12/9/09

ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கருத்துவேறுபாடு

0 கருத்துகள்
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப முயற்சிக்கும் ஒபாமா அரசிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அபிப்ராய வித்தியாசங்கள் எழுந்துள்ளன.
இவ்விஷயத்தில் கூடுதல் சர்ச்சை தேவையென்றும், கூடுதல் ராணுவத்தை அனுப்புவதற்கான ஆதரவு குறைவென்றும் அமெரிக்க சபாநாயகர் நான்ஸி ஃபெலோஸி கூறியுள்ளார்.
உள்நாட்டிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் மிகப்பெரிய ஆதரவை ஒபாமா இவ்விஷயத்திற்காக பெறவேண்டிவரும் என்கிறார் நான்ஸி. இந்த வருட இறுதியில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தானில் 68 ஆயிரமாக உயர்த்த ஒபாமா முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக 21 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிற்கு அனுப்பபடுவர் என்று அவர் அறிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்தும் போரிற்கு உள்நாட்டில் ஆதரவு குறைந்தே காணப்படுகிறது. 51 சதவீதம் பேரும் இதனை எதிர்க்கின்றனர். இதற்கிடையில், ஆப்கானில் 97 சதவீத பிரதேசங்களிலும் தாலிபான் ஆதிக்கம் உள்ளதாக லண்டனை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சர்வதேச வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான கவுன்சில் ICOS (International Council on Security and Development) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 80 சதவீத பிரதேசங்களில் தாலிபானுக்கு உறுதியான ஆதிக்கம் உள்ளது. இது கடந்த ஆண்டு 72 சதவீதமாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு 54 சதவீதம் மாத்திரமேயிருந்தது. அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் வலுவடைந்துள்ளது. தாலிபானின் இந்த எதிர்ப்பு போர் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.