31/7/09

குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சர்ச்சைக்குரிய தீவிரவாத தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்

0 கருத்துகள்
குஜராத் அரசு உருவாக்கியுள்ள தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் கர்நாடக அரசும் தனது தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மசோதாவுக்கு கர்நாடக சட்டசபை இன்று ஒப்புதல் அளித்தது. தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. ஆனால் இந்த சட்டம் தவறான முறையில் பயன்படுத்தபபடும் என காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சட்ட மசோதா குறித்து உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா கூறுகையில், தீவிரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளோம். மேலும், தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். முந்தைய சட்டத்தில் இந்த அம்சம் இல்லாமல் இருந்தது. தற்போது மரண தண்டனையை புதிதாக சேர்த்துள்ளோம் என்றார். இந்த சட்ட மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை உருவாக்கி அதை ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு முறையும் அதை மத்திய அரசின் சிபாரிசை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கர்நாடக அரசின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...-
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாவோர் ஒரு வருடம் வரை குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே சிறையில் வைக்கப்படலாம்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் செல்போன் உள்ளிட்ட பேச்சுக்களை பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

30/7/09

போரினால் நிர்மூலமாக்கப்பட்ட காஸ்ஸாவில் நிவாரண உதவிகளுடன் ஈரான் அமைப்பு

0 கருத்துகள்
இஸ்ரேலின் தாக்குதலினாலும் தடையினாலும் சிதைந்துப்போன காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருள்களுடன் ஈரானின் ஜீவகாருண்ய அமைப்பு வந்தடைந்தது.
ஃபலஸ்தீனின் மனிதநேய அமைப்பான அன்ஸார் சாரிட்டி இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து நிவாரணபணியாற்றுவதற்காகத்தான் ஈரானின் "உயிர்தியாகிகள் பவுண்டேசன்" என்ற இந்த அமைப்பு காஸ்ஸா வந்துள்ளது. காஸ்ஸாவின் புனர் நிர்மாணத்திற்காக பல்வேறு நாடுகள் 500 கோடி டாலர் தருவதாக வாக்களித்தபோதும் கட்டிட நிர்மாணப்பணிக்கான பொருள்களை கொண்டுவருவதற்கு இஸ்ரேல் ஏற்படுத்திய தடையினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் துணியினால் கட்டப்பட்ட கூடாரங்களிலும் திறந்த வெளிகளிலும்தான் வசிக்கின்றனர். தகர்ந்துபோன‌ வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு 8 ஆயிரம் டாலர் செலவாகும் என்ற் ஈரானிய மனிதநேய அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர். இஸ்ரேலின் தடையையும் மீறி இதுவரை 102 குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைந்துள்ளன. ஈரானை நிரந்தரமாக விமர்சிக்கும் எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளால் முடியாத உதவிகளைத்தான் ஈரானின் மனிதநேய அமைப்பு தங்களுக்காக செய்ததாக காஸ்ஸா மக்கள் கூறுகின்றார்கள். மேலும் ஈரானின் இந்த உதவி மேற்கண்ட நாடுகளுக்கு முன்மாதிரி என்றும் அவர்கள் கூறினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பத்தாயிரம் உய்கூர் முஸ்லிம்கள் ஒரே இரவில் காணாமல் போனதாக ராபிஆ கதீர் குற்றச்சாற்று.

0 கருத்துகள்
டோக்கியோ: ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்கு துருக்கிஸ்தானில் சமீபத்தில் நடந்த இனக்கலவரத்தில் ஒரே இரவில் 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போனதாக உலக உய்கூர் காங்கிரஸ் தலைவர் ராபிஆ கதீர் குற்றஞ்சாட்டினார்.
ஜப்பானில் சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ள ரபிஆ கதீர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது குறிப்பிட்ட அவர் ஒரே இரவில் 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்கள் எவ்வாறு காணாமல் போனார்கள்?, மரணித்திருந்தால் அவர்களுடைய உடல்கள் எங்கே?‍ ரபீஆ கேள்வி எழுப்பினார். உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் மின்சாரத்தை தடைச்செய்தபிறகு ஒவ்வொரு நபராக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதாக அப்பகுதியிலிருந்து தனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக ரபீஆ கூறினார். ஜூலை 5 ஆம் தேதி ஆரம்பித்த கலவரத்திற்கு காரணம் அமெரிக்காவில் வசிக்கும் ரபீஆ தான் என சீனா குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த ரபீஆ அதற்கான ஆதாரங்களை உலக சமூகத்திற்கு முன் வைக்க சீனா தயாரா? என்று சவால் எழுப்பினார். அமைதியாக நடந்த போராட்டத்தை கலவரமாக மாற்றியது சீன அதிகாரிகள் என்று ரபீஆ குற்றம் சுமத்தினார். அதே நேரத்தில் ரபீஆவின் ஜப்பான் பயணம் சீனாவுடனான தங்களுடைய உறவை பாதிக்காது என்று ஜப்பான் கூறியுள்ளது. ரபீஆவை அழைத்தது ஒரு தனியார் குடியுரிமை அமைப்பு என்றும் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும் ஜப்பான் அரசின் செய்தித்தொடர்பாளர் தகியோ கவாமுரா தெரிவித்தார். ஏற்கனவே ரபீஆ கதீரின் ஜப்பான் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பை ஜப்பானிடம் தெரிவித்திருந்தது.

வீடியோவைக் காண இங்கு க்ளிக் செய்யவும்.

செய்தி : தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

29/7/09

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு

0 கருத்துகள்
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையிலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலில் சக்திப்படுத்தும் நோக்கில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சி இன்று டெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் வைத்து பிரகடனப்படுத்தப்பட்டது.
ஈ.அபூபக்கர்(தலைவர்), வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி(துணைத்தலைவர்), எ.ஸயீத்(பொதுச்செயலர்), முஹம்மது உமர்கான்(பொதுச்செயலர்), சி.ஆர்.இம்திஹாஸ்(செயலர்), மொய்தீன்குட்டி ஃபைஸி(செயலர்), ஃபவுஸியா கபீர்(செயலர்), இஸ்லாமுதீன் குரைஷி(பொருளாளர்)ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா உட்பட்ட மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தல்களில் அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று கட்சியின் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கேரளாவில் எந்த கூட்டணியை ஆதரிப்பது என்பது பற்றி சூழ்நிலைகளை கணக்கில் எடுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, "கட்சி உறுப்பினர்கள், கேடர்கள் என்று இரண்டுவிதமான அங்கங்கள் கட்சியில் இருப்பார்கள். கட்சியின் சட்டதிட்டப்படி கிளை கமிட்டியிலிருந்து தேசிய செயற்குழு வரை அதனுடைய நிர்வாக கட்டமைப்பு செயல்படும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, நகரம், மாவட்டம், மாநிலம் என அதனுடைய கமிட்டிகள் செயல்படும். கமிட்டிகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் 16 மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் அக்டோபர் 18 ஆம்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு முன்பு மாநிலக்கமிட்டிகள் செயல்பட ஆரம்பிக்கும்." என்று அவர்கள் கூறினர். பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இச்செய்தியின் தொடர்புடைய வீடியோவைக் காண இங்கு க்ளிக் செய்யவும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் கட்சி பிரகடனம்

5 கருத்துகள்

புதுடெல்லி:சிறுபான்மை பிற்பட்டோர் மக்களின் கூட்டமைப்பாக விளங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதிய அரசியல் கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியது. இக்கட்சியின் பெயர் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (Social Democratic Party of India).

இஸ்ரேலிய சிறையில் மிக மோசமாக நடத்தப்படும் ஃபலஸ்தீனர்கள்

0 கருத்துகள்
இஸ்ரேலிலுள்ள அல் நகாப் என்ற பாலைவனச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் தாங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மிக மோசமாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயுற்றால் கூட சிகிட்சை அளிக்க இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டால் கூட அங்குள்ள மருத்துவர்கள் எந்த நோயும் இல்லை என்று பொய் சான்றிதழ் அளித்து மீண்டும் நோயுற்றவரை சிறைக்கே அனுப்புகின்றனர். ஃபலஸ்தீனிய சிறைக்கைதிகள் சங்கம் என்ற அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் இந்த சிறைக்கைதிகளை சந்தித்தபோது பலரும் தாங்கள் இஸ்ரேலிய சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினர். பி.பி.எஸ் இன் அட்டர்னி கூறும் அறிக்கையில் மன்சூர் என்ற ஃபலஸ்தீனிய கைதி ஒருவர் சமீபத்தில் காலைநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டபொழுது நிலைகுலைந்து விழுந்துவிட்டார். உடனே சிறை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவரை பரிசோதித்த இஸ்ரேலிய டாக்டர் மன்சூர் நலமாக இருப்பதாக பொய் சான்றிதழ் அளித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக சிறையிலிருக்கும் மன்சூருக்கு ஒரு காது கேட்காது. மேலும் இஸோம்னியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல் ஒவ்வாமை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உடனடியாக மருத்துவ நிபுணரிடம் சிகிட்சை அளிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பி.பி.எஸ் அட்டர்னி மேலும் கூறுகையில் 27 ஃபலஸ்தீன கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. ரெட்கிராஸ் இந்த கைதிகளின் பிரச்சனைகளைப்பற்றி கூறும்பொழுது அவ்வமைப்பு இதனை அலட்சியப்படுத்தியது. மேலும் சிறை அதிகாரிகள் தங்கள் செல்வாக்கை உபயோகித்து சிறைக்கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிப்புச்செய்கின்றனர். சிறைக்கைதிகளை நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு சிறைக்கோ அழைத்துச்செல்லும் போது ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய வைத்து அலைகழிக்கின்றனர். இவ்வாறு அவ‌ர் கூறினார்.

இஸ்ரேலின் ப‌ல்வேறு சிறைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் அநியாய‌மான‌ முறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

press tv

தீவிரவாத தடுப்பு சட்டம்-ஜனாதிபதி யோசனையை நிராகரித்த மோடி

0 கருத்துகள்
அகமதாபாத்: குஜராத் மாநில திட்டமிட்ட குற்ற தடுப்புச் சட்ட மசோதாவில் 3 திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கூறி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட, குஜராத் மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்ட மசோதாவை குஜராத் மாநில சட்டசபை இன்று மீண்டும் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்ட மசோதாவில் திட்டமிட்ட குற்றம் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் தீவிரவாதம் என்ற வார்த்தையும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை முன்பு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது குஜராத் அரசு. ஆனால் அதில் மத்திய அரசின் ஆலோசனைப்படி 3 திருத்தங்களை கூறியிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இருப்பினும் அதை ஏற்க மறுத்த குஜராத் அரசு அதே சட்ட மசோதாவை மீண்டும் இன்று நிறைவேற்றியுள்ளது.
மேலும், இந்த சட்டத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்த்ததற்குக் காரணம், குஜராத்தில் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் என்று தனியாக ஏதும் இல்லாததே என்று குஜராத் அரசு கூறுகிறது.
முதலில் இந்த சட்ட மசோதாவை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடா) நாடு முழுவதும் அமலில் இருந்தது. எனவே அப்போது குஜராத் சட்ட மசோதாவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி இந்த சட்டத்தை குஜராத் அரசு இயற்றியது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து மீண்டும் இந்த சட்ட மசோதாவை குஜராத் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் 2வது முறையும் இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை கூறியதால் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
3 திருத்தங்களை மேற்கொண்டால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொளஅவதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த மசோதாவில், ஒரு போலீஸ் அதிகாகரி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் செல்லும் என்ற அம்சத்தை ஏற்கவே முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மேலும், அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ற அம்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் சிதம்பரம் கூறியிருந்தார். இதேபோல இன்னொரு திருத்தத்தையும் மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் இவை எதையும் செய்யாமலேயே அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளது குஜராத் அரசு.
thatstamil

28/7/09

இஸ்ரேலில் அமெரிக்காவுக்கு எதிரான பேரணியில் ஒபாமா இனவெறியன் என்ற கோஷம்

0 கருத்துகள்
ஜெருச‌ல‌த்தில் இஸ்ரேலிய‌ வ‌ல‌துசாரிக‌ள் அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமாவுக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ பேர‌ணியை ந‌ட‌த்தின‌ர். இதில் 1500 பேர்க‌ள் க‌ல‌ந்துக்கொண்ட‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.
ச‌மீப‌த்தில் ஒபாமா பேட்டிய‌ளிக்கையில் இஸ்ரேல் கிழ‌க்கு ஜெருச‌ல‌த்தில் ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பாக‌ க‌ட்டிவ‌ரும் குடியிருப்புக‌ளுக்கான‌ ப‌ணியை உட‌னே நிறுத்த‌வேண்டும் என‌க்கூறியிருந்தார். இத‌னைக்க‌ண்டித்துதான் இந்த‌பேர‌ணி ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ப்பேர‌ணிக்கு வ‌ல‌துசாரிசிந்த‌னையுடைய‌ பிர‌த‌ம‌ர் பெஞ்ச‌மின் நெத‌ன்யாகுவின் லிகுட் க‌ட்சி, நெஸ்ஸ‌ட்(இஸ்ரேலிய‌ பாராளும‌ன்ற‌ம்)உறுப்பின‌ர்க‌ள், ர‌ப்பிக‌ள்(யூத‌ ம‌த‌குருக்க‌ள்)ம‌ற்றும் யூத‌ பொதும‌க்களும் ஆத‌ர‌வு தெரிவித்திருந்த‌ன‌ர். இந்த‌ பேர‌ணியை ப‌ல்வேறு யூத‌ வ‌ல‌துசாரி அமைப்புக‌ள் குறிப்பாக‌ மேற்குக்க‌ரை யூத‌ குடியிருப்பின‌ர் ,ஈஸா க‌வுன்சில் ஆஃப் ஜீவிஸ் க‌ம்யூனிடி உள்ளிட்ட‌ சியோனிஷ‌ வெறிப்பிடித்த‌ அமைப்புக‌ள் ஏற்பா‌டுச்செய்திருந்த‌ன‌.
இந்த‌ பேர‌ணியில் க‌ல‌ந்துக்கொண்ட‌ ர‌ப்பியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எலீசர் வால்டுமேன் ஒபாமாவை நேர‌டியாக‌ தாக்கிப்பேசினார். அவ‌ர் பேசுகையில், "நீ ஒரு இன‌வெறிய‌ன், எவ்வ‌ள‌வு தைரிய‌ம் உன‌க்கு எங்க‌ளை இந்த இடத்தில் வாழக்கூடாது என்று சொல்ல. இன்னும் சில காலங்களில் எங்களது வரலாறை பூர்த்திச்செய்வோம்". என்று கூறினார். பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கோஷமிடுகையில், "எங்களுக்கு தேவை சுதந்திரம்,அமெரிக்காவின் சர்வாதிகாரம் அல்ல"என்று முழக்கமிட்டனர்.
இஸ்ரேல் முன்பு கட்டுமானத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் லிகுட் கட்சியும் வலதுசாரிகளும் இதற்கு மறுத்துவருகின்றனர்.
Source:Press tv

செக்ஸ் புகார்-உமர் அப்துல்லா ராஜினாமா

0 கருத்துகள்
ஸ்ரீநகர்: தன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை நிராகரிப்பதாக ஆளுநர் வோரா அறிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் அவர்களை போலீஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.
இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சி துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் பேசுகையில், இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இவரது பேச்சால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.
நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு தனது இருக்கையை விட்டு எழுந்தார்.
அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை அவையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். அவரை பிடித்து இழுத்து நாற்காலியில் அமர வைக்க முயன்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் அவரை சூழ்ந்து கொண்டு இழுத்து நாற்காலியில் உட்கார வைத்தனர்.
ஆனால் அதையும் மீறி எழுந்த அவர், இந்தப் பிரச்சனையில் என்னை செயல்பட அனுமதியுங்கள், எனக்கு இந்தப் பதவி வேண்டாம், முதலில் என்னை வெளியே போக அனுமதியுங்கள் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
ஆனால், நீங்கள் ராஜினாமா செய்தாலும் அதை கட்சி ஏற்காது, நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி அமைச்சர்கள் அவரை வெளியேற விடாமல் தடுத்தனர்.
ஆனாலும் அவர்களையும் மீறி வெளியே சென்ற உமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் தந்தார்.
இதையடுத்து ராஜினாமாவை வோரா ஏற்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. உமர் மீதான புகார் குறித்து விசாரணைக்குப் பின் ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.
உமர் தனது ராஜினாமா முடிவில் தீவிரமாக இருந்தால் அவருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
thatstamil

கோவையில் சிறப்பாக நடைபெற்ற மனித உரிமை கருத்தரங்கம் மற்றும் 'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' நூல் வெளியீட்டு விழா

0 கருத்துகள்

கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து, மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி .சி.ரத்தினசபாபதி. இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி..டி (சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கோவை ஜே.எம். நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் மேற்படி .சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் இறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டனர்.
'போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்' என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவேற்ப்புரை நிகழ்த்தினர். புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.Oதமிழ்நாடு) கருத்துரையாற்றினார். இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர்
அப்துல் நாசர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களிடம் ஒப்படைத்தார்.இதனை தொடா்ந்து .சி.ரத்தினசபாபதி, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் .சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி தமிழக அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பவானி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா. மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.

தேசிய அளவிலான பெண்கள் அமைப்பு உருவாக்கம்

0 கருத்துகள்
பெண்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக்கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவந்த பெண்களுக்கான அமைப்புகளின் பிரநிதிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் பெண்களுக்கான நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பை துவக்கியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த அமைப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு ஜம்மியத்துல் நிஸா, கர்நாடகா விமன்ஸ் ஃபாரம், கேரளா விமன்ஸ் ஃப்ரண்ட் ஆகிய அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், அவர்களை எல்லாத்துறைகளிலும் முன்னேற்றுதல், சமூகப்பிரச்சனைகளைக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
நிர்வாகிகளாக எ.எஸ்.ஸைனபா(கேரளா) தலைவராகவும், எம்.பேனசீர்(தமிழ்நாடு)உபத்தலைவராகவும், ஷாஹிதா தஸ்னீம்(கர்நாடகா)பொதுச்செயலாளராகவும், ஜமீலா பஷீர்(கேரளா) செயலாளராகவும், கெ.ஃபாமிதா(தமிழ்நாடு) பொருளாளராகவும் தேர்வுச்செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ.எம்.அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப், முன்னால் சேர்மன் இ.அபூபக்கர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சர்வதேச திரைப்படவிழா இணையதளத்தின் தகவலை துண்டித்த (hack) சீனா

0 கருத்துகள்
பீஜிங்: உய்கூர் மக்களின் தலைவராக கருதப்படும் அமெரிக்காவில் வசித்துவரும் ராபிஆ கதீரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை மெல்பர்னில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உட்படுத்தியதால் சீனா திரைப்படவிழா சம்பந்தமான இணையதளத்தில் தகவல்களை துண்டித்துள்ளது.
துண்டிக்கப்பட்டது திரைப்படவிழாவின் நிகழ்ச்சிநிரல் சம்பந்தபட்ட தகவல்களை. அதற்கு பதிலாக சீனாவின் கொடியும் கதீருக்கு எதிரான விமர்சனங்களும் காணப்படுகின்றன. உய்கூர் திரைப்படத்தை நிகழ்ச்சியில் உட்படுத்தியதைக்கண்டித்து ஏற்கனவே சீனா திரைப்படவிழாவில் திரையிடப்படயிருந்த‌ 4 திரைப்படங்களை வாபஸ் பெற்றிருந்தது.
ஆகஸ்ட் 8ஆம்தேதிதான் "டென் கண்டிஷன்ஸ் ஆஃப் லவ்" என்ற திரைப்படம் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. சினிமா திரையிடப்படும் தினம் ராபிஆ கதீர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் என்று திரைப்படவிழா நிர்வாகிகள் தெரிவித்தனர். திரைப்படவிழாவிற்கு வருகைதரும் கதீர் மற்றும் பிரநிதிகளுக்கு பாதுகாப்பிற்காக பாதுகாப்புப்படையினர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 62 வயதாகும் ராபிஆ கதீர்தான் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் ஏற்படும் போராட்டங்களுக்கு காரணம் என சீன அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் உய்கூர் முஸ்லிம்களுக்கெதிராக சீனா கடைப்பிடித்துவரும் அடக்குமுறைகளை மூடி மறைக்க இத்தகைய குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்துவதாக கதீர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்

0 கருத்துகள்
ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிகாலத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த சிரியாவை சரிக்கட்டுவதற்கு அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஜார்ஜ் மிச்சேல் மீண்டும் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார்.
சிரிய அதிபர் பஸ்ஸாருல் அஸதுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் மிச்சேல் தெரிவித்தார். அரப் இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைகளில் சிரியாவின் பூரண பிரநிதித்துவத்தை அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது. இஸ்ரேல் சிரியாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கும் என மிச்சேல் குறிப்பிட்டார்.
சிரியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மிச்சேல் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். பதவியேற்றபின் இரண்டாம் முறையாக மிச்சேல் சிரியா சென்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சிரியாவை தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடாகவே கருதியிருந்தார்.இதனால் இரு நாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஒன்றும் இல்லாமலிருந்தது. ஈரானுடனான சிரியாவின் உறவின் விரிசல் ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம். அதே நேரத்தில் இஸ்ரேல் கைப்பற்றியுள்ள கோலான் குன்றுகளை சிரியாவிடம் ஒப்படைக்காதவரை சமாதானத்திற்கு சாத்தியமில்லை என்று பஸ்ஸாருல் அஸத் மிச்சேலிடம் தெளிவுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தலிபான் இயக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல்: அல்ஜஸீரா தகவல்

0 கருத்துகள்


தலிபான் இயக்கத்தலைவர் முல்லா உமர் அவர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அவ்வியக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல் தங்களுக்கு கிடைத்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒழுக்கவிதிகளுக்கான் நூல் 13 அத்தியாயங்களைக்கொண்டது. 67 சட்டப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவ்விதிகள் செய்யக்கூடியவை கூடாதவை என்பதை சுட்டிக்காட்டும் உலகின் மிகப்பெரிய ரகசிய அமைப்பின் வடிவமைப்பைக்காட்டுகிறது. இந்த ஒழுக்க விதிகளுக்கான நூல் பிரிந்துக்கிடக்கும் குழுக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியாக தோன்றுகிறது. இந்நூலில் கூறப்பட்டுள்ள சில முக்கிய விதிகள் பின்வருமாறு:
அடைக்கலம் அளிப்பது சம்பந்தமாக: ஒவ்வொரு முஸ்லிமும் அடிமை அரசாங்கத்திடம் வேலைச்செய்யும் நபர்களிடம் வேலையை உதறித்தள்ள கூறவேண்டும். மேலும் அவர்களுடனான எல்லாவிதத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு கூறுதல் வேண்டும். அதனை யார் ஏற்றுக்கொள்கின்றாரோ அவருக்கு பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை கொடுப்பது மாகாண மாவட்ட (தலிபான்) தலைவர்கள் அளிப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
கைதிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாக‌: அடிமை அர‌சாங்க‌த்தின் கீழ் வேலை பார்க்கும் ராணுவ‌ வீர‌ர், அதிகாரிக‌ள், ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ள், வேலையாட்க‌ள் யாரையாவ‌து கைதுச்செய்தால் அவ‌ர்க‌ளை துன்புறுத்த‌வோ, தாக்குவ‌தோ கூடாது. அந்த‌க்கைதியை வலுவான உத்துரவாதத்துடன் விடுத‌லைச்செய்வ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌வோ அல்ல‌து கைதிப்பரிமாற்ற‌ம் செய்வ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌வோ மாகாண தலைவர்(தலிபான்)தான் முடிவுச்செய்யவேண்டும். கைதிகள் டைரக்டர், கமான்டர் அல்லது மாவட்ட உயர் அதிகாரி அல்லது மேல்மட்ட அதிகாரி என்ற பொறுப்புகளிலிருந்தால் அவர்களை காயப்படுத்துவது, கொல்வது, விடுதலைச்செய்வது அல்லது மன்னித்து விடுவது சம்பந்தமாக இமாம் அல்லது துணை இமாம் மட்டுமே முடிவுச்செய்வர். கைதிகள் காஃபிராக இருந்தால் அவரைக்கொல்வது, விடுதலைச்செய்வது, கைதிகள் பரிமாற்றம்செய்வது சம்பந்தமான முடிவை இமாம் அல்லது துணை இமாம் மட்டுமே முடிவுச்செய்வர்.
சிவிலிய‌ன்க‌ள்(பொதும‌க்க‌ள்)ச‌ம்ப‌ந்த‌மாக‌:க‌வ‌ர்ன‌ர்,மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர்க‌ள், லைன் க‌மான்ட‌ர்க‌ள் உட்ப‌ட‌ முஜாஹிதீன்க‌ளின் ஒவ்வொருவ‌ரும் சிவிலிய‌ன்க‌ளை கொல்வ‌தோ, துன்புறுத்துவ‌தோ, அவ‌ர்க‌ளின் சொத்துக்க‌ளுக்கு சேத‌ம் விளைவிப்ப‌தோ கூடாது. இது விஷ‌ய‌மாக் மிக்க‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ப்ப‌ட‌ல் வேண்டும்.
தற்கொலைத்தாக்குதல் சம்பந்தமாக: தற்கொலைத்தாக்குதல்கள் முக்கிய, மிகப்பெரிய இலக்குகளை நோக்கி மட்டுமே நடத்தப்படவேண்டும். ஒரு வீரமிக்க இஸ்லாமியன் சிறிய மற்றும் பயனில்லாத இலக்குகளை நோக்கி தற்கொலைத்தாக்குதலை நடத்தமாட்டான். இத்தாக்குதல்களில் சிவிலியன்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படாமலிருக்க கவனம் செலுத்தவேண்டும்.
ஒற்றுமை சம்பந்தமாக:புதிதாக முஜாஹிதீன்களின் அமைப்புகளை உருவாக்குவது தடைச்செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற பிரிவுகள், ஒழுங்கற்ற படைப்பிரிவுகள் முறையான அமைப்பில் சேர மறுப்பது விலக்கப்பட்டுள்ளது. கவர்னரோ அல்லது தலைவரோ வேறொரு மாகாணத்தில் ஒரு அமைப்பை முன்பு ஏற்படுத்தியிருந்தால் அந்த பகுதிக்கு அவர் அந்தப்பகுதியிலிருக்கும் அமைப்பிற்கு கமான்டராக நியமிக்கப்படுவார்.
ஆப்கான் மக்களோடுடனான தொடர்பு பற்றி: முஜாஹிதீன்கள் நாட்டுமக்களோடு நல்லதொரு நடவடிக்கைகளை வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்துதல் வேண்டும். அவர்களிடையே இனத்தை வைத்தோ, மொழியை வைத்தோ அல்லது புவியிட பின்புலத்தை வைத்தோ பாரபட்சம் காட்டக்கூடாது.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
ஆதாரம்: அல்ஜஸீரா

27/7/09

இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!

0 கருத்துகள்
இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim council of Britain) தலைவரான டாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.

பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போது பிரிட்டிஷ் படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றிய ஒரு வாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர் குழு தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன் ஆதரித்துப் பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழு பழி சுமத்தியது.

இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்று முஹம்மத் அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார். தான் கூறாத ஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்ட பிபிஸிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல் ஈராக்கில் பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்து தான் பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழு திரித்து அவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப் பேசியது போன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும் பிபிஸி பழி சுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸி இறுதியில் தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டு முஹம்மத் அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்செய்தி பிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time) நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸி பதிவு செய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்து ஈராக் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒரு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் பதில் அளித்திருந்தார்.
பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட வேண்டுமா? என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்ல முற்படுகையில் குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்து இத்தகையப் போராட்டங்கள் பல நடந்தும் அதனைக் கண்டனம் செய்யத் தவறியதால் முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.

அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீது நிகழும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத் பாரி அவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவே இஸ்லாம் கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில் நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர் குழு அந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர் குழுவின் இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாக பிரிட்டனின் முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத் தாக்கியிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டை எதிர்த்து முஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடைய இஸ்லாமிய விரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தியதோடு முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது. இந்தத் தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாக வழங்கி விடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

source :satyamargam

ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்த பிரிட்டீஷ் எம்.பிக்கள் கோரிக்கை

0 கருத்துகள்

இஸ்ரேலிய சியோனிஷ ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக தற்காப்பு போராட்டத்தை நடத்தி வரும் ஃபலஸ்தீனின் முக்கிய அமைப்பான ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பிரிட்டீஷ் எம்.பிக்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஹமாஸை புறந்தள்ளிவிட்டு சமாதான நடவடிக்கைகளுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்று அனைத்துகட்சி எம்.பிக்கள் அடங்கியவெளிநாட்டு விவகாரக்குழு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. அனைத்து கட்சிகளைச்சார்ந்த எம்.பிக்கள் அடங்கியகுழு இரண்டு வருடத்திற்கு முன்பும் இதுப்போன்றதொரு அறிக்கையை அரசுக்கு அளித்திருந்தது. லெபனானில் தற்காப்புப்போராட்டத்தை நடத்தி வரும் ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கார்டன் பிரவுன் அரசு ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
பேச்சு வார்த்தைகளில் ஹமாஸையும் உட்படுத்தவேண்டாம் என்ற மத்தியகிழக்கு நான்கு பேர் குழுவின்(Middleeast quartet) கொள்கையால் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் தங்களுடைய கருத்து என்று எம்.பிக்கள் குழு கூறியுள்ளது.
ஹமாஸின் ஒத்துழைப்பு இல்லாமல் நிலையான அமைதிக்கு சாத்தியமில்லை. காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் முடிந்து 6 மாதமாகியும் இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. கலவரத்தை உருவாக்கும் வாய்ப்புகள் தற்ப்பொழுதும் உள்ளன.இத்தகைய சூழலில் மீண்டு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஹமாஸின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளிலும் நான்கு பேர்க்குழு (quartet) தோல்வியையே தழுவியுள்ளது.இவ்வாறு அக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Middleeast quartet என்பது அமெரிக்கா, ரஷ்யா,.நா, யூரோப்பியன் யூனியன் ஆகியன அடங்கிய குழு. இதில் ரஷ்யா மட்டும்தான் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ராணுவத்தில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு தடையில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்

0 கருத்துகள்
புதுடெல்லி: ராணுவத்தில் பணியாற்றும் முஸ்லிம் வீரர்கள் தாடி வைப்பதற்கு தடைவிதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தரைப்படை, கப்பல் படை, விமானப்படை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன் அமைச்சரை சந்தித்த ஆல் இந்தியா மஜ்லிஸே முஸாவராத்தின்(மவ்லானா ஸாலிம் காசிமி பிரிவு) பிரநிதிக்குழுவிடம் இது சம்பந்தமாக கூறினார். ஆயுதப்படையினருக்கு குறிப்பாக விமானப்படையினருக்கு இது குறித்து தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இதற்கு முன் தாடி வைத்ததற்காக எவர் மீதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதனை வாபஸ் பெறவும் கட்டளையிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆட்சியின்போதுதான் ராணுவத்தில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு தடை ஏற்படுத்தியதாக ஏ.கே.அந்தோணி தன்னை சந்தித்த குழுவினரிடம் தெரிவித்தார். விமானப்படையில் தாடி வைப்பதற்கான தடையை எதிர்த்து விமானப்படையில் பணியாற்றும் முஹம்மது சுபைர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான‌ துணை சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தாடிவைக்கும் விஷயத்தில் மத்திய அரசு மறு பரிசீலனைச்செய்யும் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த மஜ்லிஸே முஸாவராத் குழுவில் துணைத்தலைவர் மவ்லானா அஹ்மத் அலி காசிமி, பொதுச்செயலாளர் மவ்லானா அமீதுஸ்ஸமான் கெரான்வி, கமால் ஃபாரூகி, முஹம்மது அதீப் ,ராஹத் மஹ்மூத் சவுத்ரி ஆகியோர் அடங்குவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்- வகேலா

0 கருத்துகள்
ராஜ்கோட்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் குஜராத் மாநில அமைச்சர் எஸ்.எஸ். வகேலா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் கலவரம் தொடர்பாக மோடியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். குஜராத் கலவரம் தொடர்பாக எஸ்.ஐ.டியிடம் ஒரு மாதிரியும், நானாவதி கமிஷனிடம் வேறு மாதிரியும் பேசி வருகிறது மோடி அரசு. எனவே உண்மையைக் கண்டறிய மோடிக்கும் அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும். நானாவதி கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைக்கும் மோடி, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறார் . ஆகவே மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும் என்கிறார் வகேலா.
thatstamil

இஸ்தான்புல்:சீனாவைக்கண்டித்து உய்கூர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

0 கருத்துகள்
கடந்த ஜுலை 5ஆம்தேதி சீனாவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட கிழக்கு துருக்கிஸ்தானில் பூர்வீக குடிமக்களான உய்கூர் முஸ்லிம்கள் மீது சீனா பாதுகாப்புப்படையினரும் ஹான் இனத்தைச் சார்ந்தவர்களும் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனைக்கண்டித்து துருக்கியில் வாழும் உய்கூர் முஸ்லிம்கள் சார்பில் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகம் முன் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீற முயன்றதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது சீனக்கொடி எரிக்கப்பட்டது.

26/7/09

தம்மாமில் IFF நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்

0 கருத்துகள்
அழைப்பிதழை பெரிதாக்கிப் படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்க்க எங்களால் இயலும்: ஈரான்

2 கருத்துகள்
ஈரானுக்கெதிராக தாக்குதலுக்கு தயாரானால் இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பதற்கு எங்களால் முடியும் என்று ஈரானின் புரட்சிப்படை தளபதி(Islamic Revolution's Guards Corps (IRGC)) முஹம்மது அலி ஜஹ்பரி கூறியுள்ளார்.
ஈரானின் அணு நிலையங்களை தகர்ப்பதற்கு இஸ்ரேலி துணிந்தால் அதற்கு சரியான பதிலடிக்கொடுக்க எங்களுக்கு பலம் உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக இந்த லட்சியத்தை முன்னிறுத்தி ஈரான் முயற்சிகளை எடுத்து வருகிறது. இஸ்ரேலின் அணுநிலையங்கள் அனைத்தையும் அழிக்க தொலைதூர ஏவுகணைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். என்று ஜஹ்பரி கூறியுள்ளார்.
ஈரானின் அணுக்கொள்கை மிகப்பெரிய மிரட்டல் என்றும் அதனை தடுக்க ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட எதனையும் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இந்நிலையில்தான் ஈரானின் அரசு புரட்சிப்படையின் வீர முழக்கம் இவ்வாறு வெளிப்பட்டது. இதனை இஸ்ரேலின் ஹாரட்ஸ் இணையதள இதழ் "சியோனிஷ அரசின் எந்த தாக்குதல்களையும் வினாடிகளுக்குள் பதிலடிக்கொடுக்கத்தான் இந்த தயாரிப்புகள். ஈரானை தாக்குதவதற்கு தயாரானால் இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பது உறுதி"என்று ஜஹ்பரி கூறியதாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.

தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு ஆலோசனை

0 கருத்துகள்
புதுடெல்லி: விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதியளிப்பது சம்பந்தமாக பரிசீலிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியது.

முஸ்லிம்கள் தாடி வளர்ப்பது தாலிபானிசம் என்று விமர்சித்த‌ உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கட்ஜு மன்னிப்புகேட்டார்.

இச்சம்பவத்தைத்தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மவ்லானா முஹம்மது அலி ரஹ்மானி அவர்கள் பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரைசந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விமானப்படையில் பணியாற்றும் முஹம்மது சுபைர் என்பவர் தாடி வைப்பது சம்பந்தமாக‌ தொடர்ந்த வழக்கில் ஆஜரான துணை சோலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தாடி வைப்பது சம்பந்தமாக விமானப்படை தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனைச்செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். விமானப்படையிலுள்ள சட்டப்படி தாடி வைக்காத நிலையில் விமானப்படையில் சேர்ந்தால் பின்னர் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்கப்படாது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

25/7/09

கர்நாடகா: முஸ்லிம் ஆன்மீக ஞானியைப்பற்றி மோசமான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

0 கருத்துகள்
கர்நாடகா மாநிலம் குல்பர்காவிலிருந்து வெளி வரும் பத்திரிகை "சம்யுகத கர்நாடகா"என்ற தின இதழ். இதில் டெக்கானின் ஷேஹ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற‌ முஸ்லிம் ஆன்மீக ஞானியைப்பற்றி மோசமான முறையில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பத்திரிகை அலுவலகத்திலிருந்த 3 ஊழியர்கள் காயமடைந்த்துள்ளனர். அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இதனைக்கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே வேளையில் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஃப்ரீடம் பரேடிற்கும், டி.ஒய்.எஃப்.ஐ யின் மார்ச் ஃபாஸ்ட்டுக்கும் கண்ணூரில் தடை

0 கருத்துகள்
க‌ண்ணூர்:வருகிற ஆக‌ஸ்ட் 15 ஆம்தேதி கேர‌ள‌ மாநில‌ம் க‌ண்ணூரில் பாப்புல‌ர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியா ம‌ற்றும் இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் ஆகிய‌ அமைப்புக‌ள் ந‌ட‌த்த‌ இருந்த அணிவ‌குப்புகளுக்கு காவ‌ல்துறை த‌டைவிதித்துள்ள‌து.தடையை மீறி அணிவ‌குப்பு ந‌டைபெறும் என‌ மேற்க‌ண்ட‌ அமைப்புக‌ள் தெரிவித்துள்ள‌ன‌.இரு அமைப்புக‌ளும் ஒரே நேர‌த்தில் அணிவ‌குப்புக‌ள் ந‌ட‌த்தினால் ச‌ட்ட‌-ஒழுங்கு பாதிக்க‌ப்ப‌டும் என்று உள‌வுத்துறையின் அறிக்கையின் அடிப்ப‌டையிலேயே இந்த‌ த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வ‌ட‌க்கு ம‌ண்ட‌ல‌ ஐ.ஜி.டோமின் ஜெ த‌ச்ச‌ங்க‌ரி கூறினார்.ஆனால் ஏற்க‌ன‌வே திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ எல்லைக்குள் பொதுக்கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌தற்கு த‌டையில்லை என்றும் அவ‌ர் தெரிவித்தார்."சுத‌ந்திர‌த்தின் பாதுகாவ‌ல‌ர்களாவோம்" என்ற‌ கோஷ‌த்தோடு வ‌ருகிற‌ ஆக‌ஸ்ட் 15 ஆம்தேதி க‌ண்ணூர், மைசூர், த‌ஞ்சாவூர், இடுக்கி ஆகிய‌ இட‌ங்க‌ளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுத‌ந்திர‌ தின‌ அணிவ‌குப்பு ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ள‌து." ஏகாதிப‌த்திய‌ வ‌ல‌துசாரி கொள்கைகளை த‌டுப்போம்"என்ற‌ கோஷ‌த்தோடு இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் வ‌ருகிற‌ ஆக‌ஸ்டி 15 ஆம்தேதி அணிவ‌குப்பு ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ள‌து.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

மைசூர் மதக் கலவரம்-ராம்சேனா தலைவர் முத்தாலிக் கைது

0 கருத்துகள்
மைசூரில் நடந்த மதக் கலவரத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வன்முறையைத் தூண்டியதாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் இன்று கைது செய்யப்பட்டார்.
மங்களூரில் ஒரு பப்க்குள் நுழைந்து பெண்களை ரோட்டில் ஓட ஓட விரட்டித் தாக்கிய அமைப்பு தான் ஸ்ரீராம் சேனா.
இந் நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் மைசூரில் இரு பிரினருக்கு இடையே மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதக் கலவரத்தை தூண்டியதே முத்தாலிக் தான் என்றும், பிரச்சனையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதால் தான் மதக் கலவரமே வெடித்தது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலை பெல்காம் நகரில் வைத்து அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
பப் தாக்குதலையடுத்த முத்தாலிக் மங்களூருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
source:Thatstamil

ஆஃப்கான் போருக்கு பிரிட்டன் பொதுமக்கள் எதிர்ப்பு:கருத்துக்கணிப்பில் தகவல்

0 கருத்துகள்
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கத்தலைமையில் தாக்குதல் நடத்திவரும் இங்கிலாந்து உள்ளிட்ட நேசநாட்டு படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள சூழலில் பிரிட்டீஷ் படையினர் உடனடியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவேண்டும் என பெரும்பாலான பிரிட்டன் பொதுமக்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் தலிபான்களின் தாக்குதலில் பிரிட்டனைச்சார்ந்த படைவீரகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் நடத்திவரும் தலிபான்களுக்கு எதிரான போரைப்பற்றி பிரிட்டன் பொதுமக்களிடம் சர்வதேச அளவிலான இரண்டு நிறுவனங்கள் கருத்துக்களை கேட்டது.கனடாவைச்சார்ந்த ஆங்கஸ் ரீட் ரிசர்ச் சென்டர் நடத்திய கணிப்பில் 53 சதவீத பிரிட்டீஷ் மக்கள் தங்கள் நாடு ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,"ஏன் பிரிட்டன் ஒரு இறையாண்மையுடைய நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதைப்பற்றி எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை".என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவைச்சார்ந்த பீவ் ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வில் 48 சதவீத பிரிட்டீஷ் மக்கள் பிரிட்டன் உடனே ஆப்கானிலிருந்து வாபஸ் பெறவேண்டும் எனக்கூறியுள்ளனர். 46 சதவீதம்பேர் பிரிட்டன் தொடர்ந்து ராணுவத்தை ஆப்கானில் நிறுத்த ஆதரவுத்தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 51 சதவீத பிரிட்டீஷ் மக்கள் மேலும் கூடுதல் ராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டீஷ் பாதுகாப்புச்செயலர் பாப் ஐன்ஸ்வர்த் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில் ஆப்கானில் இறந்துப்போன பிரிட்டன் படையினருக்கு பதிலாக மேலும் 125 பிரிட்டீஷ் ராணுவப்படையினர் ஆப்கானுக்கு அனுப்பப்படுவர் என்றார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப்படையினர் ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை 186 பிரிட்டீஷ் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டீஷ் படையினர் எண்ணிக்கை 9 ஆயிரம். இதில் பெரும்பாலான ராணுவத்தினர் ஆப்கானின் பிரச்சனைக்குரிய‌ தெற்கு மகாணமான ஹெல்மாந்தில் நடைபெறும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source:Press Tv

நியூஸ் கட்டிங்ஸ் - உதயமாகிறது இன்னொரு கட்சி

0 கருத்துகள்

ஈரானில் மீண்டும் விமான விபத்து : 17 பேர் பலி!

0 கருத்துகள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மாஷாத் சென்ற விமானம் தரை இறங்கும் போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானிலிருந்து 600 மைல் தொலைவில் உள்ள மாஷாத் நகருக்கு 153 பேருடன் சென்ற (AIRIA AIR)
விமானம் மாஷாத் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது மாற்று ஓடுபாதையில் இறங்கியது. குறைந்த தூரமே உடைய இந்த பாதையில் வேகமாகச் சென்ற இந்த விமானம் வேகத்தைக் குறைத்து நிற்க முடியாமல் சுற்றுச் சுவரில் மோதியது. வேகமாக வந்து மோதியதால் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்தது.
இதில் விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஈரானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 168 பேரும் பலியானார்கள். இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குள் மற்றொரு விமான விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
source: Dawn,presstv

பி.ஜே.பி 199o -->1993 !-->2004 !!-->2009 !!!-->2012!!!!! கார்ட்டூன்

1 கருத்துகள்

source: தி ஹிந்து

குஜராத் இனப்படுகொலை:மோடியை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்க தடை விதிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடியை சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி) விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உயிருடன் வைத்துக் கொளுத்தப்பட்டார். இதுதொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்று அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு்ந்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்றம், இதுகுறித்து எஸ்.ஐ.டி. விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காலு மலிவாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி மனு செய்திருந்தார்.
தனது மனுவில், உச்சநீதிமன்றம் பொதுவான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. மோடியை விசாரிக்க வேண்டும் என அது குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும், எஸ்.ஐ.டிக்கு முதல்வர் மோடியை விசாரிக்கவோ அல்லது விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பவோ அதிகாரம் இல்லை என்று கோரியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மோடியை விசாரிக்க எஸ்.ஐ.டிக்குத் தடை இல்லை என்று அது உத்தரவிட்டுள்ளது.
thatstamil

24/7/09

அப்துல் கலாமைசோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை -அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு

1 கருத்துகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை என்று அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு(Transportation Security Administration-TSA) கூறியுள்ளது.
இந்த அமைப்பு காண்டினென்டல் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், யார் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இருந்திருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை. அதைத் தான் அவர்கள் செய்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை.முக்கிய தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரை சோதனையிடக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒரு பட்டியல் தந்துள்ளதாக அறிகிறோம். ஆனால், அமெரிக்காவிலோ, வேறு நாடுகளிலோ பயணிக்கும் அனைத்து நாட்டு விஐபிக்கள், முன்னாள் தலைவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் சபர்வால் படுகொலையின் முக்கிய சாட்சி படுகொலை

0 கருத்துகள்
பேராசிரியர் சபர்வால் படுகொலையில் முக்கிய சாட்சியான பர்மீந்தர் சிங் என்பவர் இன்று காலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனால் சபர்வால் கொலை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உஜ்ஜைன் நகரில் உள்ள மாதவ் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் சபர்வால். இவர் கடந்த 2006ம் ஆண்டு பாஜகவுடன் தொடர்புடைய அகில பாரதி வித்யார்த்தி பரிஷத்(ABVP) மாணவர்களால், படுகொலை செய்யப்பட்டார்.கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதை விட பரபரப்பாக இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நிரபராதிகள் என்று கூறி சமீபத்தில் நாக்பூர் கோர்ட் விடுதலை செய்து விட்டது.
இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில், ஜூலை 22ம் தேதி இரவு, சபர்வால் கொலைக்குக் கண்டனம் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்த சபர்வாலின் மகன் ஹிமன்சு சபர்வால் அழைப்பு விடுத்திருந்தார்.இதற்காக அவரும், அவரது கணக்காளரான பர்மீந்தர் சிங்கும் பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் பர்மீந்தர் சிங் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தி அவரைக் கொன்றுள்ளனர்.தனது தந்தையைக் கொன்ற கும்பல்தான் பர்மீந்தரையும் கொன்று விட்டதாக ஹிமன்சு கூறியுள்ளார்.இருப்பினும் பர்மீந்தருடன் கடைசியாக இருந்தவர் ஹிமன்சு என்பதால் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சபர்வால் கொலை வழக்கில் பர்மீந்தர் சிங்கும் ஒரு சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஆதாரங்களை ஒப்படைத்ததா? இந்தியா மறுப்பு

0 கருத்துகள்
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறையான "ரா"வின் பங்கைகுறித்து எகிப்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது பாக்.பிரதமர் ஆதாரங்களை ஒப்படைத்ததாக பாக்.பத்திரிகையான டான் வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என பிரதமரின் அலுவலக அதிகாரிகள் கூறினர்.
இதுபற்றி குறிப்பிட்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், "இந்த செய்தி ஆதாரமற்றது. பத்திரிகைகளில் வரும் தகவல்களின் அடிப்படையில் பதில் கூறுவது அறிவுடைமையல்ல. பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்க இந்தியா விரும்பவில்லை"என்றார் அவர். இந்தியாவுக்கு ஆதாரங்களை அளித்தது பற்றிய செய்தியை மறுக்கவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரில்லை. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தியாளர் அப்துல் பாஸித் கூறுகையில், "ரகசிய விசாரணைபிரிவோடு சமபந்தப்பட்ட காரியமானதால் இதைக்குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை". என்றார். செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : வயலார் ரவி

0 கருத்துகள்
புதுடெல்லி : வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு இந்தியாவில் உயர் கல்வி அளிக்கவும், உயர் கல்விக்கான இடமாக இந்தியாவை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் 2006-07ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டடது. இத்திட்டத்தின் கீழ் பொறியியல், தொழில்நுட்பம், கலை, வணிகம், மேலாண்மை, ஹோட்டல் நிர்வாகம், விவசாயம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை படிப்புகளுக்கு, அதிகபட்சமாக ஆண்டுதோறும் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை சுமார் 100 வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எட்சில் இந்தியா லிமிடட் நிறுவனம் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2006-07-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 60 பேரும், 2007-08-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 79 பேரும், 2008-09-ம் ஆண்டில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் 67 பேரும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

0 கருத்துகள்
புதுடெல்லி:ஜாமிஆ நகர் பாட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டரில் டெல்லி காவல்துறையினரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கிய தேசிய மனித உரிமை கமிஷனுக்கெதிராக முஸ்லிம் எம்பிக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் முஸ்லிம் எம்.பிக்களான ஜனதாதளத்தைச்சார்ந்த இஜாஸ் அலி, ராஷ்ட்ரிய லோக்தளத்தைச் சார்ந்த மஹ்மூத் மதனி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதேவேளையில் உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக்குழுவைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆக்டிவ் நவ் ஃபார் ஹார்மனி அன்ட் டெமோக்ரஸி என்ற அமைப்பின் தலைமையில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

23/7/09

பாகிஸ்தானில் நடந்த தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு:ஆதார‌ங்க‌ளை இந்தியாவிட‌ம் ஒப்ப‌டைத்த‌தாக‌ பாக்.ப‌த்திரிகை டான் த‌க‌வ‌ல்

0 கருத்துகள்
பாகிஸ்தானில் ந‌டைபெற்ற‌ தீவிர‌தாக்குத‌ல்க‌ளில் இந்திய‌ உள‌வுத்துறையான "ரா" வுக்கு தொட‌ர்பு ப‌ற்றிய‌ ஆதார‌ங்க‌ளை இந்தியாவிட‌ம் ஒப்ப‌டைத்த‌தாக‌ பாகிஸ்தானிலிருந்து வெளிவ‌ரும் "டான்" ப‌த்திரிகை செய்தி வெளியிட்டுள்ள‌து. இல‌ங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல், மான‌வான் காவ‌ல் நிலைய‌த்தாக்குத‌ல் உட்ப‌ட‌ பாகிஸ்தான் ம‌ண்ணில் ந‌டைபெற்ற‌ தீவிரவாத‌தாக்குத‌ல்க‌ளில் "ரா"வுடைய‌ ப‌ங்கினைப்ப‌ற்றிய‌ ஆதார‌ங்க‌ளைத்தான் எகிப்து நாட்டின் ஸாம் அல் ஷைக் ந‌க‌ரில் ந‌டைபெற்ற‌ உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் பிர‌த‌ம‌ர் முஹ‌ம்ம‌து ர‌ஸா கிலானி இந்திய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கிட‌ம் அளித்த‌தாக‌ டான் ப‌த்திரிகை கூறுகிற‌து.
இதே ஆதார‌ங்கள் அமெரிக்காவுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. பாகிஸ்தான் அதிகாரிக‌ள் ர‌க‌சிய‌மாக‌ பாதுகாத்த‌ ஆதார‌ங்க‌ளைத்தான் இந்தியாவுக்கு வ‌ழ‌ங்கியுள்ள‌தாக‌ அந்த‌ ப‌த்திரிகை கூறுகிற‌து. பாகிஸ்தானில் தீவிரவாதத்தாக்குதல் நடத்துவதற்கு ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி முகாம்களை நடத்துவதுப்பற்றிய விபரங்கள், தீவிரவாதச்செயல்களுக்கு இந்தியா பணம் அளிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியனவும் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்துள்ளதாக டான் தெரிவிக்கிறது.
குற்ற‌வாளிக‌ளுட‌ன் த‌ற்பொழுதும் "ரா" தொட‌ர்பு வைத்திருக்கிற‌து."ரா" அதிகாரிக‌ளும் தாக்குத‌லில் ஈடுப‌ட்டோரும் இடையே ந‌ட‌த்திய‌ உரையாட‌லும் ஆதார‌ங்க‌ளுட‌ன் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இல‌ங்கை அணிக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ தாக்குத‌லில் இந்தியாவிலிலுள்ள‌ வெடிப்பொருள்க‌ளும், ஆயுத‌ங்க‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்கான‌ ஆதார‌மும் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்தியாவிலிருந்து ச‌ட்ட‌விரோதமாக‌ பாகிஸ்தானுக்கு வ‌ந்து வ‌ஸீரிஸ்தான் வ‌ழியாக‌ லாஹூருக்கு குற்ற‌வாளிக‌ளுட‌ன் வ‌ந்தவர்க‌ளின் பெய‌ர்க‌ளும் ஆதார‌ங்க‌ளில் உள்ள‌து. ப‌லூசிஸ்தான் கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளான‌ பிராம்தாக் ப‌க்தி, புர்ஹான், ஷேர்ஹான் ஆகியோருட‌ன் இந்தியாவுக்கு இருக்கும் தொட‌ர்புக‌ள், இந்திய‌ ஏஜ‌ன்டுக‌ளுட‌ன் அவ‌ர்க‌ளின் ச‌ந்திப்புப்ப‌ற்றிய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள், ப‌க்தி இந்திய‌ உள‌வுத்துறை அதிகாரிக‌ளை ச‌ந்திக்க‌ இந்தியாவுக்கு சென்ற‌ விப‌ர‌ங்க‌ள், ப‌லூசிஸ்தான் கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் குறிப்பாக‌ ப‌க்தி கோத்திர‌த்தைச்சார்ந்த‌வ‌ர்க‌ள் காந்த‌காரில் இந்தியாவின் ஆத‌ர‌வோடு ப‌யிற்சி மேற்கொள்ளும் முகாம்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு இந்தியாவிலிருந்து ஆயுத‌ங்க‌ளும் போர் உப‌க‌ர‌ண‌ங்க‌ளும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ங்க‌ள் ஆகிய‌வையும் இந்த‌ ஆதார‌ங்க‌ளில் உட்ப‌டும் என‌ டான் கூறுகிற‌து. இந்த‌ ஆதார‌ங்க‌ளை ஆய்வுச்செய்வ‌தாக‌வும், தேவையான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்க்கொள்ள‌ப்ப‌டும் என்று ம‌ன்மோக‌ன்சிங் கிலானிக்கு உறுதிய‌ளித்த‌தாக‌வும் டான் கூறுகிற‌து.
எந்த‌ நாட்டின் இறையாண்மை காரிய‌ங்க‌ளில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிற‌து என்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கிய‌மான‌து என்று ம‌ன்மோக‌ன்சிங் கூறிய‌தாக‌வும் டான் மேலும் கூறுகிற‌து. கிலானி, ம‌ன்மோக‌ன் சிங் ச‌ந்திப்பின்போது இல‌ங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் செய்த‌பொழுது ந‌டைபெற்ற‌ தாக்குத‌லை ப்ப‌ற்றி பேசிய‌தாக‌ பாகிஸ்தான் வெளியுற‌வுத்துறை செய்தியாளர் அப்துல்பாஸித் தெரிவித்த‌தாகவும் டான் குறிப்பிடுகிற‌து.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

சுதந்திர இந்தியாவில் மறைமுக சித்திரவதை சிறைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அசாவுத்தீன் உவைசி

0 கருத்துகள்

கடந்தவாரம் மீடியாக்கள் மூலம் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்திய மறைமுக சித்ரவதை சிறைச்சாலைகளைப் பற்றியும் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுவது பற்றியும் மக்களவையில் கேள்வி எழுப்பாததைப்பற்றி அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி யுமான அசாவுத்தீன் உவைசி யிடம் கேட்கையில்; தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து ஆதிக்க அமெரிக்காவில் இருக்கும் குவான்டனமோ மறைமுக சிரைச்சாலையில் நடக்கும் சித்ரவதையைப் போன்று சுதந்திர இந்தியாவில் நடக்கும் இந்த மாபாதக செயலை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அது மட்டும் இல்லாமல் அது போன்ற சிறைச்சாலைகளை மூடும்படி இந்திய அரசை வற்புறுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹைதராபாதில் அப்பாவி நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவது பற்றி கேட்டதற்கு, ஆம் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போன்ற தொடரும் கொடுமைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் வலியுறுத்துவேன் என பதில் அளித்தார்.

source: Twocircles

லிபரான் விசாரணை அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர்

0 கருத்துகள்
லிபரான் விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரிக்கை அமைக்கப்பட்ட லிபரன் விசாரணைக் குழு அண்மையில் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிதம்பரம், தான் இந்த அறிக்கையின் நான்கு தொகுதிகளைப் படித்துவிட்டதாகவும், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய சட்டம் அனுமதித்துள்ள ஆறு மாதத்திற்குள் இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த அறிக்கையின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

22/7/09

அயோத்தி நிலம்-6 ஆவணங்களை மீட்ட சிபிஐ

0 கருத்துகள்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக காணாமல் போன 6 ஆவணங்களை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. மேலும் 23 ஆவணங்களைத் தேடி வருகிறது.சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் 2000ம் ஆண்டில் காணாமல் போயின. மொத்தம் 29 ஆவணங்கள் காணாமல் போனயின.இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு அதிகாரி சுபாஸ்ஹான் சாத், டெல்லிககு அறிக்கை எடுத்துச் செல்லும்போது ரயில் விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் சாத் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு கோரினார் முதல்வர் மாயாவதி.இதைத் தொடர்ந்து விசாரணையில் குதித்த சிபிஐ, 6 ஆவணங்கள், பழைய ஆவணங்கள் பாதுகாக்கும் இடத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டுள்ளது. இவை தேவையில்லாதவை எனக் கருதப்பட்டு பழைய ஆவண காப்பகத்தில் போடப்பட்டிருந்தன.

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி

0 கருத்துகள்
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ஜுனாகட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் காணாமல் போயிருந்த காங்கிரஸ் கட்சி மிக அதிக இடங்களைக் கைப்பற்றி மாநகராட்சியைப் பிடித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 51 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் 26 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 21 இடங்களை பாஜகவும், 3 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்திலும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்காத நிலையில் இந்தத் தேர்தலை பாஜக கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது. நரேந்திர மோடியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.2004ம் ஆண்டு நட்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக 35 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.குஜராத்தின் முக்கிய நகர்ப் பகுதியான இங்கு நரேந்திர மோடிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போது அங்கு பெரும் சரிவு ஏற்பட்டு்ள்ளது.
source: Thatstamil