27/7/09

ராணுவத்தில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு தடையில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்

0 கருத்துகள்
புதுடெல்லி: ராணுவத்தில் பணியாற்றும் முஸ்லிம் வீரர்கள் தாடி வைப்பதற்கு தடைவிதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தரைப்படை, கப்பல் படை, விமானப்படை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன் அமைச்சரை சந்தித்த ஆல் இந்தியா மஜ்லிஸே முஸாவராத்தின்(மவ்லானா ஸாலிம் காசிமி பிரிவு) பிரநிதிக்குழுவிடம் இது சம்பந்தமாக கூறினார். ஆயுதப்படையினருக்கு குறிப்பாக விமானப்படையினருக்கு இது குறித்து தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இதற்கு முன் தாடி வைத்ததற்காக எவர் மீதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதனை வாபஸ் பெறவும் கட்டளையிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆட்சியின்போதுதான் ராணுவத்தில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு தடை ஏற்படுத்தியதாக ஏ.கே.அந்தோணி தன்னை சந்தித்த குழுவினரிடம் தெரிவித்தார். விமானப்படையில் தாடி வைப்பதற்கான தடையை எதிர்த்து விமானப்படையில் பணியாற்றும் முஹம்மது சுபைர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான‌ துணை சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தாடிவைக்கும் விஷயத்தில் மத்திய அரசு மறு பரிசீலனைச்செய்யும் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்த மஜ்லிஸே முஸாவராத் குழுவில் துணைத்தலைவர் மவ்லானா அஹ்மத் அலி காசிமி, பொதுச்செயலாளர் மவ்லானா அமீதுஸ்ஸமான் கெரான்வி, கமால் ஃபாரூகி, முஹம்மது அதீப் ,ராஹத் மஹ்மூத் சவுத்ரி ஆகியோர் அடங்குவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.