24/7/09

பாகிஸ்தான் ஆதாரங்களை ஒப்படைத்ததா? இந்தியா மறுப்பு

0 கருத்துகள்
பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத்தாக்குதல்களில் இந்திய உளவுத்துறையான "ரா"வின் பங்கைகுறித்து எகிப்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது பாக்.பிரதமர் ஆதாரங்களை ஒப்படைத்ததாக பாக்.பத்திரிகையான டான் வெளியிட்ட செய்தி ஆதாரமற்றது என பிரதமரின் அலுவலக அதிகாரிகள் கூறினர்.
இதுபற்றி குறிப்பிட்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், "இந்த செய்தி ஆதாரமற்றது. பத்திரிகைகளில் வரும் தகவல்களின் அடிப்படையில் பதில் கூறுவது அறிவுடைமையல்ல. பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்க இந்தியா விரும்பவில்லை"என்றார் அவர். இந்தியாவுக்கு ஆதாரங்களை அளித்தது பற்றிய செய்தியை மறுக்கவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ பாகிஸ்தான் அதிகாரிகள் தயாரில்லை. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தியாளர் அப்துல் பாஸித் கூறுகையில், "ரகசிய விசாரணைபிரிவோடு சமபந்தப்பட்ட காரியமானதால் இதைக்குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை". என்றார். செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.