11/9/09

ஷொஹ்ரபுதீன் சேஹ் கொலை, விரிவான விசாரணை தேவை:சுப்ரீம் கோர்ட்

0 கருத்துகள்
புதுடெல்லி:குஜராத்தில் வியாபாரம் செய்து வந்த சொஹ்ரபுதீன் சேஹ் என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச்செய்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது சம்பந்தமாக மாநில அரசு நடத்திய விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று விமர்சித்த நீதிமன்றம் இக்கொலைவழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிபதிகளான தருண் சாட்டர்ஜி,அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நிலையை தெளிவுப்படுத்தியது. சி.பி.ஐ விசாரணை கோரி ஷொரஹ்புதீனின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கும்பொழுதுதான் இவ்வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று சுப்ரீம் கோர்ட் தனது அபிப்ராயத்தை தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி டி.ஜி.பி வன்சார தலைமையிலான போலீஸ் குழு ஒன்று ஷொரஹ்புதீன் சேக்கை சுட்டுக்கொன்றது. போலீசுடன் நடைபெற்ற மோதலில் ஷொரஹ்புதீன் கொல்லப்பட்டதாக இட்டுக்கட்டிய குஜராத் போலீஸ் சாட்சியை அழிப்பதற்காக அவருடைய மனைவியை கொன்று தீவைத்துகொழுத்தியது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.