26/8/09

குவாண்டனமோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆப்கன் வாலிபர் மொகமத் ஜவாத் குடும்பத்துடன் சேர்ந்தார்

0 கருத்துகள்
கியூபாவில் உள்ள அமெரிக்க சிறையான குவாண்டனமோ பே-யில் பயங்கரவாதி என்று பிடித்துச் சென்று சித்தரவதை செய்யப்பட்ட ஆப்கான் நபர் மொகமத் ஜவாத் நேற்று இரவு காபூல் வந்தடைந்தார்.
அமெரிக்க ராணுவ விமானத்தில் கண்களைக் கட்டி அவரைக் கொண்டு காபூலில் இறக்கி விட்டனர். வந்திறங்கியவுடன் ஆப்கான் தலைமை வழக்கறிஞரையும், அதிபர் கர்சாயையும் சந்தித்தார் ஜவாத். கடந்த 2002ஆம் ஆண்டு ஆப்கானில் உள்ள அமெரிக்க படையினர் இருவர் மீது கையெறி குண்டு வீசியதாக குற்றம்சாற்றப்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட மொகமத் ஜவாதிற்கு அப்போது வயது 12 மட்டுமே.
கையெறிகுண்டு வீசியதாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் இவரையும், இவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவோம் என்று ஆப்கான் படையினர் மிரட்டியுள்ளனர். இதனை அறிந்த குவாண்டனமோ பே-யில் உள்ள அமெரிக்க ராணுவ நீதிபதி இந்த வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டதால் செல்லாது என்று அறிவித்தார்.ஆனால் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதிதான் வாஷிங்டன் நீதிமன்ற நீதிபதி எல்லென் சேகல் ஹியூவெல், ஜவாத் தவறு செய்யவில்லை என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.
ஜவாதின் மாமா ஹாஜி குல் நாயக் "அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு கோபம் எதுவுமில்லை. மாறாக ஜவாதை அமெரிக்கர்களிடம் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்" என்று பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எந்த கையேறி குண்டுவீசி அமெரிக்க ராணுவத்தினர் இருவரை ஜவாட் தாக்கினார் என்று கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டாரோ அதே தருணத்தில் ஜவாட் தன்னுடன் கிணறு தோண்டிக் கொண்டிருந்ததாகவும் நாயக் கூறினார்.இவரை பிடிக்கும் போது வயது 12 என்ற போதும் மிக மோசமான சித்தரவதை சிறையில் அமெரிக்கர்கள் அடைத்தனர். தற்போது குடும்பத்துடன் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மொகமத் ஜவாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.