28/7/09

சர்வதேச திரைப்படவிழா இணையதளத்தின் தகவலை துண்டித்த (hack) சீனா

0 கருத்துகள்
பீஜிங்: உய்கூர் மக்களின் தலைவராக கருதப்படும் அமெரிக்காவில் வசித்துவரும் ராபிஆ கதீரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை மெல்பர்னில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உட்படுத்தியதால் சீனா திரைப்படவிழா சம்பந்தமான இணையதளத்தில் தகவல்களை துண்டித்துள்ளது.
துண்டிக்கப்பட்டது திரைப்படவிழாவின் நிகழ்ச்சிநிரல் சம்பந்தபட்ட தகவல்களை. அதற்கு பதிலாக சீனாவின் கொடியும் கதீருக்கு எதிரான விமர்சனங்களும் காணப்படுகின்றன. உய்கூர் திரைப்படத்தை நிகழ்ச்சியில் உட்படுத்தியதைக்கண்டித்து ஏற்கனவே சீனா திரைப்படவிழாவில் திரையிடப்படயிருந்த‌ 4 திரைப்படங்களை வாபஸ் பெற்றிருந்தது.
ஆகஸ்ட் 8ஆம்தேதிதான் "டென் கண்டிஷன்ஸ் ஆஃப் லவ்" என்ற திரைப்படம் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. சினிமா திரையிடப்படும் தினம் ராபிஆ கதீர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் என்று திரைப்படவிழா நிர்வாகிகள் தெரிவித்தனர். திரைப்படவிழாவிற்கு வருகைதரும் கதீர் மற்றும் பிரநிதிகளுக்கு பாதுகாப்பிற்காக பாதுகாப்புப்படையினர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 62 வயதாகும் ராபிஆ கதீர்தான் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஜின்சியாங் என்றழைக்கப்படும் கிழக்குதுருக்கிஸ்தானில் ஏற்படும் போராட்டங்களுக்கு காரணம் என சீன அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் உய்கூர் முஸ்லிம்களுக்கெதிராக சீனா கடைப்பிடித்துவரும் அடக்குமுறைகளை மூடி மறைக்க இத்தகைய குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்துவதாக கதீர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.