25/7/09

குஜராத் இனப்படுகொலை:மோடியை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

0 கருத்துகள்
டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்க தடை விதிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடியை சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி) விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உயிருடன் வைத்துக் கொளுத்தப்பட்டார். இதுதொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்று அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு்ந்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்றம், இதுகுறித்து எஸ்.ஐ.டி. விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காலு மலிவாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி மனு செய்திருந்தார்.
தனது மனுவில், உச்சநீதிமன்றம் பொதுவான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. மோடியை விசாரிக்க வேண்டும் என அது குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும், எஸ்.ஐ.டிக்கு முதல்வர் மோடியை விசாரிக்கவோ அல்லது விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பவோ அதிகாரம் இல்லை என்று கோரியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மோடியை விசாரிக்க எஸ்.ஐ.டிக்குத் தடை இல்லை என்று அது உத்தரவிட்டுள்ளது.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.