12/9/09

மும்பை:பகிரங்க விவாதம் நடத்த ப.சிதம்பரத்திற்கு பாக். உள்துறை அமைச்சர் அழைப்பு

0 கருத்துகள்

இஸ்லாமாபாத்: குற்றச்சாட்டுகளை நிறுத்திவிட்டு மும்பை தீவிரவாதத்தாக்குதல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ அல்லது சிதம்பரம் விரும்பும் எந்த இடத்திற்கும் விவாதத்திற்கு தான் வர த்தயாராக இருப்பதாகவும் மாலிக் கூறியுள்ளார். பாகிஸ்தான் மும்பை தாக்குதல் விசாரணையை ஆத்மார்த்த ரீதியில்தான் கொண்டு செல்கிறது. நாங்கள் 76 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகையை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தபொழுது இந்தியா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 90 தினங்கள் ஆனது.
பாகிஸ்தான் பிப்ரவரி 9 ஆம் தேதி கேட்ட விபரங்களை இந்தியா அளித்தது ஜூன் 20 ஆம் தேதி. அதுவும் மராத்தி மொழியில். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பந்தமான விபரங்களை இதுவரை இந்தியா அளிக்கவில்லை என்றும் மாலிக் கூறினார். நீதிமன்றத்தில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் 2 நபர்களைப்பற்றிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளோம். இறுதிகட்ட குற்றபத்திரிகையை விரைவில் வழங்கவிருக்கிறோம். அதுபற்றிய விபரங்களை இரண்டு தினங்களுக்குள் பத்திரிகையாளர்களுக்கு வழங்குவோம் என்றும் மாலிக் கூறினார்
முதலில் இந்தியா கூறியது ஸகீயுற்றஹ்மான் லக்விதான் முக்கிய குற்றவாளி என்று. தற்போது கூறுவது ஹாஃபிஸ் சயீத் தான் முக்கிய நபர் என்று. நாம் பரஸ்பரம் குற்றம்சுமத்தும் விளையாட்டை நிறுத்திவிட்டு நல்லதொரு விளையாட்டை ஆடுவோம். புதிய ஆதாரங்களை 10 தினங்களுக்கு முன்புதான் இந்தியா அளித்தது. அதனை பரிசோதிக்கவும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய தகுதியானதுதானா என்பதை அறிய கொஞ்ச காலம் தேவைப்படும். நாங்கள் உங்களின் நீதிமன்றத்தை மதிப்பதுபோல் நீங்களும் எங்கள் நீதிமன்றங்களை மதிக்கவேண்டும். என்றும் மாலிக் வலியுத்தினார். விசாரணை நடவடிக்கைகள் நின்றுபோனதாக எழுந்த குற்றச்சாட்டைப்பற்றி மாலிக் மறுப்புதெரிவித்துவிட்டு பெருநாள் தினத்திற்கு பிறகு விசாரணை வேகமாக நடைபெறும் என்றார்.
பாகிஸ்தானிலிருந்து இன்னொரு தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பற்றி மாலிக் கூறும்பொழுது, "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே! நீங்கள் ஒரு நாட்டின் ஆட்சித்தலைவர். உங்கள் வசமிருக்கும் இதுபற்றிய தகவல்களை நிச்சயமாக உங்கள் புலனாய்வுத்துறைகள் தந்த தகவலாகத்தான் இருக்கும். ஏன் அதனை எங்களோடு பகிர்ந்துக்கொள்வதில்லை. ஏன் தாக்குதல் நடைபெறும் வரை மூடி வைக்கின்றீர்கள்?. நாமிருவரும் அண்டைநாடுகள். ஒன்றாக இணைந்து விசாரணை நடத்துவோம். ஒன்றாக இணைந்து சர்ச்சைச்செய்ய நாங்கள் தயார்". இவ்வாறு ரஹ்மான் மாலிக் கூறினார்.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.