13/9/09

போலி என்கவுண்டர்கொலைகள்:நரேந்திரமோடி அரசை டிஸ்மிஸ் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்

0 கருத்துகள்
போலி என்கவுண்டர்கள் மூலம் அப்பாவிமக்களை கொலைச்செய்த நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் பாரதீய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்றும், இதுவரை குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ள அனைத்து என்கவுண்டர்கொலைகள் பற்றியும் அதில் குஜராத் அரசின் பங்கை பற்றியும் விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டுமென்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
19 வயதான கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானையும் மற்றும் 3 நபர்களையும் குஜராத் போலீஸ் இரத்தத்தை உறையவைக்கும் வகையில் என்கவுண்டர் பெயரால் சுட்டுக்கொன்றுள்ளனர் என்ற அதிர்ச்சிதரும் தகவல் இந்தவாரம் அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி தமாங்கின் நீதிவிசாரனை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வராக இருக்கும் நரேந்திரமோடி மனிதத்தன்மையையும், ஜனநாயகத்தையும் மதிப்பவராக இருந்தால் இந்தக்கொலைகளுக்கு பொறுபேற்று பதவி விலகவேண்டும். நீதி விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போலி என்கவுண்டர்களின் மூலம் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுள்ள குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்.
குஜராத் போலீஸ் கூறுகிறது, இஸ்ரத் ஜஹானும் மற்ற 3 நபர்களும் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச்சார்ந்தவர்களென்றும் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு முதல்வர் நரேந்திரமோடியை கொல்லவந்தார்களென்றும் அப்போது அவர்களை சுட்டுவீழ்த்தியதாகவும் கூறுகிறது. ஆனால் நீதி விசாரணை அறிக்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் நரேந்திரமோடியை கொல்ல முயற்சி என்று கூறி அவருக்கு சிந்தனை ரீதியான ஆதரவை உருவாக்கும் நோக்கத்தில் தீட்டப்பட்ட விரிவான வகுப்புவாத சதித்திட்டம் இந்த போலி என்கவுண்டர் கொலைகள் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே புலனாய்வு ஏஜன்சிகள் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நரேந்திர மோடி ஆதரவளிக்கிறார் என்று கூறியுள்ள நிலையிலும் அவர் முதல்வராகவே தொடர்கிறார்.தற்பொழுது சொரஹ்புதீன் சேஹ்,இஸ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர்களின் என்கவுண்டர்கள் போலி என்று தெளிவுப்படுத்தப்பட்ட நிலையில் மோடி குஜராத் மாநில முதல்வராக தொடர்வது ஜனநாயகத்தை கேலி செய்வதும், நமது நாட்டின் மதசார்பின்மை அடையாளத்திற்கு அவமானகரமானதுமாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அவர்கள் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
Twocircles.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.