23/9/09

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : அகமதுனிஜாத் எச்சரிக்கை

0 கருத்துகள்
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்துபவர்களின் கையை ஈரான் இராணுவத்தினர் வெட்டி விடுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் முகமத் அகமதுனிஜாத் எச்சரித்துள்ளார்.
ஈராக் - ஈரான் போர் தொடங்கிய ஆண்டை குறிக்கும் விதமாக தலைநகர் தெஹ்ரானில் இன்று நடைபெற்ற இராணுவ பேரணியை பார்வையிட்டு, அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்த அகமதுனிஜாத், ஈரான் மீது படையெடுக்கக்கூடிய தைரியம் எந்த நாட்டுக்கும் இல்லாத அளவிற்கு தமது இராணுவத்தினர் தயாராக இருப்பதாக கூறினார். ஈரானுக்கு எதிராக உலகின் எந்த ஒரு நாடும் துப்பாக்கியின் விசையை அழுத்தும் முன்னரே அதன் கையை ஈரான் படையினர் வெட்டிவிடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை தடுக்க, அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது உள்பட அனைத்து வாய்ப்புகளையும் தாங்கள் பரிசீலித்து வருவதாக இஸ்ரேல் நேற்று கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடியாகவே அகமதுனிஜாத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிகிறது.
source: webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.