30/9/09

தஜிகிஸ்தானில் தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு

0 கருத்துகள்
தஜிகிஸ்தானில் பள்ளி மற்றும் பல்கலைகழகங்களில் பணியாற்றுபவர்களுக்கு தாடி வளர்ப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தாடி வளர்ப்பதில் தடையும் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தாடியின் அளவில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள தஜிகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றது அந்நாட்டு அரசு. மேலும் அரசு வரையறுத்த இஸ்லாமிற்கு அல்லாமல், முழுவதுமாக மார்க்கக் கொள்கைகளை பின்பற்றும் இயங்கங்களை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.
அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சுன்னத்தான தாடி வளர்பவர்கள். தற்பொழுது அமல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் 50 வயதிற்கு மேலான ஆசிரியர்கள் 3 செண்டி மீட்டர்களுக்கு மேல் தாடி வைக்கக் கூடாது என்றும் அந்த வயது வரம்பிற்கு குறைவானவர்கள் தாடியே வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கின்றது.கூடவே, Jeans, Mini skirts மற்றும் T-shirts மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றது.இது பள்ளி மற்றும் உயர்கல்வி சீரமைப்பு திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகின்றது. இது மக்களின் மனநிலை மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு தான் இருக்கின்றது என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் திங்கள் அன்று பத்திரிக்கையாளர்களிடம் அப்துல் ஹமீத் நோஜிமொவ் கூறினார். அந்நாட்டு பிரதமர் இமாமலி ரஹ்மான் முன்பு பள்ளிகளுக்கு மொபைல் போன்கள், மற்றும் மாணவர்கள் வகுப்புகளுக்கு தங்கள் கார்களில் வருவதை தடை செய்திருந்தார்.
நன்றி:ABNA,thapalpetti

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.