை அவரை அத்வானி சந்தித்துப் பேசுகிறார்.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு எடுக்கப்படும் சில முடிவுகளின்படி அனைத்துத் தலைவர்களும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவி நிலையத்துடன் தொடர்பு இழந்தது சந்திரயான்!

0 கருத்துகள்
நிலவைச் சுற்றிக் கொண்டு அது குறித்த பல்வேறு தகவல்களை கடந்த 312 நாட்களாக அளித்துக் கொண்டிருந்த சந்திரயான் 1 விண்கலம், நேற்று நள்ளிரவு புவி நிலையத்துடனான தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நேற்றுவரை 3,400 முறை நிலவைச் சுற்றி வந்து பல தகவல்களை பெங்களூருவிற்கு அருகிலுள்ள பயலாலு புவி நிலையத்திற்கு அளித்து வந்தது. இறுதியாக நேற்று இரவு 12.25 மணிக்கு அது கடைசியாக தகவல் அனுப்பியது. அதன் பிறகு புவி நிலையத்துடனான தொடர்பை சந்திரயான் விண்கலம் இழந்துவிட்டதாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
புவி நிலையத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரயான் 1 திட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக, அத்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தின் பணி 10 மாத காலத்திற்குள் முடிந்துவிட்டாலும், அது சாதிக்கவேண்டிய 90-95 விழுக்காட்டுப் பணிகளை துல்லியமாக நிறைவேற்றிவிட்டது என்று அண்ணாதுரை கூறினார்.
சந்திரயான் அனுப்பிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், அதன் துணை அமைப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அதனைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் விண்கலத்தில் நிலவின் மேற்பகுதியை ஆராயும் டெர்ரைன் மேப்பிங் கேமிரா, நிலவின் பரப்பில் உள்ள கனிமங்களை ஆராயும் கருவி, அதன் காற்று வெளியை ஆராயும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் உள்ளிட்ட பல கருவிகள் பொறுத்தப்பட்டு ஆய்வு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி

0 கருத்துகள்

பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிற மதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள் துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனித குர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்.

இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பல்வேறு சமயங்களைச்சார்ந்தோறும் கலந்துக்கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியில் "அழைப்பு பணியா அல்லது அழிவா”(“Dawaah or Destruction”) என்ற தலைப்பில் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்து குர்ஆன்,சுன்னா ஆதாரங்களுடன் உதாரணங்களையும் கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்துக்கொண்டு ஐரோப்பாவைச்சார்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாம் குறித்து தர்க்கரீதியான(Logic) கேள்வியொன்றை எழுப்பினார்.அவருடைய கேள்விக்கு அறிவுப்பூர்வமான பதிலை டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்கள் கூறியதைக்கேட்டு திருப்தியடைந்த அப்பெண்மணி சத்தியம் இதுதான் என்று தெளிவானதும் ஷஹாதா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஒப்புக்கொண்டார்.(அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தில் அவருடைய பாதங்களை உறுதிப்படுத்துவானாக).

டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியின் காரணமாக துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 3க்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

நமது செய்தியாளர்

மனதிலுள்ள அழுக்குகளை சுத்தம்செய்து இறைநெருக்கத்தை பெறுங்கள்:அப்துற்றஹ்மான் பாகவி

0 கருத்துகள்
கத்தார்: மனதிலுள்ள அழுக்குகளை சுத்தம்செய்து இறைநெருக்கத்தை பெற முயற்சி செய்யவேண்டும் என்று பிரபல மார்க்க அறிஞரும் கேரள மாநிலம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் முதல்வருமான அப்துற்றஹ்மான் பாகவி உரை நிகழ்த்தினார்.
ரமலானில் கத்தார் நாட்டிலிலுள்ள கஸ்ட்(Guest centre) ஏற்பாடுச்செய்த நஸாயிமுல் ஃஹைர் என்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார் அவர்.
இந்நிகழ்ச்சியுடன் இணைந்து இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மாலை 4 மணியளவில் சிறுவர்-சிறுமிகளுக்கான வினாடி வினா போட்டியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் அழைப்பை ஏற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்திய மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். சுபைர் கவ்ஸரி அவர்கள் உருது உரையை நிகழ்த்தினார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசு

0 கருத்துகள்
ஷார்ஜா:புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசுத்தொகையாக வழங்கப்படுமென ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த புனித ரமலான் மாதத்தில் புகைப்பிடித்தலை கைவிட்டு புதிய வாழ்க்கையைத்தொடங்குவதாக நூற்றுக்கணக்கானோர் தங்களது பெயர்களை பதிவுச்செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் புகைப்பழக்கத்தை கைவிடுவதை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தது.2008 ஆண்டு முதல் புகைபிடிப்பதற்கு தடை அமுலில் வந்தது. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பவர்கள் மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்கவேண்டும். ரமலானில் 30 தினங்களிலும் புகை பிடிக்காதவர்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் மூலம் தேர்வுச்செய்யப்படுபவருக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் திர்ஹம் பரிசாக வழங்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மொராதாபாத்:முஸ்லிம்கள் மீது உ.பி.அரசுப்படை(PAC) நடத்திய தடியடியில் 18 பேர் படுகாயம், 4 பேர் நிலை கவலைக்கிடம்

0 கருத்துகள்
நேற்று(ஆகஸ்ட் 27) இரவு மொராதாபாத்திலிலுள்ள ஷா பத்ருத்தீன் தர்காவில் ரமலான் இரவுத்தொழுகையான தராவீஹ் தொழுவதற்கு ஒன்று கூடிய முஸ்லிம்கள் மீது உ.பி.அரசுப்படையான PAC (Provinsional Armed Constabulary) நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் 18 பேர் காயமடைந்தனர்.அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் மொராதாபாத் நகரத்திலிலுள்ள முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் சமயோஜித தன்மையுடன் செயல்பட்டதாலும் முஸ்லிம் சமுதாயம் அமைதி காத்ததாலும் பெருமளவிலான கலவரம் உருவாகாமல் தடுக்கப்பட்டது.ஆயினும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வேகமாக பரவியதால் போலீஸ் படையின் எண்ணிக்கை அதிகபடுத்தப்பட்டுள்ளது.
ராபிதா இஸ்லாமிய செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி உ.பி.அரசுப்படையான PAC யின் 23 வது பிரிவிற்கான பயிற்சி முகாமிற்கு உள்பகுதியில் அமைந்துள்ள ஷா பத்ருத்தீன் தர்காவில் ரமலான் இரவுத்தொழுகை நடத்த முஸ்லிம்கள் வந்தபொழுது அப்படைப்பிரிவின் தலைமை அதிகாரி அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளூர் முஸ்லிம்கள் அதுவும் PAC யிடம் பெயர்பதிவுச்செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.அதற்கு தொழுகை நடத்த வந்த முஸ்லிம்கள் தாங்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள்தான் என்று விளக்க முயன்றபோதும் PAC யின் அதிகாரி அதனை காதுகொடுத்து கேட்கவில்லை.இந்நிலையில் தராவீஹ் தொழுகைக்கான நேரம் தாண்டிப்போகவே முஸ்லிம்கள் PAC யின் அராஜகத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.உடனே PAC படையினர் அநீதமான முறையில் கண்மூடித்தனமாக முஸ்லிம்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர்.இதில் 18 பேர் காயமடைந்தனர்.அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.முஸ்லிம்கள் தாக்கப்பட்ட செய்தி வேகமாக பரவவே பல முஸ்லிம்களும் சாலையில் இறங்கி PAC க்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.ஆயினும் மொராதாபாத் நகர இமாம் மவ்லானா காரி ஹாஃபிஸ் சயீத் மஸூம் அலி, மேயர் எஸ்.டி.ஹஸன் உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள் அவர்களை அமைதிப்படுத்தினர்.மாவட்ட நீதிபதியும் மக்களை அமைதிக்காக்கும்படியும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய PAC படையைச்சார்ந்த குற்றவாளிகளை கைதுச்செய்ய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
.பி.அரசுப்படையான PAC முஸ்லிம்களுடன் தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது.1980 ஆம் ஆண்டு PAC படையினர் தலைமை தாங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.
News source:twocircles.net

சவூதியில் குண்டுவெடிப்பு:மயிரிழையில் உயிர் தப்பிய இளவரசர்

0 கருத்துகள்
ரியாத்:சவூதி அரேபியா ராஜ குடும்பத்தில் பிரபலமானவரும் சவூதி அரசின் உள்துறை இணை அமைச்சருமான முஹம்மது பின் நாயிஃப் ஜித்தாவில் தனது மாளிகையில் நடந்த குண்டுவெடிப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
உடலில் வெடிக்குண்டுகளைக் கட்டிக்கொண்டு அல் காய்தா போராளி என்று சந்தேகிக்கப்படும் நபர் தான் தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சவூதி பிரஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது எனவும் மயிரிழையில் அவர் உயிர் தப்பியதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.சவூதி மன்னர் அப்துல்லாஹ் மருத்துவமனைக்கு சென்று தனது மருமகனும் உள்துறை இணை அமைச்சருமான முஹம்மதை சந்தித்து ஆறுதல் கூறினார். இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்பதாக அல்காயிதாவின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது பின் நாயிஃப் ஜித்தாவில் ரெட் சீ துறைமுகத்தில் ரமலானில் தன்னை சந்திக்கவந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றது. குண்டுவெடிப்பில் தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதால் விபரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.அல்காயிதாவுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி சில அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரசு எடுத்தபின் ராஜ குடும்பத்தை சார்ந்தவர் மீது நடைபெறும் முதல் தாக்குதல் இது. இந்த மாத துவக்கத்தில் அல்காயிதா தொடர்புடையவர்கள் எனக்குற்றஞ்சாட்டி 44 பேர்களை சவூதி அரசு கைதுச்செய்தது. இதில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் சவூதி குடிமகன்கள். ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.10 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை அமைச்சராக பதவியேற்ற முஹம்மது பின் நாயிஃப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்பை வகித்து வருகிறார். இவர் சவூதி உள்துறை அமைச்சரின் மகனாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

28/8/09

புத்தகத்திற்கெதிரான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார் ஜஸ்வந்த்

0 கருத்துகள்
புதுடெல்லி:பா.ஜ.க விலிருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவை புகழ்ந்து எழுதியதாக கூறி குஜராத் மாநிலத்தில் தனது நூலை தடைச்செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இந்திய-பாக். பிரிவினைக்கு ஜின்னா காரணமில்லை என்று கூறும் ஜின்னா-இந்தியா-பிரிவினை-சுதந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இரண்டு தினங்களிலேயே மோடித்தலைமையிலான குஜராத் அரசு அதனை விற்க தடைச்செய்தது. மோடி அரசு தனது நூலுக்கு தடை ஏற்படுத்தியது அதனை படிக்கக்கூடச்செய்யாமல் என்று ஜஸ்வந்த் சிங் சுப்ரீம் கோர்ட்டில் பதிவுச்செய்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
புத்தகம் தடைச்செய்யப்பட்டு சில மணிநேரங்களிலேயே ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.சர்தார் வல்லபாய் பட்டேலின் தேசப்பற்றை பற்றி தனது நூலில் கேள்வி எழுப்பியதாலேயே ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதாக பா.ஜ.க கூறிய போதிலும் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கத்திற்கெதிராக அருண்சோரி,யஷ்வந்த் சின்கா ஆகிய மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பி களத்திலிறங்கியதால் பா.ஜ.க சிக்கலில் மாட்டியுள்ளது.இத்தகைய சூழலில்தான் ஜஸ்வந்த் சிங் மோடி அரசுக்கெதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

ஹாஃபிஸ் சயீதிற்கெதிரான இண்டர்போல் நோட்டீசில் முரண்பாடுகள்

0 கருத்துகள்

இஸ்லாமாபாத்:ஹாஃபிஸ் சயீதிற்கெதிராக இண்டர்போல் வெளியிட்டுள்ள ரெட்கார்னர் நோட்டீசை இந்திய பத்திரிகைகளும் அரசும் மிகப்பெரியதாக சித்தரித்தபோதிலும் சயீதிற்கு ஜமாஅத்து தாஃவா இயக்கத்தோடு தொடர்புப்படுத்தும் அடிப்படை விபரங்கள் கூட இல்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ யின் கோரிக்கைக்கு இணங்க கடந்த செவ்வாக்கிழமை அன்று இண்டர்போல் லஷ்கர்-இ-தய்யிபாவின் ஸ்தாபகரும்,ஜமா அத்துத்தாஃவா தலைவருமான ஹஃபீஸ் சயீத் மற்றும் லஷ்கர்-இ-தய்யிபா ஆபரேசனல் கமாண்டர் ஸகீயுர்ரஹ்மான் லக்வி ஆகியோருக்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஷை வெளியிட்டது.

லக்விவிக்கெதிரான நோட்டீசில் ஏறக்குறைய விபரங்கள் சரியாக இருந்தபோதிலும் சயீதிற்கெதிரான நோட்டீசில் அபத்தங்களும் முரண்பாடுகளும் நிறைந்துக்காணப்படுகின்றன.அவருடைய பெயர் போலும் தவறாக பதிவுச்செய்யப்பட்டுள்ளது.ஹாஃபிஸ் சயீத் என்ற பெயருக்கு பதிலாக செய்த் ஹாவி சாப் என்றுள்ளது.அவரைப்பற்றிய மற்ற விபரங்கள் ஒரு பிறந்த தேதியும் பாகிஸ்தான் குடிமகன் என்பது மட்டும்தான்.செய்த் என்பது நபி(ஸல்…)அவர்களின் வழித்தோன்றல்களை குறிப்பது.சயீத் என்பது சாதாரண பெயர்.ரெட் கார்னர் நோட்டீசை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பிரிட்டனிலிலுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.சயீதிற்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டபோதும் அவருக்கெதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் மாலிக் தெரிவித்தார்.ஆனால் லக்வி தற்போது பாக்.அதிகாரிகளின் கஸ்ட்டியிலுள்ள நிலையில் இண்டர்போல் ஏன் அவருக்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது என்பது தனக்கு புரியவில்லை என்று ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.சயீதிற்கெதிரான நோட்டீசில் அவருடைய போட்டோ ஒட்டப்படவேண்டிய இடத்தில் புகைப்படம் கிடைக்கவில்லை என்றுள்ளது.லஷ்கர் தய்யிபாவுடனோ அல்லது ஜமா அத்துதாஃவுடனான தொடர்பு பற்றி எந்த குற்றச்சாட்டும் அதிலில்லை.லக்விக்கெதிரான நோட்டீசிலும் அவருடைய போட்டோ ஒட்டப்படவில்லையெனினும் அவரைப்பற்றிய விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மும்பை தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி கைதுச்செய்யப்பட்ட அஜ்மல் கஸப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் லக்வியைப்பற்றிய முழு விபரங்களையும் இண்டர்போலுக்கு அளித்ததாக சி.பி.ஐ கூறியிருந்தது.இருவருக்கெதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கமிட்டி வெளியிட்ட விபரங்களும்,புகைப்படமும் இண்டர்போலுக்கு அளிக்கப்பட்டதாக சி.பி.ஐ கூறியுள்ளது.கஸாப் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒரு ஹாபிஸ் சாப் பற்றியும்,ஒரு செய்யித் பாய் பற்றியும் கூறியிருந்தார்.இதனடிப்படையிலேயே இண்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.சி.பி.ஐ அளித்த இதர விபரங்களை ஏன் இண்டர்போல் வெளியிடவில்லை என்ற விபரம் தெளிவாக்கப்படவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

குவாண்டானாமோ சிறையின் வயது குறைந்த கைதியாகயிருந்த ஜவாத் சட்டநடவடிக்கைக்கு தயாராகிறார்

0 கருத்துகள்
காபூல்:குவாண்டானாமோ வெஞ்சிறையில் மிகவும் வயதில் குறைந்த கைதியாக இருந்த முஹம்மது ஜவாத் அமெரிக்காவிற்கு எதிராக சட்டநடவடிக்கைக்கு தயாராகிறார்.இந்த வார துவக்கத்தில்தான் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்ட ஜவாத் ஆப்கானிஸ்தானிலிலுள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்தார்.
2002 ஆம் ஆண்டு ஜவாதிற்கு 12 வயதாக இருக்கும்பொழுதுதான் அமெரிக்க ராணுவத்தினர் மீது குண்டுவீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜவாத் குவாண்டனாமோ சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டார்.கடந்த 8 ஆண்டுகளாக ஜவாத் குவாண்டனாமோவில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தினருக்கு எதிராக ஜவாத் குண்டுவீசியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவ நீதிபதி தெளிவுப்படுத்தியிருந்தார்.ஜவாதிற்கெதிராக அமெரிக்க ராணுவம் சாட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அநீதியானதும்,தவறுகள் நிறைந்ததும் என்று கூறி அமெரிக்க மாவட்ட நீதிபதி எலன் ஹுவெலெ ஜவாதை கடந்த மாதம் விடுதலைச்செய்தார்.
அமெரிக்க நீதி மன்றத்தில் ஜவாதிற்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவுச்செய்திருந்தபோதிலும் ஜவாதிற்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஜவாதின் வழக்கறிஞர் எரிக் மோண்டோல்வா கூறினார்.ஜவாதை அவருடைய சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப கொண்டுவருவதற்கு அமெரிக்க,ஆப்கானிஸ்தான் அரசுகள் உதவவேண்டுமென்றும் எரிக் கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையே ஜவாத் கைதுச்செய்யப்பட்டபோது அவருக்கு17 வயதாகியிருந்ததாக பெண்டகன் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்களிலிருந்து ஓட்டுப்பெட்டிகள் தவறியது

0 கருத்துகள்
காபூல்:ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின்போது பதிவுச்செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை நடந்துக்கொண்டிருக்கவே ராணுவ ஹெலிகாப்டர்களிலிருந்து வாக்குச்சீட்டுகள் அடங்கிய 25 ஓட்டுப்பெட்டிகள் கீழே விழுந்ததாக அமெரிக்க ராணுவம் கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரூனிலிருந்து காபூலிற்கு ஓட்டுப்பெட்டிகளை ஹெலிகாப்டர்களில் கொண்டுவரும்பொழுது நூரிஸ்தானில் மலைப்பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகள் தவறி விழுந்தாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
ஆனால் சில ஓட்டுப்பெட்டிகள் கிடைத்ததாகவும் கூறுகிறது.ஆனால் நூரிஸ்தான் மலைப்பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கூறுவது போன்று ஓட்டுப்பெட்டிகள் தவறி விழுந்திருந்தால் அவை திரும்ப கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு பின்னர் கழுதைகளின் மூலம் ஓட்டுப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் இடத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டன.ஓட்டுப்பெட்டிகள் தவறியபொழுதிலும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானில் நான்கு நேட்டோ படையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்

0 கருத்துகள்
காபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிரான பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்திய போராளிகள் நேற்று முன் தினம் நடத்திய குண்டுவெடிப்பிலும்,துப்பாக்கி சூட்டிலும் 4 நேட்டோ படையினரை கொன்றனர்.
இதில் மூன்று அமெரிக்க ராணுவத்தினரும், ஒரு பிரிட்டீஷ் ராணுவத்தினரும் அடங்கும். ராணுவத்தினரின் மரணத்தை நேட்டோவும், அமெரிக்க ராணுவ அதிகாரியும் உறுதிச்செய்துள்ளனர்.ஆனால் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டு 8 வருடங்கள் முடியுறும் வேளையில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அதிகம் இழப்பு ஏற்பட்டது இம்மாதத்தில்தான். இம்மாதத்தில் மட்டும் 44 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின்போதும் பிறகும் தாலிபான் போராளிகளின் பதிலடி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்ப்போது 60 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.2009 ஆண்டில் மட்டும் 297 ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 174 பேர் அமெரிக்க ராணுவத்தினர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில்தான் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானிஸ்தானில் போராளிகளின் கடுமையான தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.அதே வேளையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரின் ஹெலிகாப்டர்கள் ஒரு மருத்துவமனையின் மீது நடத்திய தாக்குதலில் 12 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவரை சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும்பொழுது இந்த தாக்குதலை நடத்தியதாக நேட்டோ அறிவித்துள்ளது.போராட்டம் 6 மணிநேரம் நீண்டதாகவும் அதில் 12 பேர் கொல்லப்பட்டு 6 பேர் கைதுச்செய்யப்பட்டதாகவும் மாகாண அதிகாரி கூறுகிறார்.அதிபர் தேர்தல் நடைபெற்றபோது நட்த்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவர் சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதுதான் இத்தாக்குதலை ஆக்கிரமிப்பு படையினர் அபாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தினர்.இதில் மருத்துவமனையின் கட்டிடம் சேதமடைந்துள்ளது.பதிலுக்கு தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


27/8/09

சோமாலியாவில் பாதிபேரும் பட்டினியில்:ஐ.நா

0 கருத்துகள்

ஐக்கியநாடுகள் சபை:கடந்த 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான மனித நேய பிரச்சனைகளை சந்தித்துவரும் சோமாலியாவில் உடனடியாக உலக நாடுகள் தலையிடாவிட்டால் அந்நாட்டில் பாதிபேரும் பட்டினியின் பிடியில் தள்ளப்படுவர் என்று ஐக்கியநாடுகள் சபை முன்னெச்செரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சோமாலியாவிலுள்ள பாதிபேரும்(ஏறத்தாழ 37.6 லட்சம்பேர்)மனிதநேய உதவிகளை சார்ந்து வாழ்வதாக சோமாலியாவுக்கான ஐ.நாவின் உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு யூனிட்(Somalia Food Security and Nutrition Analysis Unit) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

வடக்கு மற்றும் மத்திய சோமாலியாவில்தான் இந்த பிரச்சனை அதிகளவில் உள்ளது.சோமாலியாவில் நடைபெற்றுவரும் மோதல்கள் மனிதநேய நடவடிக்கைகளை பாதித்துள்ளதாக S.F.S.N.A.U பகுப்பாய்வுத்தலைவர் சிண்டி ஹோல்மேன் கூறுகிறார்.

சோமாலியாவில் 5ல் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சந்திக்கிறது.ஒட்டுமொத்தமாக சோமாலியாவில் 3 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் காரணமாக மரணத்தின் பிடியை நோக்கிச்செல்கின்றனர்.இந்த வருடம் துவக்கத்தில் அகதிகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக(14.2லட்சம்)உயர்ந்துள்ளது.சோதனைக்குமேல் சோதனையாக சோமாலியாவின் மத்திய பகுதி வறட்சியின் பிடியிலும் சிக்கியுள்ளது.கடந்த சில வருடங்களாக மழை பெய்வது குறைந்ததின் காரணமாக இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது.சோமாலியாவின் 75 சதவீத மக்களும் மனிதநேய பிரச்சனையின் அவசர நிலையிலுள்ளதாக ஐ.நா வின் அறிக்கை கூறுகிறது.இவ்வேளையில் ஐ.நா பொதுச்செயலாளரின் சோமாலியாவுக்கான சிறப்பு தூதர் அஹ்மதோ அவுத் அப்துல்லாஹ் புனித ரமலானை முன்னிட்டு எல்லா சோமாலியா மக்களும் சமாதான முயற்சிகளில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மஹாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் லாக்கப் சாவுகள்

0 கருத்துகள்
தமிழகத்தில் போலீஸ் காவலில் மரணமடைவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 31 பேர் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர்.
சென்னை அருகே பனையூரில் நடந்த பயங்கர இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பிடிபட்ட ராஜன் என்கிற சண்முகராஜன், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். பிடிபட்ட சில மணி நேரங்களில் அவர் மரணமடைந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அவரைப் பிடித்து அடித்தததால்தான் சண்முகராஜன் மரணமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் போலீஸார்தான் அடித்துக் கொன்று விட்டதாக ராஜனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகஸ்ட் 17ம் தேதி நள்ளிரவு, சண்முகராஜன் உயிரிழந்த அதே நீலாங்கரை காவல் நிலையத்தில் கணவன், மனைவித் தகராறு ஒன்று வந்தது. உஷாராணி என்பவர் 35 வயதான தனது கணவர் ரமேஷ் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார்.

அப்போது பணியில் இருந்த நீலாங்கரை சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் 3 போலீஸார் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் புகாருக்கு ஆளான ரமேஷை அவர்கள் மிருகத்தனமாக தாக்கியதாகவும், அதில்தான் ரமேஷ் உயிரிழந்தார் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எந்தவித விசாரணையும் நடத்தாமல் போலீஸார் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்து விட்டதாக ரமேஷின் சகோதரர்கள் அன்பு, லோகநாதன் ஆகியோர் குமுறினர்.

ரமேஷின் கைகளைப் பிடித்துக் கொள்ளுமாறு குணசேகர் உத்தரவிட்டதாகவும், அதன்படி போலீஸார் 3 பேரும் கைகளைப் பிடித்துக் கொண்டதாகவும், இதையடுத்து தனது கையில் இருந்த லத்தி உடைந்து போகும் அளவுக்கு இரக்கமே இல்லாமல் குணசேகர் ரமேஷை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படியும் நில்லாமல், என்ன செய்கிறோம் என்ற சுய நினைவே இல்லாத போலீஸார், ரமேஷை அவரது மோட்டார் சைக்கிள் மீது படுக்க வைத்தும் அடித்து நொறுக்கினர்.

இதில் என்ன கொடுமை என்றால் ரமேஷை அடித்து இழுத்துச் செல்லும்போது அவரிடமிருந்தே ஜீப்புக்கு பெட்ரோல் போட ரூ. 200 பணத்தையும் போலீஸார் பறித்துள்ளனர்.

காவல் நிலையத்திலேயே ரமேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவனைக்குக் கொண்டு செல்வது போல போலீஸார் நாடகமாடியதாகவும் அன்பு கூறுகிறார்.

தமிழக காவல் நிலையங்களில் போலீஸார் இதுபோல குற்றம் சாட்டப்படுவோரிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொள்வதால்தான் லாக்கப் அப் சாவுகள் அதிகரித்து விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்ற குற்றம் இழைத்து குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போலீஸார் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை. அதனால்தான் இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிக அளவிலான லாக்கப் அப் சாவுகள் நடைபெறும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தமிழகம் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006 முதல் 2009 வரை தமிழகத்தில் 40 லாக்கப் சாவுகள் நடந்துள்ளதாக கூறும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு, இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கிறது.

இவர்கள் அனைவருமே திருட்டு, கள்ளச்சாராயம் என மிகச் சாதாரண குற்றத்திற்காக பிடித்துச் செல்லப்பட்டவர்கள். அனைவரும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். பெரும்பாலானவர்கள் தலித்கள் என்பதுதான் மிகக் கொடுமையானது. சட்ட உதவி பெறக் கூட வழி இல்லாத அல்லது தெரியாத இவர்களை இப்படிக் கொடூரமாக சித்திரவதைப்படுத்திக் கொல்வது மிகவும் மோசமான செயல் என்கிறது பீப்பிள்ஸ் வாட்ச்.

காந்தஹார் குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்று தாலிபான் மறுப்பு

0 கருத்துகள்

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாண கவுன்சில் அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தாலிபான் அறிவித்துள்ளது.நிரபாதிகளான சிவிலியன்களை கொலைச்செய்வதை தாங்கள் கண்டிப்பதாகவும் இந்த குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூஸுஃப் அஹ்மதி கூறினார்.இந்த குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.65 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்மலையாள நாளிதழ்

மிண்டனாவோ:சிவிலியன்களை ராணுவம் கூட்டுக்கொலைச்செய்ததாக ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு

0 கருத்துகள்
மணிலா:தெற்கு பிலிப்பைன்ஸில் மோரோ இஸ்லாமிக் லிபரேசன் ஃப்ரண்ட் போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே நடைபெறும் மோதலில் அப்பாவிகளான சிவிலியன்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தின் கொடூரமான அக்கிரமத்திற்கு இரையாவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றஞ்சாட்டியுள்ளது.
ராணுவத்தினரால் ஏராளமானோர் கொலைச்செய்யப்பட்டதாகவும்,பலர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் ஆம்னெஸ்டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

போராளிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டு சிவிலியன்கள் பலரையும் ராணுவம் கொலைச்செய்துள்ளது. போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினருக்குமிடையே மோதல் நடைபெறும் மிண்டனாவோவில் ஏழு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.அகதிகளாக்கப்பட்ட பலரும் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றார்கள் அல்லது காணாமல் போகின்றார்கள்.

இரகசிய சிறைச்சாலைகளுக்கு சாதாரண குடிமக்களை ராணுவம் கடத்திச்செல்கிறது. பல வீடுகளையும் ராணுவம் தீக்கிரையாக்கியுள்ளது. போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் முடிந்த பிறகு தங்களது சொந்த கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கச்சென்றவர்களை ராணுவம் போராளிகள் என்று குற்றஞ்சுமத்தி சித்திரவதைச்செய்த நிகழ்வுகளை ஆம்னெஸ்டி சுட்டுக்காட்டுகிறது.

40 வருடங்களாக நடைபெறும் போராட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனித உரிமை மீறல்கள் படிபடிப்படியாக அதிகரித்துள்ளதாக ஆம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

26/8/09

ஜின்னாவைப் பற்றிய ஜஸ்வந்சிங்ன் புத்தகத்தை தொடர்ந்து பா.ஜ.கவில் நடைபெறும் கேலிக்கூத்துக்கள் - கார்ட்டூன்

0 கருத்துகள்

இந்தியாவின் ரகசிய சித்திரவதை கூடங்கள் - பிரத்யேக கட்டுரை

0 கருத்துகள்
சட்டத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு செயல்படும் இவை நம் நாட்டின் குவாண்டனாமோக்கள். உரிமை மீறல்களின் உறைவிடமாய் திகழும் இவை பற்றி 'தி வீக்' வார' இதழ் வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரை.
இக்கட்டுரையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை 'விடியல்வெள்ளி' ஆகஸ்ட்'09 மாத இதழிலிருந்து இக்கட்டுரையை இங்கு தருகிறோம்.
இக்கட்டுரையை பெரிதாக்கிப் படிக்க பக்கங்களின் மீது க்ளிக் செய்யவும்.source: விடியல் வெள்ளி ஆகஸ்ட்'09

ஸ்வைன் ப்ளூ எதிரொலி ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் - சவூதி அரசு உத்தரவு

0 கருத்துகள்
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
மேலும், தத்தமது நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சான்றிதழ்களையும் யாத்ரீகர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் 12 வயதுக்குட்பட்டோரையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அனுமதிப்பதில்லை என்றும் சவூதி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த தடை காரணமாக இந்திய ஹஜ் கமிட்டி பல்வேறு நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.
அதன்படி காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உடையோரை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பாமல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வருகிற 29ம் தேதி விவாதிக்கவுள்ளனர்.
இந்தியாவிலிருந்து யாத்திரை செல்ல விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் மருத்துவ சான்றிதழ் அளிக்கவும், தடுப்பு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கென பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. டாமிப்ளூ மாத்திரை மட்டுமே உள்ளது. அதையே தடுப்பு மருந்தாக கொடுக்கப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவி்ல்லை.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கோரும் வழக்கு: SDPI முடிவு

0 கருத்துகள்
அமீரகத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம்(EIFF) வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து ஓட்டுரிமை மறுக்கப்படுவதையும் அதன் மூலம் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளாகி வருவதை கவனத்தில் கொண்டு அமீரகத்தின் அபுதாபி,துபாய்,ஷார்ஜா போன்ற அமீரக ஸ்டேட்ஸ்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க கோரும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியது.
அந்த கருத்தரங்குகளின் போது 3 கட்ட போராட்ட முறைகளை இதற்காக EIFF முன்னெடுத்துச்செல்லும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவில் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முகமாக துவங்கப்பட்டுள்ள சோசியல் டெமோக்ரேடிக் பார்டியின் கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கே.முஹம்மது ஷெரீஃப் அவர்களுக்கு EIFF சார்பாக துபாயில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு இந்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்ற அடிப்படையிலான மனு ஒன்று ஷெரீஃப் அவர்களிடம் EIFF சார்பாக வழங்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷெரீஃப் அவர்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை இனி NRI(Non Residential Indian) என்று அழைக்க்க்கூடாது என்றும் Over Seas Indian Citizen என்று அழைக்கவேண்டும் என்று கூறியதுடன் இந்தியாவுக்கு முதுகெலும்பாக திகழும் வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தர SDPI சட்ட ரீதியாக முழு அளவில் ஆதரவளிக்கும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற SDPI கேரள மாநில கமிட்டி கூட்டத்தில் SDPI கேரள உயர் நீதி மன்றத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாமே மனுதாரராகுவது என முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிக அளவிலான வெளிநாட்டு பணம் வருவதற்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பதை இக்கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களுக்காக செல்லும் இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையை மறுப்பெதன்பது அநீதமானது.
ஏராளமான ஐரோப்பிய நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியுள்ளது. மத்திய அரசு இந்திய பிரஜைகள் உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு (வாக்குரிமை உள்ளிட்ட)போதிய வசதிகளை ஏற்பாடுச்செய்துதரவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு கேரள மாநிலத்தலைவர் கே.எம்.ஷெரீஃப் தலைமை வகித்தார்.
News:twocircles.net செய்தியை அடிப்படையாகக்கொண்டது.

குவாண்டனமோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆப்கன் வாலிபர் மொகமத் ஜவாத் குடும்பத்துடன் சேர்ந்தார்

0 கருத்துகள்
கியூபாவில் உள்ள அமெரிக்க சிறையான குவாண்டனமோ பே-யில் பயங்கரவாதி என்று பிடித்துச் சென்று சித்தரவதை செய்யப்பட்ட ஆப்கான் நபர் மொகமத் ஜவாத் நேற்று இரவு காபூல் வந்தடைந்தார்.
அமெரிக்க ராணுவ விமானத்தில் கண்களைக் கட்டி அவரைக் கொண்டு காபூலில் இறக்கி விட்டனர். வந்திறங்கியவுடன் ஆப்கான் தலைமை வழக்கறிஞரையும், அதிபர் கர்சாயையும் சந்தித்தார் ஜவாத். கடந்த 2002ஆம் ஆண்டு ஆப்கானில் உள்ள அமெரிக்க படையினர் இருவர் மீது கையெறி குண்டு வீசியதாக குற்றம்சாற்றப்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட மொகமத் ஜவாதிற்கு அப்போது வயது 12 மட்டுமே.
கையெறிகுண்டு வீசியதாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் இவரையும், இவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவோம் என்று ஆப்கான் படையினர் மிரட்டியுள்ளனர். இதனை அறிந்த குவாண்டனமோ பே-யில் உள்ள அமெரிக்க ராணுவ நீதிபதி இந்த வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டதால் செல்லாது என்று அறிவித்தார்.ஆனால் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதிதான் வாஷிங்டன் நீதிமன்ற நீதிபதி எல்லென் சேகல் ஹியூவெல், ஜவாத் தவறு செய்யவில்லை என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
ஜவாதின் மாமா ஹாஜி குல் நாயக் "அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு கோபம் எதுவுமில்லை. மாறாக ஜவாதை அமெரிக்கர்களிடம் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்" என்று பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எந்த கையேறி குண்டுவீசி அமெரிக்க ராணுவத்தினர் இருவரை ஜவாட் தாக்கினார் என்று கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டாரோ அதே தருணத்தில் ஜவாட் தன்னுடன் கிணறு தோண்டிக் கொண்டிருந்ததாகவும் நாயக் கூறினார்.இவரை பிடிக்கும் போது வயது 12 என்ற போதும் மிக மோசமான சித்தரவதை சிறையில் அமெரிக்கர்கள் அடைத்தனர். தற்போது குடும்பத்துடன் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மொகமத் ஜவாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

25/8/09

மனிதகுலத்திற்கெதிரான மாபாதகத் தீர்ப்பு!

0 கருத்துகள்
இக்கட்டுரையை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.
source: விடியல் வெள்ளி ஆகஸ்ட்'09

ஜின்னாவுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுதர்சனும்

1 கருத்துகள்
இந்தோர்:ஜின்னாவை புகழ்ந்து ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் சங்க பரிவாரத்தில் விவாதத்தை கிளப்பிக்கொண்டிருக்கவே ஜின்னாவுக்கு ஆதரவாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ் சர் சங்க் சாலக்(அகில உலக தலைவர்) கு.சுதர்சனும் களமிறங்கியுள்ளார்.
ஒருகாலக்கட்டத்தில் ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் முஹம்மது அலி ஜின்னா என்று சுதர்சன் கருத்து தெரிவித்தார்.ஜின்னாவுக்கு பல முகங்கள் உண்டு.வரலாற்றை நீங்கள் தெளிவான முறையில் ஆய்வுச்செய்தால் லோகமான்ய திலகருடன் ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கையில் ஜின்னா உறுதியாக இருந்தது தெரியவரும்.காந்தி இந்தியா பாக். பிரிவினையை வலுமையாக எதிர்த்திருந்தால் பிரிவினை நடந்திருக்காது.ஜின்னா மதசார்பற்றவரா என்ற கேள்விக்கு பதிலளிக்கவே சுதர்சன் இவ்வாறு பதிலளித்தார்.
கிலாஃபத் இயக்கத்தை முஸ்லிம்கள் ஆதரிப்பது பிரிட்டீஷாருக்கெதிரான சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக அமையும் என்று காந்தியின் கருத்தை ஜின்னா கடுமையாக எதிர்த்திருந்தார் என்றும் சுதர்சன் கூறியுள்ளார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு மருந்தே காரணம்-தடயவியல் நிபுணர் அறிக்கை

0 கருத்துகள்
ஹூஸ்டன்: பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.
ஜாக்சன் உடலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்சன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது.
ஆனால் ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசி கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் ஜாக்சன் உயிரைக் குடித்ததாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லாஸ் ஏஞ்சலெஸ், தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன் ஹூஸ்டன் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.
சென்னை டாக்டர் ..!
ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
கடந்த 1992ம் ஆண்டு அவர் லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 26ம் தேதி மைக்கேல் ஜாக்சன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன்.
சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த டாக்டர் வாகீஸ்வரன், 1971ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்தார். பின்னர் ஒரு வருட பயிற்சியை முடித்த அவர் 1972ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.
ப்ரூக்ளின் யூத மருத்துவமனையில் ஓராண்டு நேரடி மருத்துவப் பயிற்சிப் படிப்பில் சேர்ந்த அவர் 1973ம் ஆண்டு அதை முடித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் லூக் மருத்துவமனையில் முழு ஆண்டு உடற்கூறியல் மற்றும் மருத்துவ நோயியல் பிரிவில் சேர்ந்து படித்தார்.

இஸ்ரேல் விமான தாக்குதல்:காஸ்ஸாவில் மூன்று பேர் படுகொலை

0 கருத்துகள்
காஸ்ஸா:காஸ்ஸா முனையையும் எகிப்தையும் இணைக்கும் சுரங்கப்பாதையின் மீது இஸ்ரேல் அக்கிரமமான முறையில் நடத்திய விமானத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலுக்கு பழி வாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ தலைமை அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ்மலையாள நாளிதழ்

24/8/09

ஈராக்கில் மீண்டும் அமெரிக்க ராணுவத்தின் சிவிலியன் வேட்டை

0 கருத்துகள்

பாக்தாத்:ஈராக்கின் கிழக்கு மாகாணமான தியாலாவில் முல்லா ஹபேஷ் கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் அக்கிரமான முறையில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர் அந்த வீட்டின் உரிமையாளரை சுட்டுக்கொலைச்செய்தனர்.

அவருடைய மகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.தெற்கு ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் 3 சிறுவர்களை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி நடைபெற்று ஒரு வாரத்திற்குள் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

அல் தர்மியா கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 12 வயதிற்கும் குறைவான 3 சிறுவர்களை ஆக்கிரமிப்பு ராணுவம் சுட்டுக்கொன்றது.இரண்டு நிகழ்வுகளை பற்றியும் அமெரிக்க ராணுவம் எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.

செய்தி:தேஜஸ்

இஸ்ரேலிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

0 கருத்துகள்
டெல் அவீவ்:இஸ்ரேலிலிருந்து ஏவுகணைகள் வாங்க ரூ.100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 2012 ஆம் ஆண்டில் 18 ஸ்பைடர் ஏவுகணைகளை இஸ்ரேல் இந்தியாவுக்கு அளிக்கும். இஸ்ரேலிலுள்ள ஆயுத நிறுவனமான ராஃபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் இந்தியாவுக்கு ஏவுகணைகளை தயாரித்து அளிக்கும் என்று ஜெருசலம் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2008 இலிருந்து ரஷ்யாவை முந்தி இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனைச்செய்யும் நாடாக மாறியுள்ளது. ஆயுத ஒப்பந்தங்களின்போது இஸ்ரேல் நிறுவனங்களான ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ராஃபேல் ஆகியன இந்திய அதிகாரிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ்

23/8/09

ஈராக்:அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட பிளாக் வாட்டர் நிறுவனத்தை பயன்படுத்தும் அமெரிக்கா

0 கருத்துகள்


வாஷிங்ட‌ன்:ஈராக்கில் அப்பாவி ம‌க்க‌ளை சுட்டுக்கொலைச்செய்ததாக‌ குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்ட‌ த‌னியார் பாதுகாப்பு நிறுவ‌ன‌மான‌ பிளாக்வாட்ட‌ர் நிறுவ‌ன‌த்தை அதிகார‌ப்பூர்வ‌மாக‌ ஈராக்கிலிருந்து வெளியேற்றிய‌தாக‌ அமெரிக்கா அறிவித்திருந்தாலும் த‌ற்போதும் அந்நிறுவ‌ன‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்திவ‌ருவதாக‌ நியூயார்க் டைம்ஸ் என்ற‌ நாளித‌ழ் செய்தி வெளியிட்டுள்ள‌து.

ஈராக்கில் தூத‌ர‌க‌ அதிகாரிக‌ளை அழைத்துச்செல்லுத‌ல்,ஆப்கானிஸ்தானில் அவ‌ர்க‌ளுடைய‌ பாதுகாப்பை உறுதிச்செய்த‌ல்,அமெரிக்க‌ ராணுவ‌ வீர‌ர்க‌ளுக்கு ப‌யிற்சி அளித்த‌ல் ஆகிய‌ ப‌ணிக‌ள் சி ச‌ர்வீஸஸ் என்ற‌ புதுப்பெய‌ரில் இய‌ங்கும் பிளாக்வாட்ட‌ருக்கு அமெரிக்க அர‌சு வ‌ழ‌ங்கியுள்ள‌து.இதில் 2011 ஆம் ஆண்டு வ‌ரையிலான‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ளும் அட‌ங்கும்.40 கோடி டால‌ர் அள‌விலான‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ள் இந்நிறுவ‌ன‌த்திற்கு அமெரிக்க‌ வ‌ழ‌ங்கியிருப்ப‌தாக‌ அப்ப‌த்திரிகை க‌ண்ட‌றிந்துள்ள‌து.

அல்காயிதா த‌லைவ‌ர்க‌ளை கொல்வ‌த‌ற்கு பிளாக்வாட்ட‌ருட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ள‌தாக‌ குற்ற‌ச்சாட்டு எழுந்துள்ள‌ சூழ‌லில்தான் நியூயார்க் டைம்ஸின் இந்த‌ ஆய்வு அறிக்கை வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.இந்த‌ச்செய்தியை ம‌றுக்க‌ அமெரிக்க‌ அர‌சுத்துறை அதிகாரிக‌ளோ,சி.ஐ.ஏ அதிகாரிக‌ளோ த‌யாரில்லை. த‌ற்போதுள்ள‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ளை ர‌த்துச்செய்வ‌து பொருளாதார‌ சிக்க‌லை ஏற்ப‌டுத்தும் என்று அதிகாரிக‌ள் விள‌க்க‌ம் அளிக்கின்ற‌ன‌ர்.த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு உத‌விச்செய்வ‌து நிறுத்த‌ப்ப‌டும் என்று அமெரிக்க‌ அர‌சு செய‌ல‌ர் ஹிலாரிகிளிண்ட‌ன் ஒரு ப‌க்க‌ம் கூறியிருக்க‌ ம‌றுபுற‌ம் த‌னியார் பாதுகாப்பு நிறுவ‌ன‌ங்க‌ளுட‌னான‌ உற‌வு தொட‌ர்வ‌தை எதிர்த்து டெமோக்ரேடிக் சென‌ட்ட‌ர் ஜோண் கெர்ரி க‌ள‌மிற‌ங்கியுள்ளார்.

வெளிநாட்டு உற‌வுக‌ளுக்கான‌ சென‌ட் க‌மிட்டிக்கு கெர்ரிதான் த‌லைவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.சி.ஐ.ஏ வுட‌ன் த‌ங்க‌ளுக்கு எந்த‌வித‌மான உடன்பாடுகள் உள்ள‌ன‌ என்பதைப்ப‌ற்றி விள‌க்க‌வேண்டும் என்று கூறி கெர்ரி சி ச‌ர்வீஸின் த‌லைவ‌ர் எரிக் டி பிரின்ஸிற்கு க‌டித‌ம் எழுதியிள்ளார்.அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தீவிர‌வாத‌ குற்ற‌ம் சும‌த்தி கைதுச்செய்ய‌ப்ப‌டும் ந‌ப‌ர்க‌ளை கொடூர‌மான‌ முறையில் துப்பாக்கியை ப‌ய‌ன்ப‌டுத்தியும்,கான்கிரீட்டுக‌ளை துழைக்கும் ட்ரில்லிங் மெசின்க‌ளை உப‌யோகித்தும் சித்திர‌வ‌தைச்செய்து குற்ற‌த்தை ஒப்புக்கொள்ள‌வைத்த‌தாக‌வும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள‌ செய்தி கூறுகிற‌து.

அமெரிக்க‌ சிவில் லிப‌ர்டி யூனிய‌ன் ச‌ட்ட‌ரீதியான‌ போராட்ட‌த்தின் மூல‌ம் பெற்ற‌ சி.ஐ.ஏ ஜென‌ர‌லின் அறிக்கையிலிருந்துதான் இத்த‌க‌வ‌ல் எடுக்க‌ப்ப‌ட்ட‌து.1999 இல் 17 அமெரிக்க‌ க‌ப்ப‌ல்ப‌டையின‌ரின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ யு.எஸ்.எஸ் கோல் குண்டுவெடிப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ அப்துற்ற‌ஹீம் அல் ந‌ஸீரை துப்பாக்கி முனையை நெற்றியில் வைத்து கொன்றுவிடுவோம் என்று ப‌ய‌முறுத்தி விசார‌ணைச்செய்திருந்த‌ன‌ர்.இவ‌ர் உட்ப‌ட‌ மூன்று ந‌ப‌ர்க‌ளை வாட்ட‌ர்போர்டிங் என்ற‌ சித்திர‌வ‌தைக்கும் ஆளாக்கியிருந்த‌ன‌ர். கொலைச்செய்துவிடுவேன் என்று ப‌ய‌முறுத்தி விசார‌ணைச்செய்வ‌து அமெரிக்காவில் த‌டைச்செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

செய்தி:தேஜ‌ஸ்

மோடி மீது நடவடிக்கை-வாஜ்பாயை தடுத்த அத்வானி: ஜஸ்வந்த் சிங்!

0 கருத்துகள்
டெல்லி: குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தையடுத்து அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்தார். ஆனால், அதை அத்வானி தான் தடுத்தார் என்று பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

மேலும் விமானப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுதலை செய்தது தனக்குத் தெரியாது என்று அத்வானி சொல்வது பச்சைப் பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்டிடிவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சேகர் குப்தாவின் 'வாக் டாக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,2002ம் ஆண்டில் குஜராத்தில் மதக் கலவரம் தீவிரமாக நடந்த நேரம் அது. பிரதமர் வாஜ்பாய், அத்வானி, நான், அருண் ஷோரி ஆகியோர் பாஜக கூட்டத்தில் பங்கேற்க கோவாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தோம்.அப்போது, வாஜ்பாய் எங்களிடம், குஜராத் விஷயத்தில் நாம் என்ன செய்வது என்றார். அவருக்கு யாரும் பதில் சொல்லவில்லை. நிசப்தம் நிலவியது. பின்னர் அவரே தொடர்ந்து, குஜராத் விஷயத்தில் அப்படியே விட்டுவிட முடியாது. (நரேந்திர மோடி) விஷயத்தில் ஏதாவது கடும் நடவடிக்கை அவசியம். என்ன செய்யலாம் என்றார் அவர்.
அத்வானி எழுந்து டாய்லெட் போய்விட்டார்.இதையடுத்து என்னிடம் திரும்பிய வாஜ்பாய், அவரிடம் (அத்வானி) கேளுங்கள்.. என்ன செய்வது என்று கேட்டுச சொல்லுங்கள் என்றார்.டாய்லெட்டில் இருந்து திரும்பி வந்த அத்வானியிடம் நான் போய், குஜராத் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று கேட்டேன்.அதற்கு அத்வானி, (நரேந்திர மோடி மீது) நடவடிக்கை ஏதாவது எடுத்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். இதன்மூலம் நரேந்திர மோடி மீது எந்த நடவடிக்கையையும் எடு்க்கவிடாமல் வாஜ்பாயை அத்வானி தடுத்துவிட்டார். இதனால் மோடி விஷயத்தில் வாஜ்பாய் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் குஜராத் கலவர நாட்களில் மிகவும் வருத்தத்தோடு தான் இருந்தார் வாஜ்பாய்.
ஒரு கட்டத்தில் கட்சி விவகாரங்களால் மிகவும் புண்பட்டுப் போயிருந்த வாஜாய் ராஜினாமா செய்யக் கூட தயாராவிட்டார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த நிலையில் மறைந்த பிரமோத் மகாஜனிடம் இருந்து போன் வந்தது. சீக்கிரம் பிரதமர் அலுவலகத்துக்கு வாருங்கள் என்றார்.நானும் விரைந்தேன். அப்போது என்னிடம் ஓடிவந்த பிரமோத், வாஜ்பாய் ராஜினாமா செய்யத் தயாராகிறார். அவரது செயலாளரை அழைத்து ராஜினாமா கடிதம் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் என்றார்.நான் வாஜ்பாயிடம் ஓடினேன். அப்போது அவரது செயலாளர் ராஜினாமா கடித நோட்ஸ் எடுக்க வாஜ்பாயிடம் வந்தார். நான் அவரை அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுங்கள்.. இப்போதைக்கு வாஜ்பாய் கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று திருப்பி அனுப்பினேன்.நீ என்ன செய்கிறாய் என்று என்னைத் திட்டியபடியே, ஒரு பேப்பரை எடுத்து தானே கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுத ஆரம்பித்தார் வாஜ்பாய். நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டேன். பேப்பரை பறித்துவி்ட்டு, தயவு செய்து இந்தக் காரியத்தை செய்துவிடாதீர்கள் வாஜ்பாய்ஜி என்று கெஞ்சினேன். நீண்ட முயற்சி்க்குப் பின் ஒருவழியாக அவரை அமைதிப்படுத்தினேன்.
என் மீது பாஜக நடவடிக்கை எடுக்குமாம்.. அதை அத்வானி அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாராம்.. இந்தச் செயல் மூலம் அத்வானி தார்மீகரீதியி்ல் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது.
மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துபோது ஏற்பட்ட ஓட்டு நோட்டு விவகாரத்தில், பாஜக எம்பிக்களை விட்டு நாடாளுமன்றத்தில் பணத்தை கொட்ட வைத்து நடத்தப்பட்ட நாடகத்தை நான் கண்டித்தேன். இந்த விவகாரத்திலிருந்து நாம் விலகி இருப்பதே நல்லது என்று அத்வானியிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. அவரை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து இது வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.ஆனால், என்ன ஆனது.. அப்படியெல்லாம் நாடாளுமன்றத்திலேயே பணத்தைக் கொட்டி நாடகம் போட்டதால் தேர்தலில் ஏதாவது வித்தியாசம் ஏற்பட்டதா?. தேர்தலில் இதனால் பாஜகவுக்கு ஓட்டு கிடைத்ததா?. இல்லையே.
1999ம் ஆண்டில் இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டபோது மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் முழுப் பங்கு உண்டு. அவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அங்கு அத்வானியும் இருந்தார்.(ஆனால், சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது, தனக்கு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டது தெரியாது என்று அத்வானி கூறித் திரிந்தது குறிப்பிடத்தக்கது).உள்துறை அமைச்சருக்குத் தெரியாமல், அதுவும் அத்வானி போன்றவருக்குத் தெரியாமல் தீவிரவாதிகளை விடுவித்துவிட முடியுமா?.முதலில் அந்த விமானத்தை அம்ரிஸ்தரில் இருந்து காண்டஹாருக்கு தப்ப விட்டதே பெரும் தவறு. இந்தியாவை விட்டு எப்போது அந்த விமானம் வெளியே போனதோ அப்போதே நமக்குத் தோல்வி ஏற்பட்டுவிட்டது. விமானம் அம்ரிஸ்தரை விட்டுச் சென்றதற்கு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.(3 தீவிரவாதிகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று காண்டஹாரி்ல் தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு 160 இந்திய விமானப் பயணிகளை திருப்பி அழைத்து வந்தவர் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது).
வாஜ்பாயை சந்திக்கும் ஜஸ்வந்த்?:
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங், இன்று பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை சந்திப்பார் என்று தெரிகிறது. வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரான ஜஸ்வ்த் கட்சியை விட்டு நீக்கப்பட்டபின் அவரை சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.
அத்வானி-ராஜ்நாத் சந்திக்கும் வசுந்தரா:
இந் நிலையில் ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக மறுத்து, கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் மோதிய வசுந்தரா ராஜே இன்று அத்வானியையும் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கிறார்.அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த இவருக்கு எதிராக ஜஸ்வந்த் போர்க் கொடி தூக்கியதும் அவரது நீக்கத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எங்களுக்குத் தொடர்பில்லை-ஆர்எஸ்எஸ்:
இந் நிலையில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதில் ஆர்எஸ்எஸ்சுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.ஆர்எஸ்எஸ்சுடன் நெருங்கிய தொடர்பு இல்லாததும் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
படேலை அவமானப்படுத்திய பாஜக-லாலு:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,நாட்டின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் சர்தார் படேல். எப்போது அத்வானியை இரும்பு மனிதர் என்று பாஜகவினர் அழைத்தார்களோ அப்போதே சர்தார் படேல் அவமானப்பட்டு விட்டார் என்றார்.
thatstamil

22/8/09

மக்ராபிக்கு வீரவரவேற்பு,பிரிட்டன் எதிர்ப்பு

0 கருத்துகள்
திரிபோலி:கடுமையான புற்று நோயைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து சிறையிலிருந்து விடுதலைச்செய்யப்பட்ட லோக்கர்பி விமான விபத்திற்கு காரணமான குற்றவாளி என்று கருதப்படும் அப்துல் பாஸித் அல் மக்ராபிக்கு திரிபோலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லிபியா மற்றும் ஸ்காட்லாந்து கொடிகளை ஏந்திய நூற்றுக்கணக்கான நபர்கள் திரிபோலி விமான நிலையத்தில் மக்ராபியை வரவேற்றனர்.

கடுமையான ப்ரோஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோயைத்தொடர்ந்து மனிதநேய அடிப்படையில் மக்ராபியை கிரிநோக் சிறையிலிருந்து ஸ்காட்லாந்து அதிகாரிகள் விடுவித்தனர். சிறையிலிருந்து வெளியே வரவும், வாழ்வின் எஞ்சிய காலத்தை சொந்தநாட்டில் கழிக்கவும் வாய்ப்பு கிடைத்தது ஆசுவாசமளிப்பதாக மக்ராபி கூறினார்.

1988 ஆம் ஆண்டு டிச‌ம்ப‌ர் 1 ஆம் தேதி 270 பேரின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ விமான‌விப‌த்தில் ம‌க்ராபி குற்ற‌வாளி என்று ஸ்காட்லாந்து நீதிம‌ன்ற‌ம் 2001 ஆம் ஆண்டு தீர்ப்ப‌ளித்த‌து.ஆனால் ம‌க்ராபியின் த‌ர‌ப்போ ம‌க்ராபி குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என்றும் விசார‌ணை கேலித்த‌ன‌மான‌து என்றும் கூறியிருந்த‌து.1986 ஆம் ஆண்டு அமெரிக்கா திரிபோலியின் மீது ந‌ட‌த்திய‌ குண்டுவீச்சிற்கு ப‌தில‌டியாக‌த்தான் இந்த‌ விமான‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌ அன்று குற்ற‌ச்சாட்டு எழுந்தது.பிரிட்ட‌ன் ம‌ற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை புற‌க்க‌ணித்துதான் ஸ்காட்லாந்து ம‌க்ராபியை விடுவித்த‌து.

குற்றவாளியான‌ ம‌க்ராபிக்கு ராஜ‌வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு பிரிட்ட‌ன் அதிருப்தியை வெளிப்ப‌டுத்திய‌து. அதேவேளையில் லோக்க‌ர்பி விமான‌விப‌த்தின் உண்மையான‌ விப‌ர‌ங்க‌ள் வெளிவ‌ராம‌லிருக்க‌த்தான் த‌ந்திர‌மாக‌ ம‌க்ராபியை விடுத‌லைச்செய்த‌தாக‌வும் த‌க‌வ‌ல்க‌ள் கூறுகின்ற‌ன‌. நீதிம‌ன்ற‌ தீர்ப்பிற்கெதிராக‌ அப்பீல் செய்ய‌ப்ப‌ட்டால் ம‌க்ராபி நிர‌ப‌ராதி என்று தீர்ப்பு வ‌ர‌ வாய்ப்பு இருப்ப‌தால் அமெரிக்காவும்,பிரிட்ட‌னும் சேர்ந்து முய‌ற்சி மேற்க்கொண்டு ம‌க்ராபியின் விடுத‌லைக்கு உதவியதாக‌ லண்டனில் வசிக்கும் லிபியாவைச்சார்ந்த‌ எழுத்தாள‌ரும்,அர‌சிய‌ல் விமர்ச‌க‌ருமான‌ ஜ‌மால் கமாத்தி கூறுகிறார்.
மக்ராபிக்கு லிபியாவில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.

செய்தி:தேஜஸ்

தமிழக இடைத்தேர்தல்:படு கேவலமாக தோற்ற பா.ஜ.க‌

0 கருத்துகள்
தமிழகத்தில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியை அத்தொகுதிகளின் மக்கள் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிட்டனர்.

மதவாதக்கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

முகவரியில்லாமல் இருந்த சங்க்பரிவாரத்தின் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை தமிழக வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி அண்ட இடம் கொடுத்தவர்கள் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள்.பின்னர் இக்கட்சிகள் பா.ஜ.க வை கைக்கழுவியதை அடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் நடிகர்கள் சரத்குமார்,கார்த்திக் ஆகியோரின் சில்லறைக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது.ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் களத்திலிருந்து துரத்தப்பட்டது.இந்நிலையில்தான் தமிழகத்தின் 5 சட்டமன்றத்தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நம்பிக்கையிழக்காமல் போட்டியிட்டது.அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணித்ததால் சந்தடிசாக்கில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த பா.ஜ.க விற்கு கேவலமான தோல்வியை வழங்கி 5 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆப்பசைத்த குரங்கான பா.ஜ.க எதிர்காலத்தை நினைத்து விழி பிதுங்கி நிற்கிறது.பாசிச பா.ஜ.க விற்கு தமிழக மண்ணில் இடம் இல்லை என்று மீண்டும் ஒரு முறை தீர்ப்பளித்த 5 சட்டமன்ற வாக்காளர்களுக்கும் மனித நேயம் கொண்டவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

5 தொகுதியில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் விபரம்:

இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 5 தொகுதிகளிலும் சேர்த்து 14,757 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.

தூதன்.

மருத்துவ-பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் வக்பு வாரியம்

0 கருத்துகள்
சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர்,

சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை கட்டியது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, வக்பு வாரியத்துக்கு குடிசை மாற்று வாரியத்தால் 276 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதாவது, ராயபுரத்தில் 100 குடியிருப்புகள், கண்ணகி நகரில் 176 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகள் முஸ்லிம் சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் (மாதம் ரூ.250 வாடகை), ரூ. 1,000 முன் பணம் பெற்றுக் கொண்டு வழங்கப்படும்.

இந்த வீடுகள் மசூதிகளின் இமாம்கள், மோதினார்கள், வேலையற்ற உலமாக்கள், விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தலா 10 சதவீதமும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.

இதற்காக கடந்த 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன் பின்னர் இந்த விண்ணப்பங்கள் தனி குழுக்கள் மூலமாக சரி பார்க்கப்படும். கடைசியில் குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் வக்பு வாரியம் மூலமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மருத்துவம், பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக நலக்கூடங்கள் தொடங்கப்படும். பெண்களுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றார்.

thatstamil

துபாய்: 13‍வது சர்வதேச புனித குர் ஆன் விருது நிகழ்ச்சி ரமலான் ஒன்றில் துவக்கம்

0 கருத்துகள்
துபாயில் வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லானில் ந‌டைபெறும் புனித‌ குர் ஆன் விருது நிக‌ழ்ச்சி இவ்வாண்டு ர‌ம‌லான் முத‌ல் தேதியில் துவ‌ங்குவ‌தாக‌ புனித‌ குர் ஆன் விருது க‌மிட்டி த‌லைவ‌ர் இப்ராஹீம் முஹம்மது பூமில்ஹா அறிவித்துள்ளார்.

துபாயிலிலுள்ள‌ ப‌ல்வேறு மைய‌ங்க‌ளில் ச‌னிக்கிழ‌மை முத‌ல் மார்க்க‌ பிர‌ச்சார‌ நிக‌ழ்ச்சிக‌ள் துவ‌ங்கும். இந்தியா உள்ப‌ட‌ ப‌ல்வேறு உல‌க‌ நாடுக‌ளிலுள்ள‌ முஸ்லிம் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளை இந்நிக‌ழ்ச்சியில் கெள‌ர‌விக்க‌ அழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. குர் ஆன் ம‌ன‌ன‌ப்போட்டியில் போர்சுக‌ல்,ஸ்வீட‌ன் உள்ப‌ட‌ 83 நாடுக‌ளிலிருந்து போட்டியாள‌ர்க‌ள் க‌ல‌ந்துக்கொள்கிறார்க‌ள்.

வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் இந்நிக‌ழ்ச்சியின்போது உல‌கின் சிற‌ந்த‌ ஆளுமைத்த‌ன்மைக்கொண்ட‌ முஸ்லிம் அறிஞ‌ர் ஒருவ‌ருக்கு 10 ல‌ட்ச‌ம் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ திர்ஹ‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.
இந்நிக‌ழ்ச்சியில் சொற்பொழிவாற்ற‌ உல‌கில் மாற்றும‌த‌த்தைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு அறிவுப்பூர்வ‌மான‌ ரீதியில் ப‌தில‌ளிப்ப‌தில் சிறந்து விள‌ங்கும் இந்தியாவைச்சார்ந்த‌ டாக்ட‌ர் ஜாஹிர்நாய‌க் அவ‌ர்க‌ள் வ‌ருகிற‌ வியாழ‌ன்,வெள்ளி தின‌ங்க‌ளில் துபாய் world trande centre ஆடிட்டோரியத்தில் உரை நிக‌ழ்த்துகிறார்.