20/9/09

தேர்தல் மோசடிகளை ஒப்புக்கொண்டார் கர்சாய்

0 கருத்துகள்
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடுகள் நிறைவாகவே நடந்திருக்கின்றன, அதற்கு அமெரிக்காவும் துணை போகியுள்ளது என்று எழுந்த குற்றச்சாட்டை வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார், அமெரிக்கா நியமித்த அடிமை ஜனாதிபதி கர்சாய்.
இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "சில தேர்தல் அதிகாரிகள் எனக்கு சாதகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்" என்று கூறினார். இது அவர் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டதாகும். இவருக்கு இந்த தேர்தலில் 54% சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது. அனால் பல தொகுதிகளில் அங்கிருந்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகள் அதிகமாக இருந்தது. சில இடங்களில் வாக்கு சாவடிகளில் வருகை தந்த மக்களை விட பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்தன, இன்னும் இது போல பல முறைகேடுகள் இந்த தேர்தலில் நடந்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெற்றி குறித்து பேசாமல், நான் ஜனாதிபதி ஆனால் என்னென்ன செய்வேன் என்பது பற்றி மட்டுமே பேசினார். நடந்து முடிந்த தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப் பட இருக்கின்ற நிலையில், போலி வாக்குகளை தவிர்த்தால் கர்சாய் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. இவருக்கு போட்டி வேட்பாளரான டாக்டர் அப்துல்லா ஜனாதிபதியாக ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
தேர்தலின் போது ஆயிரக்கணக்கான போலி வாக்கு பெட்டிகள் நாடு முழுவதிலிருந்தும் கர்சாய்க்கு சாதகமான முறையில் அனுப்பப்பட்டது. சில தொகுதிகளில் கர்சாய் 100 % வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா வின் உதவி பெற்ற ஆணையம் ஒன்று 10% வாக்குச்சாவடிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. இந்த 10% வாக்குச்சாவடிகள் மோசடி நடந்திருக்கிறது என்று மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆகும்.இந்த தேர்தலில் கர்சாய் அப்துல்லாவையும், அப்துல்லா கர்சாயையும் மாற்றி மாற்றி தேர்தல் மோசடி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.தாலிபான் ஆட்சியில், உண்மை மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்து திகழ்ந்த ஆப்கானிஸ்தானில் இன்று ஊழல், மோசடிகள், ஏமாற்று வேலைகள் புழங்க ஆரம்பித்துவிட்டன. இனி அமெரிக்கா நாடியபடி இஸ்லாமல்லாத நாடாக ஆப்கானிஸ்தானை மாற்றுவது கஷ்டம் ஒன்றுமில்லை. இந்த அரசியல் வாதிகளிடம் டாலரைக் காட்டினாலே போதும். அவர்களுடைய நாட்டையும் வீட்டையும் சேர்த்தே விற்று விடுவார்கள்.
செய்தி:NDTV,தபால் பெட்டி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.