25/9/09

திருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி

0 கருத்துகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 அடுக்குகளை கொண்ட கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தரைமட்டமான கட்டடம் மற்றும் மீட்ப்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவ்ருக்கு 4 மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி இந்த வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் 5லட்சம் ரூபாய்க்கு சிவகாசியிலிருந்து ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் திடிரென தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 3 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது. நகரமே அதிரும் வண்ணம் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒடிவந்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

பொதுமக்களுடன் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிவிடிய நடந்த மீட்புபணியில் இன்று காலை வரை 13 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 6 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கிடையே இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
பாபாவின் மகன்கள் பரக்கத்(32)இஷ்ரத்(37),நூருல்லாஹ் மகன் ரியாஸ்(10),ஷாதிக்பாஷா(55),நிஷா(6)அப்ஷர்(6),அஷ்ரத்(11),அக்பர்(13),ஷாபிரா பானு(40),அலிமாபீவி(39),ஆசிப்(11) மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
செல்போன் மூலமாக காப்பாற்ற அழைப்பு விடுத்தவர்...
இவ்விபத்தில் உயிரிழந்த ஷாதிக் உயிரிழப்பதற்கு முன்னால் தனது உறவினர் ஜமால் என்பவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். 10நிமிடத்துக்குப் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இடிபாடுகளுக்கிடையே அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் சுமார் 12 மணியளவில் சடலமாகத்தான் மீட்க்கமுடிந்தது.
சமையல் சிலிண்டரும் வெடித்தது....
வெடியுடன் சமையல் 3 சிலிண்டரும் வெடித்ததால் சேதம் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

aஇச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவ்வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.