26/7/09

விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு ஆலோசனை

0 கருத்துகள்
புதுடெல்லி: விமானப்படையில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதியளிப்பது சம்பந்தமாக பரிசீலிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியது.

முஸ்லிம்கள் தாடி வளர்ப்பது தாலிபானிசம் என்று விமர்சித்த‌ உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கட்ஜு மன்னிப்புகேட்டார்.

இச்சம்பவத்தைத்தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மவ்லானா முஹம்மது அலி ரஹ்மானி அவர்கள் பிரதமர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரைசந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விமானப்படையில் பணியாற்றும் முஹம்மது சுபைர் என்பவர் தாடி வைப்பது சம்பந்தமாக‌ தொடர்ந்த வழக்கில் ஆஜரான துணை சோலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் தாடி வைப்பது சம்பந்தமாக விமானப்படை தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனைச்செய்யும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். விமானப்படையிலுள்ள சட்டப்படி தாடி வைக்காத நிலையில் விமானப்படையில் சேர்ந்தால் பின்னர் தாடி வைப்பதற்கு அனுமதியளிக்கப்படாது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.