28/7/09

தலிபான் இயக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல்: அல்ஜஸீரா தகவல்

0 கருத்துகள்


தலிபான் இயக்கத்தலைவர் முல்லா உமர் அவர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அவ்வியக்கத்தின் ராணுவ ஒழுக்கவிதிகள் நூலின் நகல் தங்களுக்கு கிடைத்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒழுக்கவிதிகளுக்கான் நூல் 13 அத்தியாயங்களைக்கொண்டது. 67 சட்டப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவ்விதிகள் செய்யக்கூடியவை கூடாதவை என்பதை சுட்டிக்காட்டும் உலகின் மிகப்பெரிய ரகசிய அமைப்பின் வடிவமைப்பைக்காட்டுகிறது. இந்த ஒழுக்க விதிகளுக்கான நூல் பிரிந்துக்கிடக்கும் குழுக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியாக தோன்றுகிறது. இந்நூலில் கூறப்பட்டுள்ள சில முக்கிய விதிகள் பின்வருமாறு:
அடைக்கலம் அளிப்பது சம்பந்தமாக: ஒவ்வொரு முஸ்லிமும் அடிமை அரசாங்கத்திடம் வேலைச்செய்யும் நபர்களிடம் வேலையை உதறித்தள்ள கூறவேண்டும். மேலும் அவர்களுடனான எல்லாவிதத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு கூறுதல் வேண்டும். அதனை யார் ஏற்றுக்கொள்கின்றாரோ அவருக்கு பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை கொடுப்பது மாகாண மாவட்ட (தலிபான்) தலைவர்கள் அளிப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
கைதிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாக‌: அடிமை அர‌சாங்க‌த்தின் கீழ் வேலை பார்க்கும் ராணுவ‌ வீர‌ர், அதிகாரிக‌ள், ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ள், வேலையாட்க‌ள் யாரையாவ‌து கைதுச்செய்தால் அவ‌ர்க‌ளை துன்புறுத்த‌வோ, தாக்குவ‌தோ கூடாது. அந்த‌க்கைதியை வலுவான உத்துரவாதத்துடன் விடுத‌லைச்செய்வ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌வோ அல்ல‌து கைதிப்பரிமாற்ற‌ம் செய்வ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌வோ மாகாண தலைவர்(தலிபான்)தான் முடிவுச்செய்யவேண்டும். கைதிகள் டைரக்டர், கமான்டர் அல்லது மாவட்ட உயர் அதிகாரி அல்லது மேல்மட்ட அதிகாரி என்ற பொறுப்புகளிலிருந்தால் அவர்களை காயப்படுத்துவது, கொல்வது, விடுதலைச்செய்வது அல்லது மன்னித்து விடுவது சம்பந்தமாக இமாம் அல்லது துணை இமாம் மட்டுமே முடிவுச்செய்வர். கைதிகள் காஃபிராக இருந்தால் அவரைக்கொல்வது, விடுதலைச்செய்வது, கைதிகள் பரிமாற்றம்செய்வது சம்பந்தமான முடிவை இமாம் அல்லது துணை இமாம் மட்டுமே முடிவுச்செய்வர்.
சிவிலிய‌ன்க‌ள்(பொதும‌க்க‌ள்)ச‌ம்ப‌ந்த‌மாக‌:க‌வ‌ர்ன‌ர்,மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர்க‌ள், லைன் க‌மான்ட‌ர்க‌ள் உட்ப‌ட‌ முஜாஹிதீன்க‌ளின் ஒவ்வொருவ‌ரும் சிவிலிய‌ன்க‌ளை கொல்வ‌தோ, துன்புறுத்துவ‌தோ, அவ‌ர்க‌ளின் சொத்துக்க‌ளுக்கு சேத‌ம் விளைவிப்ப‌தோ கூடாது. இது விஷ‌ய‌மாக் மிக்க‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ப்ப‌ட‌ல் வேண்டும்.
தற்கொலைத்தாக்குதல் சம்பந்தமாக: தற்கொலைத்தாக்குதல்கள் முக்கிய, மிகப்பெரிய இலக்குகளை நோக்கி மட்டுமே நடத்தப்படவேண்டும். ஒரு வீரமிக்க இஸ்லாமியன் சிறிய மற்றும் பயனில்லாத இலக்குகளை நோக்கி தற்கொலைத்தாக்குதலை நடத்தமாட்டான். இத்தாக்குதல்களில் சிவிலியன்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படாமலிருக்க கவனம் செலுத்தவேண்டும்.
ஒற்றுமை சம்பந்தமாக:புதிதாக முஜாஹிதீன்களின் அமைப்புகளை உருவாக்குவது தடைச்செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற பிரிவுகள், ஒழுங்கற்ற படைப்பிரிவுகள் முறையான அமைப்பில் சேர மறுப்பது விலக்கப்பட்டுள்ளது. கவர்னரோ அல்லது தலைவரோ வேறொரு மாகாணத்தில் ஒரு அமைப்பை முன்பு ஏற்படுத்தியிருந்தால் அந்த பகுதிக்கு அவர் அந்தப்பகுதியிலிருக்கும் அமைப்பிற்கு கமான்டராக நியமிக்கப்படுவார்.
ஆப்கான் மக்களோடுடனான தொடர்பு பற்றி: முஜாஹிதீன்கள் நாட்டுமக்களோடு நல்லதொரு நடவடிக்கைகளை வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்துதல் வேண்டும். அவர்களிடையே இனத்தை வைத்தோ, மொழியை வைத்தோ அல்லது புவியிட பின்புலத்தை வைத்தோ பாரபட்சம் காட்டக்கூடாது.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
ஆதாரம்: அல்ஜஸீரா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.