25/7/09

கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஃப்ரீடம் பரேடிற்கும், டி.ஒய்.எஃப்.ஐ யின் மார்ச் ஃபாஸ்ட்டுக்கும் கண்ணூரில் தடை

0 கருத்துகள்
க‌ண்ணூர்:வருகிற ஆக‌ஸ்ட் 15 ஆம்தேதி கேர‌ள‌ மாநில‌ம் க‌ண்ணூரில் பாப்புல‌ர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியா ம‌ற்றும் இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் ஆகிய‌ அமைப்புக‌ள் ந‌ட‌த்த‌ இருந்த அணிவ‌குப்புகளுக்கு காவ‌ல்துறை த‌டைவிதித்துள்ள‌து.தடையை மீறி அணிவ‌குப்பு ந‌டைபெறும் என‌ மேற்க‌ண்ட‌ அமைப்புக‌ள் தெரிவித்துள்ள‌ன‌.இரு அமைப்புக‌ளும் ஒரே நேர‌த்தில் அணிவ‌குப்புக‌ள் ந‌ட‌த்தினால் ச‌ட்ட‌-ஒழுங்கு பாதிக்க‌ப்ப‌டும் என்று உள‌வுத்துறையின் அறிக்கையின் அடிப்ப‌டையிலேயே இந்த‌ த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ வ‌ட‌க்கு ம‌ண்ட‌ல‌ ஐ.ஜி.டோமின் ஜெ த‌ச்ச‌ங்க‌ரி கூறினார்.ஆனால் ஏற்க‌ன‌வே திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ எல்லைக்குள் பொதுக்கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌தற்கு த‌டையில்லை என்றும் அவ‌ர் தெரிவித்தார்."சுத‌ந்திர‌த்தின் பாதுகாவ‌ல‌ர்களாவோம்" என்ற‌ கோஷ‌த்தோடு வ‌ருகிற‌ ஆக‌ஸ்ட் 15 ஆம்தேதி க‌ண்ணூர், மைசூர், த‌ஞ்சாவூர், இடுக்கி ஆகிய‌ இட‌ங்க‌ளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுத‌ந்திர‌ தின‌ அணிவ‌குப்பு ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ள‌து." ஏகாதிப‌த்திய‌ வ‌ல‌துசாரி கொள்கைகளை த‌டுப்போம்"என்ற‌ கோஷ‌த்தோடு இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் வ‌ருகிற‌ ஆக‌ஸ்டி 15 ஆம்தேதி அணிவ‌குப்பு ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ள‌து.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.