13/9/09

இஸ்லாமிய வங்கியல்: ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை

0 கருத்துகள்
புதுடெல்லி:இந்தியாவில் இஸ்லாமிய வங்கியல் முறையை துரிதப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ் (ICIF) என்ற அமைப்பின் பிரநிதிகள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டாக்டர்.கெ.சி.சக்ரவர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ICIF இன் பொதுச்செயலாளர் ஹெச்.அப்துற்றகீப் ட்ரஸ்டிகளான டாக்டர் ரஹ்மத்துல்லாஹ், முன் ரிசர்வ் வங்கி மானேஜரான கெ.எம்.அப்துஸ்ஸலாம் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.
பொருளாதார துறையில் முன்னேற்றம் கொண்டுவருவது தொடர்பாக ரகுராம் கமிட்டி நடத்திய ஆய்வுகளை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள முறையில் கேடுவராதமுறையில் வட்டியில்லாத நிறுவனங்களுக்கு சட்டவரையறையை ஏற்படுத்த இயலும் என்று ரகுராம் கமிட்டி சிபாரிசு செய்திருந்தது.
பிரிட்டனிலும் சிங்கப்பூரிலும் செய்ததுபோல் இஸ்லாமிய வங்கியல் முறைக்கு சாத்தியமாகும் முறையில் ரிசர்வ் வங்கியின் சட்டமுறைகளில் திருத்தம்கொண்டுவர ICIF பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொண்டுவந்த சட்டதிருத்தம் சம்பந்தமான ஆதாரங்களை பிரதிநிதிகள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரிடம் சமர்ப்பித்தனர்.
கேரளாவில் இஸ்லாமிய வங்கியல் முறையை துவங்குவதற்கு கேரள மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளும் பேச்சுவார்த்தையின்போது இடம்பெற்றது. வட்டியில்லா வங்கிமுறைக்கு ரிசர்வ் வங்கி எதிர்க்காது என்றும் ஆனால் இதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் துணைகவர்னர் சக்ரவர்த்தி கூறினார்.
சிறுபான்மை மற்றும் ஏமாற்றப்பட்ட சமூகத்திற்கு வட்டியில்லா வங்கிமுறை மிகத்தேவையான ஒன்று அதன்மூலம் அவர்களின் வாழ்வில் செழிப்பை உருவாக்க இயலும். மேலும் இத்தகைய வங்கிகளை துவக்குவதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான முதலீடுகளை கவரமுடியும் என்று பிரநிதிகள் குழு தெளிவுப்படுத்தியது. பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை இந்தவாரத்திலேயே சந்திக்கவிருப்பதாக அப்துற்றகீப் கூறினார்.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.