30/7/09

போரினால் நிர்மூலமாக்கப்பட்ட காஸ்ஸாவில் நிவாரண உதவிகளுடன் ஈரான் அமைப்பு

0 கருத்துகள்
இஸ்ரேலின் தாக்குதலினாலும் தடையினாலும் சிதைந்துப்போன காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருள்களுடன் ஈரானின் ஜீவகாருண்ய அமைப்பு வந்தடைந்தது.
ஃபலஸ்தீனின் மனிதநேய அமைப்பான அன்ஸார் சாரிட்டி இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து நிவாரணபணியாற்றுவதற்காகத்தான் ஈரானின் "உயிர்தியாகிகள் பவுண்டேசன்" என்ற இந்த அமைப்பு காஸ்ஸா வந்துள்ளது. காஸ்ஸாவின் புனர் நிர்மாணத்திற்காக பல்வேறு நாடுகள் 500 கோடி டாலர் தருவதாக வாக்களித்தபோதும் கட்டிட நிர்மாணப்பணிக்கான பொருள்களை கொண்டுவருவதற்கு இஸ்ரேல் ஏற்படுத்திய தடையினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் துணியினால் கட்டப்பட்ட கூடாரங்களிலும் திறந்த வெளிகளிலும்தான் வசிக்கின்றனர். தகர்ந்துபோன‌ வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு 8 ஆயிரம் டாலர் செலவாகும் என்ற் ஈரானிய மனிதநேய அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர். இஸ்ரேலின் தடையையும் மீறி இதுவரை 102 குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைந்துள்ளன. ஈரானை நிரந்தரமாக விமர்சிக்கும் எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளால் முடியாத உதவிகளைத்தான் ஈரானின் மனிதநேய அமைப்பு தங்களுக்காக செய்ததாக காஸ்ஸா மக்கள் கூறுகின்றார்கள். மேலும் ஈரானின் இந்த உதவி மேற்கண்ட நாடுகளுக்கு முன்மாதிரி என்றும் அவர்கள் கூறினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.