30/9/09

ஈரான் அணு சக்தி குறித்து துருக்கி பிரதமர் கருத்து

0 கருத்துகள்
துருக்கி பிரதமர் எர்டோகன், "மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணு சக்தி விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டு இஸ்ரேல் சட்ட விரோதமாக வைத்திருக்கும் அணு ஆயுதங்களை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நியூயார்க்கில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "ஈரானுடைய அணு கொள்கை அணு ஆயுதம் தொடர்பாக இல்லை. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களையே தன் வசம் வைத்துள்ளது, மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை உபயோகித்தது.இந்த மனித உரிமைகள் எல்லாம் ஏன் கண்டுகொள்ளபப்டவில்லை? ஏன் எப்போதும் ஈரான் சர்ச்சைக்குள்ளாக்கப் படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.ஈரான் மட்டுமே உலக அஜண்டாவில் இருப்பதனால் நாம் கவனிக்கப் பட வேண்டிய காசா போன்ற பிரச்சனைகள் புறம் தள்ளப்படுகின்றது" என்று கூறினார்.
G20 நாடுகளின் மாநாடு முடிந்து துருக்கி திரும்பிய அவர் கூறுகையில் "இதுவரை ஈரானிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அஜண்டாவில் இல்லை" என்று தெரிவித்தார்.துருக்கி பிரதமர் வருகிற மாதம் டெஹ்ரான் செல்ல இருக்கிறார். அப்போது அவர் ஈரானிய அதிபர் அஹ்மத் நஜாதியுடன் ஈரானின் அணு கொள்கையை குறித்து பேச உள்ளார்.எர்டோகன் ஈரானின் வாயு தொழில் மீது போடப்படும் எந்த ஒரு தடையையும் மறுத்துள்ளார். அது ஈரானின் அண்டை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஈரான் பயணத்தை குறித்து எர்டோகன் கூறுகையில் வருகிற அக்டோபர் இறுதியில் தன்னுடைய ஈரான் பயணம் இருக்கும் என்று கூறினார்.அந்த பயணத்தின் போது அணு சக்தி பிரச்சனை உள்ளிட்ட வட்டார பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் போவதாக அவர் ஒரு துருக்கிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும் தான். அது அதன் அண்டை நாடுகள் மீது பல யுத்தங்களை தொடுத்திருக்கின்றது. மேலும் அதனுடைய ஈரான் குறித்த கூக்குரல் இஸ்லாமிய நாடுகள் எதுவும் அணுசக்தி அருகில் நெருங்கவிடாமல் இராணுவ பலத்தை கொண்டு மிரட்டுகின்றது. ஆனால் இஸ்ரேலைப்போல் அல்லாமல், ஈரான் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் அது உலகளாவிய அளவில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உலக நாடுகள் களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.மேலும் ஈரானின் இந்த அணு சக்தி IAEA வின் கொள்கைகள் மற்றும் சர்வதேச கொள்கைகளுக்குள்ளானது.ஐ.நா. வின் அணு சக்தி கண்காணிப்பு குழு கூறுகையில் "ஈரான் Uranium-235 ஐ தான் செறிவூட்டுகின்றது என்றும் அதுவும் 5% திற்கு குறைவாகத்தான் செய்கின்றது" என்றும் கூறியுள்ளது.அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் Uranium 90% திற்கு மேல் செறியூட்டப்பட்டால் மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
நன்றி: ABNA, thapalpetti

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.