23/7/09

பாகிஸ்தானில் நடந்த தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு:ஆதார‌ங்க‌ளை இந்தியாவிட‌ம் ஒப்ப‌டைத்த‌தாக‌ பாக்.ப‌த்திரிகை டான் த‌க‌வ‌ல்

0 கருத்துகள்
பாகிஸ்தானில் ந‌டைபெற்ற‌ தீவிர‌தாக்குத‌ல்க‌ளில் இந்திய‌ உள‌வுத்துறையான "ரா" வுக்கு தொட‌ர்பு ப‌ற்றிய‌ ஆதார‌ங்க‌ளை இந்தியாவிட‌ம் ஒப்ப‌டைத்த‌தாக‌ பாகிஸ்தானிலிருந்து வெளிவ‌ரும் "டான்" ப‌த்திரிகை செய்தி வெளியிட்டுள்ள‌து. இல‌ங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல், மான‌வான் காவ‌ல் நிலைய‌த்தாக்குத‌ல் உட்ப‌ட‌ பாகிஸ்தான் ம‌ண்ணில் ந‌டைபெற்ற‌ தீவிரவாத‌தாக்குத‌ல்க‌ளில் "ரா"வுடைய‌ ப‌ங்கினைப்ப‌ற்றிய‌ ஆதார‌ங்க‌ளைத்தான் எகிப்து நாட்டின் ஸாம் அல் ஷைக் ந‌க‌ரில் ந‌டைபெற்ற‌ உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் பிர‌த‌ம‌ர் முஹ‌ம்ம‌து ர‌ஸா கிலானி இந்திய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கிட‌ம் அளித்த‌தாக‌ டான் ப‌த்திரிகை கூறுகிற‌து.
இதே ஆதார‌ங்கள் அமெரிக்காவுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. பாகிஸ்தான் அதிகாரிக‌ள் ர‌க‌சிய‌மாக‌ பாதுகாத்த‌ ஆதார‌ங்க‌ளைத்தான் இந்தியாவுக்கு வ‌ழ‌ங்கியுள்ள‌தாக‌ அந்த‌ ப‌த்திரிகை கூறுகிற‌து. பாகிஸ்தானில் தீவிரவாதத்தாக்குதல் நடத்துவதற்கு ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி முகாம்களை நடத்துவதுப்பற்றிய விபரங்கள், தீவிரவாதச்செயல்களுக்கு இந்தியா பணம் அளிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியனவும் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்துள்ளதாக டான் தெரிவிக்கிறது.
குற்ற‌வாளிக‌ளுட‌ன் த‌ற்பொழுதும் "ரா" தொட‌ர்பு வைத்திருக்கிற‌து."ரா" அதிகாரிக‌ளும் தாக்குத‌லில் ஈடுப‌ட்டோரும் இடையே ந‌ட‌த்திய‌ உரையாட‌லும் ஆதார‌ங்க‌ளுட‌ன் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இல‌ங்கை அணிக்கெதிராக‌ ந‌ட‌ந்த‌ தாக்குத‌லில் இந்தியாவிலிலுள்ள‌ வெடிப்பொருள்க‌ளும், ஆயுத‌ங்க‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்கான‌ ஆதார‌மும் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்தியாவிலிருந்து ச‌ட்ட‌விரோதமாக‌ பாகிஸ்தானுக்கு வ‌ந்து வ‌ஸீரிஸ்தான் வ‌ழியாக‌ லாஹூருக்கு குற்ற‌வாளிக‌ளுட‌ன் வ‌ந்தவர்க‌ளின் பெய‌ர்க‌ளும் ஆதார‌ங்க‌ளில் உள்ள‌து. ப‌லூசிஸ்தான் கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளான‌ பிராம்தாக் ப‌க்தி, புர்ஹான், ஷேர்ஹான் ஆகியோருட‌ன் இந்தியாவுக்கு இருக்கும் தொட‌ர்புக‌ள், இந்திய‌ ஏஜ‌ன்டுக‌ளுட‌ன் அவ‌ர்க‌ளின் ச‌ந்திப்புப்ப‌ற்றிய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள், ப‌க்தி இந்திய‌ உள‌வுத்துறை அதிகாரிக‌ளை ச‌ந்திக்க‌ இந்தியாவுக்கு சென்ற‌ விப‌ர‌ங்க‌ள், ப‌லூசிஸ்தான் கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் குறிப்பாக‌ ப‌க்தி கோத்திர‌த்தைச்சார்ந்த‌வ‌ர்க‌ள் காந்த‌காரில் இந்தியாவின் ஆத‌ர‌வோடு ப‌யிற்சி மேற்கொள்ளும் முகாம்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு இந்தியாவிலிருந்து ஆயுத‌ங்க‌ளும் போர் உப‌க‌ர‌ண‌ங்க‌ளும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ங்க‌ள் ஆகிய‌வையும் இந்த‌ ஆதார‌ங்க‌ளில் உட்ப‌டும் என‌ டான் கூறுகிற‌து. இந்த‌ ஆதார‌ங்க‌ளை ஆய்வுச்செய்வ‌தாக‌வும், தேவையான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்க்கொள்ள‌ப்ப‌டும் என்று ம‌ன்மோக‌ன்சிங் கிலானிக்கு உறுதிய‌ளித்த‌தாக‌வும் டான் கூறுகிற‌து.
எந்த‌ நாட்டின் இறையாண்மை காரிய‌ங்க‌ளில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிற‌து என்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கிய‌மான‌து என்று ம‌ன்மோக‌ன்சிங் கூறிய‌தாக‌வும் டான் மேலும் கூறுகிற‌து. கிலானி, ம‌ன்மோக‌ன் சிங் ச‌ந்திப்பின்போது இல‌ங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் செய்த‌பொழுது ந‌டைபெற்ற‌ தாக்குத‌லை ப்ப‌ற்றி பேசிய‌தாக‌ பாகிஸ்தான் வெளியுற‌வுத்துறை செய்தியாளர் அப்துல்பாஸித் தெரிவித்த‌தாகவும் டான் குறிப்பிடுகிற‌து.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.