24/7/09

அப்துல் கலாமைசோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை -அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு

1 கருத்துகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சோதனையிட்டதில் தவறு ஏதும் இல்லை என்று அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு(Transportation Security Administration-TSA) கூறியுள்ளது.
இந்த அமைப்பு காண்டினென்டல் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், யார் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இருந்திருந்தாலும் அவர்களை சோதனையிட வேண்டியது விமான நிறுவனத்தின் கடமை. அதைத் தான் அவர்கள் செய்துள்ளனர். இதில் தவறேதும் இல்லை.முக்கிய தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரை சோதனையிடக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒரு பட்டியல் தந்துள்ளதாக அறிகிறோம். ஆனால், அமெரிக்காவிலோ, வேறு நாடுகளிலோ பயணிக்கும் அனைத்து நாட்டு விஐபிக்கள், முன்னாள் தலைவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

1 கருத்துகள்:

  • 24 ஜூலை, 2009 அன்று PM 3:01
    பெயரில்லா :

    அதிகப்பிரசங்கி அமெரிக்கத்தனத்தை இந்தியாவிடம் காட்ட முற்பட்டால் அமெரிக்கா அசிங்கப்பட்டுப் போகும்!

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.