22/7/09

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி

0 கருத்துகள்
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ஜுனாகட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் காணாமல் போயிருந்த காங்கிரஸ் கட்சி மிக அதிக இடங்களைக் கைப்பற்றி மாநகராட்சியைப் பிடித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 51 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சியில் 26 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 21 இடங்களை பாஜகவும், 3 இடங்களை பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்திலும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்காத நிலையில் இந்தத் தேர்தலை பாஜக கெளரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது. நரேந்திர மோடியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.2004ம் ஆண்டு நட்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக 35 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.குஜராத்தின் முக்கிய நகர்ப் பகுதியான இங்கு நரேந்திர மோடிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போது அங்கு பெரும் சரிவு ஏற்பட்டு்ள்ளது.
source: Thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.