24/7/09

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : வயலார் ரவி

0 கருத்துகள்
புதுடெல்லி : வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு இந்தியாவில் உயர் கல்வி அளிக்கவும், உயர் கல்விக்கான இடமாக இந்தியாவை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் 2006-07ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டடது. இத்திட்டத்தின் கீழ் பொறியியல், தொழில்நுட்பம், கலை, வணிகம், மேலாண்மை, ஹோட்டல் நிர்வாகம், விவசாயம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை படிப்புகளுக்கு, அதிகபட்சமாக ஆண்டுதோறும் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை சுமார் 100 வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எட்சில் இந்தியா லிமிடட் நிறுவனம் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2006-07-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 60 பேரும், 2007-08-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 79 பேரும், 2008-09-ம் ஆண்டில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் 67 பேரும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.