30/7/09

பத்தாயிரம் உய்கூர் முஸ்லிம்கள் ஒரே இரவில் காணாமல் போனதாக ராபிஆ கதீர் குற்றச்சாற்று.

0 கருத்துகள்
டோக்கியோ: ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்கு துருக்கிஸ்தானில் சமீபத்தில் நடந்த இனக்கலவரத்தில் ஒரே இரவில் 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போனதாக உலக உய்கூர் காங்கிரஸ் தலைவர் ராபிஆ கதீர் குற்றஞ்சாட்டினார்.
ஜப்பானில் சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ள ரபிஆ கதீர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது குறிப்பிட்ட அவர் ஒரே இரவில் 10 ஆயிரம் உய்கூர் முஸ்லிம்கள் எவ்வாறு காணாமல் போனார்கள்?, மரணித்திருந்தால் அவர்களுடைய உடல்கள் எங்கே?‍ ரபீஆ கேள்வி எழுப்பினார். உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் மின்சாரத்தை தடைச்செய்தபிறகு ஒவ்வொரு நபராக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதாக அப்பகுதியிலிருந்து தனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக ரபீஆ கூறினார். ஜூலை 5 ஆம் தேதி ஆரம்பித்த கலவரத்திற்கு காரணம் அமெரிக்காவில் வசிக்கும் ரபீஆ தான் என சீனா குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த ரபீஆ அதற்கான ஆதாரங்களை உலக சமூகத்திற்கு முன் வைக்க சீனா தயாரா? என்று சவால் எழுப்பினார். அமைதியாக நடந்த போராட்டத்தை கலவரமாக மாற்றியது சீன அதிகாரிகள் என்று ரபீஆ குற்றம் சுமத்தினார். அதே நேரத்தில் ரபீஆவின் ஜப்பான் பயணம் சீனாவுடனான தங்களுடைய உறவை பாதிக்காது என்று ஜப்பான் கூறியுள்ளது. ரபீஆவை அழைத்தது ஒரு தனியார் குடியுரிமை அமைப்பு என்றும் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும் ஜப்பான் அரசின் செய்தித்தொடர்பாளர் தகியோ கவாமுரா தெரிவித்தார். ஏற்கனவே ரபீஆ கதீரின் ஜப்பான் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பை ஜப்பானிடம் தெரிவித்திருந்தது.

வீடியோவைக் காண இங்கு க்ளிக் செய்யவும்.

செய்தி : தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.