30/9/09

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

0 கருத்துகள்
டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.

சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது இடைக்கால உத்தரவில் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர்.
பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பொது இடங்களில் தற்போது இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து மாநில அரசுகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
source: Thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.