17/9/09

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம்:ஐ.நா

0 கருத்துகள்

இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவின் மீது நடத்திய அக்கிரம தாக்குதல் போர் குற்றமென்று ஐ.நா சபையின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
கடந்த டிசம்பர்-ஜனவரி மாதங்களில் 3 வாரம் நீண்ட இஸ்ரேல் ராணுவத்தின் காஸ்ஸா மீதான் அக்கிரம தாக்குதல் சர்வதேச குற்றவியல் சட்டங்களையும், மனித உரிமைகளையும் வெளிப்படையாக மீறிய செயல் என்று அறிக்கை இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துகிறது.
தென்னாப்ப்ரிக்காவைச்சார்ந்த பிரபலமான நீதிபதி ரிச்சார்ட் கோல்ட் ஸ்டோனின் தலைமையிலான குழுதான் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்தது. காஸ்ஸாவிற்கெதிராக சட்டத்திற்கு புறம்பான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தியதாக இக்குழு குற்றஞ்சாட்டுகிறது. மனிதத்தன்மைக்கு முற்றிலும் புறம்பான குற்றங்களை இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்தியுள்ளது. காஸ்ஸாவில் வசிக்கும் 15 லட்சம் சிவிலியன்களை தண்டிக்கவும், அவமதிக்கவும், பயமுறுத்தவும் செய்வதற்காக இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய தாக்குதல்கள் இவை என்று ஐ.நா குழுவின் அறிக்கை கூறுகிறது.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இஸ்ரேல் காஸ்ஸாவில் ஏற்படுத்திய தடையானது காஸ்ஸா மக்களுக்கு அளிக்கப்பட்ட கூட்டுத்தண்டனை. காஸ்ஸாவில் வாழும் சிவிலியன்களை இலக்காக வைத்துதான் இஸ்ரேல் தாக்குதல்களை நட்த்தியுள்ளது. வெள்ளைக்கொடி ஏந்திய சிவிலியன்களை சுட்டுக்கொன்ற கொடூரமும் நிகழ்ந்துள்ளது. ஐ.நா சபை கட்டிடம் உள்ளிட்ட சிவிலியன் குடியிருப்புகளின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே கொடூரமான ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் 300 குழந்தைகளை காஸ்ஸாவில் கொன்றுகுவித்துள்ளது.வெள்ளை பாஸ்பரஸ்,கடும் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிப்பொருள்கள் ஆகியவற்றை இஸ்ரேல் காஸ்ஸாவில் பயன்படுத்தியது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று ஐ.நா குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதலால் காஸ்ஸாவில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் பாதிக்குமேற்பட்டோர் பெண்கள் மற்றும் பிஞ்சுக்குழந்தைகள், ஃபலஸ்தீனிலிருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 ராணுவத்தினரும், மூன்று சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். இக்குற்றங்களைப்பற்றி சொந்தமாக ஆய்வுச்செய்த அறிக்கையை 3 மாதத்திற்குள் வழங்க இரு பிரிவினருக்கும் உத்தரவிடவேண்டுமென்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இக்குழு சிபாரிசுச்செய்துள்ளது. அவ்வாறு தயாராகாத சூழலில் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவிற்கு விடுமாறும் அவ்வறிக்கையில் கூறப்படுள்ளது.
ஆனால் இவ்வறிக்கை ஒருதலைபட்சமானது அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களையும் தற்காப்பிற்காக போராடுவோரையும் சமமான நிலையில் கணிக்கும் ஐ.நா குழுவின் அறிக்கைமுறைமை சரியல்ல என்று ஹமாஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ்
ஐ.நாவின் அறிக்கை பார்க்க கீழே கொடுக்கப்படுள்ள லிங்கை கிளிக்செய்யவும் .http://image.guardian.co.uk/sys-files/Guardian/documents/2009/09/15/UNFFMGCReport.pdf

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.