30/8/09

மத்தியபிரதேசம்:கல்வி நிறுவனங்களில் சூரியவழிபாட்டை கட்டாயப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

0 கருத்துகள்
மத்தியபிரதேச மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க தலைமையிலான அரசு மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை நேரங்களில் சூரியனை வழிபடவேண்டும் என்ற மூடத்தனமான உத்தரவை பிறப்பித்திருந்தது.
மேலும் இந்த உத்தரவை பள்ளிக்கூட நிர்வாகங்கள் பேணுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்படும் கத்தோலிக்க பிஷப்கள் சபையின் மக்கள்தொடர்பு அதிகாரியும்(PRO) செய்தித்தொடர்பாளருமான ஃபாதர் ஆனந்த் முட்டுங்கால் பொதுநல வழக்கு ஒன்றை மத்தியபிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அவ்வழக்கில் ”ஜாபுஅ மற்றும் ராஜ்கர் மாவட்ட கல்விஅதிகாரிகள் கத்தோலிக்க பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்களை சூரியவழிபாட்டைச்செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்” என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் ஜமாஅத்தே உலமாயே ஹிந்த் தாக்கல் செய்திருந்த வழக்கில் இத்தகைய வழிபாட்டு முறையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதி மன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.இவ்வுத்தரவின் நகலை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து வாதாடிய கத்தோலிக்க சபையின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராஜேஷ் சந்த் மாநில அரசின் இந்த உத்தரவு நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும்,இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 25 முதல் 30 வரை சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக கூறினார்.மேலும் இந்த சூரிய வழிபாட்டை வற்புறுத்தும் அரசின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவாதங்களின் வெளிச்சத்தில் தலைமை நீதிபதி ஏ.கெ.பட்நாயக்,நீதிபதி அஜித் சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மாநில அரசு மாணவர்களை சூரிய வழிபாடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.மேலும் மத்திய பிரதேச மாநில முதன்மை செயலர்,முதன்மை கல்வி செயலர்,கல்வி கமிஷனர்,ஜாபுஅ மற்றும் ராஜ்கர் ஆகியவற்றுக்கான மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு இது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

News source:twocircles.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.