25/7/09

ஈரானில் மீண்டும் விமான விபத்து : 17 பேர் பலி!

0 கருத்துகள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மாஷாத் சென்ற விமானம் தரை இறங்கும் போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானிலிருந்து 600 மைல் தொலைவில் உள்ள மாஷாத் நகருக்கு 153 பேருடன் சென்ற (AIRIA AIR)
விமானம் மாஷாத் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது மாற்று ஓடுபாதையில் இறங்கியது. குறைந்த தூரமே உடைய இந்த பாதையில் வேகமாகச் சென்ற இந்த விமானம் வேகத்தைக் குறைத்து நிற்க முடியாமல் சுற்றுச் சுவரில் மோதியது. வேகமாக வந்து மோதியதால் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்தது.
இதில் விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஈரானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 168 பேரும் பலியானார்கள். இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குள் மற்றொரு விமான விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
source: Dawn,presstv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.