30/9/09

ஷோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில நிர்வாகிகளின் நியமனம்

0 கருத்துகள்
அதிகாரம் மக்களுக்கே என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட தலித்துகள் ஆகியோரின் அரசியல் நம்பிக்கையாய் அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்'டி ஆஃப் இந்தியாவின் தமிழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் 26-9-2009 அன்று மதுரையில் ரத்தினா ரெஸிடென்சில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைவராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் தலைமையேற்றார்கள் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் இ அபுபக்கர் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் உரை
இதில் கிழ்கண்ட நபர்கள் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மாநில தலைவர் : கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப்
மாநில துனை தலைவர் : அப்துல் ஹமிது (எ) பிலால் ஹாஜியார்
மாநில பொதுச் செயலாளர் : எஸ். முஹம்மது முபாரக் ,எம். எம். கே. ஜமால் செயலாளர் : தாஹிர் சாஹிப்
பொருளாளர் : எஸ். எம். ரபிக் அஹமது சாஹிப்
புதிய மாநில தலைவர் கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி சாஹிப் உரை
செயற்குழு உறுப்பினர்களாக ஏ.யாமுகைதின், ஏ.பக்ருதீன், அப்துல்சர்தார், அப்பாஸ், மெளலானாநிஜாம் முஹைதீன், ஏ.எஸ் இஸ்மாயில், எம்.முஹம்மதுஅலி, ஜின்னா,ஷேக்தாவூது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ தமிழகத்தில் வளர்ப்பதற்காக பாடுபடுவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள் முஸ்லிமாக மாறினர்

0 கருத்துகள்
சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில், முஸ்லிம்களாக மாறினர். சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.
இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.
இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

தஜிகிஸ்தானில் தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு

0 கருத்துகள்
தஜிகிஸ்தானில் பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் பணியாற்றுபவர்களுக்கு தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தாடி வளர்ப்பதில் தடையும் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தாடியின் அளவில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள தஜிகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றது அந்நாட்டு அரசு. மேலும் அரசு வரையறுத்த இஸ்லாமிற்கு அல்லாமல், முழுவதுமாக மார்க்கக் கொள்கைகளை பின்பற்றும் இயங்கங்களை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.
அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சுன்னத்தான தாடி வளர்பவர்கள். தற்பொழுது அமல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் 50 வயதிற்கு மேலான ஆசிரியர்கள் 3 செண்டி மீட்டர்களுக்கு மேல் தாடி வைக்கக் கூடாது என்றும் அந்த வயது வரம்பிற்கு குறைவானவர்கள் தாடியே வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கின்றது.கூடவே, Jeans, Mini skirts மற்றும் T-shirts மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றது.இது பள்ளி மற்றும் உயர்கல்வி சீரமைப்பு திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகின்றது. இது மக்களின் மனநிலை மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு தான் இருக்கின்றது என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் திங்கள் அன்று பத்திரிக்கையாளர்களிடம் அப்துல் ஹமீத் நோஜிமொவ் கூறினார். அந்நாட்டு பிரதமர் இமாமலி ரஹ்மான் முன்பு பள்ளிகளுக்கு மொபைல் போன்கள், மற்றும் மாணவர்கள் வகுப்புகளுக்கு தங்கள் கார்களில் வருவதை தடை செய்திருந்தார்.
நன்றி:ABNA,thapalpetti

ஈரான் அணு சக்தி குறித்து துருக்கி பிரதமர் கருத்து

0 கருத்துகள்
துருக்கி பிரதமர் எர்டோகன், "மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணு சக்தி விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டு இஸ்ரேல் சட்ட விரோதமாக வைத்திருக்கும் அணு ஆயுதங்களை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நியூயார்க்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "ஈரானுடைய அணு கொள்கை அணு ஆயுதம் தொடர்பாக இல்லை. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களையே தன் வசம் வைத்துள்ளது, மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை உபயோகித்தது.இந்த மனித உரிமைகள் எல்லாம் ஏன் கண்டுகொள்ளபப்டவில்லை? ஏன் எப்போதும் ஈரான் சர்ச்சைக்குள்ளாக்கப் படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.ஈரான் மட்டுமே உலக அஜண்டாவில் இருப்பதனால் நாம் கவனிக்கப் பட வேண்டிய காசா போன்ற பிரச்சனைகள் புறம் தள்ளப்படுகின்றது" என்று கூறினார்.
G20 நாடுகளின் மாநாடு முடிந்து துருக்கி திரும்பிய அவர் கூறுகையில் "இதுவரை ஈரானிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அஜண்டாவில் இல்லை" என்று தெரிவித்தார்.துருக்கி பிரதமர் வருகிற மாதம் டெஹ்ரான் செல்ல இருக்கிறார். அப்போது அவர் ஈரானிய அதிபர் அஹ்மத் நஜாதியுடன் ஈரானின் அணு கொள்கையை குறித்து பேச உள்ளார்.எர்டோகன் ஈரானின் வாயு தொழில் மீது போடப்படும் எந்த ஒரு தடையையும் மறுத்துள்ளார். அது ஈரானின் அண்டை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஈரான் பயணத்தை குறித்து எர்டோகன் கூறுகையில் வருகிற அக்டோபர் இறுதியில் தன்னுடைய ஈரான் பயணம் இருக்கும் என்று கூறினார்.அந்த பயணத்தின் போது அணு சக்தி பிரச்சனை உள்ளிட்ட வட்டார பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் போவதாக அவர் ஒரு துருக்கிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும் தான். அது அதன் அண்டை நாடுகள் மீது பல யுத்தங்களை தொடுத்திருக்கின்றது. மேலும் அதனுடைய ஈரான் குறித்த கூக்குரல் இஸ்லாமிய நாடுகள் எதுவும் அணுசக்தி அருகில் நெருங்கவிடாமல் இராணுவ பலத்தை கொண்டு மிரட்டுகின்றது. ஆனால் இஸ்ரேலைப்போல் அல்லாமல், ஈரான் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் அது உலகளாவிய அளவில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உலக நாடுகள் களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.மேலும் ஈரானின் இந்த அணு சக்தி IAEA வின் கொள்கைகள் மற்றும் சர்வதேச கொள்கைகளுக்குள்ளானது.ஐ.நா. வின் அணு சக்தி கண்காணிப்பு குழு கூறுகையில் "ஈரான் Uranium-235 ஐ தான் செறிவூட்டுகின்றது என்றும் அதுவும் 5% திற்கு குறைவாகத்தான் செய்கின்றது" என்றும் கூறியுள்ளது.அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் Uranium 90% திற்கு மேல் செறியூட்டப்பட்டால் மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
நன்றி: ABNA, thapalpetti

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

0 கருத்துகள்
டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது இடைக்கால உத்தரவில் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர்.
பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பொது இடங்களில் தற்போது இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து மாநில அரசுகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
source: Thatstamil

28/9/09

ஈரான் மீண்டும் ஏவுகணை சோதனை

0 கருத்துகள்
பல்வேறு உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு இடையேயும் குறுகிய தூர ஏவுகணைகளை நேற்று ஏவி பரிசோதித்துப் பார்த்த ஈரான், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூர ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது.
ஈரான் அணு திட்டங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில்,ஈரான் நேற்று ஃபதே 110 மற்றும் டோண்டார் 69 ஆகிய குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துப் பார்த்ததாக தகவல் வெளியாயின. உலக நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி, இந்த சோதனையை மேற்கொண்ட ஈரான், அடுத்த அதிர்ச்சியாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி பரிசோதித்தது.
சுமார் 1,300 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணையை இஸ்ரேல், மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகளை குறிவைத்தே ஈரான் உருவாக்கி உள்ளதாக அந்நாட்டின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஏவுகணை சோதனை

0 கருத்துகள்
ஈரான் குறுகிய தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த இரண்டு ஏவுகணைகளை கடந்த ஞாயிறு அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனை ஈரான் ரகசியமாக எழுப்பி வரும் அணு உலைகளுக்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய இரண்டு நாட்களில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புரட்சிகர காவல் விமானப்படையின் தலைவர், தளபதி ஹுசைன் சலாமி இந்த ஏவுகணைச் சோதனைப் பற்றி கூறுகையில், "சோதனை செய்யப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக தங்களது இலக்குகளை தாக்கின. ஈரான் இந்த ஏவுகணைகளை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஏவுகணைகள் தங்களுக்கு எதிராக தொடுக்கப் படும் எல்லா விதமான தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கும் திறன் படைத்தது. (அமெரிக்கா Missile Defence System என்ற வகையில் தனக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளை Patriot வகை ஏவுகணைகளை செலுத்தி தாக்கி அழிக்கும். தற்பொழுதுள்ள ஈரானின் ஏவுகணைகள் இந்த வித தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து இலக்கை வெற்றிகரமாக தாக்கும் திறன் படைத்தது.)

சலாமி மேலும் கூறுகையில், நாங்கள் எங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் எந்த விதமான இராணுவ நடவடிக்கைகளையும் நசுக்கும் விதமாக பதிலடி கொடுப்போம், அது எந்த நாடாக இருந்தாலும் சரியே, எந்த ஆட்சியாக இருந்தாலும் சரியே" என்று கூறினார்.ஈரான் தற்பொழுது நடத்திய இந்த ஏவுகணை சோதனைகள் ஈரானிற்கும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே இருக்கும் அணு சர்ச்சையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஈரான் தனது ஆயுதங்களையும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டது. ஆனால் அது இந்த கால கட்டத்தில் நடத்திய ஏவுகணை சோதனை தனது பலத்தை தன் எதிரிகளின் முகத்தில் காட்டும் விதமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் விவாதம் ஜெனீவாவில் வருகிற அக்டோபர் 1 ம் தேதி நடக்க இருக்கும் சமயத்தில், ஈரான் தனது நிலையை உறுதிப் படுத்த கூடுதலாக ஏதாவது தேவை என்று நினைத்தது. அதன் ஒரு பகுதி தான் இந்த ஏவுகணை சோதனை என்று மத்திய கிழக்கு பகுதி குறித்த மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா கூறியுள்ளார்.

ஞாயிறு சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள் தொண்டர் மற்றும் பதெஹ்110 ரக ஏவுகணைகள் ஆகும். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வகையை சேர்ந்ததல்ல.இந்த ஏவுகணை சோதனைகள், ஈரான் சர்வதேச கண்டனத்தையும் மீறி இரண்டாவதாக ஒரு யுரேனியம் செறியூட்டும் ஆலையை எழுப்பி வருகிறது என்று IAEA கூறியதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தேகத்திற்குரிய அணு உலை அறித் மலைப்பகுதியில் உள்ள கடுமையான காவல் நிறைந்த பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட புரட்சிகர காவல் படையின் தளத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் தீவிர கண்டனத்திற்கு பிறகு ஈரான் ஐ.நா. அதிகாரிகளை இந்த அணு உலையை பரிசோதிக்க சம்மதித்துள்ளது.என்றாலும் இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது.இந்த ஏவுகணை சோதனையின் மற்றொரு பகுதியாக மேலும் 3 ஏவுகணைகளை சோதிக்கப் போவதாக சலாமி தெரிவித்துள்ளார்.

source: aljazeera,thapalpetti

25/9/09

ஊடகத்துறையால் முஸ்லிம்கள்..???..கார்ட்டூன்

0 கருத்துகள்
source: twocircles.net

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட முடியாது: இந்தியா உறுதி

0 கருத்துகள்
அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் (Non Proliferation Treaty - NPT) அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை (UN Security Council) நிறைவேற்றியத் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
நியூ யார்க்கில் ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதர் சியாம் சரண், அணு ஆயுதமற்ற நாடு (Non Nuclear State) என்ற அடிப்படையில் அணு ஆயுதக் குவிப்புத் தடுப்பு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இதற்கு மேல் அணு ஆயுத சோதனை நடத்துவது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்" என்று கூறிய சியாம் சரண், "அணு ஆயுதமற்ற ஒரு நாடாக என்.பி.டி.யில் அங்கம் வகிக்க இந்தியா விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
source: webdunia

திருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி

0 கருத்துகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 அடுக்குகளை கொண்ட கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தரைமட்டமான கட்டடம் மற்றும் மீட்ப்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவ்ருக்கு 4 மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி இந்த வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் 5லட்சம் ரூபாய்க்கு சிவகாசியிலிருந்து ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் திடிரென தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 3 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது. நகரமே அதிரும் வண்ணம் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒடிவந்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

பொதுமக்களுடன் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிவிடிய நடந்த மீட்புபணியில் இன்று காலை வரை 13 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 6 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கிடையே இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
பாபாவின் மகன்கள் பரக்கத்(32)இஷ்ரத்(37),நூருல்லாஹ் மகன் ரியாஸ்(10),ஷாதிக்பாஷா(55),நிஷா(6)அப்ஷர்(6),அஷ்ரத்(11),அக்பர்(13),ஷாபிரா பானு(40),அலிமாபீவி(39),ஆசிப்(11) மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
செல்போன் மூலமாக காப்பாற்ற அழைப்பு விடுத்தவர்...
இவ்விபத்தில் உயிரிழந்த ஷாதிக் உயிரிழப்பதற்கு முன்னால் தனது உறவினர் ஜமால் என்பவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். 10நிமிடத்துக்குப் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இடிபாடுகளுக்கிடையே அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் சுமார் 12 மணியளவில் சடலமாகத்தான் மீட்க்கமுடிந்தது.
சமையல் சிலிண்டரும் வெடித்தது....
வெடியுடன் சமையல் 3 சிலிண்டரும் வெடித்ததால் சேதம் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

aஇச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவ்வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

24/9/09

ஐ.நா பொதுச்சபையில் ஆவேசத்துடன் பேசிய கடாபி

0 கருத்துகள்
நியூயார்க்: கஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் (அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கால் மணி நேரம்தான்).

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, கஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்கக் கூடாது.
பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கூடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.
பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் தனி நாடாக வேண்டும்...
காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

thatstamil

மேற்கு நாடுகளின் தீவிரவாதம்-அகமதி நஜாத்

0 கருத்துகள்
நியூயார்க்: மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் போரையும், ரத்த வெறியையும், ஆவேசத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பி வெறியாட்டம் போட்டு வருகின்றன என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அகமதி நஜாத் பேசினார். அவர் கூறுகையில், மரியாதையுடன் எங்களை நோக்கி நீட்டப்படும் கைகளைப் பிடித்துக் குலுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், திமிருடன் கை நீட்டினால் அதை வெட்டவும் தயங்க மாட்டோம்.
மேற்கத்திய நாடுகள் திமிருடனேயே நடந்து கொள்கின்றன. ஜனநாயகத்தைப் போதிக்கும் அந்த நாடுகள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையிலேயே நடந்து கொள்கின்றன. இதற்கு உலக நாடுகள் பதிலடி தர வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களுடைய அடக்குமுறை மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இஸ்ரேல், காஸா முனையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வருகிறது. மனிதாபிமானமற்ற கொள்கைகளைக் கொண்டுள்ள இஸ்ரேல் அவற்றை ஃபலஸ்தீனத்தில் அரங்கேற்றி வருகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அது தலையிடுகிறது, ஆதிக்கம் செலுத்த முனைகிறது.
எந்தவித எதிர்ப்பையும் செலுத்த இயலாத அப்பாவிப் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதையும், வீடுகள், வயல்கள், மருத்துவமனைகள், பள்ளிகளை அழிப்பதையும் எப்படி குற்றமற்ற செயல்கள் என கூற முடியும்?. இந்த செயல்களை சில அரசுகள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது வேதனையைத் தருகிறது.
உலகின் ஒரு சிறிய சிறுபான்மை குழு (யூதர்கள்) உலகப் பொருளாதாரத்தையும், அரசியலையும், கலாச்சாரங்களையும் ஆக்கிரமிக்க முயல்வதையும், அடக்குமுறையைக் கையாளுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
புதிய வகை அடிமைத்தனத்தை இந்த சக்திகள் உருவாக்கி வருகின்றன. பிற நாடுகளின் கெளரவத்தை இவர்கள் சீரழிக்கிறார்கள். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது வேதனையானது என்றார்.

மேலும் அகமதி நஜாத் பேசும்போது, பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சபையில் இருக்கவில்லை. மேலும், அவர் இஸ்ரேலை கடுமையாக தாக்கிப் பேசியபோது இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
தட்ஸ்தமிழ்

23/9/09

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : அகமதுனிஜாத் எச்சரிக்கை

0 கருத்துகள்
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்துபவர்களின் கையை ஈரான் இராணுவத்தினர் வெட்டி விடுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் முகமத் அகமதுனிஜாத் எச்சரித்துள்ளார்.
ஈராக் - ஈரான் போர் தொடங்கிய ஆண்டை குறிக்கும் விதமாக தலைநகர் தெஹ்ரானில் இன்று நடைபெற்ற இராணுவ பேரணியை பார்வையிட்டு, அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அகமதுனிஜாத், ஈரான் மீது படையெடுக்கக்கூடிய தைரியம் எந்த நாட்டுக்கும் இல்லாத அளவிற்கு தமது இராணுவத்தினர் தயாராக இருப்பதாக கூறினார். ஈரானுக்கு எதிராக உலகின் எந்த ஒரு நாடும் துப்பாக்கியின் விசையை அழுத்தும் முன்னரே அதன் கையை ஈரான் படையினர் வெட்டிவிடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை தடுக்க, அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது உள்பட அனைத்து வாய்ப்புகளையும் தாங்கள் பரிசீலித்து வருவதாக இஸ்ரேல் நேற்று கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாகவே அகமதுனிஜாத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிகிறது.
source: webdunia

நெல்லை மாவட்டம் பத்தமடையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ரமளான் பெருநாள் விளையாட்டு போட்டிகள்

0 கருத்துகள்
பத்திரிக்கை செய்தி மற்றும் படங்களைப் பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

21/9/09

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

0 கருத்துகள்
சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன், மத பாரம்பரியப்படி கொண்டாடப்பட்டது.ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால ரமதான் மாத நோண்பை முடித்து இன்று ரம்ஜானைக் கொண்டாடினர்.நாடு முழுவதும் காலையில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.


டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் கூடி தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறியும் பண்டிகையை கொண்டாடினர்.

தமிழகத்தில்...

தமிழத்திலும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சி நடந்தது. மெரீனா கடற்கரையிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் நடந்த தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

செய்தி:Thatstamil

20/9/09

தேர்தல் மோசடிகளை ஒப்புக்கொண்டார் கர்சாய்

0 கருத்துகள்
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடுகள் நிறைவாகவே நடந்திருக்கின்றன, அதற்கு அமெரிக்காவும் துணை போகியுள்ளது என்று எழுந்த குற்றச்சாட்டை வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார், அமெரிக்கா நியமித்த அடிமை ஜனாதிபதி கர்சாய்.
இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "சில தேர்தல் அதிகாரிகள் எனக்கு சாதகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்" என்று கூறினார். இது அவர் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டதாகும். இவருக்கு இந்த தேர்தலில் 54% சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது. அனால் பல தொகுதிகளில் அங்கிருந்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகள் அதிகமாக இருந்தது. சில இடங்களில் வாக்கு சாவடிகளில் வருகை தந்த மக்களை விட பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்தன, இன்னும் இது போல பல முறைகேடுகள் இந்த தேர்தலில் நடந்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெற்றி குறித்து பேசாமல், நான் ஜனாதிபதி ஆனால் என்னென்ன செய்வேன் என்பது பற்றி மட்டுமே பேசினார். நடந்து முடிந்த தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப் பட இருக்கின்ற நிலையில், போலி வாக்குகளை தவிர்த்தால் கர்சாய் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. இவருக்கு போட்டி வேட்பாளரான டாக்டர் அப்துல்லா ஜனாதிபதியாக ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
தேர்தலின் போது ஆயிரக்கணக்கான போலி வாக்கு பெட்டிகள் நாடு முழுவதிலிருந்தும் கர்சாய்க்கு சாதகமான முறையில் அனுப்பப்பட்டது. சில தொகுதிகளில் கர்சாய் 100 % வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா வின் உதவி பெற்ற ஆணையம் ஒன்று 10% வாக்குச்சாவடிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. இந்த 10% வாக்குச்சாவடிகள் மோசடி நடந்திருக்கிறது என்று மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆகும்.இந்த தேர்தலில் கர்சாய் அப்துல்லாவையும், அப்துல்லா கர்சாயையும் மாற்றி மாற்றி தேர்தல் மோசடி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.தாலிபான் ஆட்சியில், உண்மை மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்து திகழ்ந்த ஆப்கானிஸ்தானில் இன்று ஊழல், மோசடிகள், ஏமாற்று வேலைகள் புழங்க ஆரம்பித்துவிட்டன. இனி அமெரிக்கா நாடியபடி இஸ்லாமல்லாத நாடாக ஆப்கானிஸ்தானை மாற்றுவது கஷ்டம் ஒன்றுமில்லை. இந்த அரசியல் வாதிகளிடம் டாலரைக் காட்டினாலே போதும். அவர்களுடைய நாட்டையும் வீட்டையும் சேர்த்தே விற்று விடுவார்கள்.
செய்தி:NDTV,தபால் பெட்டி

அத்வானியின் ர(த்)த யாத்திரைக்கு பா.ஜ.க தடை

0 கருத்துகள்
அத்வானியின் ர(த்)த யாத்திரைக்கு பா.ஜ.க வில் எதிர்ப்புகிளம்பியுள்ளது. பா.ஜ.க வின் தலைவரான அத்வானி ர(த்)த யாத்திரைகளுக்கு பெயர் போனவர்.
இவர் இந்த ரத யாத்திரை நடத்திதான் பாபரி மஸ்ஜித் மற்றும் அதனை தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களை சாதித்து காட்டினார். தற்பொழுது அவரின் ர(த்)த யாத்திரை ஆசைக்கு பா.ஜ.க விலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி தலைமையிலான பா.ஜ.க அரசு கடும் தோல்வியுற்ற நிலையில் அவருக்கு எதிராக பல குரல்கள் அவர் கட்சியின் உள்ளேயே கிளம்பி உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு எதிராக கிளம்பிய ஓரிரு குரல்கள் இன்று கூட்டம் சேர்ந்துக்கொண்டு அவருக்கு எதிராக பேசத்தொடங்கிவிட்டன. கட்சி தற்போது இருக்கின்ற நிலைமையில் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டால் அது அவரை கட்சியின் பிரதிபலிப்பாக மக்களிடம் காட்டும், அதனால் இதனை அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்களின் கூற்றுப்படி, அத்வானி கட்சிக்கு சரியானவர் இல்லை போலும்.) பா.ஜ.க வின் தாய் அமைப்பான R.S.S. அத்வானியை ரத யாத்திரை நடத்துவதை தவிர்த்து அவரை கடை நிலை ஊழியர்களை சந்தித்து அவர்களை உற்சாகமூட்டுமாறு கூறியுள்ளது.
ஒருகாலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த குரல்கள் இன்று இப்படி அவருக்கு எதிராக மாறியது அவரின் அரசியல் பயணத்திற்கு முற்றுபுள்ளியாக மாறக் கூடும்.
செய்தி: NDTV,தபால் பெட்டி

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

0 கருத்துகள்

துபாய் : ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(செப்:20) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.

காலை 5:30 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.30 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சங்கமித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உற்ச்சாகம் எங்கும் கரை புரண்டோடியது.

18/9/09

திருநாவுக்கரசுக்கரசருக்கு பா.ஜ.க வெறுத்துவிட்டது, காங்கிரஸில் இணைகிறார்

0 கருத்துகள்
சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான எஸ்.திருநாவுக்கரசர் பாஜகவுக்கு முழுக்குப் போட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இதற்காக வருகிற 20ம் தேதி சோனியா காந்தியை திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசுகிறார்.

1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அத் தேர்தலுக்குப் பின்னர் துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளராகவும் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, அதிமுகவின் தலைவியாக உருவெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திருநாவுக்கரசர்.

இவரும், சாத்தூர் ராமச்சந்திரனும், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆம்னி பஸ்களில் ஊர் ஊராக சென்ற காட்சி தமிழக மக்கள் மனதிலிருந்து இன்னும் கூட மறைந்திருக்காது.

சில காலம் கழித்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.பின்னர் அதைக் கலைத்து விட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். பிறகு மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.
கடைசியாக அவர் பாஜகவில் இணைந்தார்.அன்று முதல் தமிழக அரசியலில் தனக்கிருந்த இமேஜை கெடுத்துக்கொண்டார்.பா.ஜ.காவின் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய செயலாளராக தற்போது இருக்கிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று இணை அமைச்சராக செயல்பட்டவர் திருநாவுக்கரசர்.கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜா.க சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் பாஜகவுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளார் திருநாவுக்கரசர். அங்கிருந்து தற்போது காங்கிரஸுக்கு வரவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர்,ராகுல் காந்திை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி , ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் என பலரையும் அவர் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அவர் 20-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு அவர் மீண்டும் சோனியா காந்தி,ராகுல் காந்திமற்றும் தலைவர்களை சந்தித்து காங்கிரசில் இணைவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்...

ஓட்டுக்களுக்காக ஹிந்துத்துவாவை விட்டுத்தரமுடியாதாம்:ஆர்.எஸ்.எஸ் தலைவர்

0 கருத்துகள்
அகமதாபாத்: ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான கட்சிகளுக்கு தேர்தலில் வாக்குகள் குறைந்தாலும் கூட, இந்துத்வா, இந்து போன்ற பதங்களைப் பயன்படுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கைவிடாது என்று கூறியுள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.
அகமதாபாத்தில் நடந்த இந்துத்வா குறித்த கருத்தரங்கின் நிறைவில் அவர் பேசுகையில், இன்று உலகில் இந்து மதம் அத்தியாவசியத் தேவையாகி விட்டது.(?) இந்த வார்த்தைக்கு நிகரான வார்த்தை இன்று உலகில் வேறு எதுவும் இல்லை.(?) அதை நாம் விட முடியாது. விஸ்வ இந்து பரிஷத் கைவிட முடியாது.
நாம் அனைவரும் எப்போதும் இந்துக்கள், இந்துத்வா போன்ற பதங்களை சொல்லியபடியேதான் இருப்போம். காரணம், அது உண்மையின் வெளிப்பாடாகும்(?).
ஒரு கூட்டத்தில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால்தான் ஓட்டுக்கள் குறைவாக கிடைக்கின்றன. அதைக் கைவிட்டால் கூடுதல் வாக்குகளைக் கவர முடியுமே என்று சிலர் கேட்டனர். அதற்கு நான் எங்களுக்கு ஓட்டுக்கள் தேவையில்லை. அது தேவைப்படுவோரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றேன். அதற்கு அவர்கள், நீங்கள் மாற வேண்டும் என்றனர். மாற முடியாது என்று நான் பதிலளித்தேன்.
இந்து, இந்துத்வா என்ற சொல்லைப் பயன்படுத்துவதால்தான் நமக்கு செல்வாக்கு குறைகிறது என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இருந்தாலும், போனாலும், இந்துத்வாவோடே இருப்போம் என்றார் பகவத்.
ஹிந்துத்துவா என்ற பயங்கரவாதக்கொள்கை இந்நாட்டில் இருக்குவரை நாட்டு மக்களுக்கு நிம்மதி என்பது கானல் நீர்தான்.

ஹிஜாப் அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்:நெதர்லாந்து எம்.பி

0 கருத்துகள்
ஆம்ஸ்டர்டாம்:இஸ்லாமிய ஆடை ஒழுக்கங்களிலுட்பட்ட ஹிஜாபை அணியும் முஸ்லிம் பெண்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று நெதர்லாந்து எம்.பி கீர்ட் வில்டேர்ஸ் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 1000 டாலர் வீதம் அபராதம் விதிக்கவேண்டும் என்பது வில்டேர்ஸ் ஆலோசனை கூறுகிறார். வலதுசாரி ஃப்ரீடம் பார்டியின் பி.டபிள்யூ தலைவரான வில்டேர்ஸ் அரசின் பட்ஜெட் சம்பந்தமான விவாதத்தின்போதுதான் இக்கருத்தை தெரிவித்தார்.
யாரெல்லாம் ஹிஜாபை அணிய விரும்புகின்றார்களோ அவர்கள் முதலில் உரிமத்திற்கு(லைசன்ஸ்) விண்ணப்பிக்கவேண்டும். ஹிஜாபை அணிபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் என்பது இஸ்லாமிய ஹிஜாபைபற்றிய பொதுமக்கள் கொண்டுள்ள கருத்திலிருந்து அவர்களை மாற்றுவதாகும் என்று வில்டேர்ஸ் கூறினார்.
நபி(ஸல்…)அவர்களை அவமரியாதைச்செய்யும் நோக்கத்தோடு ஃபித்னா என்ற டாக்குமெண்டரியை தயாரித்ததன் மூலம் இஸ்லாத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியவர் வில்லேர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கசாப்பு வியாபாரிக்கு கம்பளம் விரிக்கும் ஒமான்

0 கருத்துகள்
இந்த வருட இறுதியில் மோடி தலைமையிலான பிரநிதிக்குழுவொன்று ஓமான் நாட்டின் உதவியுடன் குஜராத்தில் துறைமுகம் ஒன்றை விரிவுப்படுத்துவது சம்பந்தமாக ஓமானுக்கு வருகைதரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சம்பந்தமாக பேட்டியளித்த குஜராத் முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரி, "குஜராத்திற்கு 9 அங்க பிரநிதிகளுடன் வருகைபுரிந்த ஓமான் வணிகத்துறை அமைச்சர் மக்பூல் அலி சுல்தான் வியாபாரம் மற்றும் துறைமுகம் கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்." மேலும் அவர் தெரிவிக்கையில் மோடி ஓமானிற்கு வருகைதரும்போது சோஹார் துறைமுகம் மற்றும் சுதந்திர வியாபார மண்டலத்திற்கு(Trade Free Zone) செல்வார் என்று கூறினார்.ஏற்கனவே ஜனவரி மாதம் நடைபெற்ற விபரண்ட் குஜராத் இன்வெஸ்டர்ஸ் மாநாட்டில் வைத்து ஓமான் உதவியுடன் குஜராத் துறைமுகத்தை வளப்படுத்துவது சம்பந்தமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கூட்டுக்கசாப்பு செய்த மரணவியாபாரி மோடிக்கு ஒரு முஸ்லிம் நாடு கம்பளம் விரித்து வரவேற்பளிப்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

17/9/09

சிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

0 கருத்துகள்
புதுடெல்லி:சிறுபான்மைமக்களோடு சிறந்த முறையில் உறவை பேணவும், அவர்களுடைய நம்பிக்கையை பெறவும் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பேசும்பொழுது உத்தரவிட்டுள்ளார்.
இஷ்ரத் ஜஹான் உட்பட பல அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் போலி என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில் முஸ்லிம்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள சூழலில்தான் பிரதமர் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெறும்வகையில் செயல்பட்டு அவர்களுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்று பேசிய பிரதமர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், சமூகத்தில் பின் தங்கியுள்ளோர், முதிர்ந்த குடிமகன்கள், பெண்கள் ஆகியோர் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
செய்தி:தேஜஸ்

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம்:ஐ.நா

0 கருத்துகள்

இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவின் மீது நடத்திய அக்கிரம தாக்குதல் போர் குற்றமென்று ஐ.நா சபையின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
கடந்த டிசம்பர்-ஜனவரி மாதங்களில் 3 வாரம் நீண்ட இஸ்ரேல் ராணுவத்தின் காஸ்ஸா மீதான் அக்கிரம தாக்குதல் சர்வதேச குற்றவியல் சட்டங்களையும், மனித உரிமைகளையும் வெளிப்படையாக மீறிய செயல் என்று அறிக்கை இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துகிறது.
தென்னாப்ப்ரிக்காவைச்சார்ந்த பிரபலமான நீதிபதி ரிச்சார்ட் கோல்ட் ஸ்டோனின் தலைமையிலான குழுதான் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்தது. காஸ்ஸாவிற்கெதிராக சட்டத்திற்கு புறம்பான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தியதாக இக்குழு குற்றஞ்சாட்டுகிறது. மனிதத்தன்மைக்கு முற்றிலும் புறம்பான குற்றங்களை இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்தியுள்ளது. காஸ்ஸாவில் வசிக்கும் 15 லட்சம் சிவிலியன்களை தண்டிக்கவும், அவமதிக்கவும், பயமுறுத்தவும் செய்வதற்காக இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய தாக்குதல்கள் இவை என்று ஐ.நா குழுவின் அறிக்கை கூறுகிறது.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இஸ்ரேல் காஸ்ஸாவில் ஏற்படுத்திய தடையானது காஸ்ஸா மக்களுக்கு அளிக்கப்பட்ட கூட்டுத்தண்டனை. காஸ்ஸாவில் வாழும் சிவிலியன்களை இலக்காக வைத்துதான் இஸ்ரேல் தாக்குதல்களை நட்த்தியுள்ளது. வெள்ளைக்கொடி ஏந்திய சிவிலியன்களை சுட்டுக்கொன்ற கொடூரமும் நிகழ்ந்துள்ளது. ஐ.நா சபை கட்டிடம் உள்ளிட்ட சிவிலியன் குடியிருப்புகளின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே கொடூரமான ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் 300 குழந்தைகளை காஸ்ஸாவில் கொன்றுகுவித்துள்ளது.வெள்ளை பாஸ்பரஸ்,கடும் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிப்பொருள்கள் ஆகியவற்றை இஸ்ரேல் காஸ்ஸாவில் பயன்படுத்தியது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று ஐ.நா குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதலால் காஸ்ஸாவில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் பாதிக்குமேற்பட்டோர் பெண்கள் மற்றும் பிஞ்சுக்குழந்தைகள், ஃபலஸ்தீனிலிருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 ராணுவத்தினரும், மூன்று சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். இக்குற்றங்களைப்பற்றி சொந்தமாக ஆய்வுச்செய்த அறிக்கையை 3 மாதத்திற்குள் வழங்க இரு பிரிவினருக்கும் உத்தரவிடவேண்டுமென்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இக்குழு சிபாரிசுச்செய்துள்ளது. அவ்வாறு தயாராகாத சூழலில் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவிற்கு விடுமாறும் அவ்வறிக்கையில் கூறப்படுள்ளது.
ஆனால் இவ்வறிக்கை ஒருதலைபட்சமானது அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களையும் தற்காப்பிற்காக போராடுவோரையும் சமமான நிலையில் கணிக்கும் ஐ.நா குழுவின் அறிக்கைமுறைமை சரியல்ல என்று ஹமாஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ்
ஐ.நாவின் அறிக்கை பார்க்க கீழே கொடுக்கப்படுள்ள லிங்கை கிளிக்செய்யவும் .http://image.guardian.co.uk/sys-files/Guardian/documents/2009/09/15/UNFFMGCReport.pdf

16/9/09

தென்கச்சி ‌கோ.சுவாமிநாதன் மரணமடைந்தார்

0 கருத்துகள்
சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் மரணமடைந்தார். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.
தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.
பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கச்சி சுவாமிநாதன் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டுவரும் மாற்றாருக்கு இஸ்லாத்தை எடுத்து இயம்பும் நிகழ்ச்சியான ஈத்மிலன் என்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூறுகிறோம்.

ஆம்பூரில் கடும் வெள்ளம்-5 பேர் பலி-20 பேர் நிலை என்ன?

0 கருத்துகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெய்த கன மழையி்ல் நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5 பேர் பலியாயினர். மேலும் 20 பேரின் நிலைமை எனனவானது என்று தெரியவில்லை.
ஆம்பூரில் சென்னை-பெங்களூர்தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், சாலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.
பாலாற்றில் இணையும் இந்த கால்வாய் தான் இப் பகுதியின் பெரிய வடிகாலாகும்.
இந் நிலையில் ஆம்பூரில் நேற்று பெய்த கனமழையால் நாயக்கனேரி மலையில் உள்ள ஆனைமடுகு அணை நிரம்பியது. அதிலிருந்து காட்டாற்று வெள்ளம் கானாறு கால்வாய் வழியாக ஓடியது. இந்த நீர் கால்வாயைத் தாண்டி குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. நள்ளிரவில் மழையும் வெள்ளமும் அதிகரிக்கவே குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. மின்சாரமும் தடைபட்டுவிட்டதால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் அதிகரித்த வெள்ளத்தில் பல குடிசைகளை அடித்துச் செல்லப்பட்டன.
இதில் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தாலும் மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளை மிகுந்த கடும் சிரமத்துக்கிடையே மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளத்தில் தவித்த பலரை கயிறு கட்டி மீட்டனர்.

ஆனாலும் மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகிவிட்டனர். இன்று காலை கானாறு வடிகால் மற்றும் பாலாற்றில் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் சிக்கியன. அவர்கள் அமானுல்லா என்பவரின் மனைவி முன்னி (25), மகள் ஷானு (6), மகன் அக்பர் (3) என்று தெரிய வந்துள்ளது. அமானுல்லாவை காணவில்லை. அவர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பாலாற்றில் சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களும் சிக்கின. இதில் ஒருவர் இலியதுல்லா (16) என்புறு தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
வெள்ளம் அரசு பஸ் டெப்போவுக்குள்ளும் புகுந்ததில் அங்கிருந்த 10 பஸ்களும் நீரில் முழ்கியுள்ளன.
அதே போல கிருஷ்ணகிரியில் பெய்த மிக பலத்த மழையால் ஒசூர்-பாகலூர் இடையிலான தரைப் பாலமும் முழுமையாக உடைந்துவிட்டது. இதனால் இப் பகுதியிலிருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் பெங்களூர் வழியாக செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதே போல ஒசூர், தளி ஆகிய பகுதிகளிலும் மிக கனத்த மழை பெய்துள்ளது.
thatstamil

முன்ததர் விடுதலையானார்:ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஆவேச உணர்வோடு

0 கருத்துகள்

சிறையிலிருந்து விடுதலையான முன்ததர் அல் ஸைதியை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவரது சகோதரி
பாக்தாத்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு புதியதொரு எழுச்சியை ஊட்டிய ஈராக் பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸெய்தி விடுதலையானார்.

ஜெயிலில் வைத்து ஒரு மூத்த அரசு அதிகாரி தன்னை கொடூரமான முறையில் சித்திரவதைச்செய்ததாக குற்றஞ்சாட்டிய முன்ததர் இதற்காக ஈராக் அரசு மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒன்பது மாத சிறைவாசத்திற்கு பிறகே முன்ததர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். "நான் விடுதலையாகிவிட்டேன், ஆனால் என்னுடைய நாடு இன்னும் சிறைக்குள்தான் இருக்கிறது. நான் என்னை ஹீரோவாக நினைக்கவில்லை. ஆனால் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதையும், பாக்தாத் பற்றி எரிவதையும் எனது மக்கள் கொல்லப்படுவதையும் பார்த்து அவமானப்பட்டு நிற்கிறேன்". என்று ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது முன்ததர் கூறினார்.

புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்ததன் மூலம் ஹீரோவாக மாறிய முன்ததர் மீது வெளிநாட்டுதலைவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முன்ததருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது 12 மாதங்களாக குறைக்கப்பட்டது. முன்ததரின் நன்னடத்தையின் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பே விடுதலையாகியுள்ளார். அடி, சாட்டையடி, எலக்ட்ரிக் ஷாக் போன்ற சித்திரவதைகளுக்கு தான் ஆளாக்கப்பட்ட்தாக முன்ததர் கூறினார். மேலும் தண்ணீரில் தன்னை மூழ்கச்செய்தும் தான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட்தாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் நூரிமாலிக் தொலைக்காட்சி வாயிலாக எனது பாதுகாப்பு பற்றி திரும்ப திரும்ப உறுதிச்செய்துக்கொண்டிருக்கும் வேளையில் நான் சிறைக்குள் மின்சார அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். முன்ததர் கூறுகிறார். தன்னை சித்திரவதைக்கு ஆளாக்கிய அதிகாரியின் பெயரை நேரம் வரும்பொழுது வெளிப்படுத்துவதாக முன்ததர் கூறினார். தன்னை எதிரி போராளியாக கணிக்கும் அமெரிக்க ரகசிய புலனாய்வுக்குழு என்னுடைய உயிரை பறிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பாழாக்காது என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் முன்ததர். புஷ்ஷை நோக்கி தான் ஷூவை எறிந்த்தற்கு காரணம் எனது நாடு ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதுதான் என்ற முன்ததர், "நான் அமெரிக்க மக்களை நோக்கி கேட்கிறேன்.ஒருவேளை ஈராக் அமெரிக்காவை ஆக்கிரமித்து அங்குள்ள 10 லட்சம் மக்களை கொலைச்செய்து 5 லட்சம் மக்களை நாட்டைவிட்டும் இடம்பெயர்ந்து, அமெரிக்கா அழிவிற்கும் நாசத்திற்கும் ஆளாக்கப்பட்டால் உங்களுடைய எதிர் செயல் எவ்வாறிருக்கும்". என்று கேள்வி எழுப்பினார் முன்ததர்.

முன்ததர் விடுதலையானதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்த முன்ததர் குடும்பத்தினர் அவரை நடனமாடியும், பாட்டுப்பாடியும் வரவேற்றனர். பணம், வேலை, திருமணம் செய்ய பெண் என ஏராளமான பரிசுக்குவியல்களை அரபு உலகம் முன்ததர் அல் ஸெய்திக்கு வாக்களித்துள்ளது.

செய்தி:தேஜஸ்
தொடர்புடைய வீடியோவிற்கு http://www.msnbc.msn.com/id/21134540/vp/32861221#32861221

15/9/09

அண்ணா பிறந்தநாள்-கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை

0 கருத்துகள்
சென்னை: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிறைவு தினத்தையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேல்சிறைகளில் இருக்கும் 9 கைதிகளை தமிழக அரசு இன்றுவிடுதலைசெய்தது.

இந்த 9 பேரும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிசிறையில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் அனுமதியின்றி குண்டுகள், ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு 13 ஆண்டுகள்சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் 9 பேர் இன்று காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளனர். மற்ற ஒருவர் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறை யில் இருப்பார். இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
விடுதலையானோர் விவரம்: முகம்மத் இப்ராகிம், அப்துல் ரகீம், அப்துல் பாரூக், அப்பாஸ், முகம்மத் ரபீ்க், அப்துல் ரவூப், அஷ்ரப், பக்ருதீன் அலி அகமமத் மற்றும் சாகுல் ஹமீத்.

9/11 பற்றி புதிய விசாரணை தேவை:80 ஆயிரம் நியூயார்க் மக்கள் கோரிக்கை

0 கருத்துகள்

வாஷிங்டன்: செப்டம்பர் 11 தாக்குதலை பற்றி சுதந்திரமான கமிஷன் புலனாய்வு விசாரணை அறிக்கைக்கோரி 80 ஆயிரம் நியூயார்க் மக்கள் கையெழுத்திட்ட மனு Newyork coalition accountability now என்ற அமைப்பின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
28 ஆயிரம் பேர் ஒப்பிட்ட மனு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 24 ஆம்தேதி ஏற்கனவே 52 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது. கையெழுத்துகள் சரியா என்பதை பரிசோதிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் கடந்த வாரத்திலிருந்து பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார். இந்த மாதம் 18 ஆம் தேதிக்கும் பரிசோதனைகளை முடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மனுவில் கையெழுத்திட்டவர்களின் கையெழுத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் புதிய விசாரணை அறிக்கைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

குஜராத் நீதிமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்கமுயலும் மோடி அரசின் முயற்சி பற்றி அறிக்கையை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு வீரப்ப மொய்லி உத்தரவு

0 கருத்துகள்
புதுடெல்லி:போலி என்கவுண்டர் வழக்கில் நீதிமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்க குஜராத் மோடி அரசு நடத்தி வரும் முயற்சிகளை பற்றி அறிக்கை அளிக்க மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குஜராத் அரசுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் ஒருபகுதியாகத்தான் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹன்வதியிடம் மத்திய சட்ட அமைச்சர் அறிக்கையை கேட்டிருக்கின்றார்.
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற என்கவுண்டர் போலி என்று கண்டறிந்த அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிபதி எஸ்.பி.தமாங்கின் விசாரணை அறிக்கைக்கு தடை விதித்துள்ள குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு லீவ் மனுவை தாக்கல்செய்யும். நீதிவிசாரணை அறிக்கையில் கண்டறிந்துள்ள விபரங்கள் நீதிபதியின் அதிகாரத்தை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ததால் நீதிமன்றம் நீதிவிசாரணை அறிக்கைக்கு தடை விதித்தது.
ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் அறிக்கையில் குழப்பம் உள்ளது என்று கூறுவதும், தடை விதிக்க கோருவதும், அடுத்த நாளே நீதிபதியை இடமாற்றம் செய்வதும் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செயல் என்று வீரப்பமொய்லி கூறினார்.
போலி என்கவுண்டர் சம்பந்தமாக மத்திய அரசு தாக்கல் செய்த அஃபிடேவிட்டில்(வாக்கு பிரமாணம்)உளவுத்துறை அறிக்கையின் விபரங்கள் மட்டுமே உள்ளது என்றும் அது நீதிமன்றத்தில் ஆதாரமாகது என்றும் வீரப்பமொய்லி கூறினார். உளவுத்துறை அறிக்கையை காரணமாக வைத்து போலி என்கவுண்டர் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா? நடத்தப்பட்ட என்கவுண்டர் போலியா? என்பதற்கப்பால் ஒரு நீதிபதியின் நீதிவிசாரணை அறிக்கையை ஸ்டே செய்வதும், அடுத்த நாளே அவரை இடமாற்றம் செய்வதும் தைரியமற்ற செயல் என்று கருதுவதாக வீரப்பமொயில் கூறினார். இவ்விஷயத்தில் எந்தவொரு அரசியல் அஜண்டாவும் இல்லை. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிப்பை ஏற்படுத்துவதுதான் குஜராத்தின் அரசின் இந்நடவடிக்கை. இது சம்பந்தமாக அட்டர்னி ஜெனரல் ஆய்வுச்செய்து சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கையைதாக்கல் செய்வார். நீதிமன்றத்தின் செயல்பாடுகள் நேர்வழியில் நடைபெற உறுதிச்செய்வது கடமை. கீழ் நீதிமன்றத்தின் அறிக்கையை மூடிவைக்க நிர்பந்தபடுத்தக்கூடாது. சட்டத்தின் வழியில் ஏதாவது ஒரு வகையில் தடை ஏற்படுத்த முயற்சி செய்வது உறுதியானால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மொய்லி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

14/9/09

குஜராத் போலி என்கவுண்டர் - கார்ட்டூன்

0 கருத்துகள்
source: Twocircles.net

பன்றிக்காய்ச்சல்(Swine flu) தடுப்பு நடவடிக்கைக்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவது கூடாது:டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

0 கருத்துகள்
பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கவேண்டும் என்பதற்காக ஹஜ்ஜை தாமதப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று பிரபல மார்க்க அறிஞரும், சர்வதேச உலமாக்கள் சபை தலைவருமான டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கூறியுள்ளார்.

கத்தரிலிருந்து வெளிவரும் அல்வதன் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் அவர் கூறும்போது, "இந்த வருடம் ஹஜ் மற்றும் உம்ராவை பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பிற்காக தாமதப்படுத்தக்கூடாது" என்றார்.
ஆனால் மக்கள் நோய் பரவிவிடும் என்று பயந்தால்(contracting the virus) இந்த வருட ஹஜ் பயணத்தை தவிர்க்கலாம்.ஆனால் ஹஜ் கடமைகளை செய்வதை தள்ளிப்போடக்கூடாது. முஸ்லிம்கள் ஹஜ்ஜிற்காக செல்லும்போது கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.பன்றிக்காய்ச்சல் உலகமுழுவதும் பரவிய நோய்(Pandemic)அல்ல என்றும் கர்தாவி கூறினார்.

மேலும் பன்றிக்காய்ச்சலால் இறப்போரை உயிர்தியாகிகளாக கருத இயலாது என்றார்.ஆனால் உலக முழுவதையும் இந்நோய் ஆக்கிரமித்தால் அதன் மூலம் இறக்கும் முஸ்லிம்களை உயிர்தியாகிகளாக கருதலாம். ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவோர் முகமூடிகளை(mask)அணிந்துக்கொண்டு நிறைவேற்றவேண்டும். இஸ்லாம் சுயபாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நோய் அறிகுறிகள் இருப்பதாக யாராவது உணர்ந்தால் உடனடியாக அதற்கான சிகிட்சையை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி செயல்படுதல் வேண்டும். ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக நெரிசலை தவிர்க்கவும். சரியான நேரங்களை தேர்ந்தெடுத்து கிரியைகளை நிறைவேற்றுதல்வேண்டும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் மேலும் சுத்த்த்தை அதிகமாக கடைபிடித்தல் வேண்டும். சுத்தம் என்பது இஸ்லாம் கூறும் உபதேசங்களில் முக்கியமான ஒன்று இவ்வாறு கர்தாவி ஹாஜிகளுக்கு உபதேசங்களை வழங்கியுள்ளார்.

Islamonline.net

கர்நாடகா:முழுஅடைப்பின் பெயரால் கொள்ளை,தீவைப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம சேனா

0 கருத்துகள்
கர்நாடகா மாநிலத்திலிலுள்ள மிராஜ் என்ற இடத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்காக பெல்காமில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம சேனாவினர் முஸ்லிம்கடைகளில் கொள்ளை அடித்ததோடு 4 கடைகளை தீவைத்து கொழுத்தியுள்ளனர்.
மேலும் அரசு பஸ்களை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீராம சேனாவினர் முழு அடைப்பின் பெயரால் நடத்திய வன்முறையை கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டித்துள்ளார். சம்பவ இகர்நாடகா மாநிலத்திலிலுள்ள மிராஜ் என்ற இடத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்காக பெல்காமில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம சேனாவினர் முஸ்லிம்கடைகளில் கொள்ளை அடித்ததோடு 4 கடைகளை தீவைத்து கொழுத்தியுள்ளனர்.மேலும் அரசு பஸ்களை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.கடந்த வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீராம சேனாவினர் முழு அடைப்பின் பெயரால் நடத்திய வன்முறையை கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கண்டித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த அவர் ஸ்ரீராம சேனா நடத்திய தேவையற்ற இந்த பந்திற்கு அனுமதியளித்த கர்நாடக மாநில பாரதீய ஜனதா அரசு நடைபெற்ற இந்த வன்முறைக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும், இதுபற்றிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இத்தகைய நிகழ்வுகள் மக்கள் மத்தியில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பய உணர்வை ஏற்படுத்துவதற்கான அறிகுறி என்றும்அவர் மேலும் தெரிவித்தார்.

சச்சார் கமிசன் அறிக்கையை செயல்படுத்த தீவிர முயற்சி:பிரணாப்

0 கருத்துகள்
கொல்கத்தா: சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட சச்சார் கமிஷனின் அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

எல்லா துறைகளிலும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு முயற்சி செய்துக்கொண்டிருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கை பற்றி குறிப்பிடும்போது அவர் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் ஹுக்லி மாவட்டத்தில் ஃபுர்ஃபூரா ஷரீஃபில் ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்பொழுது இதனை குறிப்பிட்டார் அவர்.

செய்தி:தேஜஸ்

13/9/09

காணத்தவறாதீர்கள்!இன்று இரவு 6.30க்கு!குஜராத் போலி என்கவுண்டர்கொலைகள் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பு!.NEWS X தொலைக்காட்சி சானலில்!

0 கருத்துகள்
பிரபல பத்திரிகையாளரும், சினிமா தயாரிப்பாளருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி அவர்கள் குஜராத் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட 4 முக்கிய போலி என்கவுண்டர் கொலைகள்(சொரஹ்புதீன் சேஹ்,இஷ்ரத் ஜஹான் மற்றும் 4 பேர்கள்) பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதன் பெயர் "Encountered on Saffron Agenda?"(மோதல் சாவுகள் காவிகளின் ரகசிய திட்டமா?”).இந்த ஆவணப்படம் இன்று இரவு அமீரக நேரப்படி(இந்திய நேரம் இரவு 8 முதல் 10 வரை) மாலை 6.30 முதல் 8.30 வரை நியூஸ் எக்ஸ் டி.வி(News X Tv) சானலில் ஒளிப்பரப்புச்செய்யப்படுகிறது.
காணத்தவறாதீர்கள். இரண்டு மணிநேரம் கொண்ட இந்நிகழ்ச்சியில் விவாதங்களும் இடம்பெறும்.

போலி என்கவுண்டர்கொலைகள்:நரேந்திரமோடி அரசை டிஸ்மிஸ் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்

0 கருத்துகள்
போலி என்கவுண்டர்கள் மூலம் அப்பாவிமக்களை கொலைச்செய்த நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் பாரதீய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்றும், இதுவரை குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ள அனைத்து என்கவுண்டர்கொலைகள் பற்றியும் அதில் குஜராத் அரசின் பங்கை பற்றியும் விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டுமென்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
19 வயதான கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானையும் மற்றும் 3 நபர்களையும் குஜராத் போலீஸ் இரத்தத்தை உறையவைக்கும் வகையில் என்கவுண்டர் பெயரால் சுட்டுக்கொன்றுள்ளனர் என்ற அதிர்ச்சிதரும் தகவல் இந்தவாரம் அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி தமாங்கின் நீதிவிசாரனை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திரமோடி மனிதத்தன்மையையும், ஜனநாயகத்தையும் மதிப்பவராக இருந்தால் இந்தக்கொலைகளுக்கு பொறுபேற்று பதவி விலகவேண்டும். நீதி விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போலி என்கவுண்டர்களின் மூலம் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுள்ள குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்.
குஜராத் போலீஸ் கூறுகிறது, இஸ்ரத் ஜஹானும் மற்ற 3 நபர்களும் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச்சார்ந்தவர்களென்றும் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு முதல்வர் நரேந்திரமோடியை கொல்லவந்தார்களென்றும் அப்போது அவர்களை சுட்டுவீழ்த்தியதாகவும் கூறுகிறது. ஆனால் நீதி விசாரணை அறிக்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் நரேந்திரமோடியை கொல்ல முயற்சி என்று கூறி அவருக்கு சிந்தனை ரீதியான ஆதரவை உருவாக்கும் நோக்கத்தில் தீட்டப்பட்ட விரிவான வகுப்புவாத சதித்திட்டம் இந்த போலி என்கவுண்டர் கொலைகள் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே புலனாய்வு ஏஜன்சிகள் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நரேந்திர மோடி ஆதரவளிக்கிறார் என்று கூறியுள்ள நிலையிலும் அவர் முதல்வராகவே தொடர்கிறார்.தற்பொழுது சொரஹ்புதீன் சேஹ்,இஸ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர்களின் என்கவுண்டர்கள் போலி என்று தெளிவுப்படுத்தப்பட்ட நிலையில் மோடி குஜராத் மாநில முதல்வராக தொடர்வது ஜனநாயகத்தை கேலி செய்வதும், நமது நாட்டின் மதசார்பின்மை அடையாளத்திற்கு அவமானகரமானதுமாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அவர்கள் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
Twocircles.net

மனோநிலை பாதிக்கப்பட்ட ராணுவவீரர்களுக்கு சிகிட்சையளிக்க அமெரிக்கா செலவிடும் தொகை 12 கோடி டாலர்

0 கருத்துகள்
வாஷிங்டன்:ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றியதால் மனோநிலை பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களுக்கு சிகிட்சையளிக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது அமெரிக்கா.
ஆரம்பத்தில் அமெரிக்க அரசு இதற்காக செலவிடும் தொகை 12 கோடி டாலர். அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து சிகிட்சையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீர்ர்களின் மனம் சம்பந்தமான நோயை கண்டறிவதற்கு 170 கேள்விகளைக்கொண்ட பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்துவர். இதனடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சிகிட்சையளிக்கப்படும். பரிசோதனை நடத்துவதற்கு 1500 நபர்களுக்கு மனநோயைப்பற்றிய வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
மனோநிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலைச்செய்யும் ராணுவவீரர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருவதே அமெரிக்க அரசு இத்திட்டம் துவக்குவதற்கு காரணம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தற்கொலைச்செய்பவர்களின் எண்ணிக்கை 214 என்று அதிகாரப்பூர்வ கணக்கீடு கூறுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தை பீடித்திருக்கும் மற்றொரு பிரச்சனை மதுபானம். முழுநேரமும் போதையிலிருப்பதால் ராணுவ வீரர்கள் பலரும் ராணுவ பணிக்கு லாயக்கற்றவர்களாக மாறியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கின்ற ராணுவவீரர்களுக்கு அதிகமான மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளது. எந்த நிமிடமும் கொல்லப்படுவோம் என்ற பீதி, பிஞ்சுக்குழந்தைகள் உட்பட அப்பாவிமக்களை சுட்டுக்கொன்ற நினைவுகள், சக ராணுவவீரர்களின் குண்டடிபட்டு அப்பாவி மக்கள் இறந்துபோகும் காட்சிகளுக்கு சாட்சியாகும் நிலை. இங்கெல்லாம் ராணுவ பணியாற்றுவது தேவையற்ற செயல் என்ற எண்ணம் ஆகியவைகள்தான் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மனோநிலை பாதிப்படைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சரியான முறையில் மனநோய் சிகிட்சை திட்டங்கள் இல்லாததுதான் இப்பிரச்சனை இவ்வளவு தீவிரமடைய காரணம் என்று பிரிகேடியர் ஜெனரல் ரோண்ட கோர்னம் கூறுகிறார். ட்ரமா ரிஸ்க் மானேஜ்மண்ட் (Trauma Risk Management) என்ற பெயரில் பிரிட்டீஸ் அரசு பிரிட்டன் ராணுவவீரர்களுக்கு இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியது. பிரிட்டனில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராணுவ்வீர்ர்களுக்கிடையேயான தற்கொலை எண்ணிக்கை மற்றவர்களோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ராணுவ பணியை தொடரும் வீர்ர்களுக்கு இந்த சிகிட்சை எந்த அளவு பலன் தரும் என்பதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ்

இஸ்லாமிய வங்கியல்: ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை

0 கருத்துகள்
புதுடெல்லி:இந்தியாவில் இஸ்லாமிய வங்கியல் முறையை துரிதப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ் (ICIF) என்ற அமைப்பின் பிரநிதிகள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டாக்டர்.கெ.சி.சக்ரவர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ICIF இன் பொதுச்செயலாளர் ஹெச்.அப்துற்றகீப் ட்ரஸ்டிகளான டாக்டர் ரஹ்மத்துல்லாஹ், முன் ரிசர்வ் வங்கி மானேஜரான கெ.எம்.அப்துஸ்ஸலாம் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.
பொருளாதார துறையில் முன்னேற்றம் கொண்டுவருவது தொடர்பாக ரகுராம் கமிட்டி நடத்திய ஆய்வுகளை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள முறையில் கேடுவராதமுறையில் வட்டியில்லாத நிறுவனங்களுக்கு சட்டவரையறையை ஏற்படுத்த இயலும் என்று ரகுராம் கமிட்டி சிபாரிசு செய்திருந்தது.
பிரிட்டனிலும் சிங்கப்பூரிலும் செய்ததுபோல் இஸ்லாமிய வங்கியல் முறைக்கு சாத்தியமாகும் முறையில் ரிசர்வ் வங்கியின் சட்டமுறைகளில் திருத்தம்கொண்டுவர ICIF பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொண்டுவந்த சட்டதிருத்தம் சம்பந்தமான ஆதாரங்களை பிரதிநிதிகள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரிடம் சமர்ப்பித்தனர்.
கேரளாவில் இஸ்லாமிய வங்கியல் முறையை துவங்குவதற்கு கேரள மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளும் பேச்சுவார்த்தையின்போது இடம்பெற்றது. வட்டியில்லா வங்கிமுறைக்கு ரிசர்வ் வங்கி எதிர்க்காது என்றும் ஆனால் இதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் துணைகவர்னர் சக்ரவர்த்தி கூறினார்.
சிறுபான்மை மற்றும் ஏமாற்றப்பட்ட சமூகத்திற்கு வட்டியில்லா வங்கிமுறை மிகத்தேவையான ஒன்று அதன்மூலம் அவர்களின் வாழ்வில் செழிப்பை உருவாக்க இயலும். மேலும் இத்தகைய வங்கிகளை துவக்குவதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான முதலீடுகளை கவரமுடியும் என்று பிரநிதிகள் குழு தெளிவுப்படுத்தியது. பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை இந்தவாரத்திலேயே சந்திக்கவிருப்பதாக அப்துற்றகீப் கூறினார்.
செய்தி:தேஜஸ்

12/9/09

மணிப்பூரில் மீண்டும் போலி என்கவுண்டர் கொலைகள்

0 கருத்துகள்
இம்பால்:தீவிரவாதி என்று குற்றம்சுமத்தி கடந்த ஜூலை மாதம் அப்பாவி இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்றதால் எழுந்த பொதுமக்களின் ஆவேச எதிர்ப்பு அடங்கும் முன்பாகவே மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் கொலைகள் அரங்கேறியுள்ளது மணிப்பூர் மாநிலத்தில்.
முஹம்மது ரஹ்மான் என்ற டோம்பே உட்பட 6 நபர்களை தீவிரவாதிகள் எனக்குற்றம் சுமத்தி ராணுவத்தினர் சுட்டுகொன்றுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு இம்பால் மேற்கு மாவட்டத்தில் அவாங் ஜனொயில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த என்கவுண்டர் நடந்ததாக போலீசும், ராணுவமும் கூறுகின்றது. ஆனால் போலீஸ் இவர்களை சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைத்து மணிப்பூர் ரிக்‌ஷா ஓட்டுனர் சங்கத்தின் உறுப்பினர்தான் சுட்டுக்கொல்லப்பட்ட முஹம்மது ரஹ்மான். இவர் உட்பட சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்றும் இம்பாலிலிருந்து மியான்மர் எல்லை நகரமான மோராவிற்கு ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்தான் இவரென்றும் அசோசியேசன் கவர்னருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பொது வேலை நிறுத்தத்திற்கு இவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பு கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறி அவர்களுடைய உறவினர்களும் களத்திலிறங்கியுள்ளனர். கடந்த ஜுலையில் பட்டபகலில் ஒரு இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற படங்களை பகிரங்கபடுத்தி டெஹல்கா பத்திரிகை வெளியிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்பு அடங்கும் முன் இந்நிகழ்வு நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது

தாடி வளர்ப்பதற்க்கு தடை:பள்ளிக்கூடத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

0 கருத்துகள்
புதுடெல்லி: மத்தியபிரதேசில் தாடி வளர்த்ததற்காக பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கெதிராக மாணவன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிர்மலகிரி என்ற பள்ளிக்கூடத்திற்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
பள்ளிக்கூட நிர்வாகிகளின் இந்த தீர்மானம் மடமைத்தனமானது என்று நீதிபதிகளான பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. நீதிபதிகளான ஆர்.வி.ரவீந்தரன், மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கனவே மாணவனின் மனுவை தள்ளுபடிச்செய்திருந்தது. தாடி வளர்த்துவதை நிர்பந்தமாக்கி நாட்டில் தாலிபானிசத்தை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்திருந்தார் நீதிபதி கட்ஜு. பின்னர் மாணவன் ரிவீவ் மனுதாக்கல் செய்திருந்தபொழுது தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக்கேட்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவன் முஹம்மது ஸாலிமுக்கு படிப்பை தொடர அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அப்பள்ளிக்கூடத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கருத்துவேறுபாடு

0 கருத்துகள்
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப முயற்சிக்கும் ஒபாமா அரசிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அபிப்ராய வித்தியாசங்கள் எழுந்துள்ளன.
இவ்விஷயத்தில் கூடுதல் சர்ச்சை தேவையென்றும், கூடுதல் ராணுவத்தை அனுப்புவதற்கான ஆதரவு குறைவென்றும் அமெரிக்க சபாநாயகர் நான்ஸி ஃபெலோஸி கூறியுள்ளார்.
உள்நாட்டிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் மிகப்பெரிய ஆதரவை ஒபாமா இவ்விஷயத்திற்காக பெறவேண்டிவரும் என்கிறார் நான்ஸி. இந்த வருட இறுதியில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தானில் 68 ஆயிரமாக உயர்த்த ஒபாமா முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக 21 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிற்கு அனுப்பபடுவர் என்று அவர் அறிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்தும் போரிற்கு உள்நாட்டில் ஆதரவு குறைந்தே காணப்படுகிறது. 51 சதவீதம் பேரும் இதனை எதிர்க்கின்றனர். இதற்கிடையில், ஆப்கானில் 97 சதவீத பிரதேசங்களிலும் தாலிபான் ஆதிக்கம் உள்ளதாக லண்டனை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சர்வதேச வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான கவுன்சில் ICOS (International Council on Security and Development) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 80 சதவீத பிரதேசங்களில் தாலிபானுக்கு உறுதியான ஆதிக்கம் உள்ளது. இது கடந்த ஆண்டு 72 சதவீதமாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு 54 சதவீதம் மாத்திரமேயிருந்தது. அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் வலுவடைந்துள்ளது. தாலிபானின் இந்த எதிர்ப்பு போர் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

மும்பை:பகிரங்க விவாதம் நடத்த ப.சிதம்பரத்திற்கு பாக். உள்துறை அமைச்சர் அழைப்பு

0 கருத்துகள்

இஸ்லாமாபாத்: குற்றச்சாட்டுகளை நிறுத்திவிட்டு மும்பை தீவிரவாதத்தாக்குதல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ அல்லது சிதம்பரம் விரும்பும் எந்த இடத்திற்கும் விவாதத்திற்கு தான் வர த்தயாராக இருப்பதாகவும் மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் மும்பை தாக்குதல் விசாரணையை ஆத்மார்த்த ரீதியில்தான் கொண்டு செல்கிறது. நாங்கள் 76 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகையை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தபொழுது இந்தியா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 90 தினங்கள் ஆனது.
பாகிஸ்தான் பிப்ரவரி 9 ஆம் தேதி கேட்ட விபரங்களை இந்தியா அளித்தது ஜூன் 20 ஆம் தேதி. அதுவும் மராத்தி மொழியில். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பந்தமான விபரங்களை இதுவரை இந்தியா அளிக்கவில்லை என்றும் மாலிக் கூறினார். நீதிமன்றத்தில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் 2 நபர்களைப்பற்றிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளோம். இறுதிகட்ட குற்றபத்திரிகையை விரைவில் வழங்கவிருக்கிறோம். அதுபற்றிய விபரங்களை இரண்டு தினங்களுக்குள் பத்திரிகையாளர்களுக்கு வழங்குவோம் என்றும் மாலிக் கூறினார்
முதலில் இந்தியா கூறியது ஸகீயுற்றஹ்மான் லக்விதான் முக்கிய குற்றவாளி என்று. தற்போது கூறுவது ஹாஃபிஸ் சயீத் தான் முக்கிய நபர் என்று. நாம் பரஸ்பரம் குற்றம்சுமத்தும் விளையாட்டை நிறுத்திவிட்டு நல்லதொரு விளையாட்டை ஆடுவோம். புதிய ஆதாரங்களை 10 தினங்களுக்கு முன்புதான் இந்தியா அளித்தது. அதனை பரிசோதிக்கவும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய தகுதியானதுதானா என்பதை அறிய கொஞ்ச காலம் தேவைப்படும். நாங்கள் உங்களின் நீதிமன்றத்தை மதிப்பதுபோல் நீங்களும் எங்கள் நீதிமன்றங்களை மதிக்கவேண்டும். என்றும் மாலிக் வலியுத்தினார். விசாரணை நடவடிக்கைகள் நின்றுபோனதாக எழுந்த குற்றச்சாட்டைப்பற்றி மாலிக் மறுப்புதெரிவித்துவிட்டு பெருநாள் தினத்திற்கு பிறகு விசாரணை வேகமாக நடைபெறும் என்றார்.
பாகிஸ்தானிலிருந்து இன்னொரு தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பற்றி மாலிக் கூறும்பொழுது, "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே! நீங்கள் ஒரு நாட்டின் ஆட்சித்தலைவர். உங்கள் வசமிருக்கும் இதுபற்றிய தகவல்களை நிச்சயமாக உங்கள் புலனாய்வுத்துறைகள் தந்த தகவலாகத்தான் இருக்கும். ஏன் அதனை எங்களோடு பகிர்ந்துக்கொள்வதில்லை. ஏன் தாக்குதல் நடைபெறும் வரை மூடி வைக்கின்றீர்கள்?. நாமிருவரும் அண்டைநாடுகள். ஒன்றாக இணைந்து விசாரணை நடத்துவோம். ஒன்றாக இணைந்து சர்ச்சைச்செய்ய நாங்கள் தயார்". இவ்வாறு ரஹ்மான் மாலிக் கூறினார்.
செய்தி:தேஜஸ்

11/9/09

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு

0 கருத்துகள்
துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.

இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.

முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி

0 கருத்துகள்
டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.
இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஷொஹ்ரபுதீன் சேஹ் கொலை, விரிவான விசாரணை தேவை:சுப்ரீம் கோர்ட்

0 கருத்துகள்
புதுடெல்லி:குஜராத்தில் வியாபாரம் செய்து வந்த சொஹ்ரபுதீன் சேஹ் என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச்செய்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது சம்பந்தமாக மாநில அரசு நடத்திய விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று விமர்சித்த நீதிமன்றம் இக்கொலைவழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிபதிகளான தருண் சாட்டர்ஜி,அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலையை தெளிவுப்படுத்தியது. சி.பி.ஐ விசாரணை கோரி ஷொரஹ்புதீனின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கும்பொழுதுதான் இவ்வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று சுப்ரீம் கோர்ட் தனது அபிப்ராயத்தை தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி டி.ஜி.பி வன்சார தலைமையிலான போலீஸ் குழு ஒன்று ஷொரஹ்புதீன் சேக்கை சுட்டுக்கொன்றது. போலீசுடன் நடைபெற்ற மோதலில் ஷொரஹ்புதீன் கொல்லப்பட்டதாக இட்டுக்கட்டிய குஜராத் போலீஸ் சாட்சியை அழிப்பதற்காக அவருடைய மனைவியை கொன்று தீவைத்துகொழுத்தியது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

10/9/09

இந்த வருடம் 320 ஃபலஸ்தீன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்:இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு

1 கருத்துகள்
ஜெருசலம்: இந்த வருடத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 1387 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 320 பேர் 16 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் பிரபல இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பைதுதுஸ்ஸாலோம் கண்டறிந்துள்ளது.
எதிர்த்துகூட போராடாத 773 சாதாரணமக்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது. இந்த வருடம் 300க்கும் குறைவான சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது. 16 வயதிற்கு கீழுள்ள 252 குழந்தைகள் கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 89 குழந்தைகள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேல் கூறுகிறது.
யூத சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீன் முஸ்லிம் குழந்தைகளை குறிவைத்து தேடிப்பிடித்து கொல்கின்றார்கள் என்பதற்கான உதாரணம் இவை.111 பெண்களையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது, ஆனால் 48 பெண்கள்தான் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளிலும் பிரதேசங்களிலும் சென்று விசாரணை மேற்க்கொண்டே இந்த விபரங்களை இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு சேகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் சாதாரண மக்களை கொன்றொழிப்பதாகவும் ஏராளமான கட்ட்டங்களை தகர்த்திருப்பதாகவும் ஆதலால் இதைப்பற்றிய சுதந்திரமான நம்பிக்கையான விசாரணை மேற்க்கொள்ளப்படவேண்டும் என்றும் பைத்துஸ்ஸாலோம் கூறியுள்ளது. இஸ்ரேலிய அமைப்பின் இந்த அறிக்கைக்கு இதுவரை இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இதுவரை ஃபலஸ்தீனில் ஹமாஸ் போராளிகளைத்தான் நாங்கள் லட்சியமிட்டு தாக்குகிறோம் என்று கூறிவந்தது இஸ்ரேல் ஆனால் ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேல் கொல்வது சாதாரணமக்களைத்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலமில் யூதகுடியிருப்புகளின் கட்டுமானப்பணியை ஆரம்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ்

திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததருக்காக காத்திருக்கும் பரிசுக்குவியல்கள்

0 கருத்துகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் மீது ஷுவை வீசியெறிந்த பத்திரிகையாளர் முன்ததர் அல் ஸைதிக்காக பரிசுக்குவியல்களும் வெகுமதிக்கான வாக்குறுதிகளும் காத்திருக்கின்றன.
அதிபரின் மன்னிப்பைத்தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை விடுதலையாகும் முன்ததிருக்கு கார்களும், வீடுகளும், கோடிக்கணக்கான டாலர்களும் பரிசாக தருவதான வாக்குறுதிகளுடன் ஏராளமானோர் களத்திலிறங்கியுள்ளனர்.
வேறு சிலரோ தங்களுடைய பெண்மக்களையும் திருமணம் செய்து தர தயாராக உள்ளனர். முன்ததிர் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த ஸ்தாபனமான அல்பக் தாதிய்யாவின் உரிமையாளர் முன்ததிருக்காக கார் வாங்கியதுடன் ஒரு அழகான வீட்டையும் கட்டிவைத்துள்ளார். முன்பு முன்ததிரின் மருத்துவ செலவுகளையும் இத்தொலைக்காட்சி சானலே கவனித்துவந்தது. மொராக்கோவில் வசிக்கும் ஈராக்கைச்சார்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளை முன்ததிருக்கு திருமணம் முடித்துக்கொடுக்க தயார் என்று அறிவித்துள்ளதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியைச்சார்ந்த குடிமகன் ஒருவர் முன்ததிருக்கு ஒரு கோடி டாலர்(48கோடி ரூபாய்) தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஃபலஸ்தீன் பெண்கள் பலரும் முன்ததிரை திருமணம் முடிக்க தயாரென்றும் அவர் விடுதலையானால் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக தி கார்டியன் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்ஜ் w புஷ் தனது கடைசி பயணமாக ஈராக்கிற்கு வந்தபொழுது அதிபர் நூரிமாலிக்குடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அவ்வேளையில் ”நாயே இது உனக்கு விடைபெறும் நாளிற்கான பரிசு. ஈராக்கில் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் விதவையாக்கப்பட்ட பெண்களுக்காகவும் இது”என்று கூறி ஷூவை கழற்றி புஷ்ஷை நோக்கி ஆவேசத்துடன் எறிந்தார். சிறையிலிருந்து விடுதலையானால் முன்ததிர் இனி பத்திரிகைத்தொழிலில் ஈடுபடமாட்டார் என்றும் அநாதை நிலையம் ஏற்படுத்தி அதில் அகதிகளாக்கப்பட்டோருக்கு நல்வாழ்வு அளிக்கும் பணியை மேற்க்கொள்வார் என்றும் அவருடைய சகோதரர்களான மைதம், வெர்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்