24/7/09

பேராசிரியர் சபர்வால் படுகொலையின் முக்கிய சாட்சி படுகொலை

0 கருத்துகள்
பேராசிரியர் சபர்வால் படுகொலையில் முக்கிய சாட்சியான பர்மீந்தர் சிங் என்பவர் இன்று காலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனால் சபர்வால் கொலை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உஜ்ஜைன் நகரில் உள்ள மாதவ் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் சபர்வால். இவர் கடந்த 2006ம் ஆண்டு பாஜகவுடன் தொடர்புடைய அகில பாரதி வித்யார்த்தி பரிஷத்(ABVP) மாணவர்களால், படுகொலை செய்யப்பட்டார்.கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதை விட பரபரப்பாக இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நிரபராதிகள் என்று கூறி சமீபத்தில் நாக்பூர் கோர்ட் விடுதலை செய்து விட்டது.
இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில், ஜூலை 22ம் தேதி இரவு, சபர்வால் கொலைக்குக் கண்டனம் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்த சபர்வாலின் மகன் ஹிமன்சு சபர்வால் அழைப்பு விடுத்திருந்தார்.இதற்காக அவரும், அவரது கணக்காளரான பர்மீந்தர் சிங்கும் பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் பர்மீந்தர் சிங் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தி அவரைக் கொன்றுள்ளனர்.தனது தந்தையைக் கொன்ற கும்பல்தான் பர்மீந்தரையும் கொன்று விட்டதாக ஹிமன்சு கூறியுள்ளார்.இருப்பினும் பர்மீந்தருடன் கடைசியாக இருந்தவர் ஹிமன்சு என்பதால் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சபர்வால் கொலை வழக்கில் பர்மீந்தர் சிங்கும் ஒரு சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.