12/9/09

மணிப்பூரில் மீண்டும் போலி என்கவுண்டர் கொலைகள்

0 கருத்துகள்
இம்பால்:தீவிரவாதி என்று குற்றம்சுமத்தி கடந்த ஜூலை மாதம் அப்பாவி இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்றதால் எழுந்த பொதுமக்களின் ஆவேச எதிர்ப்பு அடங்கும் முன்பாகவே மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் கொலைகள் அரங்கேறியுள்ளது மணிப்பூர் மாநிலத்தில்.
முஹம்மது ரஹ்மான் என்ற டோம்பே உட்பட 6 நபர்களை தீவிரவாதிகள் எனக்குற்றம் சுமத்தி ராணுவத்தினர் சுட்டுகொன்றுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு இம்பால் மேற்கு மாவட்டத்தில் அவாங் ஜனொயில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த என்கவுண்டர் நடந்ததாக போலீசும், ராணுவமும் கூறுகின்றது. ஆனால் போலீஸ் இவர்களை சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைத்து மணிப்பூர் ரிக்‌ஷா ஓட்டுனர் சங்கத்தின் உறுப்பினர்தான் சுட்டுக்கொல்லப்பட்ட முஹம்மது ரஹ்மான். இவர் உட்பட சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்றும் இம்பாலிலிருந்து மியான்மர் எல்லை நகரமான மோராவிற்கு ரிக்சா ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்தான் இவரென்றும் அசோசியேசன் கவர்னருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பொது வேலை நிறுத்தத்திற்கு இவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பு கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறி அவர்களுடைய உறவினர்களும் களத்திலிறங்கியுள்ளனர். கடந்த ஜுலையில் பட்டபகலில் ஒரு இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற படங்களை பகிரங்கபடுத்தி டெஹல்கா பத்திரிகை வெளியிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்பு அடங்கும் முன் இந்நிகழ்வு நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.