18/9/09

திருநாவுக்கரசுக்கரசருக்கு பா.ஜ.க வெறுத்துவிட்டது, காங்கிரஸில் இணைகிறார்

0 கருத்துகள்
சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான எஸ்.திருநாவுக்கரசர் பாஜகவுக்கு முழுக்குப் போட்டு விட்டு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இதற்காக வருகிற 20ம் தேதி சோனியா காந்தியை திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசுகிறார்.

1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அத் தேர்தலுக்குப் பின்னர் துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளராகவும் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, அதிமுகவின் தலைவியாக உருவெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திருநாவுக்கரசர்.

இவரும், சாத்தூர் ராமச்சந்திரனும், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆம்னி பஸ்களில் ஊர் ஊராக சென்ற காட்சி தமிழக மக்கள் மனதிலிருந்து இன்னும் கூட மறைந்திருக்காது.

சில காலம் கழித்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.பின்னர் அதைக் கலைத்து விட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். பிறகு மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.
கடைசியாக அவர் பாஜகவில் இணைந்தார்.அன்று முதல் தமிழக அரசியலில் தனக்கிருந்த இமேஜை கெடுத்துக்கொண்டார்.பா.ஜ.காவின் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய செயலாளராக தற்போது இருக்கிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று இணை அமைச்சராக செயல்பட்டவர் திருநாவுக்கரசர்.கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜா.க சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் பாஜகவுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளார் திருநாவுக்கரசர். அங்கிருந்து தற்போது காங்கிரஸுக்கு வரவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர்,ராகுல் காந்திை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி , ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் என பலரையும் அவர் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அவர் 20-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு அவர் மீண்டும் சோனியா காந்தி,ராகுல் காந்திமற்றும் தலைவர்களை சந்தித்து காங்கிரசில் இணைவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.