29/7/09

இஸ்ரேலிய சிறையில் மிக மோசமாக நடத்தப்படும் ஃபலஸ்தீனர்கள்

0 கருத்துகள்
இஸ்ரேலிலுள்ள அல் நகாப் என்ற பாலைவனச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் தாங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மிக மோசமாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு நோயுற்றால் கூட சிகிட்சை அளிக்க இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டால் கூட அங்குள்ள மருத்துவர்கள் எந்த நோயும் இல்லை என்று பொய் சான்றிதழ் அளித்து மீண்டும் நோயுற்றவரை சிறைக்கே அனுப்புகின்றனர். ஃபலஸ்தீனிய சிறைக்கைதிகள் சங்கம் என்ற அமைப்பின் வழக்கறிஞர் ஒருவர் இந்த சிறைக்கைதிகளை சந்தித்தபோது பலரும் தாங்கள் இஸ்ரேலிய சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினர். பி.பி.எஸ் இன் அட்டர்னி கூறும் அறிக்கையில் மன்சூர் என்ற ஃபலஸ்தீனிய கைதி ஒருவர் சமீபத்தில் காலைநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டபொழுது நிலைகுலைந்து விழுந்துவிட்டார். உடனே சிறை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அவரை பரிசோதித்த இஸ்ரேலிய டாக்டர் மன்சூர் நலமாக இருப்பதாக பொய் சான்றிதழ் அளித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக சிறையிலிருக்கும் மன்சூருக்கு ஒரு காது கேட்காது. மேலும் இஸோம்னியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல் ஒவ்வாமை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு உடனடியாக மருத்துவ நிபுணரிடம் சிகிட்சை அளிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பி.பி.எஸ் அட்டர்னி மேலும் கூறுகையில் 27 ஃபலஸ்தீன கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. ரெட்கிராஸ் இந்த கைதிகளின் பிரச்சனைகளைப்பற்றி கூறும்பொழுது அவ்வமைப்பு இதனை அலட்சியப்படுத்தியது. மேலும் சிறை அதிகாரிகள் தங்கள் செல்வாக்கை உபயோகித்து சிறைக்கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிப்புச்செய்கின்றனர். சிறைக்கைதிகளை நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு சிறைக்கோ அழைத்துச்செல்லும் போது ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய வைத்து அலைகழிக்கின்றனர். இவ்வாறு அவ‌ர் கூறினார்.

இஸ்ரேலின் ப‌ல்வேறு சிறைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் அநியாய‌மான‌ முறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

press tv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.