28/7/09

இஸ்ரேலில் அமெரிக்காவுக்கு எதிரான பேரணியில் ஒபாமா இனவெறியன் என்ற கோஷம்

0 கருத்துகள்
ஜெருச‌ல‌த்தில் இஸ்ரேலிய‌ வ‌ல‌துசாரிக‌ள் அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமாவுக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ பேர‌ணியை ந‌ட‌த்தின‌ர். இதில் 1500 பேர்க‌ள் க‌ல‌ந்துக்கொண்ட‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.
ச‌மீப‌த்தில் ஒபாமா பேட்டிய‌ளிக்கையில் இஸ்ரேல் கிழ‌க்கு ஜெருச‌ல‌த்தில் ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பாக‌ க‌ட்டிவ‌ரும் குடியிருப்புக‌ளுக்கான‌ ப‌ணியை உட‌னே நிறுத்த‌வேண்டும் என‌க்கூறியிருந்தார். இத‌னைக்க‌ண்டித்துதான் இந்த‌பேர‌ணி ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ப்பேர‌ணிக்கு வ‌ல‌துசாரிசிந்த‌னையுடைய‌ பிர‌த‌ம‌ர் பெஞ்ச‌மின் நெத‌ன்யாகுவின் லிகுட் க‌ட்சி, நெஸ்ஸ‌ட்(இஸ்ரேலிய‌ பாராளும‌ன்ற‌ம்)உறுப்பின‌ர்க‌ள், ர‌ப்பிக‌ள்(யூத‌ ம‌த‌குருக்க‌ள்)ம‌ற்றும் யூத‌ பொதும‌க்களும் ஆத‌ர‌வு தெரிவித்திருந்த‌ன‌ர். இந்த‌ பேர‌ணியை ப‌ல்வேறு யூத‌ வ‌ல‌துசாரி அமைப்புக‌ள் குறிப்பாக‌ மேற்குக்க‌ரை யூத‌ குடியிருப்பின‌ர் ,ஈஸா க‌வுன்சில் ஆஃப் ஜீவிஸ் க‌ம்யூனிடி உள்ளிட்ட‌ சியோனிஷ‌ வெறிப்பிடித்த‌ அமைப்புக‌ள் ஏற்பா‌டுச்செய்திருந்த‌ன‌.
இந்த‌ பேர‌ணியில் க‌ல‌ந்துக்கொண்ட‌ ர‌ப்பியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எலீசர் வால்டுமேன் ஒபாமாவை நேர‌டியாக‌ தாக்கிப்பேசினார். அவ‌ர் பேசுகையில், "நீ ஒரு இன‌வெறிய‌ன், எவ்வ‌ள‌வு தைரிய‌ம் உன‌க்கு எங்க‌ளை இந்த இடத்தில் வாழக்கூடாது என்று சொல்ல. இன்னும் சில காலங்களில் எங்களது வரலாறை பூர்த்திச்செய்வோம்". என்று கூறினார். பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கோஷமிடுகையில், "எங்களுக்கு தேவை சுதந்திரம்,அமெரிக்காவின் சர்வாதிகாரம் அல்ல"என்று முழக்கமிட்டனர்.
இஸ்ரேல் முன்பு கட்டுமானத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் லிகுட் கட்சியும் வலதுசாரிகளும் இதற்கு மறுத்துவருகின்றனர்.
Source:Press tv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.