22/7/09

ஆஃப்கானில் அமெரிக்க‌ கூட்டுப்ப‌டைக்கு க‌டும் இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் த‌லிபான்க‌ள்

0 கருத்துகள்
காபூல்:அமெரிக்க‌த்தலைமையிலான‌ ஆக்கிர‌மிப்பு ராணுவ‌த்திற்கு க‌டும் இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் வித‌மாக‌ நேற்று அமெரிக்க‌ ப‌டையின‌ர் மீது த‌லிபான்க‌ள் ந‌ட‌த்திய‌ தாக்குத‌லில் 4 அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்துள்ள‌னர். சாலையில் ப‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ குண்டுக‌ள் வெடித்துதான் இந்த‌ நான்கு பேரும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இச்ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்த‌து ஆஃப்கானின் கிழ‌க்கு ம‌காண‌த்தில்.
கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர் என்று உறுதிச்செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆனால் அதிக‌ விப‌ர‌ங்க‌ளை அளிக்க‌ அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ர் ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.
ஆக்கிர‌மிப்பு ப‌டையின‌ருக்கு அதிக‌ ஆள்சேத‌ம் ஏற்பட்ட‌ மாத‌ம்தான் ஜுலை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ மாத‌ம் ம‌ட்டும் 55 ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ரை த‌லிபான்க‌ள் கொன்றுள்ள‌ன‌ர். இதில் 30 பேர் அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர்.ஆக‌ஸ்ட் 20 ஆம் தேதி ஆஃப்கானில் ந‌டைபெறும் பொதுத்தேர்த‌லுக்கு முன் அங்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதாக‌ கூறித்தான் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்பு கூட்டுப்ப‌டையின‌ர் த‌லிபான்க‌ள் மீது இறுதித்தாக்குத‌லை ந‌ட‌த்துவ‌தாக‌ கூறின‌ர். இந்த‌ ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு அவ‌ர்க‌ள் இட்ட‌ பெய‌ர் கொடுவாள்(dragger) என்ப‌தாகும். ஆனால் இந்த‌த்தாக்குத‌லை தொடங்கிய‌ப்பின்ன‌ர்தான் அதிக‌மான‌ ஆள்சேத‌ம் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து. கிழ‌க்கு ஆஃப்கானிஸ்தானில் ஒரே ச‌ம‌ய‌ம் அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் அமெரிக்க‌ ராணுவ‌ முகாம்க‌ள் மீது ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லில் 14 பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். குண்டுக‌ளை உட‌லில் க‌ட்டிக்கொண்டு ராக்கெட் லாஞ்ச‌ர்கள் ம‌ற்றும் துப்பாக்கி ச‌கித‌ம் கட்டிட‌ங்க‌ளில் நுழைந்த‌ போராளிக‌ள் வெளிப்புற‌த்திலிருந்துக்கொண்டு க‌டும் தாக்குத‌லை தொடுத்த‌ன‌ர். ஹ‌ர்தேசில் க‌வ‌ர்ன‌ரின் அலுவ‌ல‌க‌ம், உள‌வுத்துறையின் த‌லைமையிட‌ம், போலீஸ் ஸ்டேச‌ன் ஆகிய‌வ‌ற்றின் மீது இத்தாக்குத‌ல் ந‌டைப்பெற்ற‌து.
ம‌ற்றொரு தாக்குத‌ல் ஜ‌லாலாபாத்தில் அமெரிக்க‌ ராணுவ‌ முகாம் மீது ந‌ட‌ந்தது. இந்நிக‌ழ்வின் போது இர‌ண்டு போராளிக‌ளை பாதுகாப்புப்ப‌டையின‌ர் சுட்டுக்கொன்ற‌ன‌ர். அதேவேளையில் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ர் ஆப்கானிஸ்தானை ஆக்கிர‌மித்து 8 ஆண்டுக‌ள் ஆகியும் த‌லிபான்க‌ளை செய‌லிழ‌க்க‌ச்செய்ய‌முடியாதது அமெரிக்க‌ ராணுவ‌த்தினரிடையே ம‌ன‌ச்சோர்வை ஏற்ப‌டுத்தியுள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.போர் நீண்ட‌கால‌ம் தொட‌ர்ந்தால் அமெரிக்க‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை இழ‌க்க‌ நேரிடும் என‌ அமெரிக்க‌ பாதுகாப்புச்செய‌ல‌ர் ராப‌ர்ட் கேட்ஸ் பேட்டிய‌ளித்திருந்த‌து இத‌னை ம‌ன‌தில் வைத்துதான் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.


செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.