29/7/09

தீவிரவாத தடுப்பு சட்டம்-ஜனாதிபதி யோசனையை நிராகரித்த மோடி

0 கருத்துகள்
அகமதாபாத்: குஜராத் மாநில திட்டமிட்ட குற்ற தடுப்புச் சட்ட மசோதாவில் 3 திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கூறி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட, குஜராத் மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்ட மசோதாவை குஜராத் மாநில சட்டசபை இன்று மீண்டும் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்ட மசோதாவில் திட்டமிட்ட குற்றம் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் தீவிரவாதம் என்ற வார்த்தையும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை முன்பு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது குஜராத் அரசு. ஆனால் அதில் மத்திய அரசின் ஆலோசனைப்படி 3 திருத்தங்களை கூறியிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இருப்பினும் அதை ஏற்க மறுத்த குஜராத் அரசு அதே சட்ட மசோதாவை மீண்டும் இன்று நிறைவேற்றியுள்ளது.
மேலும், இந்த சட்டத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்த்ததற்குக் காரணம், குஜராத்தில் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் என்று தனியாக ஏதும் இல்லாததே என்று குஜராத் அரசு கூறுகிறது.
முதலில் இந்த சட்ட மசோதாவை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடா) நாடு முழுவதும் அமலில் இருந்தது. எனவே அப்போது குஜராத் சட்ட மசோதாவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி இந்த சட்டத்தை குஜராத் அரசு இயற்றியது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து மீண்டும் இந்த சட்ட மசோதாவை குஜராத் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் 2வது முறையும் இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை கூறியதால் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
3 திருத்தங்களை மேற்கொண்டால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொளஅவதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த மசோதாவில், ஒரு போலீஸ் அதிகாகரி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் செல்லும் என்ற அம்சத்தை ஏற்கவே முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மேலும், அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ற அம்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் சிதம்பரம் கூறியிருந்தார். இதேபோல இன்னொரு திருத்தத்தையும் மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் இவை எதையும் செய்யாமலேயே அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளது குஜராத் அரசு.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.