10/9/09

இந்த வருடம் 320 ஃபலஸ்தீன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்:இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு

1 கருத்துகள்
ஜெருசலம்: இந்த வருடத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 1387 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 320 பேர் 16 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் பிரபல இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பைதுதுஸ்ஸாலோம் கண்டறிந்துள்ளது.
எதிர்த்துகூட போராடாத 773 சாதாரணமக்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது. இந்த வருடம் 300க்கும் குறைவான சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது. 16 வயதிற்கு கீழுள்ள 252 குழந்தைகள் கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 89 குழந்தைகள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேல் கூறுகிறது.
யூத சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீன் முஸ்லிம் குழந்தைகளை குறிவைத்து தேடிப்பிடித்து கொல்கின்றார்கள் என்பதற்கான உதாரணம் இவை.111 பெண்களையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது, ஆனால் 48 பெண்கள்தான் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளிலும் பிரதேசங்களிலும் சென்று விசாரணை மேற்க்கொண்டே இந்த விபரங்களை இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு சேகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் சாதாரண மக்களை கொன்றொழிப்பதாகவும் ஏராளமான கட்ட்டங்களை தகர்த்திருப்பதாகவும் ஆதலால் இதைப்பற்றிய சுதந்திரமான நம்பிக்கையான விசாரணை மேற்க்கொள்ளப்படவேண்டும் என்றும் பைத்துஸ்ஸாலோம் கூறியுள்ளது. இஸ்ரேலிய அமைப்பின் இந்த அறிக்கைக்கு இதுவரை இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இதுவரை ஃபலஸ்தீனில் ஹமாஸ் போராளிகளைத்தான் நாங்கள் லட்சியமிட்டு தாக்குகிறோம் என்று கூறிவந்தது இஸ்ரேல் ஆனால் ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேல் கொல்வது சாதாரணமக்களைத்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலமில் யூதகுடியிருப்புகளின் கட்டுமானப்பணியை ஆரம்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ்

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.